Thursday, May 19, 2011

எங்க ஏரியா ரவுண்டப்..........ஒருவழியாக இந்த வலைப்பூ அனுபவத்தில் சதமடித்து கூடவே இன்னுமொரு அரைசதமும் அடித்து விட்டேன் .எதோ எனக்கு என்ன எல்லாம் இங்க பதிவிடனும் எண்டு   தோணுதே அத மட்டும் இங்க போடுறன்.சில நேரங்களில் கவித என்கிற பேர்ல எதைஎதையோ எல்லாம் செலுத்தி போட்டா அத சிலர் ரசிச்சு கமாண்ட் பண்ணுறாங்க பாருங்க .அங்கதாங்க சந்தோசமே .எனக்கு இந்த 150 பதிவிலையும் புடிச்ச ஒரு பதிவு ஒரு குருக்கள் பத்தி நான் போட்ட பதிவு தான் .லிங்க இதோ .http://sangarfree.blogspot.com/2010/08/blog-post_20.htmlஇது தனி மனித தாக்குதலாய் இருக்கும் என நான் எதிர் பார்க்க வில்லை .இருந்தும் அந்த பதிவை நீக்கும் படி சில நிர்பந்தங்கள் வந்தன .விரைவில் அத தொடர்சி ஒன்று பதிவிடும் ஐடியா இருக்கிறது .எல்லோரும் ஐம்பதாவது ,நூறாவது பதிவு எண்டு ஸ்பெசல்  பதிவு எல்லாம் போடுறாங்க .ஏன் நான் மட்டும் எண்டு போட்டு இன்னிக்கு சீ வேணாம் ,,,,,எப்பவுவே நம்ம பதிவு ஸ்பெசல் தானே கண்ணுங்களா !!
--------------------------------------------------------------------------------


ரொம்ப நாளைக்கு அப்புறமா எங்க ஏரியாவுல போலீஸ் ,ஆர்மி எல்லாம் சேர்த்து ஒரு ரவுண்டுஅப் நடந்துச்சு ,அத தமிழ்ல சொன்ன சுத்திவளைத்து தேடுதல் எண்டு வரும் நம்மடவங்களுக்கு எத எண்டாலும் தமிழ்ல மொழி பெயர்கிறது எண்டா நல்ல சந்தோசம் தானே .ஊருல மூன்று நாளுக்கு முதல்ல ஒரு கொலை நடதுச்சு ,எதோ ஆடு ,மாடு நடத்த மாதிரி சிம்பிளா சொல்லுறானே அப்பிடி எண்டு பார்கிரிங்க எனா பண்றது நிலைமை அப்பிடி மார்க்கெட்டில கத்தரிக்காய் விளைய விட குறைஞ்சு போய் கிடக்கு மணிச உயிருக்கு விலை .எங்க ஊருல எப்பிடி ஸ்பீட் எண்டு பார்தேலே கொலை நடந்து முன்றாம் நாளே கொலையாளிய தேட வெளிக்கிட்டங்க .....அந்த கொலையாளியபிடிக்கவோ /இல்ல வேறு எதுக்குமா இன்னிக்கு எங்க விட்டுக்குள் எல்லாம் வந்தாங்க ..சும்மாவே நமக்கு சனி தான் அதோட கட்டிலில் இருந்து அந்த ----------- மகன்களில் முஞ்சிஇல முழிச்சு இருக்கு .சிங்களம் தெரிஞ்சவங்க யாரச்சும் இருக்காங்களா எண்டு கேக்க என்ன எழுப்பி விட்டான் அண்ணா.பழைய மாதிரி இல்லாம கொஞ்சம் நல்ல மாதிரி கதைசதில அவங்களுக்கே இந்த விசயங்களில் விருப்பம் இல்லையாம் பெரிய இடது உத்தரவு படியே இந்த விஷயம் எல்லாம் நடக்குதாம் .எங்க விட்டு சுவாமி படம் எல்லாம் வைக்கும் அறைக்கு செல்லும் போது நான் சப்பாத்தை கழட்டி வைக்கும் படி கூற சாரி சொல்லி வெளியில் வந்ததை பார்க்கும் போது முன்பை விட இப்போது நன்றாக இருக்கிறாங்க எண்டு நினைக்கக் தோணியது .....ஆனாலும் பழைய மாதிரி ஆள புடிச்சிக்கிட்டு போறது அப்பிடி எண்டு பழைய மாதிரி இல்ல எதோ சும்மா வந்து சுகம் விசாரிச்சு கிட்டு போறது பரவாயில்ல இப்பிடியே மைண்டின் பண்ணுங்க ...(வீடுக்கு வந்த ஆர்மிகளில் ஒருத்தன் அண்ணாவின் மகள் ஆடுவதுக்கு கட்டி வைத்திருந்த உஞ்சலில் லயித்து கொண்டே ஆடியதை பார்க்கும் போது பாவம் பரிதாபம்தான் வந்தது அவர்களில் )
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;அது சரி உங்க யாருக்காசும் அதான் இந்த பதிவையும்வேலை வெட்டி இல்லாம வாசிக்கிறின்களே உங்களத்தான் இவ்வளவு நாளா நான் எங்க போயிருந்தன் அப்பிடி எண்டு கேக்க தோணும்/தோனியிருக்கனுமே என்னமோ நான் பதில் சொல்லிதாங்க ஆகணும் ஒண்ணுமில்லை உங்களை போலவே வேலை வெட்டி இல்லாம சும்மாவே இருந்திட்டங்க ..முதல் எல்லாம் வேலை செய்யும் போது /படிக்கும் போது இருந்த நேரம் இப்ப சும்மா வெட்டியா இருக்கும் போது கிடைக்குதே இல்ல 24 மணி நேரமும் வேலை .ஒபாமாவுக்கு கூட நேரம் இருக்கும் இப்பிடி வெட்டியா திரியும் பசங்களுக்கு  நேரம் என்கிறது கிடைக்கிற கஷ்டம் போல இருக்கு ..