Tuesday, December 31, 2013

அம்மா 2013

வலி சுமக்க வைந்திருந் தாய்
பலி எடுத்திருந் தாய் 
விழி வழிந்த நீர் மண்னோட 
பழி வந்து சேர்ந்ததே உன்னோடே!!!

காலன் பொறுக்கலியோ 
காலம் பொறுக்கலியோ
நெஞ்சு பொறுக்கலியே
விஞ்சு நீர் விழிமீறியே

தணனால் எரித்தனனே 
தனிமைக்குள் எரிந்தனனே
கண்னீரால் மூழ்கினனே 
தாயென முழங்கினேனே


ஒலக இலக்கிய "ரிவர்ஸ் கியர்" 2013

தமிழ் இலக்கியங்களோ  சமய இலக்கியங்களோ  எவற்றிலும்  அக்கறை இல்லாத ஓர் சாதாரண பேஸ்புக் போராளியாகவே இருந்த வருடம் 2012 ,ஆயினும் 2013 ஐ பொறுத்த வரையில் பேஸ்புக் ,ருவிட்டர் என அதிகமாய் புழங்கியதால் என்னவோ தெரியவில்லை ,உலக   இலக்கியத்துக்கு சேவை செய்யாவிடினும் ஓலக எலக்கியத்துக்கு  ஏதும் அரும் பணி ஆற்ற முன்னிட்டு "பிட்டு " கதைகளை வாசிக்கவும்  நேர்ந்தது என்னமோ உண்மைதான் ,அந்த  ஏக்கத்தின்  வெளிப்பாடே கீழ் உள்ள கருத்து வெளி

ஓர் காலத்தில் இயக்கிய நாவலோ ,கதைகளோ மன்னன் ,நாடு சம்பந்த  பட்டதாகவும் பின்னர் அது சமுகம் ,புரட்சி ,சுகந்திரம் என மாற்றம் பெற்ற போதும் இலக்கியம் மேல் வராத ஒரு அக்கறை இப்போது   பின் நவீனத்துவம் எனும் போர்வையில்  அதை பற்றியே பூரணம்  இல்லாதவர்கள்  காமத்தினை மட்டுமே  முதனிலை படுத்தி   கொண்டு வரையும்  நாவல்,சிறுகதை என்பவற்றினுடு பலருக்கும்  ஏற்பட்டிருகிறது ,இனிவரும் சமுகம் எந்த முறையில் இதை ஏற்கும் என்பது கூட  தெளிவில்லாத ஓர் துப்பாக்கிய  நிலை .


எழுத்தாளன் ,கவிஜன் என பலாயிரம் பேர் உலாவிகொண்டிருக்கிரார்கள் இணைய வெளியில் ,அவற்றுள்  தங்கள்  சுயங்களை தொலைத்தே  "ஒலக எலக்கியத்துக்குள்  " உள் நுழைய  முற்பட்டு கொண்டிருகிறார்கள் ..யார் கண்டறிந்த வார்த்தை பிரயோகமோ தெரியவில்லை ""ஓலக எலக்கியம் "" படு பொருத்தமான  பிரயோகம்  ,ஒரு கடைநிலை பார்வையாளனான நானே எனது சுயத்தை தொலைத்தே   பல விடயங்களை  சொல்ல வேண்டி இருக்கிறது ,அடிப்படையில்    ஈழத்து இளைஜன் நான் ,இதுவரையில் ஈழம்  பற்றி  ஒற்றை  வரி கூட இந்த  வலைபூவிலோ ,தினம் தினம் மொக்கை போடும் பேஸ்புக் ,ருவிட்டரிலோ பதிவிடவில்லை ஆக  ஒலக எலக்கியம் எனும் வையறாவுக்குள் எட்டி பார்க்கும் அடி மன  ஆசை காரணமாக  என்  சுயத்தை  தொலைத்து  இருக்கலாம் .

 இப்போதிய இணைய இலக்கிய வெளி ஆரோக்கியமாக இல்லை என்பதே பொதுப்படை கருத்து ,சாதாரனமாய் பேஸ்புக்கில் பதிவிடும் போதே "பெப்பர்  தூவிய ஆம்லேட் " போல்  காமம்   கொஞ்சம்  சேர்க்க  லைக் அள்ளும் ,இப்படியாய் இணைய வாசகனே  எல்லா நிலை வாசனுக்கு பொதுவாகி இலக்கியவாதிகளின்  களத்தை தீர்மானித்து   இருக்கிறான் ,ஓரிரு வருடம் முன்பு நானே இப்படியாய் சற்றே  காமம்  தெளித்து எழுதப்பட்டவ ற்றை  விரும்பி ரசிப்பேன்  ஏன் இப்போது கூட அவ்வாறே  மனஓட்டம்  இருக்கிறது  .இப்படியாய்  வாசகனை  மாற்றியது இணையவெளி என உறுதியாய்  கூறலாம் .

முன்பெல்லாம் கவிதை எழுதியோ  ,பந்தி  பந்தியாய் எதுகை மோனை என சேர்த்து வெண்பா .விருத்தம் என எழுதியவற்றை ரசிக்கும்  மனநிலையில்  வாசகனும் இல்லை எழுதாள னுக்கும்  அப்படி எழுதும்  எண்ணம் இல்லை. அவசர யுகமே இந்த தமிழ் இலக்கியத்தையும் இப்படி ஒலக இலக்கியமாய்  மாற்றி  வைத்திருகிறது ,ருவிட்டரில் 140 எழுத்துகளில்  ஓர் சிறுகதையே எழுதும் வல்லமை  படைத்தவர்கள் உலாவி கொண்டிருகிறார்கள்  ,அந்த  140 எழுத்திலே நக்கல் ,நையாண்டி ,  சமூகசிந்த னை  என இரடி திருகுறளாக்கி விட்டனர் .


ஆக  வாசகனே எழுத்தாளனை சுயத்தை தொலைக்க செய்து  ஒலக இலக்கிய வாழ்வுக்கு  முன்னிலை படுத்தபடுத்துகிறான் .நன்றி ....


Monday, September 23, 2013

நேற்றைய தேரோட்டம் !

கிட்டதட்ட  ஒரு மாசம்  முன்பே  **** நிறுவன அனுசரணையுடன்  கூடிய தேரோட்ட  பிரோமொசன்  போஸ்டர் ;போகும் வரும் இட மதில் சுவர்களையெல்லாம் ஆக்கிரமித்திருந்தது .  இயேசு அழைக்கிறார் ,விஜய் நடிக்கும் தலைவா, வணிகப்புயல் வகுப்புகள் ஆரம்பம், ரக பாணி போஸ்டர்களை விடவும் முழு மாச கர்ப்பினியாகி  மதில் சுவற்றை  நிரப்பியிருந்தது   " தேர்  வடம் பிடிக்க வாரீர் " எனும் மஞ்ச  கலர்  போஸ்டர் .விளம்பரத்துக்கு  மயங்காதோர் யாருமில்லை எனும் பாணியில் இது கூட ஓர் தூண்டுகோலாகி  போனது  எனது தலைப்புடனான பயணத்துக்கு .ஓர் இந்துவாக இருந்த போதிலும் ஒரு சில சடங்கு சம்பிரதாயங்களை துளி கூட மதிக்காத ஒரு ஒரு "புது ஜெனரேஷன்" இந்து எனப்படும் வகையறாவுக்குள்  அடங்க கூடிய ஓர் இந்து   நான் .ஆனால்  எட்டு முழ  வேட்டியை  அலேக்காக   (பெல்ட் ,சனல் ,அரையான் கயிறு என எந்த  வித உதவியும் இன்றி ) இருக்கும் கொஞ்ச நஞ்ச  மானத்தையும் கட்டி  காப்பாத்தும்  படியாக கட்ட  கூடியவன் . கூடவே அசைவம் சாப்பிடாலும்  தலை முழ்கினால் அந்த  பாவம் போய்விடும் என நம்பும் முழு மொள்ள மாரி  தனமான  ஓர்  இந்து .மனசு சுத்தமாய் இருந்தால்  போதும்  என தனக்கு தானே  ஆறுதல்  கூறும் அப்பாவி இந்துவும் நானே !!!

சரியாக நான்கு மணிக்கே தேரோட்டம் ஆரம்பிக்கும் என இருந்த போதிலும் பன்சுவாலிட்டி, (அட  நேர முகாமைத்துவம் என தமிழில் எழுதியிருந்தால் டைப் அடித்து அழித்து திரும்ப  அடித்து அழித்து என வீணாக்கிய  நேரத் தை  மீத  படுத்தியிருக்கலாம் )  அடிப்படையில் முக்கால் மணி  நேரம்  முந்தியே பயணத்தை ஆரம்பித்திருந்தேன் . காற்றை  கீழி த்து செல்லும் வண்டி ,காற்றே  புக இடமிடாலும் கட்டி பிடித்து செல்லும் ஜோடி ,பட்டு வேட்டி பட்டு  சீலை என  திருமணமாகி ஓரிரு மாதங்களான ஜோடி , டயர்  பஞ்சரான வண்டி கள்  ,ஸ்கூட்டி  அழகி  என     எல்லோரையும் முழுதாய்  நோட்டமிட்டே  சென்றாம்.

                                                ஓர் ஸ்கூட்டி பிகரை மட்டுமே ஓவர் அட்டாக்  செய்ய மனமில்லாமல்  அவளின் "பிங்" நிற வண்டிக்கு ஏற்றவாறான சாரி ,லிப்ஸ்டிக் ,இமிட்டேன்சன் காப்பு மற்றும் இத்தியாயி இத்தியாயி என சகலதையும் "" கலைக்கண் ""கொண்டு மட்டும் அவதானித்து !!!!!!!!!! போகும் போதே  இடையிலே குறுக்காக எருமை மாட்டு பட்டி  புகுந்து   வாழ்வின்  நுண்ணரசியல் சக வாழ்வியல் உண்மைகளை  வெளிச்சம் போட்டு காட்ட   "இதுவும் கடந்து போம் " என்றுரைத்து வண்டியை முறுக்கி ஓட்டினோம் .

                                                "பைக் "களை இங்கே நிறுத்தவும் கட்டணம் 30 ரூபாய் .எனும் விளம்பர பலகையை பார்த்து  சிரித்து கொண்டே கோவில் அருகில் இருக்கும் நண்பனின் நண்பனின் நண்பன் வீ ட்டுக்கு கொண்டு பைக்  கை விட்டு அவர்களுக்கு முழு விளக்கம் சொல்லி கெல்மட் ,300 ரூபாய் செருப்பு என எல்லாவறையும் விட்டு விட்டு இந்து சமயத்துக்கே உரிய கோவில் வாசல் பிச்சை காரர்களை  எல்லாம் தாண்டி ,வழக்கம்போலவே எல்லோருக்கும் 5 சதம் கூட  தானமிடாமல்  கோவில் வாசல் அடைய நான்கே கால் மணியானது !  .

கால் கழுவுமிடம் ,"சாரண"  மானவர்களை அந்த "பைப்"களை  திறந்து மூட  அமர்த்தியிருக்கிறார்கள் ; நீர் வீணாதல் ,பைப்  களை  உடைத்தல் என சென்ற கால அனுவங்களை கருத்தில் எடுத்திருக்கிறார்கள் .அங்கே  அதே "பிங்க் " கலர் ஸ்கூட்டி  பொண்ணு கால்  நனைக்க காத்திருந்தாள் ,இதுவரை பார்த்த தமிழ்  படங்களில்  இதே சீனை தேடி மனசு ரிவைன் பட்டனை அமர்த்தியிருந்தது ,ஆயிரம் இளையராஜாக்கள் "பிஜிஎம்" கள் காதுக்குள் ரிங்கா ரமிட்டு கொண்டிருந்தன ,கொஞ்சம் கொஞ்சமாய் ஆன்மீக  மனது
" லவ்" கீக வாழ்வுக்கு போக  ஆயத்தம் ஆகும் வேளையில் அவளின் வருங்கால கணவனாக  கூடியவன் அழைத்து கொண்டி போயிருந்தான்  அவளை ......
ரொம்பவே நீண்டு கொண்டு போவதால் பதிவுலக விதிப்படி அடுத்த பதிவில் தொடர உத்தேசம் .