Monday, January 24, 2011

முதலையின் வயிற்றுக்குள் இருந்து ரிங் பண்ணிய செல்போன்

இப்படியான விசயங்கள் எங்கேயும் பட்டால் அதை கொத்தாக பிடிப்பது எனக்கு அலாதி பிரியம் .\



தலைப்பில் உள்ள சம்பவம் நடந்தது உக்ரேன் நாட்டில் கடந்த வெள்ளிகிழமை .வழமை போல அந்த நீர்வாழும் உயிர் கண்காட்சியில்(வேற என்ன எண்டு சொல்லுறது தமிழில்   aquarium ) மக்கள்  வெள்ளம் போல வந்து கொண்டு இருந்தார்கள் .
அந்த பெண்ணுக்கு 20 வயது ஒரு இளம்தாய் Rimma Golovko இதுதான் அவா பேரு .நீங்களே தமிழில் மொழி பெயர்த்து கொள்ளுங்கள் .அந்த பெண் ஓடி வந்து ஒரு விசயத்தை அங்கு பணி புரியும் ஊழியர்களிடம் கூறிய போதும் அவர்கள் முதலில் அதை நம்ப வில்லை .உங்கள் முதலை என் செல்போனை விழுங்கி விட்டது .என்று சொன்னால் யார் தான் நம்புவார் .

வழமை  போல் பார்வையிட வந்த பெண் எதோ ஒரு தவறால் தனது செல்போனை அந்த முதலை தொட்டியில் விழுத்தி விட்டார் .கீனா எனும் பெயர் கொண்ட பதினாலு வயசு பெண் முதலை நமக்கு தான் யாரோ இரை போடுகிறார்கள் என்றேன்ன்னி அப்படியே கவ்வி கொண்டது உடனே விழுங்கியும் விட்டது .

இந்த  பெண் கூறிய தை நம்ப மறுத்த வேலை கார்கள் உடனே அந்த பெண்ணின் செல்போன் இலக்கத்திற்கு கால் பண்ணி இருக்கிறார்கள் .அங்க தான் வினை தொடங்கியிருக்கு .அந்த முதலையின் வயிற்றுக்குள் இருந்து ரிங் பண்ணும சப்தம் கேட்டு இருக்கிறது .



அது கிடக்க இப்போது செல்போனை உண்ட முதலை வேறு ஏதும் உணவு உண்ணாமல் தவித்து வருகிறதாம் .அந்த பெண்ணோ எனக்கு அந்த போனில் உள்ள சில தகவல்கள் தேவை என்றும் சொல்ல .வைத்தியர்கள் இப்போது அறுவை சிகிச்சைக்கு தயாராகி கொண்டு இருகிறார்களாம் .நினைத்து பாருங்கள் முதல்(லை) அறுவை சிகிச்சை ....