Thursday, June 30, 2011

தமிழுக்காய் ....இது...(ஒரு சொல் பல வடிவம் )

இந்த வலைப்பூவில் உருப்படியாக என்ன செய்து இருக்கிறாய் என்று எதோ உறுத்தியது ...எல்லோர் போலவும் தமிழுக்காய் எதும் செய்வோம் என்று சில பரிசோதனை முயற்சிகள் எடுக்க இருக்கிறேன் .நீங்கள் வரவேற்றாலும் சரி இல்லை என்றாலும் சரி .இது தமிழுக்காய் எடுத்த முயற்சி .துவளாது என் மனது

.
 சில வாக்கியங்கள் தமிழில் அழகாய் இருக்கும் கூடவே அதிகமாய் இருக்கும் ,உதாரணமாய் என் நண்பன் ஒருவன் லண்டன் மாநகரில் இருக்கின்றான் .எதோ ஒன்று நடந்து அவனுக்கு இடுப்பு பகுதியில் வலி .அதை நாம் இங்கு சுளுக்கு ,கடுப்பு என்று சொல்லுவோம் .இவை பேச்சு தமிழாக இருந்த போதிலும் அவன் அங்கு வைத்திசாலைக்கு சென்று என்ன நடந்தது எண்டு கேட்டபோது ஒரே வார்த்தை back pain இது மட்டும் தான் சொல்ல முடிந்தது அவனால் .இதே போன்று தமிழில் ஒவ்வொரு சின்ன சின்ன விசயங்களுக்கும் தனி தனி சொல் உண்டு .அவற்றை முடியுமான வரையில் இங்கு தொகுத்து தந்திருக்கிறேன் .



முதலாவதாக சாப்பாடு .நாம் சாப்பிடும் முறை பன்னிரண்டு வடிவில் இருக்கிறது என தமிழ் சொல்லுகிறது


  1. அருந்தல்-----              மிக சிறிய அளவில் உணவு உட்கொள்ளல் 
  2. உண்ணல்-----            பசி தீர உணவு உண்ணல்
  3. உறிஞ்சல் ------         வாயை குவித்து நீர்ஆகாரத்தினை ஈர்த்து        உட்கொள்ளல் 
  4. குடித்தல்--------------நீரியல் உணவை சிறிது சிறிதாக பசி தீர உட்கொள்ளல் (கஞ்சி போன்ற உணவு )
  5. தின்றல்---------------தின்பாண்டங்களை உட்கொள்ளல் 
  6. துய்த்தல் -------------சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளல் 
  7. நக்கல் ----------------நாக்கால் நக்கி உட்கொள்ளல் 
  8. நுங்கல்--------------முழுவதையும் ஒரு வாயில் ஈர்த்துஉறிஞ்சு கொள்ளல் 
  9. பருகல் --------------நீர் பண்டம் ஒன்றை சிறுக சிறுக குடிப்பது 
  10. மாந்தல் -------------பெருரு வேட்கையுடன் மடமட வென குடித்தல் 
  11. மெல்லல் -----------கடிய பண்டத்தை பல்லால் கடித்து கடித்து சுவைத்து உட்கொள்ளல் 
  12. விழுங்கல்------------பலுக்கும் நாக்குக்கும் இதில் வைத்து தொண்டை வழியே உட்கொள்ளல் .



பெண்கள் எழுவகை என்று கூறிய தமிழ் ஆணுக்கும் அவ்வாறு வகை பிரித்து இருக்கிறது .அவற்றை பார்போம் 
பாலன்---------------எழு வயதுக்கு கிழே
மீனி ------------------பத்து வயதுக்கு கிழே 
மறவான் ------------பதின்னான்கு வயதுக்கு கிழே
திறலோன்---------பதினான்கு வயதுக்கு மேல் 
காளை----------------பதினெட்டு வயதுக்கு கிழே
விடலை ----------முப்பது வயதுக்கு கிழே 
முதுமகன் -----------முப்பது வயதுக்கு மேலே 



இதே போல் பூ பூக்கும் நேரம் காலம் போன்றவற்றை வைத்து 
  1. அரும்பு --------------அரும்புவிடும் நிலை 
  2. மொட்டு ---------------மொட்டு விடும் நிலை 
  3. முகை ------------------முகிழ்க்கும் நிலை 
  4. மலர் -----------------------பூ நிலை 
  5. அலர்---------------------மலர்ந்த நிலை 
  6. வீ -------------------------வாடும் நிலை 
  7. செம்மல் ----------------இறுதி நிலை 
பூவுக்கு மட்டுமில்லாமல் இலைக்கும் இதே போன்று 
கொழுந்து ------------குழந்தை பருவம் 
தளிர் -------------------இளமை பருவம் 
இலை -------------------காதல் பருவம் 
பழுப்பு -------------------முதுமை பருவம் 
சருகு ------------------இறுதி பருவம் 


இப்பிடியாக தமிழ் பெருமை இருக்கிறது ..............இன்னும் வளரும்