Thursday, June 30, 2011

தமிழுக்காய் ....இது...(ஒரு சொல் பல வடிவம் )

இந்த வலைப்பூவில் உருப்படியாக என்ன செய்து இருக்கிறாய் என்று எதோ உறுத்தியது ...எல்லோர் போலவும் தமிழுக்காய் எதும் செய்வோம் என்று சில பரிசோதனை முயற்சிகள் எடுக்க இருக்கிறேன் .நீங்கள் வரவேற்றாலும் சரி இல்லை என்றாலும் சரி .இது தமிழுக்காய் எடுத்த முயற்சி .துவளாது என் மனது

.
 சில வாக்கியங்கள் தமிழில் அழகாய் இருக்கும் கூடவே அதிகமாய் இருக்கும் ,உதாரணமாய் என் நண்பன் ஒருவன் லண்டன் மாநகரில் இருக்கின்றான் .எதோ ஒன்று நடந்து அவனுக்கு இடுப்பு பகுதியில் வலி .அதை நாம் இங்கு சுளுக்கு ,கடுப்பு என்று சொல்லுவோம் .இவை பேச்சு தமிழாக இருந்த போதிலும் அவன் அங்கு வைத்திசாலைக்கு சென்று என்ன நடந்தது எண்டு கேட்டபோது ஒரே வார்த்தை back pain இது மட்டும் தான் சொல்ல முடிந்தது அவனால் .இதே போன்று தமிழில் ஒவ்வொரு சின்ன சின்ன விசயங்களுக்கும் தனி தனி சொல் உண்டு .அவற்றை முடியுமான வரையில் இங்கு தொகுத்து தந்திருக்கிறேன் .முதலாவதாக சாப்பாடு .நாம் சாப்பிடும் முறை பன்னிரண்டு வடிவில் இருக்கிறது என தமிழ் சொல்லுகிறது


 1. அருந்தல்-----              மிக சிறிய அளவில் உணவு உட்கொள்ளல் 
 2. உண்ணல்-----            பசி தீர உணவு உண்ணல்
 3. உறிஞ்சல் ------         வாயை குவித்து நீர்ஆகாரத்தினை ஈர்த்து        உட்கொள்ளல் 
 4. குடித்தல்--------------நீரியல் உணவை சிறிது சிறிதாக பசி தீர உட்கொள்ளல் (கஞ்சி போன்ற உணவு )
 5. தின்றல்---------------தின்பாண்டங்களை உட்கொள்ளல் 
 6. துய்த்தல் -------------சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளல் 
 7. நக்கல் ----------------நாக்கால் நக்கி உட்கொள்ளல் 
 8. நுங்கல்--------------முழுவதையும் ஒரு வாயில் ஈர்த்துஉறிஞ்சு கொள்ளல் 
 9. பருகல் --------------நீர் பண்டம் ஒன்றை சிறுக சிறுக குடிப்பது 
 10. மாந்தல் -------------பெருரு வேட்கையுடன் மடமட வென குடித்தல் 
 11. மெல்லல் -----------கடிய பண்டத்தை பல்லால் கடித்து கடித்து சுவைத்து உட்கொள்ளல் 
 12. விழுங்கல்------------பலுக்கும் நாக்குக்கும் இதில் வைத்து தொண்டை வழியே உட்கொள்ளல் .பெண்கள் எழுவகை என்று கூறிய தமிழ் ஆணுக்கும் அவ்வாறு வகை பிரித்து இருக்கிறது .அவற்றை பார்போம் 
பாலன்---------------எழு வயதுக்கு கிழே
மீனி ------------------பத்து வயதுக்கு கிழே 
மறவான் ------------பதின்னான்கு வயதுக்கு கிழே
திறலோன்---------பதினான்கு வயதுக்கு மேல் 
காளை----------------பதினெட்டு வயதுக்கு கிழே
விடலை ----------முப்பது வயதுக்கு கிழே 
முதுமகன் -----------முப்பது வயதுக்கு மேலே இதே போல் பூ பூக்கும் நேரம் காலம் போன்றவற்றை வைத்து 
 1. அரும்பு --------------அரும்புவிடும் நிலை 
 2. மொட்டு ---------------மொட்டு விடும் நிலை 
 3. முகை ------------------முகிழ்க்கும் நிலை 
 4. மலர் -----------------------பூ நிலை 
 5. அலர்---------------------மலர்ந்த நிலை 
 6. வீ -------------------------வாடும் நிலை 
 7. செம்மல் ----------------இறுதி நிலை 
பூவுக்கு மட்டுமில்லாமல் இலைக்கும் இதே போன்று 
கொழுந்து ------------குழந்தை பருவம் 
தளிர் -------------------இளமை பருவம் 
இலை -------------------காதல் பருவம் 
பழுப்பு -------------------முதுமை பருவம் 
சருகு ------------------இறுதி பருவம் 


இப்பிடியாக தமிழ் பெருமை இருக்கிறது ..............இன்னும் வளரும் Saturday, June 25, 2011

விளையாடு மங்காத்தா vs சக்தி மசாலா தனி ரகம் (வீடியோ )

பசங்க எப்போதுமே பாஸ்ட் .விளையாடு மங்காத்தா வ எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு எண்டு ஜோசிக்கிட்டு இருக்கும் போதே இரங்கி விட்டாங்க சக்தி  மலாசா தனிரகம் விளம்பர ஜின்கில் யுவன் அத லைட்ட காப்பி பண்ணின மாதிரி இருக்கு .எனக்கும் இத புடிச்சு இருந்துச்சு இங்க போட்டு விட்டன் .அஆன நானும் உண்மையான தல ரசிகன் தான் .Monday, June 20, 2011

சிவா நகரில் இருந்து snapdeal.com நகராக பெயர் மாறிய கதை

இந்தியாவின் வட பகுதியில் உள்ள ஓர் ஊர் சிவா நகர் .இந்த ஊர்தான் தற்போது பெயர் மாற்றம் பெற்று snapdeal.com  நகராக மாறியுள்ளது .


குணால் பால் வெறும் இருதபத்தியேட்டு வயது இளைஞ்ன் snapdeal இணைய தள நிறுவனர் .கடந்த வருடத்தில் தன் தளம் முலம அடைந்த லாபத்தின் ஒருபகுதியை  எதோ நல்ல வழியில் செலவிட எண்ணினார் .அவரின் மூளையில் அப்போது தோன்றிய  எண்ணமே இந்த பெயர் வர காரணம் .

சிவா நகரில் இருந்து மக்கள் நல்ல குடி நீர் பெற மூன்று நான்கு மைல் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை. செய்தி காதுக்கு எட்டியது இவருக்கு தனது கம்பனி லாபத்தினை கொண்டு அந்த ஊர் முழுவதும் 15 குழாய் கிணறுகளை அமைத்து கொடுத்தார் விளைவு மாறியது அந்த ஊர் மக்களின் வாழ்வு நிலை .

இந்தகாரியத்துக்கு கைம்மாறு செய்ய விரும்பிய ஊர் மக்கள் தங்களின் ஊர் பெயரையே மாற்றி விட்டனர் snapdeal.com நகர என்று .கவிதை விடு தூது
என் கவிதைகளின் காலில்
என் காதலை கட்டி அனுப்புகிறேன்
நீ கவிதைகளை மட்டும் எடுத்து விட்டு
காதலை பாராது விடுகிறாய்


Saturday, June 18, 2011

உண்மை எதிர் சினிமா .. ஒரு நக்கல் அனிமேஷன்

இந்த படங்களை தந்துதவிய அந்த புண்ணியவானுக்கு நன்றி ..


இந்த படம் உண்மையாக நடந்ததுஇது  ஆங்கில திரைப்பட காட்சியில்இது  ஹிந்தி திரைப்பட காட்சியில்இது  தெலுங்கு திரைப்பட காட்சியில்
 --
-
-

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
- இறுதியாக தமிழ் திரைப்பட காட்சியில் சும்மா அதிருதில்லFriday, June 17, 2011

சிலந்தி + காதல் =
உன் நினைவுகளால்
வலை பின்னி
அதில் வாழும் சிலந்தி
நான்


  நீ சிலந்தியாய்
இருந்த போதும் உன்
காதல் வலையில்
விளுந்துவிடவே
துடிக்கிறது இதயம்
Wednesday, June 15, 2011

பெயர் அண்ட் லவ்வ்லி பாவிக்கும் ஒபாமா

அட இது என்ன கொடுமையா இருக்கு .கண்ட கிண்ட நாயெல்லாம் பெயர் அண்ட் லவ்வ்லி  பாவிக்கும் போது நான் பாவிச்ச என்ன எண்டு நினைச்சார் போல ஒபாமா .அந்த கிரிம போட்டு தேய் தேய் என தேச்சு போட்டார் . அந்த மேட்டர் பின்னுக்கு வருகுது .அதுக்கு முதல் நம்ம மேட்டர கொஞ்சம் பாருங்க


 நான் கொழும்புக்கு போய் படிச்சு கிழிச்ச விஷயம் எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் எண்டு நினைக்கன் .கிழிச்ச சரி அங்க போய்  என்ன படிச்ச எண்டு கேட்டிங்க அழுதிடுவன்.விடுங்க விடுங்க அவன் அவன் கஷ்டம அவனோட போகட்டும் .அங்க எனக்கு தெரிஞ்ச ஒரு பையன்க எதோ அவன்தான் இந்த உலகத்திலே சுத்தமான ஆள் என்கிற ரேஞ்சில பண்ணுவாங்க .
ஒரு நாளைக்கு மூன்று தரம் குளிச்சு முன்ணூறு தரம் முகம் கழுவி தொண்ணுறு தரம் பல்துலக்கி ஆயிரம் தரம் கிரீம் பூசுகிறவன் எண்டா பாருங்களன்.நான் கூட சில நேரம் அவன் குளிக்கிரதால் எனக்கு குளிக்க நேரம் இல்லாமா குளிக்காம விட்டு இருக்கான் எண்டா பாருங்க(டேய் உனக்கே ஓவரா இல்ல) .இதுக்கு அவன் என் பக்கத்துக்கு ரூம் மேட் .அவன் அப்பிடி பண்ணினா எப்பிடிங்க அந்த ரூம் பசங்க எல்லோரும் நம்ம ரூம்லேயே செட் ஆகிடுவாங்க .நான் கொஞ்சம் கலர் கம்மியா இருக்கிறதுக்கு இதுதான் காரணம் எண்டு சொல்ல வரல .இதுவும் இருக்கலாம் .(அட தூ ).
உலகத்தில முகத்துக்கு எது எது எல்லாம் பூசுகிறான்களோ எல்லாம் போட்டு பார்த்திருப்பான் எண்டு நினைக்கன் .செங்கல் தூள் கூட போட்டு இருக்கானாம் அவனே வாயால குடுத்த ஸ்டேட்மென்ட் இது .நான் கூட அவன் கிட்ட சொல்லுவன் .மச்சான் எங்க ஊருல நாய்க்கு எதும் காயம் வந்தால்தான் செங்கல் தூள் போடுவன் எண்டு .

கிரீம் வாங்கிறதுக்காக சாப்பிடும் சோற்றின் அளவை குறைக்கும் அளவுக்கு கொடுமை உள்ளவன் ஏன்டா பாருங்க .ஒருகிரிம் புதுசா போட்டால் அடுத்த நாள் அதுக்கு அவர் வெள்ளையா மாறி இருக்கணும் இல்லாட்டி வேற கிரீம் .அதுக்காக பழைய கிரீம் தூக்கி வீச மாட்டார்.இத விட கொடுமை ஒருநாள் கிரீம் எண்டு நினைச்சு பால் துலக்கும் கோல்கர்ட் எடுத்து பூச பார்த்தவன் எண்டா பாருங்களவன் .5000ருபாவுக்கெல்லாம் ஒரு கிரீம் வாங்கி பூசின புண்ணியவான் எண்டா பாருங்க அவன் நிலைமைய.

இதுக்கு அவன் கொஞ்சம் வடிவான பொடியன்க .யாரோ நல்லா சொல்லி இருக்காங்கஉனக்கு இந்த முகம் இப்பிடி இருக்கிறதால பொண்ணுங்க ஒண்டும செட் ஆகுதில்ல.அப்பிடி சொன்னவன நான் இன்னும் கண்டு புடிக்கல கண்டு புடிச்சு இருந்தன் .இந்நேரம் இலங்கையில் இல்லிங்க இந்தியா திகார் ஜெயில  கனிமொழியோட களி திண்டு இருப்பன் .அவனுக்கு பொண்ணுகள பார்த்தா நம்ம கிட்ட நக்கல் விடுவார் .அவள் பக்கத்தில வந்தால் வாய பொத்தி கிட்டு  போவாரு .நாம அப்பிடியோ ???????????.(இது பற்றி வேறு ஒரு பதிவில பாப்போம் )


இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டத்தான் இப்பிடி கிரீம் கிரிமா பூசி எங்க கழுத்த அருதுச்சு அந்த கழுத ..

சரி சரி இனி ஒபாமா மேட்டருக்கு வருவம் .ஒரு போட்டோசொப் களிஜன் கைவண்ணம்

Tuesday, June 14, 2011

ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சொல்வதில் உள்ள தர்மசங்கடம்
கேள்வி:    நீங்கள் என்ன சாப்பிவிரும்புகிறிர்கள்? பழஜூஸ்,சொக்கலேடே , சோடா ,டி
                                                            
பதில்             டீ மட்டும்

கேள்வி         இலங்கை டி ,மூலிகை டி,ஏலம கலந்த டி,புஷ் டீ ,கிரீன் டி ?

பதில் :         சிலோன் டி

கேள்வி :    அதிலும் வெள்ளை டி ,கருப்பு டி ?

பதில் ;       வெள்ளை

கேள்வி :  பால் அதிகம் விட்டோ இல்லை குறைத்தோ?

பதில் ;      பால் சேர்த்து

கேள்வி :  ஆட்டு பால் ,பசுப்பால் ,ஓட்டக பால் எது தேவை ?

பதில் :      பசும பாலே போதும் டீ கொண்டு வாங்க.

கேள்வி  :இனிப்புக்கு என்ன ?சீனி  இல்லாவிடின் கரும்பு சாறு

பதில் :சீனி

கேள்வி :கட்டி சீனி யா ?இல்லை தூள் சீனியா ?

பதில் :தூள் சீனி

கேள்வி :வெள்ளை சீனி ,பிரவுன் சீனி ,மஞ்சள் சீனி எது வேண்டும் ?

பதில் :தம்பி டியே வேணாம் கொஞ்சம் தண்ணீ கொண்டு வா ?

கேள்வி :மினரல் வாட்டர் வேணுமா ? இல்ல நார்மல் தண்ணிர் போதுமா?

பதில் :மினரல் வாட்டர்

கேள்வி :சுவை சேர்த்த நீரோ இல்லாமல வெறும் நீரோ ?

பதில் :::::::::::::::::::::::;;ஆணியே புடுங்க வேணாம் நான் போறன்


(சீனி =சக்கரை )

Thursday, June 9, 2011

என் காதலிக்கு ...
காதல் கடலில்
என் இதயம் தத்தளித்து
கொண்டு இருக்கிறது
உன் இதயத்தை கொடேன்
துடுப்பாய் இருந்து விட்டு போகட்டும் ....Tuesday, June 7, 2011

இதுவும் என் காதலிக்கே சமர்ப்பணம்ராமர் வில்லை உடைத்துதான்
சீதாதேவியை மனந்தாராம் .
நீ என்னையே உடைத்து விட்டாய்
பிறகு நான் எப்படி?என் காதல் வனத்தில்
உன்னை சிறை வைக்க துடிக்கிறது
என் இதயம்


Sunday, June 5, 2011

இதுவும் என் காதலிக்கே
நீ என்னை காதலிப்பதை
சொல்லிவிட்டாய் பாரேன்
வானம் அழுது கொண்டு இருக்கிறது
மழையாய்


உனக்கும் எனக்குமான
காதலுக்கு இடையில்
சிக்கி சின்னாபின்னமாக போகும்
என் கவிதைகளை நினைத்தால்
பாவமாய் இருக்கிறது

உன் கூந்தளுக்குள்ளே
ஒளிந்து கொண்டு
கண்ணாம்பூச்சி ஆட
விருப்பமாம் என் இதயத்துக்கு
கொஞ்சம் இடம் கொடுப்பாயா ?