Wednesday, January 4, 2017

இலங்கை நடப்பு நிகழ்வுகள் 3/1/2017 (Sri Lanka Prosperity Index 2015)



இலங்கை


1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது
"யாவருக்கும் நிழல்" என்ற வேலைத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 21 கிராமங்களில் நிர்மாணப் பணிகள் 1/1/2017 அன்று  ஆரம்பித்துவைக்கப்பட்டன

NOTE:-உலகின் சகல நாடுகளிலும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களுக்கு நிழல் தரும் வீடொன்றை அமைத்துக் கொடுக்கின்ற யோசனையை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ 1980ஆம் ஆண்டு முன்மொழிந்தார். இதன் பிரகாரம் 1987ஆம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச வீடமைப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தியது.



2) குளியாப்பிட்டியின் லபுயாய – மஹா-நுகலகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள 50 ஏக்கர் காணியில் வொக்ஸ்வோகன் தொழிற்சாலைக்கான அடிக்கல் 3/1/2017 நடப்பட்டது 


3) இலங்கை செழுமை சுட்டெண்( Sri Lanka Prosperity Index 2015)
வெளியிடபட்டுள்ளது
சென்ற வருடம் 0.804 லிருந்த சுட்டென் 0.864 ஆக காணப்படுகிறது