நெஞ்சணைத்த புத்தகம்
நேர் வகிடுமுடி
வெள்ளுடை தேவதைகளில்
நீ மட்டும் தனித்துவமாய்
விழவே காத்து நிக்கும் என் மனசு .
சூரியனை பார்த்தே தாமரை மலருமாம்
இங்கே நீ வெளி வருவதை பார்க்கவே
சூரியனே மலருகிரதுபோல
வீதியில் அனாதையாய் கிடந்த
நாய் குட்டியை பாசத்துடன் பார்க்கிறாய்
அருகில் என் இதயம் வாலை
ஆட்டி கொண்டு இருப்பதை பாராமல்
இதோ இந்த குறுக்கு வீதி
இங்குதான் உன் பார்வையில்
பல லட்சம் வால்ட்டுகைளை எனக்குள் அனுப்புவாய் நீ .
.........................................வருவாள் .......................