Tuesday, August 10, 2010

இந்தியாவின் படுதோல்வியும் மேர்வின்சில்வா பதவி நீக்கமும்

இரவு கிடைத்த (கிட்டதட்ட இப்போது )கிடைத்த செய்தகள் இவை .இரண்டுமே உண்மையில் நான் எதிர்பாக்காத விடயம் இந்தியா விடயத்தில் சிறிது ஐயப்பாடு இருந்தது உண்மைதான் இருந்தாலும் இந்த அளவு மோசமாக தோற்றுபோகும் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் .ஏன் ரோஸ் டைலர் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார் இப்படி இந்தியா தங்களிடம் மண்டியிடும் என்று.சென்ற ஆசியா கோப்பையில் இதே மைதானத்தில் வெற்றியிட்டிய இந்தியா இந்த போட்டிடயில் ஓரளவு நியூசிலாந்துக்கு சாவால் விடுத்து வெற்றி பெரும் என்றே எல்லோருடைய கருத்து கணிப்புகளும் இருந்தன .நான் கூட அப்பிடிதான் எண்ணியிருந்தேன் (ஆமா கண்ட கண்ட நாயெல்லாம் கருத்து கணிப்பு சொல்லுது எண்டு நீயுமா ).

நாணய சுழற்சியில் நியுசிலாந்து வென்றவுடன் போட்டி அதன் பக்கம் போகும் என்றே தெரிந்தது .பகல் இரவு போட்டிகள் பொதுவாக இரண்டாவது துடுப்படும் அணிக்கு சாதகம் இல்லை என்பதே  பொதுவான கருத்து ஆனாலும் சகிர்உகான் ,ஹர்பஜன் இல்லாத இந்தியா ஆரம்பத்தில் பந்து வீசிய விதம பார்க்கும் போது சரி நியுசிலாந்து 88ஓட்டங்களுக்குள் எல்லா விக்கற்றுகளை இழக்கும் என்றே
எண்ண தோணியது . ஆனாலும் தலைவருக்குரிய ஆட்டத்தினை ஸ்டைரிஸ் உடன் சேர்த்து ஆபாரமாக வெளிபடுத்தினார் ரோஸ் டைலர் .ஓர் சிக்ஸ் மற்றும் எட்டு நான்கு ஓட்டத்துடன் 113 பந்துகள் எதிர் கொண்டு பெற்றார் .மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஸ்டைரிஸ் இந்திய அணியின் மொத்த ஓட்டதினினை விட ஒரு ஓட்டம் கூட பெறார் .
இந்திய பந்து வீச்சில் நெஹ்ரா சிறப்பாக வீசி நான்கு விக்கற்றுகளை சாய்த்தார் .ஆனால் இந்திய சுழல் பந்து வீச்சாளர்களின் வீரம் எடுபடாமல் போனதும் இந்த தோல்விக்கு ஒரு காரணம் தான் .மொத்தத்தில் பல இந்திய சாதனைகள் மற்றும் மைதான சாதனைகளை இந்தியா புரிந்துள்ளது இன்றைய மேட்ட்சில் தொற்றுபோய் ,ரன்கிரி மைதானத்தில் இதற்கு முன் 88 ஓட்டங்களை இலங்கைக்கு எதிராக பெற்றதுதான் சாதனையாக இருத்தது .அத இந்தியா சமன் செய்திருக்கிறது !!!!.போட்டியின் சிறப்பு ஆட்டக்காரர் விருது நான்கு பிடி மற்றும் சத்தத்தினை வெறும் ஐந்து ஓட்டத்தால் தவற விட்ட அத்துடன் சிறந்து தலைமையினை வெளிகாடிய டைலர் பெற்றரார் .(மைதானத்தில 500 அடிசிட்டு வெளில நிண்டு சிறப்பா!!!!!!!!!!ஆடின  நம்ம பசங்களுக்கு தரல்லையாம் என்று கேக்க்டது ஒரு சோக கதை )...சரி  இன்னும் ஒரு பெரிய விசயத்துக்கு வருவம் சிலருக்கு தங்க பெயர் அவங்க ஏரியாவில் மங்கி போகுது அப்பிடி எண்டா ஏதாவது கேணைதனமா அறிக்கை விடுறது இல்ல உண்ணா விரதம் இருக்கிறது (விமல் ,கலைஜர் ஐயா அவங்கள சொல்ல வில்லை ).இல்ல சுப்பிரமணிய சுவாமி மாதிரி மொக்கு தனமா பேட்டி குடுக்கிறது .அப்பிடி தங்கட இமேஜை நிலை நிறுத்தி கொள்ளுவார்கள் !!!!!!!.அப்பிடி நடந்த சம்பவம்தான் இப்ப இப்பிடி ஆப்பா வந்திருக்கு மேர்வினுக்கு ,விமல் வீரவன்ச உண்ணாவிரதம் இருந்த பிறகு தன்ன கணக்கில எடுக்காமல் விட டெங்கு பக்கம் தாவி தன்னட பேர ஊருக்கு பறை அடிக்க ஆரம்பித்த மேர்வின் இது தன பதவிக்கே சங்கு ஊதும் என தெரிந்திருக்க நியாஜம் இல்லை .கேப்டன் விஜயகாந்த் பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்லுற மாதிரி மரத்தில கட்டி வச்ச விஷயம் ரொம்ப பெரிசாகி (மேர்வின் முதல் இருந்தாது போன்று ஊடக பிரதியமைசர் என்றால் இந்த சிக்கல் வந்திருக்காது என்று நம்புகிறேன் .)

இப்ப சிறிது நேரத்துக்கு முதல் ஜனாதிபதி அலுவலகம் விடுத்த அறிக்கை கத்தி வடிவில் மேர்வின் பதவியின் கழுத்தை வெட்டியும் அவரின் வேட்டியை கூட விடாமல் அதாங்க கட்சி உறுப்பினர் பதவி அதையும் பறித்து போயிருக்கிறது .


ஒன்னு ஒரு கொலை நிட்ட்சயம் நடக்கும் அந்த சமுர்த்தி உத்தியோகத்தர் மரணம் கட்டாயம் .கூடவே மேர்வினுக்கு ஏதும் நாட்டு தூதுவர் பதவி நிட்சயம் (உகண்டா பொருத்தமா இருக்குமோ ).இல்லாவிடின் சியல் நேரம் காபினெட் அங்கீகாரம் மிக்க அமைச்சு பதவி கிடைக்கலாம் ..


இதுதான் நம்ம நாடு ..