Tuesday, May 24, 2011

பென்சன் தொகை வந்திருக்கு

அப்பாடா என்ன வெயில் சீ இப்பிடி கொளுத்துகிறது என வெயிலுக்கு ஒரு திட்டு திட்டி விட்டு சட்டையின் பட்டங்களை களட்ட தொடங்கினார்.குடிக்க தண்ணி கொண்டு வா! என்று மனைவிக்கு  சொல்லி கொண்டே மின்விசிறிக்கு உயிர் கொடுத்து கதிரையில் சங்கமாகி கொண்டார் கணேசர் .

முன்னுக்கு இருந்த கண்ணாடி காட்டி கொடுத்தது ஐம்பத்தி ஐந்து வயது ஆகிவிட்டதை . நரை முடிகள் மொத்தமாக குத்தகைக்கு எடுத்து இருந்தன தலையை .போன வருசம்தான் பென்சனுக்கு கொடுத்து விட்டார் .வீட்டில் சும்மா இருக்க பிடிக்க வில்லை .அலுவலகத்திலே எல்லோர் வேலையும் எடுத்து தன தலையில் போட்டு கொண்டு செய்யும் அவர் இப்போது சும்மா இருப்பாரா என்ன .எதாசும் ஒரு வருமானம் வரும் வழி பாப்போம் என்றால் இன்னும்  பென்சன் தொகை வந்த பாடில்லை அதுக்கு தான் இந்த கொளுத்தும் வெயிலிலும்  பஸ் ஏறி டவுனுக்கு போய் வருகிறார் .

என்னவாம் உங்கட பைல் போய் சேர்த்துட்டுதாமோ ? ஒரு செம்பில் தண்ணீயுடன் வந்தாள் கனகம் .அவருக்கேத்த ஜோடி தான்  தன் சொந்ததுக்குளே பார்த்து முடித்த கலியாணம் முப்பது வருஷம் ஆகிவிட்டது கலியாணம் முடித்து இன்னும் பெரிய அளவில் சண்டை ஒன்னும் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது அவர்கள் வாழ்க்கை வண்டி .ஓம் ஓம் அந்த காசு எடுகிறதும் சரிதான் இந்த வெயிலுக்குள்ள போறதுக்கும் சரிதான் வெறுப்போடு சொன்னார் கணேசர் .நமக்கு வேணும் என்டா கஷ்ட படத்தான் வேணும் எண்டு தனக்குள்ள முனகி கொண்டு சமையலறைக்குள் ஐக்கியமாகி கொண்டாள் கனகம் .

நாளைக்கும் போய் கரைச்சல் கொடுத்தால் தான் அந்த பைல கெதியா அனுப்புவான் என்று ஜோசித்து கொண்டே கதிரையில் அயர்ந்து  கொண்டார் .அவருக்கு நினைப்பு எல்லாம் அந்த பணத்தை வைத்து என்ன செய்வது ? இரண்டு மகன் மாருக்கும் நல்ல இடமாய் பார்த்து கலியாணம் செய்து குடுத்து விட்டார் .கொஞ்சம் தூரத்தில் இருப்பதால் மாசம் ஒருதரம்தான்  வந்து பார்த்து விட்டுதான் போவார்கள் .பென்சன் காசி ரெண்டு பேருக்கும் செலவுக்கு  காணும் .ஆனால் அந்த தொகை காச என்ன செய்கிற .மனிசியும் கோவில் குளத்துக்கு ஒண்டும போகல்ல போகணும் எண்டு சொல்லுறாள் .காச எடுத்து கிட்டு ஒவ்வொரு கோவில் குளமா போய் வருவமா ? இல்ல வீடுக்கு பக்கத்தில் ஒரு சின்ன கடை ஒன்ன்டு போட்டு விட்டு அதுல வார காச எடுத்து கிட்டு சீவிப்பமா ?பலமான ஜோசனை அவருக்கு .மனிசியிடம் கேட்டால் கோவில் குளத்துக்கு போய் புண்ணியத்த தேடுவம் என்பாள்.சரி பணம் வரட்டுமே எண்டு எண்ணி கொண்டே கண்ணயர்நது விட்டார் .

அடுத்த நாளும் பஸ் ஏறி அதே மாதிரி வெறுத்து போய் வந்திருந்தார்  ,ஒருவழியாய் அந்த பைலை அனுப்பி விட்ட திருப்தி முகத்தில் .சரியாக ஒரு மாசம் இருக்கும் .வீட்டு கதவடியில் இலச்சுமி தபால் காரன் வடிவில் மணி அடித்தாள்.ஒரு கடிதம் ஓய்வூதிய திணைக்களத்திடம் இருந்து இவளவு தொகை உங்களுக்கு மொத்தமாக வர இருக்கு அத்துடன் இன்னும் என்ன என்ன செய்யவேண்டும் எண்டு ஒரு பத்திரமும் இணைத்து அனுப்பி இருந்தார்கள் .அப்பா எதோ பெரிதாய் சாதித்து விட்ட திருப்தி.மனைவியின் முகத்தை பார்த்தார் .அந்த பார்வையில் தன் பெருமை நிறைந்து இருந்தது .ஒருவழியாய் பணத்தை தன் வங்கி கணக்குக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டார் .

அடுத்த நாள் எந்த கோவிலுக்கு போவது எந்த முகவரிடம் போனால் இலகுவாக இருக்கம் என்றெல்லாம் பேசிக்கொண்டே பயண ஏற்பாடுகளை கவனிக்க தொடங்கினார்கள் .இதற்கிடையில் கனகம் தன் மூத்த மகனிடம்  தொலைபேசியில் அப்பாவுக்கு இப்படி பணம் வந்ததாகவும் அதில் தாங்கள் கோவில் குளம் எல்லாம் சுத்தி பார்க்க போக போவதாகவும் பெருமை பட்டு கொண்டாள்.என்ன செய்வது யாரிடமாவது சொல்ல வேண்டும் போலிருக்கும் அவளுக்கு மக்களிடமே பெருமை அடித்து கொண்டாள்.

அப்பா !என்று ஒரு சத்தம்  வெளியில் கேட்டது தன் இளைய மகள் தான் என்று குரலை வைத்தே அடையாளம் கண்டு கொண்டார் .ஒ இப்பதான் கண் தெரிஞ்சுதா வா வா எண்டு கனகம் சொல்லி கொண்டே வந்தாள் .தாங்கள் பயணம் போவதை கேள்வி பட்டு வழியனுப்ப வருகிறார் போலும் என்று சொல்லி கொண்டு குசினுக்குள் போனாள் .
வந்த மகனின் முகத்தின் வாட்டத்தை கவனிக்க தவற வில்லை கணேசர் .உடனே கேட்டும்  விட்டார் என்னடா  எதும் பிரசனையோ ?என்றார் இல்லையாப்பா ஒண்ணுமில்லை சொல்லும் போது புரிந்து கொண்டார் எதோ உண்டு என்று .உன்னை தெரியாத எனக்கு என்ன நடந்தது என்று கேட்டார் கணேசர் .இல்ல அப்பா பிஸ்னஸல ஒரு சின்ன பிரச்னை காசு கொஞ்சம் தேவை படுத்து அண்ணாவிடம் கேட்டன் அவன்தான் உங்களுக்கு இப்பிடி காசு வந்திருக்காம் கேட்டு பார்கட்டாம் எண்டு சொன்னான் எண்டு ஒரு குண்டை தூக்கி போட்டான் .ஒ அதுக்கென்ன எவ்வளவு கிட்ட தேவைப்படும் என்றார் கணேசர் .பக்கத்தில் மனைவியும் குடுத்து விடுங்க என்று சொன்னாள்..