Tuesday, March 13, 2012

பச்சை மால் மலை போல் மேனி







இப்போதெல்லாம் புது பாட்டுகளை விட இளையராஜா இசை மற்றும் சீர்காழி பக்தி பாடல்கள் என கேக்க தொடங்கி மிக நாளாகிறது .முன்பு இசைஜானி 
பாடல் கேக்கும் என் அறை நண்பனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடே இருந்தது இப்போதெல்லாம் டுவிட்டரில் நடக்கும் சண்டை போல் அப்போது ஒவ்வொரு நாளும் அறையில் கருத்து மோதல் இருந்து கொண்டே இருக்கும் .அப்போது என்பதால் எதோ கண்டிய மன்னன் காலத்து ஆள் நான் என்று நினைக்க வேண்டாம் இப்போதுதான் இரண்டு வருசங்களுக்கு முன் .

 என் மொபைலின் மெமோரி காட்டில் இப்போதெல்லாம் சீர்காழி அல்லது டிஎம்ஸ் பாடல்தான் நிறைத்து போய் இருக்கிறது .வேளையில் களைத்து போயிருக்கும் போது இப்படியான பாடல்கள் கேக்கும் போது மீண்டும் பழைய உற்சாகம் வந்து ஒட்டி கொள்ளும் எனக்கு

.நேற்று இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது ஒரு பாட்டு என்னை எதோ செய்து விட்டது நேற்றே ஐம்பது தடவைக்கு மேல் மீண்டும் மீண்டும் அதை கேட்டு இருப்பேன் . நாலாயிரம் திவ்வ்ய பிரபந்த பாடல் ஒன்று தான் அது ஆழ்வார்கள் பாடிய பாடல் அது .பூபாளம் ராகத்தில் கேப்பதுக்கு உண்மையில் நம் காதுகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் பச்சை மால் மலை போல் மேனி பாடல் ............. சரி சரி நிங்களும் அதை கேட்டு ரசித்து பாருங்களேன்


  கீழே உள்ளது டி எம் ஸ் குரலில் இதுவும் கேப்பத்ட்கு இனிமையாகவே இருக்கிறது
இதுபோலவே எனக்கு பிடித்து இன்னுமொன்று இது