Monday, February 28, 2011

உனக்கான என் கவி


எனக்கு மட்டும்
பறக்கும் சக்தி
கிடைத்துவிட்டால்
நிலவிடம் போய்
உன்னை விட அழகி ஒருத்தி
இங்கு இருக்கிறாள்
என்று சொல்லி விட்டு
வருவேனடி ..

நீ பிரிந்து போய்விட்டாய்
தொட்டிலில் இருந்து
வெளியில் விழுந்த
மீன் போல்
துடிதுடிக்கிறது
என் இதயம்

Tuesday, February 22, 2011

இவனுக்கு வாய் கொஞ்சம் நீளம் போல......................

பொதுவா வீடுகளில் கொஞ்சம் ஓவரா வாயாடும் ஆக்களுக்கு உனக்கு வாய் நீளமடா எண்டு சொல்லுவாங்க .அதிலையும் பொண்ணுங்களுக்கு கொஞ்சம் வாய் நீளம் தான் .நிறைய பேரிட்டவாங்கி கட்டிகிட்ட அனுபவம்தான் .


 இங்க நாம பார்க்க போறது இன்னும் பெரிய வாய்
 Francisco Domingo Joaquim எனும் பெயருடைய நபர எந்த பெரிய (பெருமையை )பெறுகிறார் .சில படங்களை பார்த்தாலே நீங்க வாய பிளந்து பார்த்துகிட்டு இருப்பிங்க .
Sunday, February 20, 2011

வரலாறு தெரிய வேண்டுமா வாங்க இங்க ............வலைதள அறிமுகம்

நான் ஒவ்வொரு  நாளும் விசிட் அடிக்கும் சில நல்ல வலைதலங்களுக்குள் இந்ததளமும் ஒன்னு .

இந்த நாளில் உலகில் என்ன நடந்தது எப்படி நடந்தது .எங்கே போன்ற விசயங்களை புட்டு புட்டு வைக்கிறார்கள் .முக்கியமாக மாணவர்கள் வரலாற்றில்முழ்கி முத்தெடுக்க விரும்பும் என்னை!!!!!!!!!!!!! போன்றவர்கள் (அடி செருப்பால )


அந்நாள் தொடர்பான வீடியோக்கள் தொலைக்காட்ட்சி நிகழ்வுகள் என்பனவற்றையும் பட்டியலிட்டு நமக்கு விருந்து வைக்கிறார்கள் ...எதுவாயினும் இது போன்ற இன்னும் பல சில பல தளங்கள் அறிமுகத்துக்கு காத்து இருக்கின்றன (நாங்க அறிமுக படுத்திதான் இந்த தளங்கள் எல்லாம் பிரபல்யம் ஆகணுமாம் ,காத்து கிட்டு இருக்காங்க )


இதுதான் அந்த லிங்க்Friday, February 18, 2011

பிரிந்த என் காதலிக்கு !!!!!!!!!!
இறந்து கிடக்கிறது 
என் காதல் 
புதைப்பதா?
எரிப்பதா ?
என்று தெரியாமல் 
திகைத்து நிற்கிறது
என் இதயம் .


ஒரு சந்தேகம்
எப்படி  என் 
இதயத்தை 
திருப்பி கொடுக்க போகிறாய் ...


என் கவிதைளை
திருப்பி  
கொடுத்து விடு .
என் இதயத்தின்  தாடியாய்
இருக்க போவது 
அதுதான் .

Tuesday, February 15, 2011

தொடர்ந்து அதிக நேர உலகசாதனை முத்தம் (வீடியோ இணைப்பு )

காதலர் தினத்தை முன்னிட்டு தாய்லாந்தில் இடம் பெற்ற சுவாரசிய மான !!!! இந்த முத்த போட்டியில் மொத்தம் பதினாலு ஜோடிகள் பங்கேற்றன .தாய் பட்டைய நகரில் இடம் பெற்ற இந்த போட்டி சனிகிழமை காலை பதினோரு மணியளவில் ஆரம்பித்தது .இதுதான் வெற்றி பெற்ற ஜோடி

2009 ம் ஆண்டு ஜெர்மனியில் நிகழ்ந்த இந்த போட்டியில் நிகழ்த்தப்பட்ட 32 மணி நேர தொடர் முத்த சாதனையை சிறப்பாக முறியடித்தது ஒரு தாய் நாடு ஜோடி ..

உங்க டவுட் எல்லாம் விளங்குது எப்பிடி தொடர்ந்து எண்டு தானே ..உணவு ,தண்ணிர் மற்றும் இயற்கை உபாதைகளுக்கு தனிய நேரம் ஒதுக்க பட்டது .ஆனால் இந்த சாதனை நின்ற வாக்கில்   நிகழ்த பட்டது ........
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு   1016  ஸ்டெலிங் பவுண் பெறுமதியான வைர மோதிரமும் 2016 பவுண் பெறுமதியான பண பரிசும் வழங்க பட்டது .

எங்களுக்கும் முத்தம் கொடுக்க ஒருஇப்படி ஒரு அழகான பொண்ணு கொடுத்தா நாங்களும் 33 மணிநேரம் என்ன 100 மணி நேரம் தொடந்து இருப்பம் 

Friday, February 11, 2011

ஒருவழியாய் பதவி விலகினார் முபாரக் .........

30 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது எகிப்ப்தில் .அந்நாட்டு ஸ்டேட் டிவி யில் துணை ஜனாதிபதி தோன்றி முபாரக் பதவி விலகுவதை அறிவித்ததுதான் தாமதம் வீதியில் குழுமி இருந்த மக்கள் மகிழ்சியில் ஆனந்த கூத்து ஆடினார்கள் .


 goodbye என்ன்று சொல்லி சொல்லி மக்கள்நாடடியம் ஆடி கொண்டு இருக்கிறார்கள் அலேஸ்ரான்டியா நகர வீதியில் ...

இதுதான் சுலைமான் முபாரக்கின் ராஜினாமா பற்றி சொன்ன பொது எடுத்த படம்குப்பைக்கூடை .....................11/02/2011நெகிழ வைத்தது .

சரியாக நினைவு இல்லை நாலு நாளுக்கு முன் என்று நினைக்கிறேன் .அவசரமாய் கிளாசுக்கு போய் கொண்டு இருந்தன் ,ஆறு மணிக்கு கிளாஸ் எண்டா ஆறு காலுக்குதான் போறது வழமை அதே போலதான் .ஒருவர் ஒரு போனை தன் முகத்துக்கு முன்னே வைத்து கொண்டு சைகை காட்டி அதாவது விரல்களை வைத்து சைகை மூலமாக எதோ விளங்க வைத்து கொண்டிருந்தர்ர் .கொஞ்சம் காலை நிறுத்த சொல்லி விட்டு அவ்விடத்தே நின்று அவதானித்தேன் (விடுப்பு பார்கிறத எப்பிடி சோக்கா சொல்லுற )அது ஒரு 3G போன் அவர் அதன் முலம இன்னுமொருவருக்கு தகவல் பரிமாறி கொண்டு இருந்தார் .இதில் என்ன விசேசம் என்கிறீர்களா இத்தனைக்கும் அவர் வாய் பேச முடியாத ஒருவர் .

சிரிக்க வைத்தது ..
எங்க எரியவில அதான் மட்டக்களப்பு பக்கம்  வெள்ளம் வந்தது எல்லோருக்கும் தெரியும் .ஒருநாள் கடும் மழை நானும் என் சகபாடிகளும் ஒரு மரம் வீதியில் கிடப்பதாகவும் அதை அப்புற படுத்தவேண்டு சென்று கொண்டிருந்தோம் .அந்த வீதியில் எங்க ஊரில் தாங்கள் பெரியவர்கள் என்று அவர்களாக நினைத்து கொண்டு இருக்கும் ஒருவரின் வீடு இருக்கிறது .அவர்தான் இந்த நிவாரண  அலுவல்களில் முன்னின்று !!!!! உழைத்தவர் ?. அவரின் வீடு தாண்டிதான்  நாங்கள் போக வேண்டும் .அவரின் வீட்டு கதவின் அடியில் மண் மூடைகள் இட்டு வெள்ள நீர் உள்ளே செல்ல விடாமல் போட்டிருந்தார் .நம்ம பொடியன் ஒருவன் அந்த ஒரு மண்முடையை  காலால் தட்டி   " ம்ம்ம் அரிசி முடை" என்றான் .சொல்லவா வேண்டும் சிரிப்பை ...


ரசித்த புத்தகம் ...

நர்மதா  வெளியிட்டில் சாவியின்வாசிண்டனில் திருமணம்
 இணையத்தில் தான் வாசிக்க கிடைத்தது .இதோ அந்த http://www.scribd.com/doc/15711216/Savis-Washingtonil-Thirumanam


தத்துபித்துவங்கள்

எல்லாமே சரியாக நடப்பது போல் தோன்றினால் எதையோ கவனிக்க தறி விட்டோம் என்று அர்த்தம்.

நீங்கள் எவ்வளவு கஷ்டபட்டு அலைந்து திரிந்து மலிவாக ஒரு பொருளை வாங்கிய உடன் அதை விட மலிவாக இன்னுமொரு இடத்தில கிடைக்கும் .அதை உங்கள் மனைவிதான் வாங்கி இருப்பாள் .

நாங்கள்  ஒரு வரிசையில் நின்று கொண்டிருந்தால் மற்ற வரிசை வேகமாக நகர ஆரம்பிக்கும் .


தகவல் புகைப்படம் (info-graphic)

கொஞ்சம் உரு பெருக்கி பார்க்கவும்Wednesday, February 9, 2011

குப்பை கூடை ................. 02/09/11

அறிமுகம் (((((((((((((என்ன பண்றது குப்பை தொட்டிக்கு விளம்பரம் பண்ணும் போதும் ஒரு கவர்ச்சி தேவை படுகிறது)))))))))))))
தலைப்ப பார்த்து இங்க வர பயந்து போயிடாதிங்க .நானும் இந்த வலைப்பூ பக்கம் வந்து ஒரு வருசத்துக்கும் மேலாகி விட்டது .என்ன சாதிச்சு இருக்கம் எண்டு பார்த்தால் பூச்சியம் அப்பிடி என்கிறது ஒரு வெளிப்படை உண்மை ..எதோ ரெண்டு வீடியோவை யூடியூப் பில் இருந்து சுட்டு இல்ல ஏதும் நியூஸ் பார்த்து அத இங்க போட்டு .சில நேரம் என் காதலிக்கு என்கிற பேர்ல சில கவிதைகளை கிறுக்கி ஒரு மாதிரி இந்த வலைப்பூவை மெருகேற்றி வருகிறன்.ஆனா அந்த கவிதைகள் எழுதி அவை தமிலிஷ்  பிரபல்ய பதிவா மாறினா அத போல ஒரு சந்தோசம் .எதோ நாமளும் ஒரு கவிதை எழுத முடியும் அப்பிடி எண்டெல்லாம் நானே நினைச்சு கிட்டு இப்பவும் எழுதி கிட்டு வாறன் .

ஆனாலும் நான் காணும் சில விசயங்கள் சின்ன சின்னதாக ஆனால் வலையேற்ற கூடிய விசயங்களை ஒரு கலவை  வடிவில் தரலாம்  எண்டு நினைத்து  இப்படி ஒரு தலைப்பு  .அய்யா சாமி காப்பாத்துங்கடா எண்டு ஓடாம இருந்து வாசிங்க .

 அநேக பதிவாளர்கள் இப்படி ஒரு சங்கதி வச்சிருக்கும் போது நாங்க மட்டும் என்னங்க .இப்பதான் வந்த கத்து குட்டி கூட இது மாதிரி கலவை ஒன்னு தொடக்கி இருக்கு .சரி சரி இன்றிலிருந்து உங்ககிட்ட நான் என் சங்கதிகளை பகிர்துக்க போறன் .

ஆனா இதுஎல்லோர் மாதிரியும் இல்லாம அதாவது

ஒரு  குறும்படம் ,ஒரு A ஜோக் ,ஒரு சிறுகதை இல்லாம கொஞ்சம் வித்தியாசமா வரும் எண்டு நம்புறன் ..........

எப்பிடியான விசயங்கள் என்கிறது அடுத்த பதிவில பார்க்கலாம் .................