Wednesday, January 12, 2011

வெள்ளத்தின் வலிகள் ............. ..

நான் பல போது தலைநகருக்கு வந்து போகும் போது பல சுவாரசியங்கள் நடக்கும் அவைகளை எல்லாம் பதிவுகளாக மாற்ற வேண்டும் என்று எண்ணி பல முறை முயன்றது உண்டு .ஆனால் ஒரு போதும் நடந்ததில்லை .ஆனால்  இரவு கொழும்பிலிருந்து எனது ஊருக்கு வந்த பயணம் என்னை காலையிலேயே உக்காந்துட்டு எல்லோருக்கும் பகிர வைத்து விட்டது .

வழமையில் நான்புகையிரதத்தில் தான் ஊருக்கு போவதோ வருவதோ அங்கு தற்போது இங்கு நடக்கும் ஆனால் புகைவன்டியோ,பஸ்வண்டியோ போக முடியாத காரணத்தால் ஊருக்கு போக முடியாமல் போனது .


நேற்று இரவு ஒருவாறு இரண்டு சீட் கிடைத்தது.பஸ் புறப்பட ஆரம்பித்தது அப்போதுதான் நான்கு ஐந்து பேர் கும்பலாகக வந்து நாங்களும் போக வேண்டும் என்று பஸ்சில் ஏறினார்கள் அதில் மூன்று பெண்கள் அழுது கொண்டே இருந்தார்கள் .எனக்கு ஒன்றும் விளங்கவில்லை .அவர்களின் அழுகைக்கு காரணத்தை அவர்களுடன் வந்த ஒரு பொடியன் சொன்னான் .அந்த பெண்களின் தம்பிமார் ஒன்றாக விளையாடுவார்கலாம் .நேற்று பகல் வெள்ளம பார்க்க எல்லோரும் போயிருக்கிறார்கள் .
கடும் காற்று வீசியதால் மரம் எல்லாம் விழுந்த கதை எல்லோருக்கும் தெரியும் தானே .அதில் மின் கம்பங்கள் விழுந்து கம்பிகள்  அறுந்து கிடந்திருக்கின்றன .மின்சாரம் இல்லை என்பதால் அந்த வயர்களை தொட்டு விளையாடி இருக்கிறார்கள் அந்த நேரம் பார்த்து மின்சாரமும் வர சொக் அடித்திருக்கிறது அனைவருக்கும் .அதில் ஒரு பையனும் இறந்து விட்டான் .இன்னும்மாற்ற பையன்களுக்கும் மிகவும் மோசமான நிலை .இது இப்படி இருக்க வந்த பெண்களில் யாரோ ஒரு பெண்ணின் தம்பிதான் இறந்தது .யாருடைய தம்பி என்று அந்த பெண்களுக்கு சொல்ல பட வில்லை .அந்த பெண்கள் இரவு  முழுவதும் அந்த பஸ்சில் அழுது அழுது கண்ணீரே வற்றி போயிருக்கும் .யாருடைய தமி என்ன்று தெரியாமல்எப்படி எல்லாம் துடித்திருப்பர்கள் அவர்கள் ...........


நானும் அந்த பையனின் ஆத்மா சாந்திக்கு இறைவனை பிரார்த்திக்கிறேன் (அப்படி ஒருவர் இருந்தால் ).....




ஒரு சிறு கவிதை முயற்சி வெள்ளம  பற்றி

ஏய் மழையேநீயும்
இன சுத்திகரிப்பில்
இணைந்து  கொண்டாய் போலும் கிபிருடன்
இணைத்து

உனக்கும்
அதுக்கும்
நிறைய ஒற்றுமை
சோ  எனும்  ஒலி
உனக்கும் தண்ணீர் மழை
அதுக்கு குண்டுமழை
மொத்தமாக  நீங்கள்
இருவரும் வாழ்வில்
இடியை தூக்கி போட்டு விட்டிர்கள் .

எங்கள் சுய விபரகோவையில்
இனத்துக்கு
எதிரில்
ஏதிலிகள் 
என இடவே தோனுகிறது .......

விரும்தோம்பலுக்கு பேர்
போனது எங்கள் இனமாம்
சொல்லித்தான் தெரிய வேண்டி இருக்கிறது
நிவாரணம் கேட்டே ஓய்ந்து போய் விட்டோம் .