Wednesday, August 29, 2012

அயோத்தி நகர் மதிலின் பெருமையும் கம்பரின் சிலேடையும் ...........பாலகாண்டத்து நகர படலத்தில் அயோத்தி நகரை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் கம்பர் ... நகரின் ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக பெருமைப்படுத்தி கொண்டு வருகிறார் ..அயோத்தி நகரின் அழகினை தன் கவிக்குள் அடக்கி விட துடிக்கிறார்கம்பர் சில மிகைகைப்படுத்தல்கள்  பல இந்த பகுதியில் வந்து போகும்படி பார்த்து கொள்கிறார் ,தற்குறிப்பேற்ற அணி யை கொண்டு வந்து பாடுகிறார் .உதாரணமாக  அயோத்தி நகரை படைக்கும் முன்பு பிரமன் இந்திரனது அமராவாதி நகரையும் அதேபோல் குபேரனது அழகாபுரி நகரையும் படைத்து பயிற்சி பெற்றுகொண்டான் என்று  கூறி விடுகிறார் .

தனக்கு பிடித்தமான சிலேடையையும் கொண்டு வந்து சேர்க்கிறார் மதிலின் பெருமையினை கூற வந்த கம்பர்


மேவரும் உணர்வு முடிவு இலாமையினால்
    வேதமும் ஒக்கும், விண் புகலால்
தேவரும் ஒக்கும், முனிவரும் ஒக்கும்
    திண் பொறி அடக்கிய செயலால்,
காவலில் கலை ஊர் கன்னியை ஒக்கும்,
    சூலத்தால் காளியை ஒக்கும்,
யாவையும் ஒக்கும் பெருமையால், எய்தற்கு
    அருமையால் ஈசனை ஒக்கும்.

மேவரும் உணர்வு முடிவு இலாமையினால்    வேதமும் ஒக்கும
அயோத்தி நகர் மதிலை வேதம் என்று சொல்லி  விழிக்கிறார் .அதாவது நம்மிடம் உள்ள அறிவால் அந்த மதிலில் எல்லையை காண முடியாது இருப்பதால் அது வேதம் போன்றது என்பார் .


 விண் புகலால்,தேவரும் ஒக்கும்
அது விண்ணுலகம் வரை சென்று இருப்பதால் தேவர்கள் போலானது என்கிறார்

திண்   பொறி   அடக்கிய   செயலால்  முனிவரும் ஒக்கும்
  வலிமை மிகு  கருவிகளை     உள்ளடக்கிய  செயலால்  முனிவர்களை
ஒத்திருக்கும் முனிவர்கள் . அதாவது ஐம்பொறிகளை அடக்கி முனிவர்கள் இருப்பது போல என்கிறார் .

காவலில்  கலை ஊர் கன்னியை ஒக்கும்- இந்த அயோத்தி நகரையே காவல் காக்கும்
தொழிலால்   மானை      ஊர்தியாக/வாகனமாக   கொண்ட  துர்க்கையை  போலாகும்

இது எல்லாம் போதாதென்று சூலம் முதலான படை கருவிகளை ஏந்தி நிற்பதால் மதில் காளியை ஒத்து நிற்பதாக பாடுகிறார் ..சூலத்தால்  காளியை ஒக்கும்

யாவையும்  ஒக்கும்  பெருமையால் எய்தற்கு அருமையால்    ஈசனை     ஒக்கும் இவ்வாறு பெருமை    மிகுந்த       எல்லாவற்றையுமே    ஒத்திருக்கும்  காரணத்தால்  எவரும்  எளிதில்  அடைய முடியாமல் இருப்பதாலும்
இறைவன் ஈசனை  போலிருக்கும்

 இவ்வாறு  கவி மழையினை  பொழிந்து நம்மை நனைத்து விடுகிறார் .


 கம்பராமாயணத்தை வெறுமென உரை வடிவில் படிப்பதுக்கும் கவி வடிவில் படிப்பதுக்கும் உள்ள வேறுபபாடு  அதனை படித்து பார்க்கும் போதுதான் தெரிகிறது .. ஓர் குருடனுக்கு சிறந்த ஓவியம் ஒன்றை இவ்வாறு இவ்வாறு வரையபட்டு இருக்கிறது என வேறு ஒருவர் விளங்க வைப்பது போல இருக்கும் உரை .அதேபோல் அந்த ஓவியத்தை நன்றாக பார்வை உள்ளவன் கூடவே ஓவியம் பற்றி தெரிந்தவன் பார்ப்பதும் போலானது இந்த காவியம் .............

இன்னும் வரும் கம்பனின் பெருமைகள்

மூலக்கரு ....தமிழ் இணைய பல்கலைகழகம்


Monday, August 20, 2012

சச்சின் 100 எதிர் என் 200


என்னவோ எதோ எல்லாம் எழுதி ஒருவழியா 199 வரைக்கும் வண்டிய இழுத்துகிட்டு வந்தாச்சு ...நாப்பது மொக்கை ,முப்பது கவிதை ,இருபது யுடியுப் வீடியோ ......மொத்ததில உருப்படியா ஒரு நான்லஞ்சு பதிவு தேறும் போல ..எது எப்படி இருந்தாலும் நம்ம எழுதுற !!!!! பதிவெல்லாம் வாசிக்கவும்  ஊருல நூறு இருநூறு  உடன்பிறப்புகள் இருக்கு எனும் போது மனசுக்கு சோக்காகிதுப்பா...

என்ன கருமம் ஊருல போய்ட்டு  நான் வலைப்பூ எல்லாம் வச்சிருக்க்கிறன்  கதை, கவிதை எல்லாம் எழுதுவன் எண்டெல்லாம் சொல்லி பார்த்தா ஏதோ வேற்றுகிரகத்தில இருந்து வந்த ஆலியன்ஸ்ஸ  பார்க்கிற மாதிரி குறுகுறுப்பா பார்பாங்க உடம்பில எல்லாம் ஆயிரம் அட்டைபுழு  ஊர்ர  மாதிரி இருக்கும் ..இதையெல்லாம் வழிச்சு துறைச்சி போட்டு திரும்பவும்ம்ம்ம்மம்ம்ம்   மொக்கையா ஏதும் எழுத வந்திடுவம் ...வடிவேலு வின் பிரபலய டயலாக் ஒண்டு  " அவனுக்கு வந்தா தக்காளி சட்னி நமக்கு வந்தா அது ரத்தம் " இது போலத்தான் நாம எவ்வளவோ கஸ்ரபட்டு மூளைய கசக்கி ( சீ மூளைய கசக்கி எண்டு டைப் அடிச்சா அது தமிழ் டெர்ட்டி ஸ்ரோரிஸ் ல வார வசனம் மாதிரி வருகுது ,,,,,என்ன மொழிபெயர்ப்பு கூகுளே )  ஒருவழியா கவிதையோ கதையோ எழுதி போஸ்ட் பண்ணினா .. அடுத்த நிமிசமே  மச்சான்  நல்லா இருக்குடா கவிதை !!!!! இதோடா வாழ்த்து சொல்லி விட்டு இருந்தா பராவாயில்லை..அடுத்ததா ஒரு வசனம் எடுத்து விடுவான் ஆமா எங்க இருந்து சுட்ட ?   அப்பிடியே கதைக்கிற மொபைல  உடைச்சி விடனும் போல தோணும் .அது எப்பிடிடா எங்களுக்கெல்லாம் கதை கவிதை வராது எண்டு நீங்களே சுயமா முடிவு எடுப்பீங்க ..நீங்க எழுதினா கவித நாங்க எழுதினா சுட்டதோ ?  எங்க ஊருல   ஒருவர்  சொல்லுவர் டேய் நீங்க குடிச்சா அது  பார்ட்டி நாங்க குடிச்சா குடிகார பசங்க அந்த மாதிரி ...........( இத வாசிக்கும் போது   பார்டி எங்கயோ செமையா அடி வாங்கிருக்கு போல எண்டு நினைப்பீங்க  டோய்  தெரியும்டா! உங்க மைன்ட்  வாய்ஸு  ..சிரிக்காம வாய மூடு )    

 ஒரு பதிவ போஸ்ட் பண்ணிட்டு அத எத்தன பேரு பார்கிறாங்க எத்தனை பேரு  கொமண்டுறாங்க  ( கொமண்டுறாங்க இத எத்தன பேரு கொமட்டிலையே குத்துறாங்க எண்டு  பார்த்தீங்களோ  ?? டேய் இருக்குடா உங்களுக்கு எனக்கு இப்பிடி திட்ட உங்களுக்கு ரொம்ப ஆசைதான் போல் )  எண்டெல்லாம் எத்தனை தடவை F5  பட்டன் அமுக்கி பார்த்த கதைய கிபோர்ட் ஹிஸ்ரி  லத்தான்  பார்க்கணும் (அதுக்கெல்லாம் கிஸ்ரி இருக்கா ? ) ஒன்னு சொன்னா வாசிக்கணும் அத விட்டுட்டு ஆராய படாது ..

இப்பிடியாக வாழ்ந்து வரும் காலத்தில்தான் அந்த 200  வது பதிவு எழுதும்  பாரிய பொறுப்பு எனக்கு வழங்கபட்டது (துப்பறதுதான் துப்புங்க கொஞ்சம் தள்ளி துப்புங்க மொனிட்டார்ல எல்லாம் எச்சில் பறக்குதில்லை ) கடந்த ஒரு கிழமையா   நானும் ரொம்பத்தான்   கஸ்ரபட்டு போயிட்டன்.... 200  வது பதிவு எனும் போது வலைப்பூ சட்டத்து தொண்ணுற்று நாப்பதாவது சரத்துப்படி எதாவது விசேட பதிவு போடா வேண்டி  இருந்ததால்
மொத்தம்மா ஆறேழு பதிவு எழுதி சரியில்ல சரியில்ல எண்டு அழிச்சு இருப்பன் ( இத எல்லாம் நீ முதல்லையே ஜோசிச்சு இருந்தா இப்ப பத்தாவது விசேட பதிவு தான் போடணும் எண்டெல்லாம் திட்டாதீங்க பிளிசு ) 

சச்சின் 99  சென்சுரி அடிச்சு போட்டு 100  வது அடிக்க முக்கின மாதிரி நானும் ரொம்ப கஸ்ரபட்டு போயிட்டன் ( அடிங் நாதாரி எண்டு தொடங்கி எதுவெல்லாம் திட்ட்னுமோ திட்டுங்க உங்களுக்கு அம்புட்டு பெர்மிசன் குடுத்து வச்சிருக்கன் )கடைசியில பங்களாதேஸ்  கூட முட்டி மோதி ஒருவழியா 100  வது 100  அடிச்சா மாதிரி நானும் மரண மொக்கை பதிவு போஸ்ட் பண்ணி என் 200  வது பதிவை சிறப்பித்து இருக்கிறேன் ......

சச்சின் வாழ்க .............. நானும் வாழ்க (த்தூ தூதூதூதூதூதூ)
  

Monday, August 13, 2012

இப்பிடி ஒரு வெட்டிங் என்கேஜ்மென்ட் பண்ணும்டா


இணையத்தில் எவ்வளவோ சிறந்த விசயங்கள் உள்ளன என்பது அதை பயன்படுத்தும் விதத்தில் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை ..நண்பன் ஒருவன் பகிர்த்து கொண்ட ஒரு லிங்க் முலமாக இந்த வீடியோவை பார்க்க முடிந்தது .


ஒரு பணக்கார பையன் அப்படிதான் பார்க்கும் போது தோணுது ..தனது காதலியுடன் /நீண்ட நாள் தோழியிடம் தனது திருமண ஐடியாவை சொல்லும் விதம் அப்படியே படமாக்க பட்டிருந்தது ... மிக சிறந்த நிகழ்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் (அமெரிக்கன் ஐடல் நிகழ்சிக்கு இவர்தான் ஒருங்கிணைப்பு செய்தவரா ம் ) துணையுடன் மிக மிக நேர்த்தியாக அனைத்தும் தொகுக்க பட்டு ஒரு ரியாலிட்டி எனும் படி எல்லாமே பக்காவாக செய்யபட்டு இருந்தது ..

முதல் காட்சியில் இருவர் பேசி கொண்டு இருக்க ஓர் பெண் ஓடி வந்து இவர் என்னை காதலித்து ஏமாற்றியாதாய் கூறி போலிஸ் வந்து அந்த பையனை கூட்டி செல்லுதல் என தொடர்ந்து போகிறது ....... மீதியை வெண்திரையில் காண்க    (இப்பிடித்தான் அப்பா பிரபல விமர்சகர்கள் எல்லாம் சொல்லுவாங்க.இத்தால்  நானும் லவ்வலாம் என முடிவு செய்துள்ளேன்

மறந்து போன குடை

குடைய எங்க விட்டுட்டு வந்தீங்க ? மனைவியின்  கேள்வியால் சற்றே ஆடித்தான்போய் விட்டார்  சண்முகத்தார்,    எவ்வளவுதான் சொன்னாலும் உங்களுக்கு உறைக்கவே உறைக்காதா ?  எனஅர்சனையை தொடர்ந்து கொண்டேஅவளின்  மூலஸ்தானமான சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.விருப்பம் இல்லா விருந்தாளியாய்  கண்முன்னே உட்காந்துகொண்டிருக்கும் சோடா புட்டி கண்ணாடி ,சுருக்கம் நிறை முகம், நரையால் பாதியளவு ஆக்கிரமிப்பு  செய்யப்பட்ட முடியென அறுபதின்  அனைத்து அம்சங்களும் அப்படியே பொருந்தியிருந்தன அவருக்கு .

கண்டிப்பான கணக்கு வாத்தியார் என்பதனை  விட மிகவும் கண்டிப்பான கணக்கு வாத்யார் என்பதே பொருந்திவரும் அவரின்  செய்கைகளை பார்க்குமிடத்துடத்து, கையில் ஓர் கட்டு புத்தகங்கள், சார்க் பீஸ்,பிரம்பு  என தீ போல்வ வ வகுப்பறையில் இவர் நுழைகையில் பயத்தில்உறைந்தே போய் விடுவார்கள் மாணவர்கள் . உண்மையினை சொல்ல போனால்இவரிடம் படித்து சித்தி பெற்ற மாணவர்களை விட இவரின்  தண்டனைக்கு பயந்து பள்ளிக்கூடத்தை விட்டு ஓடியவர்களே அதிகம்.

என்னங்க நினைவுக்கு வந்துடுச்சா? கடைசியா எங்க போன ?  எங்க உட்காந்திங்க, பஸ்ல விட்டிருப்பீங்களோ?  பட்டினதுக்கு போய்ட்டு நேரா இங்க வராம யார் கூடவும் அரட்டை அடிச்சிட்டு குடைய அங்கேயே   மறந்து விட்டுட்டு வந்திருப்பீங்க? என வெளியூர் புலனாய்வு பிரிவில் வேலை செய்த அனுபவம் உள்ளவள் போல கேள்விக்கணைகளை வீச தொடங்கியிருந்தாள் ..கொஞ்சம் பொறுத்து கொள்ளுடாப்பா! அதான் ஜோசிச்சுகிட்டு இருக்கன் இல்ல என மனைவியிடம் எதோ சொல்ல முனைந்தாலும் அவள் விடுவதாய் இல்லை ..போன பென்சன் காசில வேண்டுனது ..ஒவ்வொரு பென்சனுக்கும் ஒவ்வொரு குடையா ? இனி நீங்க குடை வாங்கவும் தேவல தொலைக்கவும் தேவல ..மழையில நனைஞ்சு வந்தாத்தான் புத்தி வரும் உங்களுக்கு .

என் பென்சன் காசு நான் வேண்டுவேன் தொலைப்பன் என எதிர் வசனம் பேச முற்படுகையில் சார் சார்  ..என கதவடியில் ஓர் குரல்  ..ஒ ஒ ஒ வந்திட்டார் உங்கட சிநேகிதன் போங்கோ போய் ஊரார் உத்தியோகத்தம் பாருங்க மனைவி மீண்டும் ஆரம்பித்து இருந்தாள்  .ஆனாலும்  சற்றே  வித்தியாசமான குரல், கூடவே  தன் வீட்டு நாய் ஏதோ புதியவரை கண்டது போல்  விடாமல் குரைப்பது போன்ற அறிகுறிகளால் யார் என படலையினை எட்டி பார்த்தார் .

.ஓர் பையன் கையில் குடையுடன் நின்று கொண்டிருந்தான் .அதுவும் அவரின் அந்த கருப்பு நிற நீள கைப்பிடி குடை , வா தம்பி வா உள்ளே வா!!! யார் எவர்  என்ற விசாரிப்பு ஏதும் இல்லாமல் குடையை கண்டதும்தான் தாமதம் உள்ளே ஈர்த்துகொண்டார் அவனை .
சார் நான் குமார் உங்க கிட்ட படிச்சவன் சார் ..இன்னிக்கு பட்டினத்தில இருக்கிற என்கடைக்கு வந்திருந்தீங்களாம்  ..குடைய விட்டுட்டு வந்திட்டிங்களாம் என வேலை செய்யுற பையன்க சொன்னாங்க அதான் குடைய கொடுத்துட்டு போவம் எண்டு வந்தன் சார் ...

ஆமா  எந்த குமார் நீ ? அழகப்பன் பையனா என விழித்தார்?

ஆமா சார் ஒரு நாள் கணக்குபுத்தகம் கொண்டு வர மறந்து போனதுக்கு எல்லோர் முன்னுக்கும் வச்சி எனக்கு அடிச்சிங்களே ?அதோட ஊர விட்டு பட்டினதுக்கு ஓடினவன்தான் சார் நான் என அவன் சொல்லிக்கொண்டு போகும் போதெல்லாம் இவர் முகம் போன போக்கை அவரின் மனைவி கவனிக்க தவற வில்லை .Thursday, August 9, 2012

அலைகடந்த தேசம் அவுஸ்திரேலியா அன்புடன் வரவேற்கிறது உங்களை பகுதி 2

விதி   வரைந்த பாதை
வழி விரைவோம் .
வீசும்  காற்றுடன் கதை பேசி
களைப்பாறுவோம் ..பாறை நடுவே மோதி 
நங்கூரம் இடுவோம் ,
கரை தேடும் அலைகளுடன்
கரைந்துபோம் ..திரை கடல் தாண்டுவோம்
திரவியம் தேடுவோ ம்,
கனவுகள்  தின்போம் ,
காதலை குடிப்போம்...

வாழ்க்கை  கோப்பையில் 
வறுமையை மட்டுமே
அருந்தினோம் இதுவரையில் ......
வாழ்வு செழிக்க வங்கம் கடக்க
 முயல்கிறோம் இப்போது .. ...............கனிகா.................

Wednesday, August 8, 2012

அலைகடந்த தேசம் அவுஸ்திரேலியா அன்புடன் வரவேற்கிறது உங்களை

 மண் துரத்தும் போது
மனசு என்ன செய்யும்
வள்ளம் ஏறி
வங்க கடல் கடக்கிறது.
கடலோடு  ஒரு கொடிய
சூதாட்டம் ஆடுகிறோம்
பந்தயமாய்வாழ்வை  வைத்து.


அலைகள் தங்கள் முதுகை 
சொறிந்து கொள்ள பார்க்கும்
எங்கள் படகுகளில் 
சுறாக்கள்  கூடஅடிக்கடி தங்களின் 
பற்களின் கூர்மையை சோதிக்கும்
எங்கள் படகுகளில்


சோற்றுமூட்டையுடன் ஓர்
சோக  மூட்டையையும் கூடவே
காவியே செல்கிறது  கரங்கள்.


தொடரும்  .....