Monday, July 3, 2017

காதல் நதி பயணிக்கிறது!!

காதல் நதி!!
***நீச்சல் அறியா குழந்தை
நதியில் வீழ்ந்தது தவிப்பது போலே
உன் காதலில் வீழ்ந்து
மூள்கி தவிக்க போகிறேன் நான்.***


***நதியின் பாதை
செல்லும் சருகு போல
உன் காதல் பாதையில்
பயணிக்கவே ஆசைப்படுகிறேன்

.***


***நதிக்கரை நாணலோடு
பேசிக்கொண்டிருந்தேன்
நதி தொட்ட வெட்கத்திலே
வளைந்து போயினவாம் அவை!!*****நிலவோடு கதை பேசி நதி
பயணிக்கிறது.
நீ நிலவுதான்
நான் அந்த  நதியாய்
மாறுவது எப்போதென்பதில் தான்
பிரச்சனை இருக்கிறது****


**நதிக்கு காதல் தாகம்
எடுத்திருக்கிறது போலும்,
கரையெங்கும் நானெழுதிய
உன்பெயரை
அலைகளை நீட்டி குடித்து விட்டு
போயிருக்கிறது **


**நீ கடலாய் வியாபித்திருக்கிறாய்
உன்னை மட்டுமே சேரும்
நதியென பயணிக்கிறேன் நான் *****உன் மெளன குளத்துக்குள்
காதல் கல் எறிந்துவிட்டு
பதிலுக்காய்
காத்திருக்கிறேன்****யாருமே ஆளமறியா நதிபோல்
அமைதியாய் இருக்கிறது
உன் மெளனம் **
Friday, January 6, 2017

உலக நடப்புகள் 5/1/2016ஜனவரி 4 உலக பிரையிலி தினம் (World Braille Day) இது பார்வையற்றோர் வாசிப்பு பழக்கத்தினை வசதிபடுத்த உண்டாக்க பட்ட ஒரு மொழி எழுத்துரு வடிவம் .இதனை உண்டாக்கிய பிரையிலி என்பவரின் பிறந்ததினமான ஜனவரி 4 அன்றே இத்தினம் கொண்டாட படுவது சிறப்பு

  


1)முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும் சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியுமான சீ.ஜீ. வீரமந்திரி காலமானார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 90


1) தென் கொரியாவின் பூசன் சிட்டி நகரத்தில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் சர்ச்சைக்குரிய பெண் சிலை ஒன்று அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் தனது தூதரக அதிகாரிகள் இருவரை அங்கிருந்து ஜப்பான் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது.


தென் கொரியாவின் பூசன் சிட்டி நகரத்தில் ஜப்பானின் தூதரக அலுவலகம் அமைந்துள்ளது.இந்த அலுவலகத்தின் வெளிப்பகுதியில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டைச் சேர்ந்த சிவில் உரிமைகளுக்கான குழு ஒன்று 'சுகம் தரும் பெண்' எனப்படும் சிலையொன்றை நிறுவியது. இந்த சிலையானது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பான் ராணுவ வீரர்களின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, பாலியல் அடிமைகளாக கொரிய பெண்கள் வலுக்கட்டாயாமாக பயன்படுத்தப்பட்ட சம்பவத்தைநினைவு கூறும் விதமாக உள்ளதாக ஜப்பான் கருதியது.
2)மாதவிடாய்  காலத்தில்   ஊதியத்துடன்  கூடிய  ஒரு நாள்  விடுமுறை  அளிக்க ஷம்பியா  நாடு  சட்டம்  இயற்றியுள்ளது  .

Thursday, January 5, 2017

உலக நடப்புகள் 04/01/2017

உலகம்

1.அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபாநாயகராக "பால் ரியான்"  தேர்ந்தெடுப்பு ,115 வது காங்கிரஸ் மையத்தை  இவர்  தலையேற்று செல்ல  போகின்றார் 
note :- jan 20 2017  டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று நிகழ்வு  இடம்பெறுகிறது 


2.இந்தியாவில் இருந்து கத்திரிக்காய் போன்ற சிலவகை காய்கறிகளை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த 3 ஆண்டுகள் தடையை ஐரோப்பிய யூனியன்  நீக்கிக் கொண்டுள்ளது.

3.ஆஸ்திரேலியாவுடனான ராணுவ உறவை தாற்காலிகமாகத் துண்டித்திருப்பதாக இந்தோனேசியா புதன்கிழமை அறிவிப்பு


இலங்கை 

   "சிறுவர்களை பாதுகாப்போம்"  எனும்  தொனிப்பொருளின் கீழ்  தேசிய  நிகழ்சி திட்டம்  ஆரம்பிக்க பட்டுள்ளது  இது 2017-2019  வரையான  மூன்று வருட  செயற்திட்டமாகும் .இதில் சிறார்களின் 
சுகாதாரம் ,போசாக்கு  ,கல்வி ,ஆளுமை விருத்தி   என்பன  உள்ளடங்குகின்றன 

Wednesday, January 4, 2017

இலங்கை நடப்பு நிகழ்வுகள் 3/1/2017 (Sri Lanka Prosperity Index 2015)இலங்கை


1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது
"யாவருக்கும் நிழல்" என்ற வேலைத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 21 கிராமங்களில் நிர்மாணப் பணிகள் 1/1/2017 அன்று  ஆரம்பித்துவைக்கப்பட்டன

NOTE:-உலகின் சகல நாடுகளிலும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களுக்கு நிழல் தரும் வீடொன்றை அமைத்துக் கொடுக்கின்ற யோசனையை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ 1980ஆம் ஆண்டு முன்மொழிந்தார். இதன் பிரகாரம் 1987ஆம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச வீடமைப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தியது.2) குளியாப்பிட்டியின் லபுயாய – மஹா-நுகலகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள 50 ஏக்கர் காணியில் வொக்ஸ்வோகன் தொழிற்சாலைக்கான அடிக்கல் 3/1/2017 நடப்பட்டது 


3) இலங்கை செழுமை சுட்டெண்( Sri Lanka Prosperity Index 2015)
வெளியிடபட்டுள்ளது
சென்ற வருடம் 0.804 லிருந்த சுட்டென் 0.864 ஆக காணப்படுகிறது  

Monday, January 2, 2017

உலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )

இலங்கை 

இலங்கை சுற்றுலா துறையானது  2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை  எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இலக்கு எய்யப்பட்டுள்ளது.

note :- புனரமைப்பு காரணமாக சித்திரை மாதம் வரை சில நேரங்களில் மூடப்படும் சர்வதேச விமான நிலையம் காரணமாக இந்த இலக்கு தமாதமாகுமென எதிர்பார்ப்பு


பொருளாதாரம்
இலங்கை புள்ளிவிபர திணைக்கள அறிக்கை படி இந்த மூன்றாம் காலாண்டுக்கான  பொருளாதார வளர்ச்சி வீதம் 4.1  ஆக  காணபட்டது ஆனால் சென்ற வருட இதே காலாண்டு வளர்ச்சிவீதம் 5.6 ஆக  காணபட்டது

விளையாட்டு

Globe Soccer Awards 2017 விருதுகளில் போர்த்துகல் நாட்டு கிரிஸ்ரியனோ ரொனால்டோ சிறந்த வீரர் விருதை பெற்றுகொண்டார் 

ஏழாவது ஆண்டாக நடக்கும் இவ்விருது வழங்கும்   நிகழ்வு  இம்முறை துபாயில்  இடம்பெற்றது .

சிறந்த பயிற்றுவிப்பளராக 2016 ம் ஆண்டு  யூரோ கால்பந்து  கோப்பையை  கைபற்றிய  போர்த்துகல் அணி பயிற்றுவிப்பாளர் "பெர்னாண்டோ சாண்டோஸ் " தெரிவானார்


சிறப்பு

  உலகில் உள்ள 161 நாடுகளில் GOOGLE  மூலம் அதிகம் தேடபட்டவர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது  இதில் 88 நாடுகள் டொனால்ட் ட்ரம்ப் தேடபட்டுள்ளார் 
அவருக்கு பின்னர் டிக்கப்ரியோ ,பில்கேட்ஸ் ஆகியோர் உள்ளனர்

உலக நடப்புகள் 2017/1/1

இலங்கை
பாடசாலை மாணவர்களுக்கு விசேட காப்புறுதி திட்டம் அறிமுகமாகிறது 
200 000  ரூபா  பெறுமதியான  காப்புறுதி  திட்டத்தில் மருத்துவ காப்புறுதி உட்பட  பல சேவை  உள்ளீடாகிறது 

 note:- 5-19  முதல்  வயது வரையான  பாடசாலை மாணவர்கள் 4.5 மில்லியன் மாணவர்கள் உள்ளனர் 

உலகம்
1)2016-ஆம் ஆண்டில் 93 பத்திரிகையாளர்கள் கொலை :- சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தெரிவிப்பு அந்த அமைப்பின்  தலைவர்  பிலிப் லீருத் 


2) சீனாவில் 1,854 அடி உயரத்தில் கட்டமைக்கப்பட்ட உலகின் மிக உயரமான பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டதுமலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள யுனான் மற்றும் குய்சோகு ஆகிய இரண்டு மாகாணங்களை இணைக்கும் வகையில் இந்தப் பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மலைகளுக்கும் நடுவே ஓடும் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பெய்பான்ஜியாங் பாலத்தின் உயரம் 565 meter (1,854 அடி) ஆகும். இது உலகிலேயே மிக உயரமான பாலமாகும்     

 3) துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள "ரெய்னா "கிளப்பில்  புத்தாண்டை வரவேற்று நடந்த  இசை  விருந்து நிகழ்வில்  தீவிரவாதிகள்  துப்பாக்கி சூடு நடத்தியதில் 39 பேர் பலி

விளையாட்டு

செர்பியா  நாட்டு  டென்னிஸ் வீராங்கனை அனா இவனோவிச்  விளையாட்டில்  இருந்து  ஒய்வு  அறிவிப்பு 

Sunday, January 1, 2017

முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க பற்றிய சில குறிப்புகள்


  1. 27 DEC  அவர்  இறக்கும் வரைக்கும்  ஜனாதிபதி  மைத்ரிபாலவின்   சிரேஸ்ட ஆலோசராக  கடைமையாற்றினார்
  2. 1965 ம் ஆண்டே முதல் முதலாக "ஹொரண' தேர்தல் தொகுதியில்  போட்டியிட்டு  பாராளுமன்றம்  சென்றார் 
  3.   21 NOV 2005 ஆண்டு  முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்சவினால்  பிரதமராக  நியமனம் பெற்றார்
  4. இதற்கு முன்னர் Aug  2000 - Dec 2001   காலபகுதியிலும் பிரதமராக  கடமையாற்றி உள்ளார் 
  5. 5 MAY 1933  ல் பிறந்த இவர்  27 December 2016  அன்று  மரணமடைந்தார்


ஒய்வு பெறும் UN பொது செயலர் 1/1/2017

ஐக்கிய நாடுகள் சபையின் 8ஆவது பொதுச் செயலாளர் பான் கீ மூன் இன்று தனது பதவியிலிருந்து ஓய்வுபெறுகின்றார். 

2007ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 8வது பொதுச் செயலாளராக பதவியேற்ற பான் கீ மூனின் பதவிகாலம் இன்றுடன் நிறைவடைகின்றது. 

NOTE:- 9வது பொதுச் செயலாளராக போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டானியோ கட்டேரஸ் நியமிக்கப்பட்டுள்ளார்  

கடந்த 12ம் திகதி பதவியேற்ற இவர், நாளை முதல் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.  (ada derana )

ஒரு செக்கன் தாமதமான இந்த புது வருடம்

2017ம் ஆண்டு ஒரு செக்கன்  தாமதமாக பிறந்துள்ளதாக சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டு முடிவடைந்து 2017 புத்தாண்டு  பிறந்துள்ளது. . நேற்று இரவு 11 மணி 59 நிமிடம் 59வது செக்கனுக்கு பின்னர் இன்னுமொரு  .   செயற்கையாக ஒரு செக்கனுக்கு  தாமதமாக  வருடம்  பிறந்துள்ளது  

பூமி எப்போதும் ஒரே வேகத்தில் சுழல்வது இல்லை. நிலவின் ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில நேரம் வேகமாகவும் சிலநேரம் மெதுவாகவும்  சுழல்கிறது. புவியின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும் இந்த நேரத்தை வானியல் நேரம் என்கிறார்கள். .  புவியில் இந்த சுழற்சி வேறுபாடு காரணமாக வானியல் நேரத்திற்கும் அணுகடிகார நேரத்திற்கும் மிகச்சிறிய அளவில் வேறுபாடு ஏற்படுகிறது.  அதாவது ஒவ்வொரு 18  மாதத்திற்கு பிறகும் கூடுதலாக ஒரு விநாடி சேர்க்கப்படுகிறது. அது லீப் செக்கன் எனப்படும். இந்த செக்கன்  மாற்றம் june 30 அல்லது december 31ம் தேதி கூடுதலாக  சேர்க்கப்படும்.

மேலும் சில  குறிப்புகள் 

1:-1972ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்த லீப் செக்கன் நேற்று நள்ளிரவு உள்பட இதுவரை 27 முறை கூடுதலாக 1  விநாடி சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு தெரிவித்துள்ளது.  

2:- இது தவிர உலகம் முழுவதும் 400  இடங்களில் உள்ள அணு கடிகாரங்கள் மூலம் நேரம் கணக்கிடப்படுகிறது. இந்த அணு கடிகாரத்தை பின்பற்றியே தற்போது நேரம் துல்லியமாக கணக்கிடப்படுகிறது
3:-  
. உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில்  புத்தாண்டு பிறந்தது. இலங்கை நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு, நியூசிலாந்தில் (நள்ளிரவு 12 மணி)