வெட்கமறியா விடலை பருவத்தில்
வெயிலை அள்ளி பருகியிருந்தோம்
வெயிலை அள்ளி பருகியிருந்தோம்
வெந்தனலாய் வீதிதகிக்கும் வேளைகளிலே
வெற்றுகாலில் நடைபயின்றிருப்போம்
மழையாகி வானமழும்
மாலைநேரங்களில்
மகிழ்வோடு நனைத்ததில்
மறந்தே போனது கவலைகள்
மழையாகி வானமழும்
மாலைநேரங்களில்
மகிழ்வோடு நனைத்ததில்
மறந்தே போனது கவலைகள்
பனங்காய் சில்லுவண்டி,அந்த கால
பணக்காரதனமான கார் எங்களுக்கு,
கிட்டிபுள்ளுக்கு குழி தோண்டியதில்
கினற்றுமடுவாகியது வீதியெல்லாம்
நாவல்பழம் உண்டு மருதானியிட்டு
நாக்குகளை அழகுபடுத்துவோம்,
நாக்குநுனியால் எட்டிஎட்டி
எச்சில் ஊற்றி மீசை வளர்த்திருந்தோம்
காலம் மாறியது, காகிதபணத்தின்
காலடியில் அடிபணிந்தோம்,
கவலைகளோடு கைகோர்த்தோம்
கண்ணீரில் மூழ்குகின்றோம் !!