Wednesday, August 29, 2012

அயோத்தி நகர் மதிலின் பெருமையும் கம்பரின் சிலேடையும் ...........பாலகாண்டத்து நகர படலத்தில் அயோத்தி நகரை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் கம்பர் ... நகரின் ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக பெருமைப்படுத்தி கொண்டு வருகிறார் ..அயோத்தி நகரின் அழகினை தன் கவிக்குள் அடக்கி விட துடிக்கிறார்கம்பர் சில மிகைகைப்படுத்தல்கள்  பல இந்த பகுதியில் வந்து போகும்படி பார்த்து கொள்கிறார் ,தற்குறிப்பேற்ற அணி யை கொண்டு வந்து பாடுகிறார் .உதாரணமாக  அயோத்தி நகரை படைக்கும் முன்பு பிரமன் இந்திரனது அமராவாதி நகரையும் அதேபோல் குபேரனது அழகாபுரி நகரையும் படைத்து பயிற்சி பெற்றுகொண்டான் என்று  கூறி விடுகிறார் .

தனக்கு பிடித்தமான சிலேடையையும் கொண்டு வந்து சேர்க்கிறார் மதிலின் பெருமையினை கூற வந்த கம்பர்


மேவரும் உணர்வு முடிவு இலாமையினால்
    வேதமும் ஒக்கும், விண் புகலால்
தேவரும் ஒக்கும், முனிவரும் ஒக்கும்
    திண் பொறி அடக்கிய செயலால்,
காவலில் கலை ஊர் கன்னியை ஒக்கும்,
    சூலத்தால் காளியை ஒக்கும்,
யாவையும் ஒக்கும் பெருமையால், எய்தற்கு
    அருமையால் ஈசனை ஒக்கும்.

மேவரும் உணர்வு முடிவு இலாமையினால்    வேதமும் ஒக்கும
அயோத்தி நகர் மதிலை வேதம் என்று சொல்லி  விழிக்கிறார் .அதாவது நம்மிடம் உள்ள அறிவால் அந்த மதிலில் எல்லையை காண முடியாது இருப்பதால் அது வேதம் போன்றது என்பார் .


 விண் புகலால்,தேவரும் ஒக்கும்
அது விண்ணுலகம் வரை சென்று இருப்பதால் தேவர்கள் போலானது என்கிறார்

திண்   பொறி   அடக்கிய   செயலால்  முனிவரும் ஒக்கும்
  வலிமை மிகு  கருவிகளை     உள்ளடக்கிய  செயலால்  முனிவர்களை
ஒத்திருக்கும் முனிவர்கள் . அதாவது ஐம்பொறிகளை அடக்கி முனிவர்கள் இருப்பது போல என்கிறார் .

காவலில்  கலை ஊர் கன்னியை ஒக்கும்- இந்த அயோத்தி நகரையே காவல் காக்கும்
தொழிலால்   மானை      ஊர்தியாக/வாகனமாக   கொண்ட  துர்க்கையை  போலாகும்

இது எல்லாம் போதாதென்று சூலம் முதலான படை கருவிகளை ஏந்தி நிற்பதால் மதில் காளியை ஒத்து நிற்பதாக பாடுகிறார் ..சூலத்தால்  காளியை ஒக்கும்

யாவையும்  ஒக்கும்  பெருமையால் எய்தற்கு அருமையால்    ஈசனை     ஒக்கும் இவ்வாறு பெருமை    மிகுந்த       எல்லாவற்றையுமே    ஒத்திருக்கும்  காரணத்தால்  எவரும்  எளிதில்  அடைய முடியாமல் இருப்பதாலும்
இறைவன் ஈசனை  போலிருக்கும்

 இவ்வாறு  கவி மழையினை  பொழிந்து நம்மை நனைத்து விடுகிறார் .


 கம்பராமாயணத்தை வெறுமென உரை வடிவில் படிப்பதுக்கும் கவி வடிவில் படிப்பதுக்கும் உள்ள வேறுபபாடு  அதனை படித்து பார்க்கும் போதுதான் தெரிகிறது .. ஓர் குருடனுக்கு சிறந்த ஓவியம் ஒன்றை இவ்வாறு இவ்வாறு வரையபட்டு இருக்கிறது என வேறு ஒருவர் விளங்க வைப்பது போல இருக்கும் உரை .அதேபோல் அந்த ஓவியத்தை நன்றாக பார்வை உள்ளவன் கூடவே ஓவியம் பற்றி தெரிந்தவன் பார்ப்பதும் போலானது இந்த காவியம் .............

இன்னும் வரும் கம்பனின் பெருமைகள்

மூலக்கரு ....தமிழ் இணைய பல்கலைகழகம்


Monday, August 20, 2012

சச்சின் 100 எதிர் என் 200


என்னவோ எதோ எல்லாம் எழுதி ஒருவழியா 199 வரைக்கும் வண்டிய இழுத்துகிட்டு வந்தாச்சு ...நாப்பது மொக்கை ,முப்பது கவிதை ,இருபது யுடியுப் வீடியோ ......மொத்ததில உருப்படியா ஒரு நான்லஞ்சு பதிவு தேறும் போல ..எது எப்படி இருந்தாலும் நம்ம எழுதுற !!!!! பதிவெல்லாம் வாசிக்கவும்  ஊருல நூறு இருநூறு  உடன்பிறப்புகள் இருக்கு எனும் போது மனசுக்கு சோக்காகிதுப்பா...

என்ன கருமம் ஊருல போய்ட்டு  நான் வலைப்பூ எல்லாம் வச்சிருக்க்கிறன்  கதை, கவிதை எல்லாம் எழுதுவன் எண்டெல்லாம் சொல்லி பார்த்தா ஏதோ வேற்றுகிரகத்தில இருந்து வந்த ஆலியன்ஸ்ஸ  பார்க்கிற மாதிரி குறுகுறுப்பா பார்பாங்க உடம்பில எல்லாம் ஆயிரம் அட்டைபுழு  ஊர்ர  மாதிரி இருக்கும் ..இதையெல்லாம் வழிச்சு துறைச்சி போட்டு திரும்பவும்ம்ம்ம்மம்ம்ம்   மொக்கையா ஏதும் எழுத வந்திடுவம் ...வடிவேலு வின் பிரபலய டயலாக் ஒண்டு  " அவனுக்கு வந்தா தக்காளி சட்னி நமக்கு வந்தா அது ரத்தம் " இது போலத்தான் நாம எவ்வளவோ கஸ்ரபட்டு மூளைய கசக்கி ( சீ மூளைய கசக்கி எண்டு டைப் அடிச்சா அது தமிழ் டெர்ட்டி ஸ்ரோரிஸ் ல வார வசனம் மாதிரி வருகுது ,,,,,என்ன மொழிபெயர்ப்பு கூகுளே )  ஒருவழியா கவிதையோ கதையோ எழுதி போஸ்ட் பண்ணினா .. அடுத்த நிமிசமே  மச்சான்  நல்லா இருக்குடா கவிதை !!!!! இதோடா வாழ்த்து சொல்லி விட்டு இருந்தா பராவாயில்லை..அடுத்ததா ஒரு வசனம் எடுத்து விடுவான் ஆமா எங்க இருந்து சுட்ட ?   அப்பிடியே கதைக்கிற மொபைல  உடைச்சி விடனும் போல தோணும் .அது எப்பிடிடா எங்களுக்கெல்லாம் கதை கவிதை வராது எண்டு நீங்களே சுயமா முடிவு எடுப்பீங்க ..நீங்க எழுதினா கவித நாங்க எழுதினா சுட்டதோ ?  எங்க ஊருல   ஒருவர்  சொல்லுவர் டேய் நீங்க குடிச்சா அது  பார்ட்டி நாங்க குடிச்சா குடிகார பசங்க அந்த மாதிரி ...........( இத வாசிக்கும் போது   பார்டி எங்கயோ செமையா அடி வாங்கிருக்கு போல எண்டு நினைப்பீங்க  டோய்  தெரியும்டா! உங்க மைன்ட்  வாய்ஸு  ..சிரிக்காம வாய மூடு )    

 ஒரு பதிவ போஸ்ட் பண்ணிட்டு அத எத்தன பேரு பார்கிறாங்க எத்தனை பேரு  கொமண்டுறாங்க  ( கொமண்டுறாங்க இத எத்தன பேரு கொமட்டிலையே குத்துறாங்க எண்டு  பார்த்தீங்களோ  ?? டேய் இருக்குடா உங்களுக்கு எனக்கு இப்பிடி திட்ட உங்களுக்கு ரொம்ப ஆசைதான் போல் )  எண்டெல்லாம் எத்தனை தடவை F5  பட்டன் அமுக்கி பார்த்த கதைய கிபோர்ட் ஹிஸ்ரி  லத்தான்  பார்க்கணும் (அதுக்கெல்லாம் கிஸ்ரி இருக்கா ? ) ஒன்னு சொன்னா வாசிக்கணும் அத விட்டுட்டு ஆராய படாது ..

இப்பிடியாக வாழ்ந்து வரும் காலத்தில்தான் அந்த 200  வது பதிவு எழுதும்  பாரிய பொறுப்பு எனக்கு வழங்கபட்டது (துப்பறதுதான் துப்புங்க கொஞ்சம் தள்ளி துப்புங்க மொனிட்டார்ல எல்லாம் எச்சில் பறக்குதில்லை ) கடந்த ஒரு கிழமையா   நானும் ரொம்பத்தான்   கஸ்ரபட்டு போயிட்டன்.... 200  வது பதிவு எனும் போது வலைப்பூ சட்டத்து தொண்ணுற்று நாப்பதாவது சரத்துப்படி எதாவது விசேட பதிவு போடா வேண்டி  இருந்ததால்
மொத்தம்மா ஆறேழு பதிவு எழுதி சரியில்ல சரியில்ல எண்டு அழிச்சு இருப்பன் ( இத எல்லாம் நீ முதல்லையே ஜோசிச்சு இருந்தா இப்ப பத்தாவது விசேட பதிவு தான் போடணும் எண்டெல்லாம் திட்டாதீங்க பிளிசு ) 

சச்சின் 99  சென்சுரி அடிச்சு போட்டு 100  வது அடிக்க முக்கின மாதிரி நானும் ரொம்ப கஸ்ரபட்டு போயிட்டன் ( அடிங் நாதாரி எண்டு தொடங்கி எதுவெல்லாம் திட்ட்னுமோ திட்டுங்க உங்களுக்கு அம்புட்டு பெர்மிசன் குடுத்து வச்சிருக்கன் )கடைசியில பங்களாதேஸ்  கூட முட்டி மோதி ஒருவழியா 100  வது 100  அடிச்சா மாதிரி நானும் மரண மொக்கை பதிவு போஸ்ட் பண்ணி என் 200  வது பதிவை சிறப்பித்து இருக்கிறேன் ......

சச்சின் வாழ்க .............. நானும் வாழ்க (த்தூ தூதூதூதூதூதூ)
  

Monday, August 13, 2012

இப்பிடி ஒரு வெட்டிங் என்கேஜ்மென்ட் பண்ணும்டா


இணையத்தில் எவ்வளவோ சிறந்த விசயங்கள் உள்ளன என்பது அதை பயன்படுத்தும் விதத்தில் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை ..நண்பன் ஒருவன் பகிர்த்து கொண்ட ஒரு லிங்க் முலமாக இந்த வீடியோவை பார்க்க முடிந்தது .


ஒரு பணக்கார பையன் அப்படிதான் பார்க்கும் போது தோணுது ..தனது காதலியுடன் /நீண்ட நாள் தோழியிடம் தனது திருமண ஐடியாவை சொல்லும் விதம் அப்படியே படமாக்க பட்டிருந்தது ... மிக சிறந்த நிகழ்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் (அமெரிக்கன் ஐடல் நிகழ்சிக்கு இவர்தான் ஒருங்கிணைப்பு செய்தவரா ம் ) துணையுடன் மிக மிக நேர்த்தியாக அனைத்தும் தொகுக்க பட்டு ஒரு ரியாலிட்டி எனும் படி எல்லாமே பக்காவாக செய்யபட்டு இருந்தது ..

முதல் காட்சியில் இருவர் பேசி கொண்டு இருக்க ஓர் பெண் ஓடி வந்து இவர் என்னை காதலித்து ஏமாற்றியாதாய் கூறி போலிஸ் வந்து அந்த பையனை கூட்டி செல்லுதல் என தொடர்ந்து போகிறது ....... மீதியை வெண்திரையில் காண்க    (இப்பிடித்தான் அப்பா பிரபல விமர்சகர்கள் எல்லாம் சொல்லுவாங்க.இத்தால்  நானும் லவ்வலாம் என முடிவு செய்துள்ளேன்

மறந்து போன குடை

குடைய எங்க விட்டுட்டு வந்தீங்க ? மனைவியின்  கேள்வியால் சற்றே ஆடித்தான்போய் விட்டார்  சண்முகத்தார்,    எவ்வளவுதான் சொன்னாலும் உங்களுக்கு உறைக்கவே உறைக்காதா ?  எனஅர்சனையை தொடர்ந்து கொண்டேஅவளின்  மூலஸ்தானமான சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.விருப்பம் இல்லா விருந்தாளியாய்  கண்முன்னே உட்காந்துகொண்டிருக்கும் சோடா புட்டி கண்ணாடி ,சுருக்கம் நிறை முகம், நரையால் பாதியளவு ஆக்கிரமிப்பு  செய்யப்பட்ட முடியென அறுபதின்  அனைத்து அம்சங்களும் அப்படியே பொருந்தியிருந்தன அவருக்கு .

கண்டிப்பான கணக்கு வாத்தியார் என்பதனை  விட மிகவும் கண்டிப்பான கணக்கு வாத்யார் என்பதே பொருந்திவரும் அவரின்  செய்கைகளை பார்க்குமிடத்துடத்து, கையில் ஓர் கட்டு புத்தகங்கள், சார்க் பீஸ்,பிரம்பு  என தீ போல்வ வ வகுப்பறையில் இவர் நுழைகையில் பயத்தில்உறைந்தே போய் விடுவார்கள் மாணவர்கள் . உண்மையினை சொல்ல போனால்இவரிடம் படித்து சித்தி பெற்ற மாணவர்களை விட இவரின்  தண்டனைக்கு பயந்து பள்ளிக்கூடத்தை விட்டு ஓடியவர்களே அதிகம்.

என்னங்க நினைவுக்கு வந்துடுச்சா? கடைசியா எங்க போன ?  எங்க உட்காந்திங்க, பஸ்ல விட்டிருப்பீங்களோ?  பட்டினதுக்கு போய்ட்டு நேரா இங்க வராம யார் கூடவும் அரட்டை அடிச்சிட்டு குடைய அங்கேயே   மறந்து விட்டுட்டு வந்திருப்பீங்க? என வெளியூர் புலனாய்வு பிரிவில் வேலை செய்த அனுபவம் உள்ளவள் போல கேள்விக்கணைகளை வீச தொடங்கியிருந்தாள் ..கொஞ்சம் பொறுத்து கொள்ளுடாப்பா! அதான் ஜோசிச்சுகிட்டு இருக்கன் இல்ல என மனைவியிடம் எதோ சொல்ல முனைந்தாலும் அவள் விடுவதாய் இல்லை ..போன பென்சன் காசில வேண்டுனது ..ஒவ்வொரு பென்சனுக்கும் ஒவ்வொரு குடையா ? இனி நீங்க குடை வாங்கவும் தேவல தொலைக்கவும் தேவல ..மழையில நனைஞ்சு வந்தாத்தான் புத்தி வரும் உங்களுக்கு .

என் பென்சன் காசு நான் வேண்டுவேன் தொலைப்பன் என எதிர் வசனம் பேச முற்படுகையில் சார் சார்  ..என கதவடியில் ஓர் குரல்  ..ஒ ஒ ஒ வந்திட்டார் உங்கட சிநேகிதன் போங்கோ போய் ஊரார் உத்தியோகத்தம் பாருங்க மனைவி மீண்டும் ஆரம்பித்து இருந்தாள்  .ஆனாலும்  சற்றே  வித்தியாசமான குரல், கூடவே  தன் வீட்டு நாய் ஏதோ புதியவரை கண்டது போல்  விடாமல் குரைப்பது போன்ற அறிகுறிகளால் யார் என படலையினை எட்டி பார்த்தார் .

.ஓர் பையன் கையில் குடையுடன் நின்று கொண்டிருந்தான் .அதுவும் அவரின் அந்த கருப்பு நிற நீள கைப்பிடி குடை , வா தம்பி வா உள்ளே வா!!! யார் எவர்  என்ற விசாரிப்பு ஏதும் இல்லாமல் குடையை கண்டதும்தான் தாமதம் உள்ளே ஈர்த்துகொண்டார் அவனை .
சார் நான் குமார் உங்க கிட்ட படிச்சவன் சார் ..இன்னிக்கு பட்டினத்தில இருக்கிற என்கடைக்கு வந்திருந்தீங்களாம்  ..குடைய விட்டுட்டு வந்திட்டிங்களாம் என வேலை செய்யுற பையன்க சொன்னாங்க அதான் குடைய கொடுத்துட்டு போவம் எண்டு வந்தன் சார் ...

ஆமா  எந்த குமார் நீ ? அழகப்பன் பையனா என விழித்தார்?

ஆமா சார் ஒரு நாள் கணக்குபுத்தகம் கொண்டு வர மறந்து போனதுக்கு எல்லோர் முன்னுக்கும் வச்சி எனக்கு அடிச்சிங்களே ?அதோட ஊர விட்டு பட்டினதுக்கு ஓடினவன்தான் சார் நான் என அவன் சொல்லிக்கொண்டு போகும் போதெல்லாம் இவர் முகம் போன போக்கை அவரின் மனைவி கவனிக்க தவற வில்லை .Thursday, August 9, 2012

அலைகடந்த தேசம் அவுஸ்திரேலியா அன்புடன் வரவேற்கிறது உங்களை பகுதி 2

விதி   வரைந்த பாதை
வழி விரைவோம் .
வீசும்  காற்றுடன் கதை பேசி
களைப்பாறுவோம் ..பாறை நடுவே மோதி 
நங்கூரம் இடுவோம் ,
கரை தேடும் அலைகளுடன்
கரைந்துபோம் ..திரை கடல் தாண்டுவோம்
திரவியம் தேடுவோ ம்,
கனவுகள்  தின்போம் ,
காதலை குடிப்போம்...

வாழ்க்கை  கோப்பையில் 
வறுமையை மட்டுமே
அருந்தினோம் இதுவரையில் ......
வாழ்வு செழிக்க வங்கம் கடக்க
 முயல்கிறோம் இப்போது .. ...............கனிகா.................

Wednesday, August 8, 2012

அலைகடந்த தேசம் அவுஸ்திரேலியா அன்புடன் வரவேற்கிறது உங்களை

 மண் துரத்தும் போது
மனசு என்ன செய்யும்
வள்ளம் ஏறி
வங்க கடல் கடக்கிறது.
கடலோடு  ஒரு கொடிய
சூதாட்டம் ஆடுகிறோம்
பந்தயமாய்வாழ்வை  வைத்து.


அலைகள் தங்கள் முதுகை 
சொறிந்து கொள்ள பார்க்கும்
எங்கள் படகுகளில் 
சுறாக்கள்  கூடஅடிக்கடி தங்களின் 
பற்களின் கூர்மையை சோதிக்கும்
எங்கள் படகுகளில்


சோற்றுமூட்டையுடன் ஓர்
சோக  மூட்டையையும் கூடவே
காவியே செல்கிறது  கரங்கள்.


தொடரும்  .....


Thursday, May 17, 2012

எங்கே காதல்

உன்னோடான நினைவுகளை தின்றே 
என் காதல் உயிர் வாழும் இனி


தூக்கம் கலைந்த குழந்தை,
அம்மாவை தேடுவது போலே 
உன்னையே தேடிக்கொண்டிருக்கிறது
,என் காதல்


உன் வெட்கத்தை எல்லாம் 
ஒரு மூட்டையாய் கட்டி தரட்டுமாம்
மாலைநேரவானம்
என் வீட்டு வாசல் வந்து கேட்டது


கூந்தல் பின்னி முடிக்கும்
அழகினூடே 
என் காதலையும் சேர்த்து
பின்னிவிடும்
உன் திறமையை வியக்கிறேன்
எங்கே காதல் 
என்று கேட்கும் மனசிடம்
எப்பிடி சொல்வேன்
உன் கூந்தல் காட்டில்தான் 
தொலைந்து போனது
என்று.

Wednesday, May 9, 2012

ஒரு கதாசிரியருடன் சந்திப்பு ......

சேர் நீங்க அந்த கதை எல்லாம் எழுதிய அவர் தானே ?  என்று நீங்க கேட்டீர்கள் தானே இப்படியே ஒரு கதையை ஆரம்பிக்கலாம் .மட்டக்களப்பு புகையிரதநிலையம் ,இரவு நேரம் ,சந்திப்பு இதுவொன்றும் தேவையில்லை . வாசகன் எவனும் முட்டாள் இல்லை, என்றெல்லாம் கதை எழுதும் முறை பற்றி அவர் கூறிகொண்டு போக போக அவர்மேல் நான் வைத்திருந்த எண்ணம் உயர்ந்து கொண்டே போனது..
நேற்றைய இரயில் பயணம் சாதரணமான வாராந்திர  பயணமாகவே இருக்கபோகிறது என்றே   இரண்டு பிஸ்கட் பக்கற்றுகள்,ஒரு போத்தல் தண்ணீர்,மறைந்திருக்கும் உண்மைகள் ஓசோவின் புத்தகம் போதாதுக்கு 4GB இளையராஜா பாடல் என   ஏற்பாடுகளுடன் வந்திருந்தேன்.

கண்ணுக்குக்  பொருத்தமாய் ஒருகண்ணாடி ,அழகாய் செதுக்கிய மீசை,கையில் நான்கு ஐந்து வெள்ளை தாள்கள் அவற்றில் ஏதோ ஒரு கதை பிறப்பெடுத்து கொண்டிருக்கிறது.அநேகமாய் ஒரு இலக்கியவாதி அதுவும் எங்கேயோ பார்த்த பரிட்சயமான முகம் என ,என் பக்கத்து இருக்கை காரர் பற்றி சிறு குறிப்பு என் ஓர கண்ணால் எடுத்து கொண்டேன் அவரை என் இடக்கண்னால் பார்த்துகொண்டே நான் புத்தத்தில்முழ்கியவேளை மனசு ஒரு பக்கத்தில் தாளம் போட்டது கேட்டு விடு   .நீங்க ஓகே குணநாதன் என்கிறமட்டு நகர் இலக்கியவாதியா என்று , கேட்டே விட்டேன் "சேர் நீங்க அந்த கதை எல்லாம் எழுதிய அவர் தானே ?" ஆமாம் என்றதில் இருந்து பேச்சு நீண்டு கொண்டே போனது .ஒற்றை வரி கதையாய் ஆரம்பித்த பேச்சு சுவாரசிய நாவல் போல தொடந்து கொண்டிருந்தது.

இப்போதைய தமிழ் இலக்கிய நிலைமை பற்றிய வருத்த மிகுதியே தொக்கி நின்றது அவர் பேச்சில் ..இடையில் தன் புதுக்கதை பற்றி அவர் எனக்கு சொல்லி கொண்டு போனார் . ஈழத்து அவலங்கள் பற்றிய ஒரு குறியீட்டு கதை அதை  விபரித்து கொண்டு போனார்.அவரின்கதையினை விட அவர் எனக்கு விபரித்து சொல்லிகொண்டிருந்த  விதம் கூடவே அந்த லயிப்பு ,ஒரு குழந்தைத்தனம் ,,கண்ணசைவுகள் என ஒரு நடிகனாகவே பரிணமித்து அந்த கதையினை எனக்கு சொன்ன விதம் என முற்று முழுவதுமாய் என்னையே ஆக்கிரமித்திருந்தார்  .சேர் உங்களுக்கு எப்பிடி ஓகே குணநாதன் என பெயர் என கேக்க நினைக்கும் போதே  ஒரு தடை வந்தது டிக்கெட் பரிசோதகர்கள் வடிவில் தம்பி நீங்க இருக்கை மாறி இருக்கிறீர்கள்எனஏதோ  ஏதோசொல்லி  என்னை அந்த உரையாடலில் இருந்து பிரித்து கொண்டு மற்றைய பெட்டியில் இருக்க செய்தார்கள்.திட்டி கொண்டே இருக்கைக்கு போனேன் .ஏன் ஓகே குணநாதன் இந்த கேள்வி மட்டும் என்னை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது முன்னும்  பின்னுமாய்.


Thursday, April 5, 2012

வெறும் 5 ரூவாதான் அதுக்காக ஏமாறலாமா ?

இது நடந்து நான்கு நாள் இருக்கும் .கண்ட இடமெல்லாம் போய் அவன் இவனின் சகிக்காத முகமெல்லாம் பார்த்து எதோ புடிக்கலியோ புடிச்சிருக்கோ வாழ்க்கை பட்டா வாழ்ந்துதான் ஆகணும் என்கிற ரீதியில் வேலைக்கு போய்ட்டு வரும் வழியில்  நடந்த ஒரு சம்பவம் இது .
நமக்காக இல்லாவிட்டலும் நம்மள சுத்தி இருகிறவங்களாவது நல்லா இருக்கணும் எனும் ரீதியில் சோப்பு ,ஷம்போ அது இது என கொஞ்சம் சில்லறை பொருட்கள் வாங்க ஒரு பார்மசி ஒன்றில் நுழைந்தேன் .எதோ எல்லாம் கூட்டி 305 /= ரூவா என்றா(ன்)ர் (அவனுக்கு எதுக்கு மரியாதை ). நானும் முன்ணூறு ரூபா தாளாகவும் இன்னும் சில்லறைக்காக இருக்கிற எல்லா சட்டை பையையும் துலாவி போதா குறைக்கு பக்கத்தில் நின்ற பெண்ணின் சட்டை பையிலும் கைய விட பார்த்து ஒரு வழியாய் 3 ரூவா எடுத்து கொடுத்தேன் சரி வெறும் இரண்டு ரூவா தானே கழிவு என்று விடுவான் என்று ஜோசித்து கொண்டிருக்கும் போதே இன்னும் ரெண்டு  ரூபா கொடுங்க என்று பல்லிளித்தான்  உண்மையில் என்னிடம் சில்லறை கூட இருக்க வில்லை ஐம்பது ரூவா தான் இருந்தது எதோ கேக்கிறான் கொடுக்க தான் வேண்டும் என்பதால் கொடுத்து.மறக்காமல் நான் கொடுத்த சில்லறை மூன்று ரூவாவையும் வாங்கியும் விட்டேன் .(விடுவமா )

இப்போதுதான் பிரச்சனை ஆரம்பித்தது .எனக்கு அவன் மீதியாய் நாப்பத்தி ஐந்து ரூபா(நாங்கெல்லாம் கணக்கில புலி ஆக்கும் ) தரவேண்டும் .இரண்டு இருபது ரூபா தாளும் ஒரு ப்பில் கம் (சுயிங்கம் ) பாழாய் போனது கரெக்கடா பெயர் கூட டைப் அடிக்க வருகுதில்லை .)ஒன்றும்  என்னிடம் தந்து விட்டு உடனே அடுத்த கஸ்டமரை பார்க்க போய்விட்டான் .உண்மையில் அந்த ப்பில் கம் ஒன்றில் விலை 2.50 /=  மூளையில் ஒரு ஓரத்தில் உறைத்தது ஏமாற்ற பார்கிறான் என்று .உடனே கேட்டேன் இது என்ன என்று 5 ரூவா சில்லறை இல்லை அதுதான் என்றான் .நானும் உடனே வேண்டாம் எனக்கு வேண்டிய  5 ரூவா தா .இதை நீயே வைத்து கொள் என்றேன்.இல்லையே இருந்தால் தர மாட்டேனா என்று சொன்னான் .சொல்லும் போதேஅவனின் குரலில் ஒரு எகத்தாளம் இருத்ததை நான் கவனிக்க தவறவில்லை .அதுவே மேலும் என்னை கடுப்பாக்கியது .

ஒரு இரண்டு ரூவா விட்டு கொடுக்க முடியாத உங்களுக்கு நான் ஏன் 5 ரூவா விடவேண்டும் என்று கேட்டு விட்டேன் ,.இருந்தா தர மாட்டானா  ஏன் கஸ்ரமரெல்லாம் நிக்கிறப்ப தொல்லை தொல்லை பண்ணுறிங்க? இதுதான் அவன் கேட்ட வாசகம் .படங்களில் எல்லாம் காட்டுவாங்களே .விரலில் இருந்து இரத்தம்  சூடேறி மேல வருவது போல .கூடவே போன இடமெல்லாம் போய் ஏதோ மிச்ச சொச்சமாய் கிடந்த மான ரோசம் எல்லாம் பொத்திகிட்டு வெளியில் வந்தது ..என்றாலும் கொஞ்சம் அடக்கி கொண்டு ஓகே எனக்கு உன் பொருள் வேண்டாம் என் பணத்தை குடு நான் போகிறேன் என்றேன் .முடியாது அதெல்லாம் மெசின்ல பீட் பண்ணி விட்டேன் வேணுமென்றால் இன்னுமொரு பபிள்கம் தாரேன் எடுத்து கொண்டு போங்க என்றான் .எனக்கு சிரிப்புதான் வந்தது அடக்கி கொண்டேன் என்றால் நம்பவா போறிங்க .ஏற்கனவே வேலைத்தள பிக்கள் புடுங்கல்கல்  இங்கு இவனின் தொல்லையுடன் சேர்ந்து என் உச்சி மண்டையில சுர்ர்ர்ரர்ர்ர் என்றது .

என் கோபத்தை பார்த்து பயந்தோ என்னவோ (சரி விடுங்க ) காசு பெட்டியை திறந்து ஒரு ஐந்து ரூவா எடுத்து தந்தான் .நானும் இப்போ எங்கிருந்து வந்தது இது என்றேன் .காசு தந்து விட்டேன் இனி நீங்க போகலாம் என்றான்.ஏதோ அவனின் காசை நான் கடன்  கேட்பது  போல் . அடிக்க கை சொன்னாலும் மனசு அடக்கி வைத்திருந்தது .வேறு வழியில் இவனை பிடிக்க வேண்டும் என்று நினைத்து கடையில் நின்ற பையனிடம் கேட்டேன் உனக்கு வயது என்ன ? ETF ,EPF எல்லாம் பதிந்திருகிறார்களா என்று (அதுதான் உழியர் சேமலாப நிதியம் பற்றி ) .அவன் உடனே அண்ணன் ஏதோ ETF என்று மருந்து கேக்கிறார் இருக்கோ? என்றான்.எனது அண்ணா தொழில் உத்தியோகத்தராய் வேலை செய்வதால் இந்த விசயங்கள் கொஞ்சம் தெரியும் .

கடைக்காரனை  ஒரு பிடி பிடிக்க முடிவு பண்ணி நாளைக்கு கடை பதிவு கூடவே ETF .EPF  தகவலோட அலுவலகம் வாங்க என்று சொல்லி விட்டு வெளியில் வந்து விட்டேன் .உடனே அவன்  வெளியில் வந்து சேர் நீங்க யாரு ? லேபர் டிபாட்மென்ட்டில் பணி புரிபவரா என்று பயந்து கேட்டான் .நானும் ஓம் என்று சொன்னேன் .உடனே அங்கு நடந்த விசயங்கள் எல்லாம் தலை கீழாக .என்ன மரியாதை தந்தான்.இதுதான் வாடிக்கையாளரை மதிக்கும் லட்சனமா ? என்று கேட்டு விட்டு வந்து விட்டேன், பாவம் பாவம் அடுத்த நாள் அலுவலகம் போய் என்ன நடந்ததோ  இறைவனுக்கு தான் தெரியும் .

Monday, April 2, 2012

அஞ்சிலே ஒன்று பெற்றான்

அஞ்சிலே ஒன்று பெற்றான்
                  அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
                ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே  ஒன்று பெற்ற
              அணங்கைகண்டு  ; அயலான் ஊரில
அஞ்சிலே ஒன்று வைத்தான்
              அவன்  நம்மை அளித்து காப்பான் இது கம்பராமாயணத்தில் பால காண்டத்தில் வரும் ஒரு பா ..தமிழ் சினிமா காரங்க சொல்லூர மாதிரி ரொம்ப எபெட் எடுத்து தான் கம்பர் இந்த பாடலை புனைந்திருக்க  வேண்டும் .

அனுமனுக்கு வணக்கம் வைக்கும்வகையில இந்த பா உருவாக்க பட்டிருக்கும் .
முதல் அடி கம்பர் ஆரம்பிக்கிறார் அனுமன் பிறப்பில்   அஞ்சிலே ஒன்று பெற்றான் .அஞ்சு என்று கம்பர்  விளிப்பது ஐம்பூதங்களை என்பது வாசிக்கும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது .

அனுமனை வாயுபுத்திரன் என்றும் வாயுமைந்தன் என்றும் விளிப்பார்கள் .காரணம் அவன் வாயுபகவானின் வாரிசு என்கிற படியால் .அதே கருத்தை கம்பர் தன் பாவில்   அஞ்சிலே ஒன்று பெற்றான் என்று ஆரம்பித்திருக்கிறார்.

அடுத்து   அஞ்சிலே ஒன்றை தாவி        இந்த  கவி இடம் பெறும் படலம் பால காண்டம் சீதா பிராட்டியை தேடும் படலம் எனவே அஞ்சில் ஒன்றாகிய நீரை  கடக்க போவதை அதாவது கடலை கடந்து போவதை கம்பர் தன் பாணியில் எடுத்து விட்டிருக்கிறார்..அத்தோடு   அஞ்சிலே ஒன்று ஆறு ஆக   எனும் போது வான் வீதி வழியாக தாவி கடல் கடக்கிறான் என்கிறார் கம்பர்
எதுக்கு?  ஆருயிர் சீதாதேவியை காக்க கடல் தாண்டி செல்கிறான் ,சொல்கிறார் கம்பர்கடல் தாண்டி அயலூர் அதாவது இலங்கை வருகிறான்,இங்கும் அந்த அஞ்சு என்பதை கம்பர் விடாமல் தொட்டு கொண்டே இருக்கிறார் .அஞ்சிலே  ஒன்று பெற்ற அணங்கை கண்டு இது சீதாபிராட்டி பற்றியது ,சீதா பூமா தேவி மகள் எனவே இந்த வரி இங்கு ..இதை விட அடுத்த வரி தன் முத்திரையை அழகாய் பதித்து விட்டு போயிருக்கிறார் கம்பர் 

அஞ்சிலே ஒன்று வைத்தான்  இலங்கா புரிக்கு தீ வைத்தான் என்று முடித்து அவன் நம்மை காப்பான் என்று நினைத்திருகிறான்  கவியர்...
இன்னுமொரு தமிழ் பாடலோடு விரைவில் சி(ச)ந்திப்போம்

Wednesday, March 21, 2012

ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்

 இது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்றுமதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்


நீங்கள் IGA game விளையாட எங்கள் உயிர் தான் கிடைத்ததோ !
எங்கள் வாழ்கையை edit செய்வதாய் நினைத்து delete செய்து விட்டீர்கள் .
தயவு செய்து நல்ல recovery software ஒன்றை தாருங்கள் .
எங்கள் உடைமைகளையாவது திரும்ப பெற 
.
photoshop இல் மெருக்கூட்ட பட்ட படமாக
எங்கள் வாழ்கையை வெளி உலகுக்கு
காட்டாதீர்கள் .
எங்கள் வாழ்வு virus அடித்து போய் கிடக்கிறது.

antivirus வாங்க சொல்லி தரும் காசுகளை
hide பண்ணி விடாதிர்கள் .
முன்பெல்ல்லாம் எங்கள் hard disk இல்
not enough memory என்று வரும் .
இப்போது இடம் இருந்தும் இருக்க
file இல்லை .


எங்களை தனியாக partition பண்ண மாட்டிர்கள்
என்று எங்களுக்கு தெரியும் .
இனி அவ்வாறு வேண்டாம் .
அப்படி செய்ய போய் பட்ட அழிவுகள்
எங்களுக்கு நன்றாகவே தெரியும் .

தயவு செய்து
நீங்கள் virus என்று நினைத்து
பிடித்து வைத்திருக்கும் எங்கள் file களை
விட்டு விடுங்கள் .

Tuesday, March 13, 2012

பச்சை மால் மலை போல் மேனிஇப்போதெல்லாம் புது பாட்டுகளை விட இளையராஜா இசை மற்றும் சீர்காழி பக்தி பாடல்கள் என கேக்க தொடங்கி மிக நாளாகிறது .முன்பு இசைஜானி 
பாடல் கேக்கும் என் அறை நண்பனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடே இருந்தது இப்போதெல்லாம் டுவிட்டரில் நடக்கும் சண்டை போல் அப்போது ஒவ்வொரு நாளும் அறையில் கருத்து மோதல் இருந்து கொண்டே இருக்கும் .அப்போது என்பதால் எதோ கண்டிய மன்னன் காலத்து ஆள் நான் என்று நினைக்க வேண்டாம் இப்போதுதான் இரண்டு வருசங்களுக்கு முன் .

 என் மொபைலின் மெமோரி காட்டில் இப்போதெல்லாம் சீர்காழி அல்லது டிஎம்ஸ் பாடல்தான் நிறைத்து போய் இருக்கிறது .வேளையில் களைத்து போயிருக்கும் போது இப்படியான பாடல்கள் கேக்கும் போது மீண்டும் பழைய உற்சாகம் வந்து ஒட்டி கொள்ளும் எனக்கு

.நேற்று இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது ஒரு பாட்டு என்னை எதோ செய்து விட்டது நேற்றே ஐம்பது தடவைக்கு மேல் மீண்டும் மீண்டும் அதை கேட்டு இருப்பேன் . நாலாயிரம் திவ்வ்ய பிரபந்த பாடல் ஒன்று தான் அது ஆழ்வார்கள் பாடிய பாடல் அது .பூபாளம் ராகத்தில் கேப்பதுக்கு உண்மையில் நம் காதுகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் பச்சை மால் மலை போல் மேனி பாடல் ............. சரி சரி நிங்களும் அதை கேட்டு ரசித்து பாருங்களேன்


  கீழே உள்ளது டி எம் ஸ் குரலில் இதுவும் கேப்பத்ட்கு இனிமையாகவே இருக்கிறது
இதுபோலவே எனக்கு பிடித்து இன்னுமொன்று இது

கடற்கரை காதல் பாகம் 11********எல்லோரும் அலைகளில் முழ்கி 
பாவ விமோசனம் பெற்று கொள்வார்கள் 
உன்னிடம் மட்டும் அலைகளே வந்து
 உன் பாதம் நனைத்து
 பாவ விமோசம் பெற்று கொள்கின்றன ..***********

*****நீ காற்று வாங்க வந்திருக்கிறாய்
நான் காதல் வாங்க உன்னிடம் வந்திருக்கிறேன்*********** 


************கடல் கன்னி என்றால் என்ன என்றாய் நீ என்னிடம்  
கொஞ்சம் பொறுத்து கொள்ளேன்
 தங்களை விட அழகானவள்  கரையில் இருப்பதை  கேள்விபட்டு வெளியில் வரும் பார் என்றேன்
 வெட்கப்பட்டாய் நீ .சூரியன் திகைத்து போனது  தான்  எந்த சிவப்பில் ஒளிந்து கொள்வதென்று ****************Friday, February 10, 2012

இம்மாத பூக்கள்

 • இம்மாத பூக்கள் நிச்சயம் சுவர்க்கம் அடையும்
  காதலை கௌரவிப்பதற்கான மாதத்தில் பிறக்க
  புண்ணியம் செய்திருக்க வேண்டும் அவை .

 • ஒற்றை காம்பில் காதலை ஏந்தி நிற்கின்றன அவை
  பனி தூங்கி போக  இடம் கொடுத்த பாரி   அவை .
  இன்று  காதல் மெய்த்து போக தூது போகின்றன 


 • காதல் வீட்டின் முதல் சாவி பூக்கள்தான்

 •   காதல் சொல்ல வார்த்தைகள் தேவையில்லை
  என உணர வைத்தது இம்மாத  பூக்களே 

Wednesday, February 1, 2012

சில எஸ் எம் எஸ் குறியீடுகளும் விளக்கங்களும் (ஆமா ரொம்ப முக்கியம் இது )

சில நேரங்களில் தலைய பிச்சிக்க வைப்பாங்க பொண்ணுங்க எதோ சிரிக்கிற மாதிரி அப்பிடி இப்பிடி எண்டு டைப்பி அனுப்பி விடுவாங்கோ .இதுக்கு விளக்கம் தெரியாம மொக்கையின பட்ட சம்பவங்களும் உண்டு .

இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்ட தான் இந்த பதிவு ..எங்கேயோ எல்லாம் தேடி புடிச்சு அதான் தீயா வேலை செய்து உங்களுக்காக சமர்பிக்கிறேன் அட சுட்டது எண்டு ஒருவரியில சொல்லாமா எப்பிடி சொல்லுது கழுத எண்டு நீங்க திட்டுறது புரியுது ,Symbol Meaning Symbol Meaning Symbol Meaning
:) smiling face without nose :-) smiling face with nose :( frowning face without nose
:-( frowning face with nose #:-) smiling with a fur hat &:-) smiling with curls
*<|:o)> Santa Clause :-)... drooling :-7 smirk
:-D grinning :@ shouting :`( crying
:-() shocked :-(O) Shouting :-\ skeptical
:-| Determined :-~) having a cold :-< Cheated
:-9 salivating :-x small kiss :-X big kiss
>8-D evil crazed laughter %-} Intoxicated /:-| Unamused, mildly cross
:-* Kiss :') Happy and crying /\(00)/\ Spider
:-{} Lip stick :-|| Angry :-O Wow
|-O Snoring <3 A love heart >:-@! Angry and swearing
>:-( Angry, yet sad C|:-) Smiling with top hat 3:-) Devilish smile
:-P Tongue in cheek :-& Tongue tied @>--;-- Rose
:-----) Long nose (Liar!) :-($) Put your money where your mouth is :x I'm keeping my mouth shut

 இப்பிடிதாங்க ஒரு நாள் சிரிக்கிறமாதிரி யும் அதோட சேர்த்து p என்கிற எழுத்தும் சேர்த்து வந்துச்சு நானும் இதுக்கு விளக்கம் யார்கிட்ட கேக்கிற அப்பிடி எண்டு ஜோசிச்சே நாலு தலையனைய பிச்சி இருக்கனேண்டா பாருங்களன் .திரும்பவும் அவளிட்ட இத கேட்டா இது கூடவாடா தெரியா நீஎல்லாம் அப்பி எண்டு கேட்டு போட்டா எண்டா மானம் தானே நமக்கு முக்கியம் (மானத்த  பத்தி நீ பேசுற ) .

இத விட புதினம் என்னெண்டா ஒரு மாதிரி எங்கேயோ இத பற்றி தேடி எடுத்திட்டன் அது இங்கிலிஷ்ல போட்டு இருக்கு .இனி அதுக்கு விளக்கம் தேடி அப்பா அப்பா வேணாம் எண்டு போச்சு .
2bctnd to be continued
2g4u too good for you
2l8 too late
2WIMC to whom it may concern
4e forever
4yeo for your eyes only
911 emergency - call meA3 anytime, anywhere, anyplace
AAM as a matter of fact
AB! ah bless!
ADctd2uv addicted to love
AFAIK as far as I know
AFK away from keyboard
AML all my love
ASAP as soon as possible
ASL age, sex, location
ATW at the weekend
ATB all the best

B4N bye for now
BTW by the way
BBS be back soon
BCNU be seeing you
BBB bye bye baby
BEG big evil grin
BWL bursting with laughter
BM&Y between me and you
BOL best of luck
BTDT been there, done that
BRB be right b
 இது போன்ற சில சுருக்கங்கள் இன்னும் தேவை எனில் here  அழுத்தவும் .Tuesday, January 31, 2012

என் காதல் தேர்

உன் அசாத்திய திறமை கண்டு வியக்கிறேன்
ஒற்றை பார்வையில் என்னை விழுத்தி
ஒற்றை சிரிப்பில் என்னை உயிப்பிக்கும் போது...என் காதல்  தேர்
உன் கன்னகுழியில் விழுந்து
கொண்டு வெளியே வர முடியாமல்
தவிக்கிறது .

உன் சிரிப்பின்
வரைவிலக்கணம்
தெரியாமல் குட்டு பட்டு
கொண்டிருக்கிறேன்
 காதலிடம்

Monday, January 30, 2012

என் காதலிக்கு 09
வறுமையாகவே இருந்தது என்
வார்த்தை குளம்
உன்னை பற்றி கவிதை
என்றதும் பொங்கி எழுகிறது

என் தனிமைக்கு  ஆடையாக
உன் நினைவையே உடுத்தி
இருக்கிறேன் .

கடலோர மரங்கள் எல்லாம் சூரியனை  நோக்கி
வளர்வதை போல
என் மன எண்ணங்கள் எல்லாம் உன்னை
நோக்கியே இருகின்றன