Monday, July 3, 2017

காதல் நதி பயணிக்கிறது!!

காதல் நதி!!




***நீச்சல் அறியா குழந்தை
நதியில் வீழ்ந்தது தவிப்பது போலே
உன் காதலில் வீழ்ந்து
மூள்கி தவிக்க போகிறேன் நான்.***


***நதியின் பாதை
செல்லும் சருகு போல
உன் காதல் பாதையில்
பயணிக்கவே ஆசைப்படுகிறேன்

.***


***நதிக்கரை நாணலோடு
பேசிக்கொண்டிருந்தேன்
நதி தொட்ட வெட்கத்திலே
வளைந்து போயினவாம் அவை!!***



**நிலவோடு கதை பேசி நதி
பயணிக்கிறது.
நீ நிலவுதான்
நான் அந்த  நதியாய்
மாறுவது எப்போதென்பதில் தான்
பிரச்சனை இருக்கிறது****


**நதிக்கு காதல் தாகம்
எடுத்திருக்கிறது போலும்,
கரையெங்கும் நானெழுதிய
உன்பெயரை
அலைகளை நீட்டி குடித்து விட்டு
போயிருக்கிறது **


**நீ கடலாய் வியாபித்திருக்கிறாய்
உன்னை மட்டுமே சேரும்
நதியென பயணிக்கிறேன் நான் **



***உன் மெளன குளத்துக்குள்
காதல் கல் எறிந்துவிட்டு
பதிலுக்காய்
காத்திருக்கிறேன்**



**யாருமே ஆளமறியா நதிபோல்
அமைதியாய் இருக்கிறது
உன் மெளனம் **