Tuesday, March 13, 2012

கடற்கரை காதல் பாகம் 11



********எல்லோரும் அலைகளில் முழ்கி 
பாவ விமோசனம் பெற்று கொள்வார்கள் 
உன்னிடம் மட்டும் அலைகளே வந்து
 உன் பாதம் நனைத்து
 பாவ விமோசம் பெற்று கொள்கின்றன ..***********

*****நீ காற்று வாங்க வந்திருக்கிறாய்
நான் காதல் வாங்க உன்னிடம் வந்திருக்கிறேன்*********** 


************கடல் கன்னி என்றால் என்ன என்றாய் நீ என்னிடம்  
கொஞ்சம் பொறுத்து கொள்ளேன்
 தங்களை விட அழகானவள்  கரையில் இருப்பதை  கேள்விபட்டு வெளியில் வரும் பார் என்றேன்
 வெட்கப்பட்டாய் நீ .சூரியன் திகைத்து போனது  தான்  எந்த சிவப்பில் ஒளிந்து கொள்வதென்று ****************