Wednesday, June 29, 2016

வெளிநாட்டுச்சாராயம்



அப்பிடியென்ன ஸ்பெஷல் அதுல இருக்கு?? நம்ம நாட்டு சப்பட்டை சாராயத்துல  இல்லாத   போதையா  இருக்கபோகிறது அந்த வெளிநாட்டு சாராயத்தில ??.
"சொல்லுங்க சொல்லுங்க நீங்க யாரு? பாம்பாய்ல என்ன செய்திட்டு இருந்தீங்க???" பாட்ஷா பட கேள்வி போலவேபலதடவை இந்த கேள்வி என்னை டிஸ்டப் பண்ணியிருந்துச்சு .

 நண்பன் வாங்கிதரும்   ஓசிபியருக்காக யாருக்குமே தெரியாம ஒண்டரை கிலோமீட்டர் தூரம்  சைக்கிளில் அவனைவைத்து மிதித்து போய் குடித்துவந்த  கரடியே காறித்துப்பும் நிலையில்   இருந்த நமக்கு இது தேவை இல்லை என பத்துவருடங்களாக சொல்லிவந்த அதே சமாளிப்பயே ரீமேக் செய்து வெளியீட்டு நாக்கு மூக்கு போன்ற ரசிகசிகாமணிகளை திருப்திபடுத்தியது  ; எம் கே ராஜேஷ் வகை இயக்குனரான மனசு.



    இப்ப கொஞ்ச நாளாவே அந்த கேள்வி என் மண்டையில medula ablangada ல அடிபட்டு புத்திபேதலிச்சவன் பேசுவது போலவே திரும்ப திரும்ப வந்து வந்து 
போச்சுது.ஒரு நாள் அலுவலகத்திலே நடந்த அப்ஸ்சைரல்(appraisal)   மீட்டிங்கில்உங்க தொழில்துறையில் சாதிக்க விரும்புவது யாதெனும் கேள்விக்கு
"சாகிறதுக்கு முன்னாடி வெளிநாட்டு சாராயம் வாங்கி மொட மொட எண்டு ஒரே சிப்ல குடிச்சி 
முடிச்சிடனும் " எண்டுஜோக்காவவே நான் நண்பர்களிடையே சொன்னாலும் உள்மனசுக்குள்ள 
ஆழமா உட்காந்திருந்த அந்த வெளிநாட்டுசாராய ஆசைதான் அப்பிடி பேச வைத்தது என்பது  
போதிதர்மரின் முதலாம் அறிவுக்கு கூட  விளங்கியிருக்கும்.


வெளிநாட்டு சாராய ஆசை எனக்கு வந்த வரலாறு , சமூகக்கல்வி,புவியியல் சுகாதாரமெல்லாம்  கொஞ்சம்சுவாரசியமானது .நட்பு வட்டதில் எல்லோருக்கும் ஒரு பெரியப்பாவோ சித்தப்பாவோ அங்கிளோ ஆண்டியோவெளிநாட்டில் இருப்பார்கள் .அவங்க கொண்டுவந்த சாராயத்த வைச்சு 
அவனுக காட்டின படம் தான் இப்படி ரிவென்ஞ் எடுக்க தோனிச்சு அப்பெல்லாம் நாங்க சும்மா 
மூடிய மணந்துபார்க்கிறது, ஒரு பியர பதினெட்டு பேர் சேர்ந்து குடிக்கிறது என சும்மா குடிக்க 
பழகின நேரம் ஒவ்வொருத்தனும் வந்து 

"மச்சான் பெரியப்பா கொண்டு வந்த போத்தல் பிரிஜ்ல இருந்து ஒரு சொட்டு குடிச்சி    ஒருவருக்கும் தெரியாமகுடிச்சண்டா ! மணமே இல்ல சும்மா ஜிவ் வெண்டு இருந்துச்சு" 

"மச்சி மாமா கொண்டுவந்தது குடிச்சி பிரிஜ் ல வைச்ச மிச்சம் குடிச்சண்டா அப்டியே மிதக்கிற மாதிரி இருக்குடா "




இந்த வார்த்தைகள்தான் எனக்குள்ள தூங்கிகிட்டிருந்த சாராய மிருகத்த தட்டி எழுப்பிச்சு, அப்பதான் அவங்க கிட்டசொன்னேன்.

இன்னிக்கு உங்க மாமா, பெரியப்பா எல்லாம் வெளிநாட்டில இருக்காங்க அவங்க கொண்டு வருவாங்க எங்கிற திமிருல ,

ஜொனிவோர்க்கர் குடிச்சன் விஸ்கி குடிச்சன் நு  சொல்லி எனக்குள்ள தூங்கிட்டு இருந்த  வெளிநாட்டு சாராய வெறியதட்டி எழுப்பிட்டீங்க .

நண்பர்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இது வரைக்கும் என்ன நீங்க வெறும் பியர் குடிக்கிற ஒருத்தனாத்தான் பார்த்திருபீங்கஇனி ஜொனிவோர்க்கரோ கார்ட் டெயிலோ குடிக்கிறவனா பார்க்கப்போறீங்க. 

இந்த நாள் உங்க காலண்டர்ல குறிச்சிவைச்சுக்கோங்க.


இன்னையில இருந்து  எனக்கும் உங்களுக்கும் வெளிநாட்டு சாராய யுத்தம் தொடங்கிடுச்சு! இந்த யுத்தத்தில உங்களவிடவும் அதிகமா ரெட்லேபிள் ,கோல்ட் லேபிள் ஏன் ப்ளூ லேபிள் ஜொனிவோர்க்கர் வரைக்கும் குடிச்சி உங்களவிடவும் சிறந்த குடிகாரன்னு சமூக அந்தஸ்து எடுத்து, இப்ப எப்பிடி அது இப்பிடியிருக்கு இது அப்பிடியிருக்குசொல்லிறீங்களோ அதே போல நானும் உங்க கிட்ட சொல்லல


என் பேரு .........இல்லைடான்னு 


அண்ணாமலை பட ரஜனிகாந்தா மாறி அவனுகளுக்கு விட்ட சவாலை இன்னமும்நிறைவேற்றினால்தான் இந்த ஜீவன் முத்தியடையும் என்பதே பெரிய விடயமாய் பட்டதெனக்கு.

இந்த சவால்தான் இத்தனை துன்பத்துக்கும் காரண கர்த்தாவாக இருந்ததால் நான் கர்த்தரையே வேண்டிக்கொண்டேன்

சர்வ வல்லமை பொருந்திய ஆண்டவரே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! எனக்கும் ஒரு மாமாவோ சித்தப்பாவோ வெளிநாட்டில இருந்து அவர்கள்எனக்கு ஒரு போத்தல் ஜொனிவோர்க்கர் பிளாக் லேபலோ ரெட் லேபிளோ கொண்டு வந்து குடுக்கும்படி செய்வாக  ஆமென் ஆமென்  ..

 அவனவன் நகை நட்டு வாங்கவென சம்பள காசுல கொஞ்சங்கொஞ்சமா மிச்சம் பிடிப்பான்   இல்லாட்டி கதிர்காமம்போகவெண்டாலும் கொஞ்சங்கொஞ்சமா மிச்சம் பிடிப்பான். இந்த  லோகத்திலே சாராயம் வாங்கி குடிக்கனும் எண்டதுக்காகவே சம்பள காசுல நூறோ இருநூறோ மாசம் மாசமா மிச்சம் பிடிச்சி வந்த ஒரே ஒரு  பரிதாபத்துக்குரியஜீவன் நானாத்தான் இருக்கும் பொண்டாட்டிக்கு கூட தெரியாமல் சேர்த்து வைச்ச காசு "சிறுதுளி பெரும் போத்தல்"எனும் குடிமொழிக்கு ஏற்ப நாளொரு பியரும் பொழுதொரு கார்ட்ஸ்பெக்கும் என வளர்ந்து 6000 ரூபாயாக வந்துநின்றது.

அப்பதான் அலுவலக நண்பன் ஒருத்தனுக்கு பிசினஸ் டார்கெட் அடித்த காரணமாய்  போனாபோகுதுன்னு எமது  அலுவலகத்தினால் "பங்கொங்"செல்ல வசதிஏற்படுத்தி கொடுக்கபட இருக்கிறது  எனும் செய்தி இன்ப பியர் வந்து பாயிதுகாதினிலே போல வந்து சேர்ந்தது .

என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறன் இதுல இனி இந்த கையால ஒரு பிளாக் லேபிள்  ஜொனிவோர்கர்தான் பார்க்கனும் என சொல்லி அந்த 6000 ரூவாவை குடுத்துவிட்டேன் !  சிவப்பு கலரில் "டியுட்டிப்ப்ரீ" என பெரியகொட்டைஎழுத்தில் இருந்த ஒரு பிளாஸ்டிக்பையிலே கொண்டுவந்து சேர்த்தான், கூடவே நான்கைந்துசொக்கலேட்டுகள் யாருக்கு வேண்டும் அந்த சொக்கலேட்  போத்தலை கொண்டாடா என மிட்டாயைபறித்துகொண்டோடும் குழந்தை போல ஓடினேன்.

கையில இருந்த முட்டாச காக்கா கொத்தின மாதிரி பொண்டாட்டி எனும் சண்டாளி போத்தலை பையோடே பிடிங்கிகொண்டாள்! இண்டைக்கு இல்ல நாயிற்றுகிழமை தான் குடிக்கலாம் நானே  எல்லாம் செய்து தாரன் இந்த பதில்கொஞ்சம் திருத்தியை உண்டாக்கியது, என்றாலும் எதுவும் தெய்வகுத்தம் ஆகி  "கிக்" குறைந்துவிடுமோ எனும் பயம்இருக்கதான் செய்தது, அட ஆக்க பொறுத்த நமக்கு ஆற பொறுக்க முடியாதா?? ரெண்டு நாள் தானே நிதானமாகுடிக்கலாம் என நினைத்து மனிசியாரிடம் உத்தரவு வாங்கிக்கொண்டேன்.



அந்த பொன்னான நாயிறும்/நாளும்  வந்தது! காலையில எழுந்து வீட்டில் உருபடியாய் ஏதாச்சும் வேலைசெய்த்தால்தான்  எவ்வித நச்சரிப்போ அரியண்டங்களோ இல்லாமல் குடிக்கலாம் எண்டு எண்ணி கொள்ளி  கொத்துவதுமுதல்கொண்டு புல்லு செதுக்கிற எண்டு பெரிய வேலைகாரன் கம்பு போல சுழண்டு சுழண்டு வேலை செய்ததால் (மனிசியின்  உள்பாவாடை சட்டை எல்லாம் துவைத்ததை சொல்ல வெட்கமாக இருப்பதால் சொல்லவில்லை) குடிப்பதற்கான பச்சை லைட்டை மனிசியார் எரிய விட்டார்.

குளித்து விட்டு சாப்பிட முதல் இருக்கும் அரைமணித்தியாலத்துக்குள் குடிக்கலாம் என  திருக்கணித பஞ்சாங்கத்திலேசொல்லப்பட்டிருப்பதால் , குளித்துவிட்டு குசினிப்பக்கம் போனால் ஆச்சரியம் காத்திருந்தது. பன்பாய்  விரிக்கபட்டுஅதிலே கிளாஸ் ,சுடசுட மீன் பொறியல், பிரிஜ் ஜில் இருந்து எடுத்த பெப்சி போத்தல் எல்லாம் எடுத்து ரெடியாகிஇருந்தது.உள்ளூர பயம் தொற்றிக்கொண்டது . வீட்டுக்க ஒத்த பியர் குடிக்கிறதுக்கே உலகம் தாண்டி செவ்வாய்கிரகத்துக்கே  கேட்கும் படி கத்துற நம்ம பொண்டாட்டியா இப்பிடியெல்லாம் ஏற்பாடு செய்திருப்பது. ஒரு  வேளை உள்ளேயே வைத்து ஊமகுத்தாக குத்திவிட போகிறாளோ? இதுதான் கடைசி இண்டையோட இந்த கருமத்தயெல்லாம்உட்டுடனும் எண்டு சொல்லிடுவாளோ? சீ இருக்காது அப்ப ஏன் இப்படி அன்பாக நடந்து கொள்கிறாள்?
ஒருவேளை நானும் ஒரு "சொட் "குடிக்க போறேன் என பங்கு கேட்டு வந்துடுவாளோ ? இவ்வளவு காலமும் ஒத்த பியர்என்றாலும் பாட்னசிப் தரும் அந்த நண்பனுக்கு கூட சொல்லால் குடிக்க போகிறேன்  இதில் இவளுக்கு வேறு குடுப்பதா??? இல்லை அப்படி எதுவும் இல்லை என்பது பொண்டாட்டாட்டியின் "அந்த" சிரிப்பில் தெரிந்தது .ஆனாலும் பாயில்கொமடியன், குணச்சித்திர நடிகர்கள் நாயகி என எல்லோரும் இருந்தாலும் அந்த முக்கியமான கதாநாயகனை இன்னமும் காணவில்லை . பிரிஜ் ஜை திறந்தேன் உள்ளே என் செல்லாகுட்டி கறுப்பு சட்டையோடு உட்காந்திருந்தாள்.ஏர்டெல் சூப்பர் சிங்கரில் பெஸ்ட் கப் எடுக்க காத்திருப்பவன் இவ்வளவு எக்சைட்மெண்ட்டோடு இருக்க மாட்டான்.முதல்முதலில் ஒரு வெளிநாட்டு சாராய போத்தலின்  மட்டையை தடவி பார்த்தேன் .கீழே இருந்த தண்ணீர் போத்தலைஎடுத்து கொண்டே எனது செல்லாகுட்டையை மட்டையோடு சேர்ந்து கையிடுக்குக்குள் இறுக்கு கொண்டேன் . ஏ ஆர்ரகுமான் ஒஸ்கார் அவார்ட்டை கையில் எடுத்த போது இவ்வளவு சந்தோச பட்டிருக்க மாட்டார் விட்ட சவாலைநிறைவேற்ற போகும் சந்தோசம் ஒருபக்கம் ! முதல் முதலில் தனியே "அரக் " குடிக்கும் ஆசை ஒருபக்கம் எனபுழகாங்கிதம் எனக்கு .

"செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே."

இந்த தேவாரம்  எப்படி அப்பொழுது நினைவுக்கு வந்ததோ தெரியல இருந்தும் சிட்டிவேசனுக்கு மிகவும் சிறப்பாகவேஇருந்தது. இரண்டடி வைத்திருப்பேன் ஜில் ஜில் என உள்ளே குலுங்கும்  சப்தம் காதில் சதங்கை ஒலி போலஒலித்தது.இன்னுமொரு அடி கால் வைத்திருப்பேன் ,  தலைவரின்  ராஜீவ் காந்தி  தற்கொலை பாணியில் சொல்வதானால்   அப்போதுதான்து  அந்த  துன்பியல் சம்பவம் நடந்தேறியது . "கிளிங் "என்றொரு சப்தம் மூலமாய்  என் ஆசை , சவால் , சந்தோசம் எல்லாமே நிலத்திலே   வழிந்தோடிக்கொண்டிருந்தது.

பிரிஜ் ஜில் இருந்ததால் அந்த மட்டைகவரின் அடிப்பாகம் நனைந்து இருந்ததை என் சாராய ஆசைமிகு கண்ணுக்குதெரியாமலே போய்விட்டது . நிலத்தில் விழுந்து அடிப்பாகம் வெடித்து என்   ஆசையே அலைபோலஓடிக்கொண்டிருந்தது.
 ரோம் நகரம் பற்றி எரியும் போது பிடில் வாசித்துகொண்டிருந்த நீரோ மன்னன் போலவே இந்த  துயரத்தை எல்லாம்கண்ணுறாத என் மனைவி  இன்னமும் குசினிக்குள் பாத்திரம் தேய்த்து தன்  கடமையுணர்ச்சியைகாட்டிக்கொண்டிருதாள்.

என் அப்பா இறந்த போது கூட கண்கனை கலங்காமலே பார்த்துக்கொண்டேன், ஆனாலும் இப்போது கொஞ்சம் கலங்கியேபோனது ,இருக்காதா பின்னே ஆறேழு வருடத்து ஆசை ஒரு நிமிடத்தில் நிராசையாகி போனது. கமுக்கட்டுக்க(கையிடுக்குக்க) எட்டியது வாய்க்கு எட்ட வில்லையே எனும் கவலை இன்னொருபுறம்  என  மொத்தமாய்  போத்தலோடு சேர்த்து நானும்  உடைந்தே  போனேன் .என் அலறல் கேட்டு வந்தமனைவியோ 

கவலை படாதீங்க இன்னொரு நாளைக்கு பார்க்கலாம் என உடைந்த போத்தல் துண்டுகளை பொறுக்கதுவங்கினாள்.கொஞ்சம் பொறு பொறு என சொல்லி குனிந்து விரலாலால் அதை தொட்டு நக்கி பார்த்தேன் . என் ஆறுவருடத்து வியர்வை கொஞ்சமாய் உப்பு உறைத்தது .





(இது நண்பன் ஒருவருக்கு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட ஒரு சராய காவியம்ஆகும்!!. மற்ற படி எனக்கும் இதுக்கும் எவ்வளவும் சம்பந்தம் இல்ல)