Wednesday, February 9, 2011

குப்பை கூடை ................. 02/09/11

அறிமுகம் 



(((((((((((((என்ன பண்றது குப்பை தொட்டிக்கு விளம்பரம் பண்ணும் போதும் ஒரு கவர்ச்சி தேவை படுகிறது)))))))))))))
தலைப்ப பார்த்து இங்க வர பயந்து போயிடாதிங்க .நானும் இந்த வலைப்பூ பக்கம் வந்து ஒரு வருசத்துக்கும் மேலாகி விட்டது .என்ன சாதிச்சு இருக்கம் எண்டு பார்த்தால் பூச்சியம் அப்பிடி என்கிறது ஒரு வெளிப்படை உண்மை ..எதோ ரெண்டு வீடியோவை யூடியூப் பில் இருந்து சுட்டு இல்ல ஏதும் நியூஸ் பார்த்து அத இங்க போட்டு .சில நேரம் என் காதலிக்கு என்கிற பேர்ல சில கவிதைகளை கிறுக்கி ஒரு மாதிரி இந்த வலைப்பூவை மெருகேற்றி வருகிறன்.ஆனா அந்த கவிதைகள் எழுதி அவை தமிலிஷ்  பிரபல்ய பதிவா மாறினா அத போல ஒரு சந்தோசம் .எதோ நாமளும் ஒரு கவிதை எழுத முடியும் அப்பிடி எண்டெல்லாம் நானே நினைச்சு கிட்டு இப்பவும் எழுதி கிட்டு வாறன் .

ஆனாலும் நான் காணும் சில விசயங்கள் சின்ன சின்னதாக ஆனால் வலையேற்ற கூடிய விசயங்களை ஒரு கலவை  வடிவில் தரலாம்  எண்டு நினைத்து  இப்படி ஒரு தலைப்பு  .அய்யா சாமி காப்பாத்துங்கடா எண்டு ஓடாம இருந்து வாசிங்க .

 அநேக பதிவாளர்கள் இப்படி ஒரு சங்கதி வச்சிருக்கும் போது நாங்க மட்டும் என்னங்க .இப்பதான் வந்த கத்து குட்டி கூட இது மாதிரி கலவை ஒன்னு தொடக்கி இருக்கு .சரி சரி இன்றிலிருந்து உங்ககிட்ட நான் என் சங்கதிகளை பகிர்துக்க போறன் .

ஆனா இதுஎல்லோர் மாதிரியும் இல்லாம அதாவது

ஒரு  குறும்படம் ,ஒரு A ஜோக் ,ஒரு சிறுகதை இல்லாம கொஞ்சம் வித்தியாசமா வரும் எண்டு நம்புறன் ..........

எப்பிடியான விசயங்கள் என்கிறது அடுத்த பதிவில பார்க்கலாம் ................







.