Friday, July 23, 2010

மர மண்டைங்க!!!! பாருங்க

எங்க ஊருல கோவில் குளம் அப்பிடி எண்டா கொஞ்சம் சந்தோசம் எல்லோருக்கும் இப்பிடித்தான் ஒருமுறை என் ஏரியாவில் இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து கொண்டு இருந்துச்சு .சரி நாமளும் போவமே ..அப்பிடி எண்டு போட்டு வெளிக்கிட்டாச்சு .அங்க பூசை தொடங்க வில்லை நாங்க எங்க செட் கூட இருந்து கும்மி அடிச்சு கிட்டு இருந்தம் ..திடிரென ஒரு இடத்தில நிறைய ஆக்கள் கூடி ஆ ஊ அப்பிடி எண்டு பெரிய பரபரப்பு .விடுவம்மா நாங்க உடனே அட்டேன்ஷன் போட்டு விட்டம் .சார்  ஐ அம் பிரசன்ட் உடனே எலோரும் அங்க நிக்க ஒரு மருத மரம .அந்த கோவிலுக்கே மருதை மாரியம்மன் கோவில் எண்டுதான் பேர் .அதுல ஒரு நிலத்தில இருந்து ரெண்டு அடி உயரத்தில ஒரு மொக்கு ஒண்டு இருந்துச்சு (மொக்கு எண்டா என்ன்ன என்று கேப்பவர்கள் தனியாக என்னிடம் டியுசன் வரவும் .கட்டணங்கள் கழிவுடன் அறவிடப்படும் ) .அந்த மொக்குல ஒரு முகம் மாதிரி தெரியுதாம் எண்டு போட்டு அது மாரி அம்மன் அப்பிடி எண்டு பெரிசா அதுக்கு சேலை ஒன்னு சுத்தினாங்க .(சேலை அதுக்கு சுத்தினான்களோ நல்ல காதில பூ சுத்தினாங்க )
எங்க ஊரு குருக்கள் ஒருவர் நல்ல படம் போடுவார் .அவருதான் அந்த மொக்கு க்கு முகம் மாதிரி செட் போட்டு பூ வச்சு போட்டு வச்சு ஒரு மாதிரி சாமி ஆக்கி கும்பிட தொடன்கினாங்க .



சரி அதெல்லாம் இருக்கட்டும் நீ என்ன சொல்ல வார அப்பிடி எண்டு கேக்குரிங்க கொஞ்சம் பொறுங்க பாஸ் ...இது ஒருசிலருக்கு சாமி .ஆனா எங்க போல ஆக்களுக்கு -------------  .


இதேபோல இந்த இணையத்தை ஒரு தரம் கிளறி பார்த்தன் .நிறைய சிக்கிச்சுங்க பாருங்க ..







இந்த படாத பாருங்க இது ஒரு கமுகு மரம இது பாளை எடுத்து தான் கோவில பாவிக்கிறது ,அந்த மரதிலையே இப்பிடி எண்டா ..இது நம்ம ஊர் அப்பிடி எண்டா கேக்கவா வேணும் ..






.