Monday, August 23, 2010

பற்பசை இல்லாமல் சூரிய சக்தியால் இயங்கும் பல்தூரிகை

Dr. Kunio Komiyama இதுதான் இந்த பல்தூரிகையை கண்டு பிடித்த பல் மருத்துவரின் பெயர் (தமிழில் மொழிபெயர்க்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது ).பதினைந்து வருடங்களுக்கு முன்பு தற்போது பாவிக்கப்படும் பல்துரிகை வடிவினை உலகுக்கு வடிவமைத்து கொடுத்தவர் .
University of Saskatchewan இந்த பல்கலை கழகத்தில்  பேராசிரியராக கடமை புரியும் இவர் தன்னுடன் கடமை புரியும் ஜெர்ரி உடன் இணைத்து இந்த ஆராய்சியில் ஈடு பட்டிருந்தார் .

இவர்களின் இந்த கண்டு பிடிப்புக்கு உறுதுணையாக ஜப்பானின் சக்ஸ்கேன் கம்பனி இருதிருக்கிறது .
Soladey-J3X என பெயரிடப்படிருக்கும் இந்த பல்துரிகை மிக விரைவில் சந்தைக்கு வர இருப்பதுடன் .ஆயிரம் இளவயதினறேடியே சோதனைக்கு உட்படவும் இருக்கறது .



இனி இந்த கண்டுபிடிப்பின் செயல்பாடு பற்றி இனி பார்போம் .தூரிகையின் மேல் பகுதியில் உள்ள சோலார் தட்டின் முலம் உருவாகும் எலோற்றோன்கள் ( electrons )தூரிகையின் முனைவு பகுதியில் உள்ள  ஈயதினால் ஆனா வயர்(wire ).இந்த electronsபற்களில் உள்ள அமிலங்களுடன் இரசாயன ரீதியில் தாகம் புரிந்து அங்கிருக்கும் பக்ரிடியா ,மற்றும் கிருமிகளுடன் தாக்கம் புரிந்து அவற்றை எதிர்க்கிறது .
ஆக இந்த பல்துரிகைக்கு பற்பசை தேவையில்லை என்பது முக்கிய தகவல் .சாதரனமாக ஒரு சூரிய சக்த்யில் இயங்கும் கால்குலேட்டர் ஒன்றின் சக்தி போதும் இது இயங்கும் ..