Monday, September 23, 2013

நேற்றைய தேரோட்டம் !

கிட்டதட்ட  ஒரு மாசம்  முன்பே  **** நிறுவன அனுசரணையுடன்  கூடிய தேரோட்ட  பிரோமொசன்  போஸ்டர் ;போகும் வரும் இட மதில் சுவர்களையெல்லாம் ஆக்கிரமித்திருந்தது .  இயேசு அழைக்கிறார் ,விஜய் நடிக்கும் தலைவா, வணிகப்புயல் வகுப்புகள் ஆரம்பம், ரக பாணி போஸ்டர்களை விடவும் முழு மாச கர்ப்பினியாகி  மதில் சுவற்றை  நிரப்பியிருந்தது   " தேர்  வடம் பிடிக்க வாரீர் " எனும் மஞ்ச  கலர்  போஸ்டர் .விளம்பரத்துக்கு  மயங்காதோர் யாருமில்லை எனும் பாணியில் இது கூட ஓர் தூண்டுகோலாகி  போனது  எனது தலைப்புடனான பயணத்துக்கு .ஓர் இந்துவாக இருந்த போதிலும் ஒரு சில சடங்கு சம்பிரதாயங்களை துளி கூட மதிக்காத ஒரு ஒரு "புது ஜெனரேஷன்" இந்து எனப்படும் வகையறாவுக்குள்  அடங்க கூடிய ஓர் இந்து   நான் .ஆனால்  எட்டு முழ  வேட்டியை  அலேக்காக   (பெல்ட் ,சனல் ,அரையான் கயிறு என எந்த  வித உதவியும் இன்றி ) இருக்கும் கொஞ்ச நஞ்ச  மானத்தையும் கட்டி  காப்பாத்தும்  படியாக கட்ட  கூடியவன் . கூடவே அசைவம் சாப்பிடாலும்  தலை முழ்கினால் அந்த  பாவம் போய்விடும் என நம்பும் முழு மொள்ள மாரி  தனமான  ஓர்  இந்து .மனசு சுத்தமாய் இருந்தால்  போதும்  என தனக்கு தானே  ஆறுதல்  கூறும் அப்பாவி இந்துவும் நானே !!!

சரியாக நான்கு மணிக்கே தேரோட்டம் ஆரம்பிக்கும் என இருந்த போதிலும் பன்சுவாலிட்டி, (அட  நேர முகாமைத்துவம் என தமிழில் எழுதியிருந்தால் டைப் அடித்து அழித்து திரும்ப  அடித்து அழித்து என வீணாக்கிய  நேரத் தை  மீத  படுத்தியிருக்கலாம் )  அடிப்படையில் முக்கால் மணி  நேரம்  முந்தியே பயணத்தை ஆரம்பித்திருந்தேன் . காற்றை  கீழி த்து செல்லும் வண்டி ,காற்றே  புக இடமிடாலும் கட்டி பிடித்து செல்லும் ஜோடி ,பட்டு வேட்டி பட்டு  சீலை என  திருமணமாகி ஓரிரு மாதங்களான ஜோடி , டயர்  பஞ்சரான வண்டி கள்  ,ஸ்கூட்டி  அழகி  என     எல்லோரையும் முழுதாய்  நோட்டமிட்டே  சென்றாம்.

                                                ஓர் ஸ்கூட்டி பிகரை மட்டுமே ஓவர் அட்டாக்  செய்ய மனமில்லாமல்  அவளின் "பிங்" நிற வண்டிக்கு ஏற்றவாறான சாரி ,லிப்ஸ்டிக் ,இமிட்டேன்சன் காப்பு மற்றும் இத்தியாயி இத்தியாயி என சகலதையும் "" கலைக்கண் ""கொண்டு மட்டும் அவதானித்து !!!!!!!!!! போகும் போதே  இடையிலே குறுக்காக எருமை மாட்டு பட்டி  புகுந்து   வாழ்வின்  நுண்ணரசியல் சக வாழ்வியல் உண்மைகளை  வெளிச்சம் போட்டு காட்ட   "இதுவும் கடந்து போம் " என்றுரைத்து வண்டியை முறுக்கி ஓட்டினோம் .

                                                "பைக் "களை இங்கே நிறுத்தவும் கட்டணம் 30 ரூபாய் .எனும் விளம்பர பலகையை பார்த்து  சிரித்து கொண்டே கோவில் அருகில் இருக்கும் நண்பனின் நண்பனின் நண்பன் வீ ட்டுக்கு கொண்டு பைக்  கை விட்டு அவர்களுக்கு முழு விளக்கம் சொல்லி கெல்மட் ,300 ரூபாய் செருப்பு என எல்லாவறையும் விட்டு விட்டு இந்து சமயத்துக்கே உரிய கோவில் வாசல் பிச்சை காரர்களை  எல்லாம் தாண்டி ,வழக்கம்போலவே எல்லோருக்கும் 5 சதம் கூட  தானமிடாமல்  கோவில் வாசல் அடைய நான்கே கால் மணியானது !  .

கால் கழுவுமிடம் ,"சாரண"  மானவர்களை அந்த "பைப்"களை  திறந்து மூட  அமர்த்தியிருக்கிறார்கள் ; நீர் வீணாதல் ,பைப்  களை  உடைத்தல் என சென்ற கால அனுவங்களை கருத்தில் எடுத்திருக்கிறார்கள் .அங்கே  அதே "பிங்க் " கலர் ஸ்கூட்டி  பொண்ணு கால்  நனைக்க காத்திருந்தாள் ,இதுவரை பார்த்த தமிழ்  படங்களில்  இதே சீனை தேடி மனசு ரிவைன் பட்டனை அமர்த்தியிருந்தது ,ஆயிரம் இளையராஜாக்கள் "பிஜிஎம்" கள் காதுக்குள் ரிங்கா ரமிட்டு கொண்டிருந்தன ,கொஞ்சம் கொஞ்சமாய் ஆன்மீக  மனது
" லவ்" கீக வாழ்வுக்கு போக  ஆயத்தம் ஆகும் வேளையில் அவளின் வருங்கால கணவனாக  கூடியவன் அழைத்து கொண்டி போயிருந்தான்  அவளை ......
ரொம்பவே நீண்டு கொண்டு போவதால் பதிவுலக விதிப்படி அடுத்த பதிவில் தொடர உத்தேசம் .