Thursday, August 9, 2012

அலைகடந்த தேசம் அவுஸ்திரேலியா அன்புடன் வரவேற்கிறது உங்களை பகுதி 2

விதி   வரைந்த பாதை
வழி விரைவோம் .
வீசும்  காற்றுடன் கதை பேசி
களைப்பாறுவோம் ..



பாறை நடுவே மோதி 
நங்கூரம் இடுவோம் ,
கரை தேடும் அலைகளுடன்
கரைந்துபோம் ..



திரை கடல் தாண்டுவோம்
திரவியம் தேடுவோ ம்,
கனவுகள்  தின்போம் ,
காதலை குடிப்போம்...

வாழ்க்கை  கோப்பையில் 
வறுமையை மட்டுமே
அருந்தினோம் இதுவரையில் ......
வாழ்வு செழிக்க வங்கம் கடக்க
 முயல்கிறோம் இப்போது ..



 ...............கனிகா.................