Wednesday, August 29, 2012

அயோத்தி நகர் மதிலின் பெருமையும் கம்பரின் சிலேடையும் ...........



பாலகாண்டத்து நகர படலத்தில் அயோத்தி நகரை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் கம்பர் ... நகரின் ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக பெருமைப்படுத்தி கொண்டு வருகிறார் ..அயோத்தி நகரின் அழகினை தன் கவிக்குள் அடக்கி விட துடிக்கிறார்



















































கம்பர் சில மிகைகைப்படுத்தல்கள்  பல இந்த பகுதியில் வந்து போகும்படி பார்த்து கொள்கிறார் ,தற்குறிப்பேற்ற அணி யை கொண்டு வந்து பாடுகிறார் .உதாரணமாக  அயோத்தி நகரை படைக்கும் முன்பு பிரமன் இந்திரனது அமராவாதி நகரையும் அதேபோல் குபேரனது அழகாபுரி நகரையும் படைத்து பயிற்சி பெற்றுகொண்டான் என்று  கூறி விடுகிறார் .

தனக்கு பிடித்தமான சிலேடையையும் கொண்டு வந்து சேர்க்கிறார் மதிலின் பெருமையினை கூற வந்த கம்பர்


மேவரும் உணர்வு முடிவு இலாமையினால்
    வேதமும் ஒக்கும், விண் புகலால்
தேவரும் ஒக்கும், முனிவரும் ஒக்கும்
    திண் பொறி அடக்கிய செயலால்,
காவலில் கலை ஊர் கன்னியை ஒக்கும்,
    சூலத்தால் காளியை ஒக்கும்,
யாவையும் ஒக்கும் பெருமையால், எய்தற்கு
    அருமையால் ஈசனை ஒக்கும்.





மேவரும் உணர்வு முடிவு இலாமையினால்    வேதமும் ஒக்கும
அயோத்தி நகர் மதிலை வேதம் என்று சொல்லி  விழிக்கிறார் .அதாவது நம்மிடம் உள்ள அறிவால் அந்த மதிலில் எல்லையை காண முடியாது இருப்பதால் அது வேதம் போன்றது என்பார் .


 விண் புகலால்,தேவரும் ஒக்கும்
அது விண்ணுலகம் வரை சென்று இருப்பதால் தேவர்கள் போலானது என்கிறார்

திண்   பொறி   அடக்கிய   செயலால்  முனிவரும் ஒக்கும்
  வலிமை மிகு  கருவிகளை     உள்ளடக்கிய  செயலால்  முனிவர்களை
ஒத்திருக்கும் முனிவர்கள் . அதாவது ஐம்பொறிகளை அடக்கி முனிவர்கள் இருப்பது போல என்கிறார் .

காவலில்  கலை ஊர் கன்னியை ஒக்கும்- இந்த அயோத்தி நகரையே காவல் காக்கும்
தொழிலால்   மானை      ஊர்தியாக/வாகனமாக   கொண்ட  துர்க்கையை  போலாகும்

இது எல்லாம் போதாதென்று சூலம் முதலான படை கருவிகளை ஏந்தி நிற்பதால் மதில் காளியை ஒத்து நிற்பதாக பாடுகிறார் ..சூலத்தால்  காளியை ஒக்கும்

யாவையும்  ஒக்கும்  பெருமையால் எய்தற்கு அருமையால்    ஈசனை     ஒக்கும் இவ்வாறு பெருமை    மிகுந்த       எல்லாவற்றையுமே    ஒத்திருக்கும்  காரணத்தால்  எவரும்  எளிதில்  அடைய முடியாமல் இருப்பதாலும்
இறைவன் ஈசனை  போலிருக்கும்

 இவ்வாறு  கவி மழையினை  பொழிந்து நம்மை நனைத்து விடுகிறார் .


 கம்பராமாயணத்தை வெறுமென உரை வடிவில் படிப்பதுக்கும் கவி வடிவில் படிப்பதுக்கும் உள்ள வேறுபபாடு  அதனை படித்து பார்க்கும் போதுதான் தெரிகிறது .. ஓர் குருடனுக்கு சிறந்த ஓவியம் ஒன்றை இவ்வாறு இவ்வாறு வரையபட்டு இருக்கிறது என வேறு ஒருவர் விளங்க வைப்பது போல இருக்கும் உரை .அதேபோல் அந்த ஓவியத்தை நன்றாக பார்வை உள்ளவன் கூடவே ஓவியம் பற்றி தெரிந்தவன் பார்ப்பதும் போலானது இந்த காவியம் .............

இன்னும் வரும் கம்பனின் பெருமைகள்

மூலக்கரு ....தமிழ் இணைய பல்கலைகழகம்