Monday, May 23, 2011

உன் வீடும் என் காதலும் ...




உன் தெரு தபால்காரன்
குழம்பி போயிருப்பான்
இருக்காதா பின்னே
உனக்கான காதல் கடிதத்தில்
 தேவதை வாழும் வீடு
என முகவரி இடப்பட்டு இருப்பின் ...................




எதோ ஒரு வேலையாய்
உன் வீட்டுக்கு வந்து போனேன் நான்
இரவு என் டையரி குறிப்பில்
இன்று நான் சொர்க்கத்தில் கால்
பதித்தேன் என்று எழுதி வைத்தேன்
பின்னே தேவதைகள் சொர்க்கத்தில் தான் வாழுமாமே ?