Thursday, May 17, 2012

எங்கே காதல்

உன்னோடான நினைவுகளை தின்றே 
என் காதல் உயிர் வாழும் இனி


தூக்கம் கலைந்த குழந்தை,
அம்மாவை தேடுவது போலே 
உன்னையே தேடிக்கொண்டிருக்கிறது
,என் காதல்


உன் வெட்கத்தை எல்லாம் 
ஒரு மூட்டையாய் கட்டி தரட்டுமாம்
மாலைநேரவானம்
என் வீட்டு வாசல் வந்து கேட்டது


கூந்தல் பின்னி முடிக்கும்
அழகினூடே 
என் காதலையும் சேர்த்து
பின்னிவிடும்
உன் திறமையை வியக்கிறேன்
எங்கே காதல் 
என்று கேட்கும் மனசிடம்
எப்பிடி சொல்வேன்
உன் கூந்தல் காட்டில்தான் 
தொலைந்து போனது
என்று.

Wednesday, May 9, 2012

ஒரு கதாசிரியருடன் சந்திப்பு ......

சேர் நீங்க அந்த கதை எல்லாம் எழுதிய அவர் தானே ?  என்று நீங்க கேட்டீர்கள் தானே இப்படியே ஒரு கதையை ஆரம்பிக்கலாம் .மட்டக்களப்பு புகையிரதநிலையம் ,இரவு நேரம் ,சந்திப்பு இதுவொன்றும் தேவையில்லை . வாசகன் எவனும் முட்டாள் இல்லை, என்றெல்லாம் கதை எழுதும் முறை பற்றி அவர் கூறிகொண்டு போக போக அவர்மேல் நான் வைத்திருந்த எண்ணம் உயர்ந்து கொண்டே போனது..
நேற்றைய இரயில் பயணம் சாதரணமான வாராந்திர  பயணமாகவே இருக்கபோகிறது என்றே   இரண்டு பிஸ்கட் பக்கற்றுகள்,ஒரு போத்தல் தண்ணீர்,மறைந்திருக்கும் உண்மைகள் ஓசோவின் புத்தகம் போதாதுக்கு 4GB இளையராஜா பாடல் என   ஏற்பாடுகளுடன் வந்திருந்தேன்.

கண்ணுக்குக்  பொருத்தமாய் ஒருகண்ணாடி ,அழகாய் செதுக்கிய மீசை,கையில் நான்கு ஐந்து வெள்ளை தாள்கள் அவற்றில் ஏதோ ஒரு கதை பிறப்பெடுத்து கொண்டிருக்கிறது.அநேகமாய் ஒரு இலக்கியவாதி அதுவும் எங்கேயோ பார்த்த பரிட்சயமான முகம் என ,என் பக்கத்து இருக்கை காரர் பற்றி சிறு குறிப்பு என் ஓர கண்ணால் எடுத்து கொண்டேன் அவரை என் இடக்கண்னால் பார்த்துகொண்டே நான் புத்தத்தில்முழ்கியவேளை மனசு ஒரு பக்கத்தில் தாளம் போட்டது கேட்டு விடு   .நீங்க ஓகே குணநாதன் என்கிறமட்டு நகர் இலக்கியவாதியா என்று , கேட்டே விட்டேன் "சேர் நீங்க அந்த கதை எல்லாம் எழுதிய அவர் தானே ?" ஆமாம் என்றதில் இருந்து பேச்சு நீண்டு கொண்டே போனது .ஒற்றை வரி கதையாய் ஆரம்பித்த பேச்சு சுவாரசிய நாவல் போல தொடந்து கொண்டிருந்தது.

இப்போதைய தமிழ் இலக்கிய நிலைமை பற்றிய வருத்த மிகுதியே தொக்கி நின்றது அவர் பேச்சில் ..இடையில் தன் புதுக்கதை பற்றி அவர் எனக்கு சொல்லி கொண்டு போனார் . ஈழத்து அவலங்கள் பற்றிய ஒரு குறியீட்டு கதை அதை  விபரித்து கொண்டு போனார்.அவரின்கதையினை விட அவர் எனக்கு விபரித்து சொல்லிகொண்டிருந்த  விதம் கூடவே அந்த லயிப்பு ,ஒரு குழந்தைத்தனம் ,,கண்ணசைவுகள் என ஒரு நடிகனாகவே பரிணமித்து அந்த கதையினை எனக்கு சொன்ன விதம் என முற்று முழுவதுமாய் என்னையே ஆக்கிரமித்திருந்தார்  .சேர் உங்களுக்கு எப்பிடி ஓகே குணநாதன் என பெயர் என கேக்க நினைக்கும் போதே  ஒரு தடை வந்தது டிக்கெட் பரிசோதகர்கள் வடிவில் தம்பி நீங்க இருக்கை மாறி இருக்கிறீர்கள்எனஏதோ  ஏதோசொல்லி  என்னை அந்த உரையாடலில் இருந்து பிரித்து கொண்டு மற்றைய பெட்டியில் இருக்க செய்தார்கள்.திட்டி கொண்டே இருக்கைக்கு போனேன் .ஏன் ஓகே குணநாதன் இந்த கேள்வி மட்டும் என்னை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது முன்னும்  பின்னுமாய்.