Monday, October 10, 2011

முரளி vs சுவான் 50:50 வெளிப்பட்ட முரளியின் அசாத்திய தனி திறமை

மகாபாரதத்தில் ஓர் கிளை கதையில் கிளி ஒன்றை பார்த்து அம்பு எய்த அர்ச்சுனன் சொன்னான் எனக்கு கிளியின் கழுத்து மட்டும் தெரிகிறது என்று .வீரர்கள் அப்படிதான்  இங்கேயும் இதேதான் நடந்திருக்கிறதுrubicon  எனும் ஓர் அமைப்புக்கு முரளி சுவான் இருவரும் விளம்பர ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் ..அந்த அமைப்பு இவர்களை அறிமுகம செய்யும் நோக்கில் நடந்திய ஓர் விளமபர உக்திதான்  இந்த சவால் போட்டிஇதுதான் அது மூன்று விக்கட்டுகள் ஓர் விக்கட்டில் மட்டும் ஒரு வெறும் குவளை கண்ணாடி குவளை என்பது முக்கியம் அந்த குவளையில் வாய் பகுதியில் ஒரு நாணயம் விழும் தருவாயில் வைக்க படும் .
இப்போது தான் சவாலே ஆரம்பம் .முரளி ,சுவான் இருவருக்கும் ஐம்பதுபந்துகள் விதம் வீசலாம் என்கிற அடிப்படையிலும் அந்த நாணய குற்றியை கிழே விழ வைக்க வேண்டும் என்பது தான் விதி .என்னடா இதெல்லாம் போட்டியோ சும்மா ஜுசுப்பி என்று நினைகிறிர்களா?? அங்கே தான் தப்பு பண்ணுகிறிகள் .விக்கடுக்கு மேல் இருக்கும் குவளை கிழே விழ கூடாது .அந்த குவளையில் வாயில் ஒட்டி கொண்டு இருக்கும் நாணய குற்றி மட்டுமே விழ வேண்டும் ........ இப்போ சொல்லுங்க இது சவால் தானே

ஆனால் இந்த போட்டியில் எப்பிடி முரளி ஆடினார் இதோ விடியோ கிழே

Friday, October 7, 2011

தேவதைக் கதைகள்

நெஞ்சணைத்த புத்தகம்
நேர் வகிடுமுடி 
வெள்ளுடை  தேவதைகளில் 
நீ மட்டும் தனித்துவமாய் 


உன் கள்ளபார்வையில் கவிழ்து 
விழவே காத்து நிக்கும் என்  மனசு .

சூரியனை பார்த்தே தாமரை மலருமாம் 
இங்கே நீ வெளி வருவதை பார்க்கவே
சூரியனே மலருகிரதுபோல 

வீதியில் அனாதையாய் கிடந்த 
நாய் குட்டியை பாசத்துடன் பார்க்கிறாய் 
அருகில் என்  இதயம் வாலை 
ஆட்டி கொண்டு இருப்பதை பாராமல் 

இதோ இந்த குறுக்கு வீதி 
இங்குதான் உன் பார்வையில் 
பல லட்சம் வால்ட்டுகைளை எனக்குள் அனுப்புவாய் நீ .

                                                                                            
.........................................வருவாள் .......................

Friday, September 30, 2011

தந்திரம் செய்யும் உன் கண்கள்

இராமர் பிரமாஸ்திரம் உபயோகித்தார் 
என்று சொல்லும் போதெல்லாம் 
நம்ப முடியாமல் இருந்தது 
உன் கண்ணைபார்த்த பின்னே 
நம்பிவிட்டேன் ....................................................என்னுடன் சாதரணமாய் 
இரண்டு வார்த்தைகள்
 நீ பேசும் நேரத்தில்  ஆயிரம் வார்த்தைகளை
 உன் கண்கள் பேசிவிடும் Thursday, September 29, 2011

உனக்காக தயாராகும் என் வீடு

உன் தலையில் சூடப்படுவோம் என்ற
கனவினோடே என் வீட்டில்
பூக்கள் பூக்கின்றன .வா! உன் ஸ்டிக்கர் பொட்டை
சுமந்து  கொண்டு மோட்சம் பெற 
ஆசைபடுகிரதாம்
என் வீட்டு நிலைக்கண்ணாடிWednesday, September 28, 2011

உங்கள் மனைவியை கொலை செய்வதற்கு சில வழி முறைகள்

அட இது எதோ ஹிட்ஸ் அடிக்க போட்ட தலைப்பு எண்டு  நினைக்கத்தோன்றும்.அப்பிடி எண்டா அது தப்பு .நானும் நெட்ல மேய்ந்து கொண்டிருக்கும் போது இப்பிடி ஒரு தலைப்பு .நமக்குத்தான் மனைவியே இல்லியே அப்புறம் எப்படி கொல்லுறது .எண்டு போட்டு விட்டன் .அப்புறம் எதோ ஒரு ஆசையில பார்த்த .சில நல்ல வழி போட்டிருகிறாங்க .உங்க  மனைவிகிட்ட கிட்ட சொல்லுங்க நான் குளியலறைய நல்ல மாதிரி மாத்தி வச்சிருக்கன் எண்டு .உடனே கதவை திறப்பா !!!!!!!!இத  பத்தி சொல்ல வேணுமோ ???


டார்லிங்  உங்க தலைமுடிய ரை பண்ணுங்க .எண்டு சொல்லுங்க

கொஞ்சம்  கொஞ்சமா சாகிறத விட


எழும்புடா செல்லம் லேட் ஆகுது ...

இதெல்லாம்  விட இன்னும் சில வழி முறைகள் இருக்கு  பாஸ் 

Tuesday, September 27, 2011

என் காதலின் காதலிக்கு ....

நீ  என் வீட்டுக்கு வர போவதை
என் தோட்டத்து  பூக்களுக்கு பிடிக்கவில்லையாம் !
இருக்காத பின்னே
அன்றொரு நாள் நீ வந்த போது
எல்லா பட்டாம்பூச்சிகளும்
உன்னிடம் தஞ்சம் அடைந்ததை
பார்த்த பின்பும்..............................................


எனக்கொரு பெண் பார்க்க வேண்டும் என்று
பேசிகொண்டிருக்கும்
அம்மாவிடம் எப்படி சொல்வேன்?
பெண் தேவையில்லை, நான்
ஓர் தேவதையை பார்த்து வைத்திருக்கிறேன் என்று .....................

Thursday, July 7, 2011

என் காதலிக்கு!!!!!!!!!!!!!!! காத்திருத்தல்

ராமரிடம் விமோசனம் பெற
காத்திருந்த அகலிகை போல்
 உனக்காக நான் காத்துகொண்டு
இருக்கிறேன் .உன் சுண்டு விரலாவது
தீண்டினால் போதும் என்று ..............


தன் அம்மாவின் கையை பிடித்து கொண்டு
பாலர் வகுப்பு செல்லும் வாண்டுகளை ரசிக்க முடிகிறது
நானும் உன் கையை பிடித்து கொண்டு
காதல் படிக்க போக வேண்டுமே என்கிற
எண்ணத்துடன் ...................  

Wednesday, July 6, 2011
தோட்டத்தில் தொங்கும்
திராச்சை பழத்தை
எட்டி எட்டி பறிக்க முயலும் நரி
போல் நானும் முயற்சிக்கிறேன்
உன் இதயத்தின்
இடம் பிடிக்க
 உன்  இதயம் 
இனிப்பானது  என்று
நம்பிக்கையுடன்

Monday, July 4, 2011

காதல் கொலை ??? என் காதலிக்கு

ஒர்வார்த்தை  யான்கேள் 
ஓலமிட்ட என்னென்சு பின்னே
ஓர் சிதைமூட்டி தீவளரிதயம்
தீவிழுந்து காதல்  துடித்திறந்தது .மழைவிழுந் துகரையும்  
சுடாசிற்பம் போல்
சுடாயேன்காதலும்  உன்
சுடுசொல் கேள் 
கணமே கரைந்தே போனதேயேன்
கண் முன்னே 

ஓர் கேள்வி என் காதலிக்கு

கூர் வாள் ஒத்தவிழி பாவையின்
கூறிசொல் கேள் செவி
விழியழுது விண் சேர்ந்து
மனசழுது மண்ணினோடி
ஓடுநீரோடி உன் பாதம்சேர்
ஒர்சொல் கேக்குமே
நம் காதலையொட்டி
உன்பதில் எதுவோ?

Thursday, June 30, 2011

தமிழுக்காய் ....இது...(ஒரு சொல் பல வடிவம் )

இந்த வலைப்பூவில் உருப்படியாக என்ன செய்து இருக்கிறாய் என்று எதோ உறுத்தியது ...எல்லோர் போலவும் தமிழுக்காய் எதும் செய்வோம் என்று சில பரிசோதனை முயற்சிகள் எடுக்க இருக்கிறேன் .நீங்கள் வரவேற்றாலும் சரி இல்லை என்றாலும் சரி .இது தமிழுக்காய் எடுத்த முயற்சி .துவளாது என் மனது

.
 சில வாக்கியங்கள் தமிழில் அழகாய் இருக்கும் கூடவே அதிகமாய் இருக்கும் ,உதாரணமாய் என் நண்பன் ஒருவன் லண்டன் மாநகரில் இருக்கின்றான் .எதோ ஒன்று நடந்து அவனுக்கு இடுப்பு பகுதியில் வலி .அதை நாம் இங்கு சுளுக்கு ,கடுப்பு என்று சொல்லுவோம் .இவை பேச்சு தமிழாக இருந்த போதிலும் அவன் அங்கு வைத்திசாலைக்கு சென்று என்ன நடந்தது எண்டு கேட்டபோது ஒரே வார்த்தை back pain இது மட்டும் தான் சொல்ல முடிந்தது அவனால் .இதே போன்று தமிழில் ஒவ்வொரு சின்ன சின்ன விசயங்களுக்கும் தனி தனி சொல் உண்டு .அவற்றை முடியுமான வரையில் இங்கு தொகுத்து தந்திருக்கிறேன் .முதலாவதாக சாப்பாடு .நாம் சாப்பிடும் முறை பன்னிரண்டு வடிவில் இருக்கிறது என தமிழ் சொல்லுகிறது


 1. அருந்தல்-----              மிக சிறிய அளவில் உணவு உட்கொள்ளல் 
 2. உண்ணல்-----            பசி தீர உணவு உண்ணல்
 3. உறிஞ்சல் ------         வாயை குவித்து நீர்ஆகாரத்தினை ஈர்த்து        உட்கொள்ளல் 
 4. குடித்தல்--------------நீரியல் உணவை சிறிது சிறிதாக பசி தீர உட்கொள்ளல் (கஞ்சி போன்ற உணவு )
 5. தின்றல்---------------தின்பாண்டங்களை உட்கொள்ளல் 
 6. துய்த்தல் -------------சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளல் 
 7. நக்கல் ----------------நாக்கால் நக்கி உட்கொள்ளல் 
 8. நுங்கல்--------------முழுவதையும் ஒரு வாயில் ஈர்த்துஉறிஞ்சு கொள்ளல் 
 9. பருகல் --------------நீர் பண்டம் ஒன்றை சிறுக சிறுக குடிப்பது 
 10. மாந்தல் -------------பெருரு வேட்கையுடன் மடமட வென குடித்தல் 
 11. மெல்லல் -----------கடிய பண்டத்தை பல்லால் கடித்து கடித்து சுவைத்து உட்கொள்ளல் 
 12. விழுங்கல்------------பலுக்கும் நாக்குக்கும் இதில் வைத்து தொண்டை வழியே உட்கொள்ளல் .பெண்கள் எழுவகை என்று கூறிய தமிழ் ஆணுக்கும் அவ்வாறு வகை பிரித்து இருக்கிறது .அவற்றை பார்போம் 
பாலன்---------------எழு வயதுக்கு கிழே
மீனி ------------------பத்து வயதுக்கு கிழே 
மறவான் ------------பதின்னான்கு வயதுக்கு கிழே
திறலோன்---------பதினான்கு வயதுக்கு மேல் 
காளை----------------பதினெட்டு வயதுக்கு கிழே
விடலை ----------முப்பது வயதுக்கு கிழே 
முதுமகன் -----------முப்பது வயதுக்கு மேலே இதே போல் பூ பூக்கும் நேரம் காலம் போன்றவற்றை வைத்து 
 1. அரும்பு --------------அரும்புவிடும் நிலை 
 2. மொட்டு ---------------மொட்டு விடும் நிலை 
 3. முகை ------------------முகிழ்க்கும் நிலை 
 4. மலர் -----------------------பூ நிலை 
 5. அலர்---------------------மலர்ந்த நிலை 
 6. வீ -------------------------வாடும் நிலை 
 7. செம்மல் ----------------இறுதி நிலை 
பூவுக்கு மட்டுமில்லாமல் இலைக்கும் இதே போன்று 
கொழுந்து ------------குழந்தை பருவம் 
தளிர் -------------------இளமை பருவம் 
இலை -------------------காதல் பருவம் 
பழுப்பு -------------------முதுமை பருவம் 
சருகு ------------------இறுதி பருவம் 


இப்பிடியாக தமிழ் பெருமை இருக்கிறது ..............இன்னும் வளரும் Saturday, June 25, 2011

விளையாடு மங்காத்தா vs சக்தி மசாலா தனி ரகம் (வீடியோ )

பசங்க எப்போதுமே பாஸ்ட் .விளையாடு மங்காத்தா வ எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு எண்டு ஜோசிக்கிட்டு இருக்கும் போதே இரங்கி விட்டாங்க சக்தி  மலாசா தனிரகம் விளம்பர ஜின்கில் யுவன் அத லைட்ட காப்பி பண்ணின மாதிரி இருக்கு .எனக்கும் இத புடிச்சு இருந்துச்சு இங்க போட்டு விட்டன் .அஆன நானும் உண்மையான தல ரசிகன் தான் .Monday, June 20, 2011

சிவா நகரில் இருந்து snapdeal.com நகராக பெயர் மாறிய கதை

இந்தியாவின் வட பகுதியில் உள்ள ஓர் ஊர் சிவா நகர் .இந்த ஊர்தான் தற்போது பெயர் மாற்றம் பெற்று snapdeal.com  நகராக மாறியுள்ளது .


குணால் பால் வெறும் இருதபத்தியேட்டு வயது இளைஞ்ன் snapdeal இணைய தள நிறுவனர் .கடந்த வருடத்தில் தன் தளம் முலம அடைந்த லாபத்தின் ஒருபகுதியை  எதோ நல்ல வழியில் செலவிட எண்ணினார் .அவரின் மூளையில் அப்போது தோன்றிய  எண்ணமே இந்த பெயர் வர காரணம் .

சிவா நகரில் இருந்து மக்கள் நல்ல குடி நீர் பெற மூன்று நான்கு மைல் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை. செய்தி காதுக்கு எட்டியது இவருக்கு தனது கம்பனி லாபத்தினை கொண்டு அந்த ஊர் முழுவதும் 15 குழாய் கிணறுகளை அமைத்து கொடுத்தார் விளைவு மாறியது அந்த ஊர் மக்களின் வாழ்வு நிலை .

இந்தகாரியத்துக்கு கைம்மாறு செய்ய விரும்பிய ஊர் மக்கள் தங்களின் ஊர் பெயரையே மாற்றி விட்டனர் snapdeal.com நகர என்று .கவிதை விடு தூது
என் கவிதைகளின் காலில்
என் காதலை கட்டி அனுப்புகிறேன்
நீ கவிதைகளை மட்டும் எடுத்து விட்டு
காதலை பாராது விடுகிறாய்


Saturday, June 18, 2011

உண்மை எதிர் சினிமா .. ஒரு நக்கல் அனிமேஷன்

இந்த படங்களை தந்துதவிய அந்த புண்ணியவானுக்கு நன்றி ..


இந்த படம் உண்மையாக நடந்ததுஇது  ஆங்கில திரைப்பட காட்சியில்இது  ஹிந்தி திரைப்பட காட்சியில்இது  தெலுங்கு திரைப்பட காட்சியில்
 --
-
-

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
- இறுதியாக தமிழ் திரைப்பட காட்சியில் சும்மா அதிருதில்லFriday, June 17, 2011

சிலந்தி + காதல் =
உன் நினைவுகளால்
வலை பின்னி
அதில் வாழும் சிலந்தி
நான்


  நீ சிலந்தியாய்
இருந்த போதும் உன்
காதல் வலையில்
விளுந்துவிடவே
துடிக்கிறது இதயம்
Wednesday, June 15, 2011

பெயர் அண்ட் லவ்வ்லி பாவிக்கும் ஒபாமா

அட இது என்ன கொடுமையா இருக்கு .கண்ட கிண்ட நாயெல்லாம் பெயர் அண்ட் லவ்வ்லி  பாவிக்கும் போது நான் பாவிச்ச என்ன எண்டு நினைச்சார் போல ஒபாமா .அந்த கிரிம போட்டு தேய் தேய் என தேச்சு போட்டார் . அந்த மேட்டர் பின்னுக்கு வருகுது .அதுக்கு முதல் நம்ம மேட்டர கொஞ்சம் பாருங்க


 நான் கொழும்புக்கு போய் படிச்சு கிழிச்ச விஷயம் எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் எண்டு நினைக்கன் .கிழிச்ச சரி அங்க போய்  என்ன படிச்ச எண்டு கேட்டிங்க அழுதிடுவன்.விடுங்க விடுங்க அவன் அவன் கஷ்டம அவனோட போகட்டும் .அங்க எனக்கு தெரிஞ்ச ஒரு பையன்க எதோ அவன்தான் இந்த உலகத்திலே சுத்தமான ஆள் என்கிற ரேஞ்சில பண்ணுவாங்க .
ஒரு நாளைக்கு மூன்று தரம் குளிச்சு முன்ணூறு தரம் முகம் கழுவி தொண்ணுறு தரம் பல்துலக்கி ஆயிரம் தரம் கிரீம் பூசுகிறவன் எண்டா பாருங்களன்.நான் கூட சில நேரம் அவன் குளிக்கிரதால் எனக்கு குளிக்க நேரம் இல்லாமா குளிக்காம விட்டு இருக்கான் எண்டா பாருங்க(டேய் உனக்கே ஓவரா இல்ல) .இதுக்கு அவன் என் பக்கத்துக்கு ரூம் மேட் .அவன் அப்பிடி பண்ணினா எப்பிடிங்க அந்த ரூம் பசங்க எல்லோரும் நம்ம ரூம்லேயே செட் ஆகிடுவாங்க .நான் கொஞ்சம் கலர் கம்மியா இருக்கிறதுக்கு இதுதான் காரணம் எண்டு சொல்ல வரல .இதுவும் இருக்கலாம் .(அட தூ ).
உலகத்தில முகத்துக்கு எது எது எல்லாம் பூசுகிறான்களோ எல்லாம் போட்டு பார்த்திருப்பான் எண்டு நினைக்கன் .செங்கல் தூள் கூட போட்டு இருக்கானாம் அவனே வாயால குடுத்த ஸ்டேட்மென்ட் இது .நான் கூட அவன் கிட்ட சொல்லுவன் .மச்சான் எங்க ஊருல நாய்க்கு எதும் காயம் வந்தால்தான் செங்கல் தூள் போடுவன் எண்டு .

கிரீம் வாங்கிறதுக்காக சாப்பிடும் சோற்றின் அளவை குறைக்கும் அளவுக்கு கொடுமை உள்ளவன் ஏன்டா பாருங்க .ஒருகிரிம் புதுசா போட்டால் அடுத்த நாள் அதுக்கு அவர் வெள்ளையா மாறி இருக்கணும் இல்லாட்டி வேற கிரீம் .அதுக்காக பழைய கிரீம் தூக்கி வீச மாட்டார்.இத விட கொடுமை ஒருநாள் கிரீம் எண்டு நினைச்சு பால் துலக்கும் கோல்கர்ட் எடுத்து பூச பார்த்தவன் எண்டா பாருங்களவன் .5000ருபாவுக்கெல்லாம் ஒரு கிரீம் வாங்கி பூசின புண்ணியவான் எண்டா பாருங்க அவன் நிலைமைய.

இதுக்கு அவன் கொஞ்சம் வடிவான பொடியன்க .யாரோ நல்லா சொல்லி இருக்காங்கஉனக்கு இந்த முகம் இப்பிடி இருக்கிறதால பொண்ணுங்க ஒண்டும செட் ஆகுதில்ல.அப்பிடி சொன்னவன நான் இன்னும் கண்டு புடிக்கல கண்டு புடிச்சு இருந்தன் .இந்நேரம் இலங்கையில் இல்லிங்க இந்தியா திகார் ஜெயில  கனிமொழியோட களி திண்டு இருப்பன் .அவனுக்கு பொண்ணுகள பார்த்தா நம்ம கிட்ட நக்கல் விடுவார் .அவள் பக்கத்தில வந்தால் வாய பொத்தி கிட்டு  போவாரு .நாம அப்பிடியோ ???????????.(இது பற்றி வேறு ஒரு பதிவில பாப்போம் )


இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டத்தான் இப்பிடி கிரீம் கிரிமா பூசி எங்க கழுத்த அருதுச்சு அந்த கழுத ..

சரி சரி இனி ஒபாமா மேட்டருக்கு வருவம் .ஒரு போட்டோசொப் களிஜன் கைவண்ணம்

Tuesday, June 14, 2011

ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சொல்வதில் உள்ள தர்மசங்கடம்
கேள்வி:    நீங்கள் என்ன சாப்பிவிரும்புகிறிர்கள்? பழஜூஸ்,சொக்கலேடே , சோடா ,டி
                                                            
பதில்             டீ மட்டும்

கேள்வி         இலங்கை டி ,மூலிகை டி,ஏலம கலந்த டி,புஷ் டீ ,கிரீன் டி ?

பதில் :         சிலோன் டி

கேள்வி :    அதிலும் வெள்ளை டி ,கருப்பு டி ?

பதில் ;       வெள்ளை

கேள்வி :  பால் அதிகம் விட்டோ இல்லை குறைத்தோ?

பதில் ;      பால் சேர்த்து

கேள்வி :  ஆட்டு பால் ,பசுப்பால் ,ஓட்டக பால் எது தேவை ?

பதில் :      பசும பாலே போதும் டீ கொண்டு வாங்க.

கேள்வி  :இனிப்புக்கு என்ன ?சீனி  இல்லாவிடின் கரும்பு சாறு

பதில் :சீனி

கேள்வி :கட்டி சீனி யா ?இல்லை தூள் சீனியா ?

பதில் :தூள் சீனி

கேள்வி :வெள்ளை சீனி ,பிரவுன் சீனி ,மஞ்சள் சீனி எது வேண்டும் ?

பதில் :தம்பி டியே வேணாம் கொஞ்சம் தண்ணீ கொண்டு வா ?

கேள்வி :மினரல் வாட்டர் வேணுமா ? இல்ல நார்மல் தண்ணிர் போதுமா?

பதில் :மினரல் வாட்டர்

கேள்வி :சுவை சேர்த்த நீரோ இல்லாமல வெறும் நீரோ ?

பதில் :::::::::::::::::::::::;;ஆணியே புடுங்க வேணாம் நான் போறன்


(சீனி =சக்கரை )

Thursday, June 9, 2011

என் காதலிக்கு ...
காதல் கடலில்
என் இதயம் தத்தளித்து
கொண்டு இருக்கிறது
உன் இதயத்தை கொடேன்
துடுப்பாய் இருந்து விட்டு போகட்டும் ....Tuesday, June 7, 2011

இதுவும் என் காதலிக்கே சமர்ப்பணம்ராமர் வில்லை உடைத்துதான்
சீதாதேவியை மனந்தாராம் .
நீ என்னையே உடைத்து விட்டாய்
பிறகு நான் எப்படி?என் காதல் வனத்தில்
உன்னை சிறை வைக்க துடிக்கிறது
என் இதயம்


Sunday, June 5, 2011

இதுவும் என் காதலிக்கே
நீ என்னை காதலிப்பதை
சொல்லிவிட்டாய் பாரேன்
வானம் அழுது கொண்டு இருக்கிறது
மழையாய்


உனக்கும் எனக்குமான
காதலுக்கு இடையில்
சிக்கி சின்னாபின்னமாக போகும்
என் கவிதைகளை நினைத்தால்
பாவமாய் இருக்கிறது

உன் கூந்தளுக்குள்ளே
ஒளிந்து கொண்டு
கண்ணாம்பூச்சி ஆட
விருப்பமாம் என் இதயத்துக்கு
கொஞ்சம் இடம் கொடுப்பாயா ?

Thursday, May 26, 2011

ஆண்கள் vs பெண்கள் இடையான பேஸ்புக் ப்ரோபைலின் வித்தியாசங்கள்

அட து பசங்களே இத விட அவமானம் வேற எதும் இருக்கோ ????????????

samsung tab மாடல் பற்றிய வீடியோ படைப்புகள் உங்களால் உருவாக்க முடியுமா ? இதோ $1500 பரிசு உங்களுக்கு

சாம்சுங் மொபைல்என்ன புது மாடல்வந்திருக்கு என்று பாப்போம் என்று அந்த சைட் பக்கம் ஒரு விசிட் அடித்தேன் .வாங்க இல்ல சும்மா பார்க்கா தான் .அங்க போய் பார்க்க தெரியுது .வாங்கிற விலையில புது மாடல் ஒண்டும் இல்ல அப்பிடி எண்டு .


ஆனால் அவர்களின் விளம்பர உத்தி ரொம்ப பிடித்து போய் இருந்தது .உங்களால் சாம்சுங் பற்றி ய அறுபது நிமிச வீடியோக்கள் உருவாக முடியுமா இந்த பிடியுங்கள் பரிசு உங்களுக்கு என்கிற பாணியில் விளம்பர படுத்தி இருந்தார்கள் .உங்களுக்கு படம் உருவாக்க முடியாத இருக்கவே இருக்கு நிங்கள் பேஸ்புக் ,டுவிட்டர் போன்றவற்றில் கணக்கு வைத்திருந்தால் அதில் இந்த விளம்பரத்தை பகிர்த்து கொண்டால் போதும் ஒருநாளுக்கு முன்று பேர் என்கிற வகையில் பரிசுகளை அறிவித்து இருக்கிறது சாம்சுங்

http://samsung.zooppa.com/?mtag=sam_gal_tab_mob#fbid=x5_Xl1p7-ES

பெண்கள் A.T.M ல் பணம் எடுப்பது எப்படி ?

முதலில் ஆண்கள் எவ்வாறு பணம் பெறுகிறார்கள் என படி முறை வாயிலில் பாப்போம்
 • வாகனம் பார்க் பண்ணுதல் 
 • ATM  மெசினுக்கு செல்லல் 
 • கார்டை உள் நுழைத்தல் 
 • பின் நம்பேர் அடித்தல் 
 • பணம் பெறல 
 • கார்ட் டை மீள பெறல
 • வண்டியை எடுத்து கொண்டு செல்லல்                        
 •  
இப்போது பெண்கள் எப்படி பணம் பெறுகிறார்கள்   என்று பாப்போம்
 1. வண்டியை பார்க் செய்தல் 
 2. மேக்கப் சரி செய்தல் /சரி பார்த்தல் 
 3. வண்டியின் என்ஜினை ஆப் செய்தல
 4. மேக்கப் சரி செய்தல் 
 5. ATM க்கு செல்லுதல் 
 6. தனது பணப்பையில் ATM அட்டையினை தேடுதல் 
 7. கார்டை உல் நுழைதல் 
 8. கன்சலை அழுத்துதல் 
 9. பின் நம்பர் எழுதிய துண்டு சீட்டை மீன்டும் பண பையினுள் தேடுதல் 
 10. கார்டை உள் நுழைதல் 
 11. பணத்தை பெறல 
 12. வண்டிக்கு செல்லல 
 13. மேக்கப் சரி பார்த்தல் 
 14. வண்டியை ஸ்ட்ராட் செய்தல் 
 15. வண்டியை ஆப் செய்தல் 
 16. மீண்டும் ATM  க்கு செல்லல் 
 17. கார்டை எடுத்தல் 
 18. வண்டிக்கு வரல் 
 19. மேக்கப் சரி பார்த்தல் 
 20. ஸ்ட்ராட செய்தல் 
 21. வண்டியை 1/2 KM  தூரம் வரை ஒட்டி செல்லல் 
 22. பின் ஹன்ட்பிரக்விடுவித்தல் 
 23. வண்டியை தொடர்ந்து ஓட்டுதல

Tuesday, May 24, 2011

பென்சன் தொகை வந்திருக்கு

அப்பாடா என்ன வெயில் சீ இப்பிடி கொளுத்துகிறது என வெயிலுக்கு ஒரு திட்டு திட்டி விட்டு சட்டையின் பட்டங்களை களட்ட தொடங்கினார்.குடிக்க தண்ணி கொண்டு வா! என்று மனைவிக்கு  சொல்லி கொண்டே மின்விசிறிக்கு உயிர் கொடுத்து கதிரையில் சங்கமாகி கொண்டார் கணேசர் .

முன்னுக்கு இருந்த கண்ணாடி காட்டி கொடுத்தது ஐம்பத்தி ஐந்து வயது ஆகிவிட்டதை . நரை முடிகள் மொத்தமாக குத்தகைக்கு எடுத்து இருந்தன தலையை .போன வருசம்தான் பென்சனுக்கு கொடுத்து விட்டார் .வீட்டில் சும்மா இருக்க பிடிக்க வில்லை .அலுவலகத்திலே எல்லோர் வேலையும் எடுத்து தன தலையில் போட்டு கொண்டு செய்யும் அவர் இப்போது சும்மா இருப்பாரா என்ன .எதாசும் ஒரு வருமானம் வரும் வழி பாப்போம் என்றால் இன்னும்  பென்சன் தொகை வந்த பாடில்லை அதுக்கு தான் இந்த கொளுத்தும் வெயிலிலும்  பஸ் ஏறி டவுனுக்கு போய் வருகிறார் .

என்னவாம் உங்கட பைல் போய் சேர்த்துட்டுதாமோ ? ஒரு செம்பில் தண்ணீயுடன் வந்தாள் கனகம் .அவருக்கேத்த ஜோடி தான்  தன் சொந்ததுக்குளே பார்த்து முடித்த கலியாணம் முப்பது வருஷம் ஆகிவிட்டது கலியாணம் முடித்து இன்னும் பெரிய அளவில் சண்டை ஒன்னும் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது அவர்கள் வாழ்க்கை வண்டி .ஓம் ஓம் அந்த காசு எடுகிறதும் சரிதான் இந்த வெயிலுக்குள்ள போறதுக்கும் சரிதான் வெறுப்போடு சொன்னார் கணேசர் .நமக்கு வேணும் என்டா கஷ்ட படத்தான் வேணும் எண்டு தனக்குள்ள முனகி கொண்டு சமையலறைக்குள் ஐக்கியமாகி கொண்டாள் கனகம் .

நாளைக்கும் போய் கரைச்சல் கொடுத்தால் தான் அந்த பைல கெதியா அனுப்புவான் என்று ஜோசித்து கொண்டே கதிரையில் அயர்ந்து  கொண்டார் .அவருக்கு நினைப்பு எல்லாம் அந்த பணத்தை வைத்து என்ன செய்வது ? இரண்டு மகன் மாருக்கும் நல்ல இடமாய் பார்த்து கலியாணம் செய்து குடுத்து விட்டார் .கொஞ்சம் தூரத்தில் இருப்பதால் மாசம் ஒருதரம்தான்  வந்து பார்த்து விட்டுதான் போவார்கள் .பென்சன் காசி ரெண்டு பேருக்கும் செலவுக்கு  காணும் .ஆனால் அந்த தொகை காச என்ன செய்கிற .மனிசியும் கோவில் குளத்துக்கு ஒண்டும போகல்ல போகணும் எண்டு சொல்லுறாள் .காச எடுத்து கிட்டு ஒவ்வொரு கோவில் குளமா போய் வருவமா ? இல்ல வீடுக்கு பக்கத்தில் ஒரு சின்ன கடை ஒன்ன்டு போட்டு விட்டு அதுல வார காச எடுத்து கிட்டு சீவிப்பமா ?பலமான ஜோசனை அவருக்கு .மனிசியிடம் கேட்டால் கோவில் குளத்துக்கு போய் புண்ணியத்த தேடுவம் என்பாள்.சரி பணம் வரட்டுமே எண்டு எண்ணி கொண்டே கண்ணயர்நது விட்டார் .

அடுத்த நாளும் பஸ் ஏறி அதே மாதிரி வெறுத்து போய் வந்திருந்தார்  ,ஒருவழியாய் அந்த பைலை அனுப்பி விட்ட திருப்தி முகத்தில் .சரியாக ஒரு மாசம் இருக்கும் .வீட்டு கதவடியில் இலச்சுமி தபால் காரன் வடிவில் மணி அடித்தாள்.ஒரு கடிதம் ஓய்வூதிய திணைக்களத்திடம் இருந்து இவளவு தொகை உங்களுக்கு மொத்தமாக வர இருக்கு அத்துடன் இன்னும் என்ன என்ன செய்யவேண்டும் எண்டு ஒரு பத்திரமும் இணைத்து அனுப்பி இருந்தார்கள் .அப்பா எதோ பெரிதாய் சாதித்து விட்ட திருப்தி.மனைவியின் முகத்தை பார்த்தார் .அந்த பார்வையில் தன் பெருமை நிறைந்து இருந்தது .ஒருவழியாய் பணத்தை தன் வங்கி கணக்குக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டார் .

அடுத்த நாள் எந்த கோவிலுக்கு போவது எந்த முகவரிடம் போனால் இலகுவாக இருக்கம் என்றெல்லாம் பேசிக்கொண்டே பயண ஏற்பாடுகளை கவனிக்க தொடங்கினார்கள் .இதற்கிடையில் கனகம் தன் மூத்த மகனிடம்  தொலைபேசியில் அப்பாவுக்கு இப்படி பணம் வந்ததாகவும் அதில் தாங்கள் கோவில் குளம் எல்லாம் சுத்தி பார்க்க போக போவதாகவும் பெருமை பட்டு கொண்டாள்.என்ன செய்வது யாரிடமாவது சொல்ல வேண்டும் போலிருக்கும் அவளுக்கு மக்களிடமே பெருமை அடித்து கொண்டாள்.

அப்பா !என்று ஒரு சத்தம்  வெளியில் கேட்டது தன் இளைய மகள் தான் என்று குரலை வைத்தே அடையாளம் கண்டு கொண்டார் .ஒ இப்பதான் கண் தெரிஞ்சுதா வா வா எண்டு கனகம் சொல்லி கொண்டே வந்தாள் .தாங்கள் பயணம் போவதை கேள்வி பட்டு வழியனுப்ப வருகிறார் போலும் என்று சொல்லி கொண்டு குசினுக்குள் போனாள் .
வந்த மகனின் முகத்தின் வாட்டத்தை கவனிக்க தவற வில்லை கணேசர் .உடனே கேட்டும்  விட்டார் என்னடா  எதும் பிரசனையோ ?என்றார் இல்லையாப்பா ஒண்ணுமில்லை சொல்லும் போது புரிந்து கொண்டார் எதோ உண்டு என்று .உன்னை தெரியாத எனக்கு என்ன நடந்தது என்று கேட்டார் கணேசர் .இல்ல அப்பா பிஸ்னஸல ஒரு சின்ன பிரச்னை காசு கொஞ்சம் தேவை படுத்து அண்ணாவிடம் கேட்டன் அவன்தான் உங்களுக்கு இப்பிடி காசு வந்திருக்காம் கேட்டு பார்கட்டாம் எண்டு சொன்னான் எண்டு ஒரு குண்டை தூக்கி போட்டான் .ஒ அதுக்கென்ன எவ்வளவு கிட்ட தேவைப்படும் என்றார் கணேசர் .பக்கத்தில் மனைவியும் குடுத்து விடுங்க என்று சொன்னாள்..

Monday, May 23, 2011

உன் வீடும் என் காதலும் ...
உன் தெரு தபால்காரன்
குழம்பி போயிருப்பான்
இருக்காதா பின்னே
உனக்கான காதல் கடிதத்தில்
 தேவதை வாழும் வீடு
என முகவரி இடப்பட்டு இருப்பின் ...................
எதோ ஒரு வேலையாய்
உன் வீட்டுக்கு வந்து போனேன் நான்
இரவு என் டையரி குறிப்பில்
இன்று நான் சொர்க்கத்தில் கால்
பதித்தேன் என்று எழுதி வைத்தேன்
பின்னே தேவதைகள் சொர்க்கத்தில் தான் வாழுமாமே ?Sunday, May 22, 2011

என் காதலின் காதலிக்கு
பற்றி எறிகிறது
என் இதயம்  
உன் காதலை
கொஞ்சம் கொடேன்
ஊற்றி அணைத்து
பார்க்க போகிறேன் ...


புற்றுக்குள் இருந்து
வரும் ஈசல் போல்
உன்னுடன் பேச
வார்த்தைகள் வெளிவருகின்றன
அதை பிடித்து தின்னும்
காகங்களாய் உன் கண்கள் இருக்கின்றனவே ..
Saturday, May 21, 2011

கனிமொழி கைது பற்றிய டுவிட்டர் அப்டேட்ஸ் பார்ட் 3....கடி விடாது போல இருக்கு
கலைஞர் டிவி மூடுவிழா என்றால் விரைவில் கனிமொழி டிவி தொடங்கப்படும்............................................................... நையாண்டி


எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே # கனிமொழி........................................................................ saravanakkumar


கனிமொழி ஜாமீன்க்கு மேல்முறையீடு # உங்களுக்கு தேவைப்படும் மீன் கடல்லயே கிடையாது................................................ prabu krishna

"டெல்லி திகார் ஜெயிலிலே , பாம்புகள் பல்லிகள் நடுவினிலே, அஞ்சாமல் இருந்தது யாரு? நம்ம கனிமொழி புகழினை பாடு" - திமுக பிரச்சாரபாடல் !........................................................................................    கனியன்


வருவதை எதிர்கொள்ள வேண்டும் -கனிமொழி #இன்னும் யாரெல்லாம் வரப் போறாங்க.?             -------------------------யுவகிருஷ்ணன் 

வருவதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன்: கனிமொழி # இந்த நிலைமையிலும் பஞ்ச் டயலாக்                      Raja Ashok


கனிமொழி சட்டப்படி சந்திக்கிறார் ஆனால் வழக்கை அல்ல !!!!! - Rajkumar Chinnasamy - Buzz-ல்!........................................................மாயவரத்தான்.

வருவதை எதிர்கொள்ள வேண்டும் : கனிமொழி # கரெக்ட். அப்பாவுக்கும் ஒரு ரூம் ரெடி பண்ண சொல்லிடுங்க. ;)                     .................. illuminati8 மச்சான்களா மன்னிசிடுவிங்க எண்டு நம்புறன் .........உங்க கடிஎல்லாம் எப்பிடி அப்பா ஜோசிகிரிங்க என்கிற மாதிரி இருக்கு .சோ அத எல்லோருக்கும் ஒரே இடத்தில பார்க்கும் படி செய்யும் ஒரு வேலைதான் இந்த கொப்பி பேஸ்ட் வேலை செய்தான் .............இந்த பதிவுகளுக்கு ரொம்ம வாசகர் ஆதரவு இருக்கிறதால இன்னுமொரு போஸ்ட் போட்டு இருக்கன்..

 

Friday, May 20, 2011

கனிமொழி பற்றிய டுவிட்டர் அப்டேட்ஸ் பார்ட் 2 ...அடாடாட என்ன கடி

ராஜா மனைவி to கனி : அவருக்கு பிடிச்ச சீடையும் நெய் முறுக்கும் பண்ணியிருக்கேன் மறக்காம கொடுத்திடுமா.

சாய்பாபா உயிரோடு இருந்திருந்தால் லிங்கம் எடுப்பது போல கனிமொழியை வெளியே கொண்டுவந்திருப்பார் என்ற சத்தம் கேட்கிறதாம் சிஐடி காலணி வீட்டில்

 சீரியல் ஜெயில்களில் வரும் ரவுடி பெண்களை பிடிங்க. திஹார் ஜெயிலுக்கு பார்சல் பண்ணுவோம்

ஸ்டாலின், அழகிரி, கனிமொழி எல்லாம் ஒண்ணா ஒத்துமையா இருந்தா விக்ரமன வச்சு படமாவாது எடுத்திருக்கலாம்.. ச்சே. மிஸ் ஆயிடுச்சு


கனிமொழி சென்னை வெயில் தாங்காம தான் ஜெயிலுக்கு சென்றார்.. அறிக்கை அழகன் வீரமணிக்கு டிப்ஸ்

ராசாவுக்கு சிறையில் மொபைல் வசதி இல்லையாம். டேய் டேய்.. செல்ஃபோன் கம்பெனிகாரங்களா! உங்களுக்கு ஸ்பெக்ட்ரம் கொடுத்தவரே அவர்தாண்டா

கனிமொழி ஜெயிலுக்கு போனதுக்கு ராமாயனம் வனவாசத்தை குறிப்பிட இருந்தாராம் கலைஞர். ஸ்டாலின் தான் 14 வருஷம் உள்ள வச்சிடுவாங்கன்னு தடுத்தாராம்

வாழ்ந்து கெட்ட குடும்பம்- சன் டிவி யில் மெகா சீரியல் ஆரம்பம்

ராசா கைது - கண்ணா கலி திங்க ஆசையா கனி கைது - கண்ணம்மா ரெண்டாவது கலி திங்க ஆசையா !!!

வடிவேல் : உங்கள் எல்லாருக்கும் ஒரு உண்மைய சொல்லறேன்,தேர்தல் பிரச்சாரம் பண்ணது நான் இல்ல,அது என் தம்பி மங்கி சங்கி, நான் சங்கி மங்கி

இன்று சன் டிவியில் தில்லு முல்லு. நாளை சிறையில் பூத்த சின்ன மலராம்

2 வருஷத்துக்குள் அரசியலுக்கு வந்து,ஊழலும் செய்து,ஜெயிலுக்கும் போய்விட்டார்,நீங்கல்லாம்..... - துர்காஸ்டாலின்,காந்திஅழகிரி ஆவேசம்.

சினம் கொண்ட (பெண்)சிங்கத்த சிறையிலடச்சா அது செல்லையே செதச்சுடும் பரவால்லையா #கனி
களிமொழியானார் கனிமொழி

இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக கனிமொழி கைது காண தவராதிர்கள் !!!!!!!!!!!!

காக்கா வடை சுட்ட கதை கூட கலைஞர் செய்திகள் டி‌வில வரும் ,ஆனா கனிமொழி ஸ்பெக்ட்ரம்ல சுட்டத காட்டவே மாட்டாங்க
 நன்றிகள் அனைத்து ட்விட்டர் நண்பர்களுக்கும் உங்கள் அனுமதி பெறாமல் இங்கு உங்கள் டுவிட்களை மீள் பிரசுரம் செய்கிறேன் ......மன்னிக்கவும்

கனிமொழி பற்றிய டுவிட்டர் அப்டேட்ஸ் ...அடாடாட என்ன கடி
கனிமொழி கைது விவகாரத்தை ரஜினியிடம் கூறினால் சந்தோசத்தில் உடனே வீடு திரும்புவார் ....நையாண்டி

கனிமொழியின் மகன் ஆதித்யா பாவம் ! இப்படிப்பட்ட தாய்க்கு பிள்ளையாக பிறந்தோமே என்று குழந்தை மனது பாடுபடும்! .............கணியன்

கனிமொழி கண்ணீர்... ஆ.ராசா மனைவி ஆறுதல்! #ஒண்ணுக்கொன்னுஆதரவுஉள்ளத்திலஏன்பிரிவு.....?    ...................ஆயிலியன்


செம்மொழியான தமிழ்மொழியாம்
கம்பிக்கு பின்னாடி கனிமொழியாம் .........................செய்யிது முஸ்தபா

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு , ஆசையயை அடக்காவிட்டால் திகாரில் போய் துஞ்சு #கனிமொழிகள்    ..................டிபிசீ டி

முன் செய்த (மே-2009) சதி,வேறுரூபத்தில் பின் வந்து (மே-2011) கைதி ஆக்கியிருக்கிறது ......................................கோளாறு

சட்டபடி சந்திப்பேன் - கனிபொழி. # ஓ.. ராசாவை தான் சட்டபடி சந்திப்பேன்னு சொன்னீர்களா?.....................................................தமிழ்தாசன்


கலைஞருக்கு தமிழக மக்கள் தண்டனை- பதவி இழப்பு.. கனிமொழிக்கு நீதிமன்று தண்டனை - சிறையடைப்பு #யாருக்கும் எதுவும் நிரந்தரம் அல்ல.............................................................லோசன் எஆர்வி

முருகா என்னை மாதிரி வயசான கிழவங்க கிட்டர்ந்து இந்த நாட்டை காப்பாத்துப்பா - ஸ்ரீராமசந்திரமூர்த்தி #தில்லுமுல்லு...........                 ஆயிலியன்


நிருபர்: உங்க பொண்ணு ஜெயில்ல இருக்குதாமே! கலைஞ்சர்: ராமன் இருக்குமிடமே சீதைக்கு அயோத்தி!.......................................சிர்தாத

ராசாத்தி: போற எடத்துல பொறுப்ப நடந்துக்கணும்.. மாப்ள மனசு கோணாம பாத்துக்கணும்                                                    ......................எஸ் .ஜி .ஆர்

கனியயைப் புடிச்சி கூண்டிலடைச்சி கூவச் சொல்லுகிற உலகம்... #கனிமொழிகள்                                              --------------------tbcd

பாலூட்டி வளர்த்த கனி பதவி கொடுத்து பார்த்த கனி , முக வளர்த்த செல்லக் கனி நாளை வரும் திகாருக்கு - செல்லாம்மா, என் செல்லமா #கனிமொழிகள்...................................................tbcd

காதறுந்த ஊசியும் வாராது காண் திகார்வழிக்கே #கனிமொழிகள்............tbcd


"கருணா"நிதியின் முள்ளிவாய்க்கால் ஆரம்பம், காங்கிரஸின் முள்ளிவாய்க்காய் எப்போது #ஆவலுடன் .................கானாபிரபா

சே ஆங்கிலம் படிச்சிருக்கலாம் - அழகிரி ; சே எதுக்கு ஆங்கிலம் படிச்சேன் - கனிமொழி #ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ் ....கானாபிரபா

தமிழ் மட்டும் தெரிஞ்சா தப்பிக்கலாம் #தயாளு அம்மாள் பொன்மொழி, கிடைக்குமிடம் கோபாலபுரம்    .......................................கானாபிரபா


திமுகவை தமிழகத்தில் வேண்டுமானல் மைனாரிட்டி அரசாக இருந்திருக்கலாம், திஹாரில் அவர்கள்தான் மெஜாரிட்டி 2 எம்.பி.கள்  ...............................................சிர்தர்ட்


ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் மீண்டும் சந்தித்த போது பேச முடியலியே. # கனிமொழி & ராசா திகார்  ;;;;;;;;;;;;;;;;;;;;;சிர்த்ஹாத்

Thursday, May 19, 2011

அலுவலகம் சம்பந்தமான கடுப்பேற்றும் /சிரிப்பூட்டும் <> விதிகள் /தத்துவங்கள்

 1. உங்களை விட்டால் இந்த வேலை செய்ய ஆள் இல்லை என்று நிர்வாகம் நினைக்கும்  அளவுக்கு வேலை செய்யாதீர்கள்.அப்பிடி நடந்து கொண்டால் பின்னர் எப்பிடி உங்களுக்கு பதவி உயர்வு அவர்களால் அளிக்க முடியும் ...
 2. தவறு செய்தல் மனித இயல்பு ஆனால் மன்னித்தல் நிர்வாகத்தின் இயல்பு இல்லை .
 3. கடைசியாக நிர்வாகத்தில் இருந்து வெளியேறிய நபர்தான் எல்லா தவறுகளுக்கும் பொறுப்பு இன்னுமொரு நபர வெளியேறும் வரை .
 4. உங்கள் பதவியின் பெயர் எந்த அளவு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவு உங்கள் வேலையும் முக்கியம் இல்லாததாக இருக்கும் .
 5. உங்கள் முதலாளியை காண வேண்டும் எனில் இணையத்தில் மேயுங்கள் 
 6. நீங்கள் எவ்வளவு கஷ்டபட்டு உழைத்தாலும் உங்கள் முதலாளி நிங்கள் இணையத்தில் மேயும் போது பின்னால் கையை கட்டி கொண்டு நிற்பார் .
 7. காரில் காற்று இரங்கி விட்டதாய் முதலாளியிடம் பொய் சொன்னிர்கள் எனில் அடுத்த நாள் உண்மையாகவே காற்று இரங்கி இருக்கும் .
 8. அதிகாரம் என்பது யாதெனில் யாரால் ஒரு வேலையை செய்ய முடியாதோ அவருக்கு அதை அழிப்பது ஆகும் .
 9. குழுவாக பணி செய்வது சிறந்தது அப்போதுதான் மற்றவர் மீது இலகுவாக பழி போடா முடியும் 
 10. நிர்வாகத்தின் அதிகாரமும் சாக்கடையும் ஒன்றுதான் களிசறைகள் மட்டுமே முன்னுக்கு வர முடியும் 
 11. யார் ஒருவன் தவறு வரும் போது சிரிக்கிறானோ அவன் அந்த தவறை யார் மீதோ சுமத்தலாம் என்று தெரிந்து கொண்டான் என்று அர்த்தம .
 12. ஒரு விஷயத்தினை காலி செய்ய வேண்டும் எனில் ஒரு கமிசனை அதுக்காக உருவாக்கி விட்டால் போதும் 
 13. ஒரு கமிட்டி என்பது ஆறு கால்கள் உடைய மூளை இல்லாத உடலமைப்பு ஆகும் 
 14. ஒரு முட்டாள் சிறந்த பதவி ஒன்றில் இருந்தால் அதற்கு சிறந்த உதாரணம் ஒருத்தன் பெரிய மலை மேல் ஏறி நிற்பதாகும் .அவனுக்கு கிழே இருப்பது எல்லாம் சிறிதாகவே தோன்றும் .அதைவிட கிழே இருப்பவர்களுக்கு அவன் மிகவும் சிறியவனாக தெரியும் .
 15. எந்த ஒரு பிரச்சனைக்கும் ஒரு அருமையான தீர்வு உண்டு ,பிரச்சனை என்னவென்றால் அதை கண்டு பிடிப்பதே ..
 16. ஒரு தவறின் தன்மையும் அதை மறைக்க அதிகாரிகள் எடுக்கும் முயற்சியும் நேர விகிதத்தில் அமைந்து இருக்கும் 
 17. 90 சத விகித வேலைகள் 90 சதவிகித நேரத்தை எடுத்து கொள்ளும் .மற்ற 10 வீத வேலைகள் இன்னும் 90சத விகித நேரத்தை அதிகமாக எடுத்து கொள்ளும் .
 18. யார் இரைசலுடன் கத்துகிறாரோ அவருக்கு தான் பதவி சொந்தம் 
 19. மேலாளரை பொறுத்த வரை சாத்தியமில்லாதது எதுவுமில்லை அவர் செய்து பார்க்கும் வரை
இறுதியில் 
உங்க  அப்பா ஏழையாக இருப்பது உங்கள் விதி ஆனால்
உங்கள்  மாமனார் ஏழையாக இருப்பது உங்கள் முட்டாள்தனம் .

நன்றி ...மார்பி விதிகள்

எங்க ஏரியா ரவுண்டப்..........ஒருவழியாக இந்த வலைப்பூ அனுபவத்தில் சதமடித்து கூடவே இன்னுமொரு அரைசதமும் அடித்து விட்டேன் .எதோ எனக்கு என்ன எல்லாம் இங்க பதிவிடனும் எண்டு   தோணுதே அத மட்டும் இங்க போடுறன்.சில நேரங்களில் கவித என்கிற பேர்ல எதைஎதையோ எல்லாம் செலுத்தி போட்டா அத சிலர் ரசிச்சு கமாண்ட் பண்ணுறாங்க பாருங்க .அங்கதாங்க சந்தோசமே .எனக்கு இந்த 150 பதிவிலையும் புடிச்ச ஒரு பதிவு ஒரு குருக்கள் பத்தி நான் போட்ட பதிவு தான் .லிங்க இதோ .http://sangarfree.blogspot.com/2010/08/blog-post_20.htmlஇது தனி மனித தாக்குதலாய் இருக்கும் என நான் எதிர் பார்க்க வில்லை .இருந்தும் அந்த பதிவை நீக்கும் படி சில நிர்பந்தங்கள் வந்தன .விரைவில் அத தொடர்சி ஒன்று பதிவிடும் ஐடியா இருக்கிறது .எல்லோரும் ஐம்பதாவது ,நூறாவது பதிவு எண்டு ஸ்பெசல்  பதிவு எல்லாம் போடுறாங்க .ஏன் நான் மட்டும் எண்டு போட்டு இன்னிக்கு சீ வேணாம் ,,,,,எப்பவுவே நம்ம பதிவு ஸ்பெசல் தானே கண்ணுங்களா !!
--------------------------------------------------------------------------------


ரொம்ப நாளைக்கு அப்புறமா எங்க ஏரியாவுல போலீஸ் ,ஆர்மி எல்லாம் சேர்த்து ஒரு ரவுண்டுஅப் நடந்துச்சு ,அத தமிழ்ல சொன்ன சுத்திவளைத்து தேடுதல் எண்டு வரும் நம்மடவங்களுக்கு எத எண்டாலும் தமிழ்ல மொழி பெயர்கிறது எண்டா நல்ல சந்தோசம் தானே .ஊருல மூன்று நாளுக்கு முதல்ல ஒரு கொலை நடதுச்சு ,எதோ ஆடு ,மாடு நடத்த மாதிரி சிம்பிளா சொல்லுறானே அப்பிடி எண்டு பார்கிரிங்க எனா பண்றது நிலைமை அப்பிடி மார்க்கெட்டில கத்தரிக்காய் விளைய விட குறைஞ்சு போய் கிடக்கு மணிச உயிருக்கு விலை .எங்க ஊருல எப்பிடி ஸ்பீட் எண்டு பார்தேலே கொலை நடந்து முன்றாம் நாளே கொலையாளிய தேட வெளிக்கிட்டங்க .....அந்த கொலையாளியபிடிக்கவோ /இல்ல வேறு எதுக்குமா இன்னிக்கு எங்க விட்டுக்குள் எல்லாம் வந்தாங்க ..சும்மாவே நமக்கு சனி தான் அதோட கட்டிலில் இருந்து அந்த ----------- மகன்களில் முஞ்சிஇல முழிச்சு இருக்கு .சிங்களம் தெரிஞ்சவங்க யாரச்சும் இருக்காங்களா எண்டு கேக்க என்ன எழுப்பி விட்டான் அண்ணா.பழைய மாதிரி இல்லாம கொஞ்சம் நல்ல மாதிரி கதைசதில அவங்களுக்கே இந்த விசயங்களில் விருப்பம் இல்லையாம் பெரிய இடது உத்தரவு படியே இந்த விஷயம் எல்லாம் நடக்குதாம் .எங்க விட்டு சுவாமி படம் எல்லாம் வைக்கும் அறைக்கு செல்லும் போது நான் சப்பாத்தை கழட்டி வைக்கும் படி கூற சாரி சொல்லி வெளியில் வந்ததை பார்க்கும் போது முன்பை விட இப்போது நன்றாக இருக்கிறாங்க எண்டு நினைக்கக் தோணியது .....ஆனாலும் பழைய மாதிரி ஆள புடிச்சிக்கிட்டு போறது அப்பிடி எண்டு பழைய மாதிரி இல்ல எதோ சும்மா வந்து சுகம் விசாரிச்சு கிட்டு போறது பரவாயில்ல இப்பிடியே மைண்டின் பண்ணுங்க ...(வீடுக்கு வந்த ஆர்மிகளில் ஒருத்தன் அண்ணாவின் மகள் ஆடுவதுக்கு கட்டி வைத்திருந்த உஞ்சலில் லயித்து கொண்டே ஆடியதை பார்க்கும் போது பாவம் பரிதாபம்தான் வந்தது அவர்களில் )
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;அது சரி உங்க யாருக்காசும் அதான் இந்த பதிவையும்வேலை வெட்டி இல்லாம வாசிக்கிறின்களே உங்களத்தான் இவ்வளவு நாளா நான் எங்க போயிருந்தன் அப்பிடி எண்டு கேக்க தோணும்/தோனியிருக்கனுமே என்னமோ நான் பதில் சொல்லிதாங்க ஆகணும் ஒண்ணுமில்லை உங்களை போலவே வேலை வெட்டி இல்லாம சும்மாவே இருந்திட்டங்க ..முதல் எல்லாம் வேலை செய்யும் போது /படிக்கும் போது இருந்த நேரம் இப்ப சும்மா வெட்டியா இருக்கும் போது கிடைக்குதே இல்ல 24 மணி நேரமும் வேலை .ஒபாமாவுக்கு கூட நேரம் இருக்கும் இப்பிடி வெட்டியா திரியும் பசங்களுக்கு  நேரம் என்கிறது கிடைக்கிற கஷ்டம் போல இருக்கு ..