Thursday, April 5, 2012

வெறும் 5 ரூவாதான் அதுக்காக ஏமாறலாமா ?

இது நடந்து நான்கு நாள் இருக்கும் .கண்ட இடமெல்லாம் போய் அவன் இவனின் சகிக்காத முகமெல்லாம் பார்த்து எதோ புடிக்கலியோ புடிச்சிருக்கோ வாழ்க்கை பட்டா வாழ்ந்துதான் ஆகணும் என்கிற ரீதியில் வேலைக்கு போய்ட்டு வரும் வழியில்  நடந்த ஒரு சம்பவம் இது .
நமக்காக இல்லாவிட்டலும் நம்மள சுத்தி இருகிறவங்களாவது நல்லா இருக்கணும் எனும் ரீதியில் சோப்பு ,ஷம்போ அது இது என கொஞ்சம் சில்லறை பொருட்கள் வாங்க ஒரு பார்மசி ஒன்றில் நுழைந்தேன் .எதோ எல்லாம் கூட்டி 305 /= ரூவா என்றா(ன்)ர் (அவனுக்கு எதுக்கு மரியாதை ). நானும் முன்ணூறு ரூபா தாளாகவும் இன்னும் சில்லறைக்காக இருக்கிற எல்லா சட்டை பையையும் துலாவி போதா குறைக்கு பக்கத்தில் நின்ற பெண்ணின் சட்டை பையிலும் கைய விட பார்த்து ஒரு வழியாய் 3 ரூவா எடுத்து கொடுத்தேன் சரி வெறும் இரண்டு ரூவா தானே கழிவு என்று விடுவான் என்று ஜோசித்து கொண்டிருக்கும் போதே இன்னும் ரெண்டு  ரூபா கொடுங்க என்று பல்லிளித்தான்  உண்மையில் என்னிடம் சில்லறை கூட இருக்க வில்லை ஐம்பது ரூவா தான் இருந்தது எதோ கேக்கிறான் கொடுக்க தான் வேண்டும் என்பதால் கொடுத்து.மறக்காமல் நான் கொடுத்த சில்லறை மூன்று ரூவாவையும் வாங்கியும் விட்டேன் .(விடுவமா )

இப்போதுதான் பிரச்சனை ஆரம்பித்தது .எனக்கு அவன் மீதியாய் நாப்பத்தி ஐந்து ரூபா(நாங்கெல்லாம் கணக்கில புலி ஆக்கும் ) தரவேண்டும் .இரண்டு இருபது ரூபா தாளும் ஒரு ப்பில் கம் (சுயிங்கம் ) பாழாய் போனது கரெக்கடா பெயர் கூட டைப் அடிக்க வருகுதில்லை .)ஒன்றும்  என்னிடம் தந்து விட்டு உடனே அடுத்த கஸ்டமரை பார்க்க போய்விட்டான் .உண்மையில் அந்த ப்பில் கம் ஒன்றில் விலை 2.50 /=  மூளையில் ஒரு ஓரத்தில் உறைத்தது ஏமாற்ற பார்கிறான் என்று .உடனே கேட்டேன் இது என்ன என்று 5 ரூவா சில்லறை இல்லை அதுதான் என்றான் .நானும் உடனே வேண்டாம் எனக்கு வேண்டிய  5 ரூவா தா .இதை நீயே வைத்து கொள் என்றேன்.இல்லையே இருந்தால் தர மாட்டேனா என்று சொன்னான் .சொல்லும் போதேஅவனின் குரலில் ஒரு எகத்தாளம் இருத்ததை நான் கவனிக்க தவறவில்லை .அதுவே மேலும் என்னை கடுப்பாக்கியது .

ஒரு இரண்டு ரூவா விட்டு கொடுக்க முடியாத உங்களுக்கு நான் ஏன் 5 ரூவா விடவேண்டும் என்று கேட்டு விட்டேன் ,.இருந்தா தர மாட்டானா  ஏன் கஸ்ரமரெல்லாம் நிக்கிறப்ப தொல்லை தொல்லை பண்ணுறிங்க? இதுதான் அவன் கேட்ட வாசகம் .படங்களில் எல்லாம் காட்டுவாங்களே .விரலில் இருந்து இரத்தம்  சூடேறி மேல வருவது போல .கூடவே போன இடமெல்லாம் போய் ஏதோ மிச்ச சொச்சமாய் கிடந்த மான ரோசம் எல்லாம் பொத்திகிட்டு வெளியில் வந்தது ..என்றாலும் கொஞ்சம் அடக்கி கொண்டு ஓகே எனக்கு உன் பொருள் வேண்டாம் என் பணத்தை குடு நான் போகிறேன் என்றேன் .முடியாது அதெல்லாம் மெசின்ல பீட் பண்ணி விட்டேன் வேணுமென்றால் இன்னுமொரு பபிள்கம் தாரேன் எடுத்து கொண்டு போங்க என்றான் .எனக்கு சிரிப்புதான் வந்தது அடக்கி கொண்டேன் என்றால் நம்பவா போறிங்க .ஏற்கனவே வேலைத்தள பிக்கள் புடுங்கல்கல்  இங்கு இவனின் தொல்லையுடன் சேர்ந்து என் உச்சி மண்டையில சுர்ர்ர்ரர்ர்ர் என்றது .

என் கோபத்தை பார்த்து பயந்தோ என்னவோ (சரி விடுங்க ) காசு பெட்டியை திறந்து ஒரு ஐந்து ரூவா எடுத்து தந்தான் .நானும் இப்போ எங்கிருந்து வந்தது இது என்றேன் .காசு தந்து விட்டேன் இனி நீங்க போகலாம் என்றான்.ஏதோ அவனின் காசை நான் கடன்  கேட்பது  போல் . அடிக்க கை சொன்னாலும் மனசு அடக்கி வைத்திருந்தது .வேறு வழியில் இவனை பிடிக்க வேண்டும் என்று நினைத்து கடையில் நின்ற பையனிடம் கேட்டேன் உனக்கு வயது என்ன ? ETF ,EPF எல்லாம் பதிந்திருகிறார்களா என்று (அதுதான் உழியர் சேமலாப நிதியம் பற்றி ) .அவன் உடனே அண்ணன் ஏதோ ETF என்று மருந்து கேக்கிறார் இருக்கோ? என்றான்.எனது அண்ணா தொழில் உத்தியோகத்தராய் வேலை செய்வதால் இந்த விசயங்கள் கொஞ்சம் தெரியும் .

கடைக்காரனை  ஒரு பிடி பிடிக்க முடிவு பண்ணி நாளைக்கு கடை பதிவு கூடவே ETF .EPF  தகவலோட அலுவலகம் வாங்க என்று சொல்லி விட்டு வெளியில் வந்து விட்டேன் .உடனே அவன்  வெளியில் வந்து சேர் நீங்க யாரு ? லேபர் டிபாட்மென்ட்டில் பணி புரிபவரா என்று பயந்து கேட்டான் .நானும் ஓம் என்று சொன்னேன் .உடனே அங்கு நடந்த விசயங்கள் எல்லாம் தலை கீழாக .என்ன மரியாதை தந்தான்.இதுதான் வாடிக்கையாளரை மதிக்கும் லட்சனமா ? என்று கேட்டு விட்டு வந்து விட்டேன், பாவம் பாவம் அடுத்த நாள் அலுவலகம் போய் என்ன நடந்ததோ  இறைவனுக்கு தான் தெரியும் .