Friday, August 20, 2010

குருக்களுங்கோ குடுத்துடுங்கோ காச!!!!!!!

அட பயப்படாதிங்க இது அந்த கருவறைக்குள்ள கசமுசா நடத்திய காமுக குருக்கள் பற்றிய கதை இல்லை .அத விட கொஞ்சம் பரவால்ல என்கிற இடத்தில இருக்கிற ஆக்கள் பத்திய கதை  .இது ரெண்டு மூண்டு நாளைக்கு முதல் ஒரு கோவிலில் நடந்த சம்பவம் .

இந்த படத்தில இருக்கிரவருக்கும்  மேட்டருக்கும் சம்பந்தம் இல்லிங்கோ ...........


ஒரு கோவில் பேரு ஊர் எல்லாம் வேணாமே !.கர்ப்பூர தீபம் சாமிக்கு காட்டிய பின் அதை எடுத்து சாமி கும்பிட வந்தவங்களுக்கு காட்ட பெரிய குருவின் உதவிக்குரு ஒருவர் எடுத்து கிட்டு வந்தாரு .அப்ப அத எல்லோரும் தொட்டு கும்பிட்டு விட்டு பத்து ரூவா ,இருபது ரூவா இல்லாட்டி ஐம்பது ரூவா அந்த தட்டில போடுவாங்க .(அட தட்டுல போட்டந்தான் கடவுள் கேக்கிற எல்லாத்தையும் குடுப்பபரு .,இதில ஒரு பகிடி இருக்கு முதல் முதல் தட்டுல காசு போடுறது குருக்களின் சொந்த காரனாதான் இருக்கும் .அவன் போட்டு காட்ட எல்லோரும் தடுல காசு போடுவாங்க அவனுக்கு அதுல ஒரு கொமிசன் .நம்ம மக்கு சனம் இத விளங்காம என்னமோ அவங்க போடுற காசு நேரடியா பிள்ளையாரே எடுத்துக்கிற மாதிரி நினைச்சு போடுவாங்க .).சரி அங்க நடந்த விசயத்துக்கு வருவம் ஆக்கள் காசு போடுகிட்டு இருக்கும் போது அந்த உதவி குரூ பெரிய குருக்கல்ல பார்த்துகிட்டே அந்த கற்பூர தட்டில இருக்கிற கொஞ்சம் பெரிய தொகை காச எல்லாம் எடுத்து தண்ட இடுப்பில மறைச்சு வைக்கிறான் .அவனுக்கு குருக்கள் பார்க்க கூடாது அது மட்டும் தான் மத்தவங்க பார்கிறார்கள் அப்பிடி எண்டெல்லாம் இல்லை .அப்பத்தான் காசு போட்டவங்க ஜோசித்து இருப்பாங்க .

பொதுமக்களே  இது சும்மா டைலர் தாங்க மெயின் பிக்சர்ஸ் நீ இன்னும் பார்கல என்கிற ரேஞ்சில இன்னும் பெரிய கேவலங்கள் எல்லாம் இருக்கு .போலி சாமி ஒரு பக்கம் இருக்க இந்த குருக்கள் மாரின் கொடுமை .


சினிமா  நடிகர்மாதிரி அவங்க பேருக்கு முன்பு  அடைமொழி எல்லாம் வைச்சுக்க ஆரம்பிச்சிருக்காங்க அப்பா அவங்க .உதாரணமா ஆசாரியா ஜோதி ,ஆபரண ஜோதி (இது கழுத்தில அதிக தங்க மாலை போட்டு பூசை முடிக்கும் குருக்களுக்கு குடுக்குற பேரு ),இன்னும் இருக்கு கிரியா அப்பிடி எண்டு தொடக்கி ஒரு ஆயிரம் பேரு வச்சிருப்பாங்க .எனக்கு ஒன்னு தெரிசாகனும் எந்த யுனிவர்சிட்டி இந்த பட்டங்க குடுத்தனுப்புகிறாங்க எண்டு .இதுல ஒரு பெரிய பண விஷயம் இருக்கு யாருக்கு கூட பாடம் இருக்கோ அவருக்கு கொஞ்சம் பெரிரிரிரிரிரிரிய அளவில தட்சனை குடுக்கனுமாம் .
ஆமா  யாருங்க அவன்களுக்கு சர்மா பட்டம் குடுக்குறது .ஆனாலும் அந்த சர்மா என்கிறது அவங்க பேரோட சேர்த்தா உண்மையாவே ஒரு குருக்கள் பேரு மாதிரிதான் நமக்கும் தோணுது .பின்ன இருக்கிறதா நம்ம சனங்க பேரூ ,விளம்பரம் இத பார்த்துதான் எல்லாம் செய்யிற ஆக்கள் ஆச்சே.ஆமாங்க கோவிலுக்கு சனம் வர வேணுமின்னா கொழும்பில இருந்து குருக்கள் வரவேணும் .இல்ல இரவுக்கு ஒரு பெரிய பிரபல்யமான இசைக்குழு பாட்டு படிக்கணும் .

இவங்க  எல்லாம் ஒழுங்கு முறையாக குருவுக்கு படித்து இருப்பார்கள என்று தேடி பார்த்தல் அனேகமா இல்லை என்றுதான் பதில் வரும் எண்டு நினைக்கிறேன் (அட இதெல்லாம் போயா கூகிள்ல தேடி பார்ப்பாங்க ).உண்மைய சொன்னா எதோ மோட்டர் பைக் திருத்தும் மெக்கானிக் கடையில் வேலைக்கு நிக்கும் பையன் கொஞ்சம் பெரியவன் ஆனதும் தனிய ஒரு கடைய தொறந்து தானும் பாஸ் ஆகிரதில்லையா !! அது மாதிரிதான் இந்த மேட்டரும் வந்துகிட்டு இருக்கு அப்பிடி எண்டு நினைக்கன் .(உண்மையா குருக்க்கு படிச்சு வந்தவன்களே மன்னிசிடுங்க ..)

சரி  ஒரு கோவிலில் எப்பிடி எல்லாம் குருக்களுக்கு வருமானம் வருகுது எண்டு பாப்போம் (அட பெரிய ஆராய்சி பண்ணி இருக்காரு )இது எங்க நாடு கணக்கு அர்சனை,தானம் ,தட்சனை  என லிஸ்ட் ரொம்ம பெரிசு .இத விட அவருக்கு மாத சம்பளம் எல்லாம் இருக்கு (பென்சனும் கேப்பாங்க போல இருக்கு ).தட்சனைக்கு காசு ,பட்டு வேட்டி  தானத்துக்கு அரிசி ,மரக்கறி ஏன் விட்டா   டி குடிக்க பால்மா தேயிலை எல்லாம் கேப்பாங்க போல .இது ஒரு பூசைக்கு திருவிழா அப்பிடி எண்டா பார்க்கவே வேணாம் .சும்மா மூன்று நாலு குருக்கள் பூசை செய்வாங்க ஆனால் தானம் குடுக்கிற நேரத்தில அது ஆறு ஏழா கூட சில நேரம் மாறக்கூடும்.
இதெல்லாம் விட பெரிய விஷயம் பெரிய மோட்டார்பைக் இல்லாம பூசைக்கு அவங்க வெளிக்கிட மாட்டங்க .அப்பத்தான் ஒரு கோவில பூசை முடிஞ்ச பிறகு அடுத்த கோவிலுக்கு ஸ்பீடா போயி அடுத்த பூசை பண்ண முடியும் .இதில ஒரு பகிடி இருக்கு ஒரு கோவிலில் பூசை முடிஞ்ச பிறகு வேட்டிய மாரத்தி டெனிம் ஒன்ன்டு போட்டு கிட்டுதான் அவங்க சில நேரம் அடுத்த கோவிலுக்கு போவாங்களாம் .இன்னும் நிறை ய இருக்குங்க சொன்னா இன்னிக்கு வெள்ளிகிழமை கோவில்ல பிரசாதம் கூட தரமாடங்க ........