Sunday, July 4, 2010

என்ன நடக்குது எங்க ஊருல !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இது ஒரு மதம் சம்பநதபட்ட விடயமா ?இல்லை நம்பிக்கை சம்பந்தபட்ட விடயமா என்று கூட எனக்கு புரியவில்லை (மதம் கூட நம்பிக்கை சம்பந்த பட்டது என்கிற பகுத்தறிவாளர்களே கொஞ்சம் பொறுங்க ).உண்மையில் நான் ஒரு மதவாதியோ இல்லை பகுதறிவாதியோ இல்லை ஒரு ரெண்டும்கெட்டான் ரேஞ்சில் இருக்கன் .

.பொதுவா எல்லா இடத்திலும் அதிலும் மட்டக்களப்பு மாவட்டதில தொடர்சியா பல அதிசயங்கள் ,ஆச்சரியங்கள் நம்பமுடியாத விடயங்கள் ஏன் வதந்திகள் கட்டுக்கதைகள் என்று கூட சொல்லலாம் .அப்பிடி பல சம்பவங்கள் நடந்தேறிக்கொண்டு இருக்கு அதில ஒரு பகுதிதான் எங்க ஊருலயும் நடந்தேறிக்கொண்டு இருக்கு .

எங்க  ஊர் ஒரு கிராமம் அப்பிடி என்றும் சொல்ல முடியாமல் ஒரு கிராம சாயலில் உள்ள ஒரு நகரம் என்று சொல்ல கூடிய இடம் .இங்க முக்கியமான அதிலும் ஒரு பக்தியான விஷயம் எங்க அம்மன் கோவில் மட்டும்தான் .அம்மன்  அப்பிடி என்றாலே எல்லோருக்கும் ஒரு பயம் .பக்தி இது இப்பிடி இருக்க .


நான் சொல்ல போற சம்பவம்  நடக்கும் இடம் ஒரு வீடு  .அந்த வீடு நானும் எனது நண்பர்களும் அதிக அளவில் புழங்கும் இடத்தில உள்ள வீடு .(ஒன்னும் தப்பா நினைக்கதிங்கோ அது எங்க கல்வி நிலையம் இருக்கிற இடம் இத பத்தி நான் பிறகு ஒரு நாளைக்கு விலாவரியா சொல்லுறன் இப்ப இந்த மேட்டர கவனிப்பம ).இந்த வீடில் ஒரு அண்ணன் அவரின் மனைவி இருவர் மட்டும் தான் அவர்களுக்கும் இன்னும் குழந்தை கூட பிறக்கவில்லை .அவர்கள் கடவுள் மீது ரொம்ம்ப பத்தி உடையவர்கள் .

சரியாக நாள் தெரியவில்லை கடந்த சனி  கிழமை என்று நினைக்கிறன் .அவர்களுடைய  வீட்டு துளசி மாடம் அருகில் இருந்து பூமியில் வெடிப்பு உருவாகி அதிலிருந்து ஒரு சிலை தோன்னறியிருப்பதாகவும் அதை ஒரு பூசாரி ஒருவரின் உதவியுடன் அவர்கள்  எடுக்க இருப்பதாகவும் பெரிய அளவில் கதை அடிபட்டது .(இதெல்லாம் ஒரு கதை இத நாங்க நம்பனும் போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்க எண்டு நீங்க சொல்லுறது விளங்குது இருந்தாலும் கொஞ்சம் கேளுங்கவன் ) .நான் இந்த கதைய நம்பினனா இல்லையா என்கிறத விட அதுக்கு பிறகு வார விஷயம் கொஞ்சம் சுவாரசியமானது சிலருக்கு சிரிப்பும் வரும் அவங்களுக்கு பேரு பக்குதறிவாளர்கள் . அதே போல அன்று இரவே எங்க அயலூர் இருந்து (எருவில்) ஒரு பெண் பூசாரி வந்து (பூசாரி என்கிறது மந்திரவாதிய ஒரு மரியாதைக்க் கு பூசாரி எண்டு போட்டு இருக்கன்) எல்லா மந்திரம் சொல்லி அந்த விட்டு அக்கா அவவும் சாமி வந்து ஆடி ரெண்டு பேருமா சேர்ந்து அந்த துளசி மாடதத்துக்கு பக்கத்தில் இருந்த சிலையை எடுத்து விட்டார்கள் .அத்த்துடன் அந்த அக்கா இப்போது கர்ப்பிணியா இருப்பதனால் அச்சிலை கடும் சத்தி உடையதாலும் அதை தான் வைத்திருந்து நீங்கள் கேக்கும் போது தருகிறேன் என்று சொல்லி அங்கு வந்த பூசாரி அதை தந்து ஊருக்கு கொண்டு சென்று அதை வைத்து பல பேருக்கு கட்டு சொல்லி ,வாக்கு சொல்லி (இதெல்லாம் என்ன என்னறு தயவு பண்ணி கேக்காதிங்க எனக்கும் தெரியாது ).ரெண்டு நாள் ஒட்டி இருக்கிறார் .


படம் முடியக்குள்ள போலீஸ் வருமே அது மாதிரி அப்பத்தான் வந்து இறங்கி இருக்கு ஊரு பெரிய ஆக்கள் (யாருடா அது எண்டு  கேக்காதிங்கோ plzzzzzzzzzzzzzzzzzzzzzz)அவங்க அங்க எருவிலுக்கு போய் எங்க ஊருல வந்த சிலைய எப்பிடி நீ வச்சு இருப்ப அப்பி இப்பிடி எண்டு கேட்டு சிலைய ஒருமாதிரி இங்க கொண்டு வந்து திரும்பவும் வைத்து விட்டார்கள் .பிறகு அந்த வீடு ஆக்கள் தங்களுக்கு தெரிந்த ஒரு பூசாரிய கொண்டு வந்து பல சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் செய்து  அந்த அக்காவ தெய்வம் ஆட வைத்து வாக்கு கேக்கும் பொது சிலை வெளி வந்த இடத்திலிருந்து இன்னும் சில பொருட்கள் இந்த வெள்ளிகிழமை வெளிவரலாம் அப்பிடி எண்டும் சொல்லி போட்டார் .

அதுக்கு இடையில இன்னும் ஒரு புதினம் அங்க எருவில் பூசாரி சிலைய அவட்ட இருந்து பறிச்சிட்டு போன கோபத்தில தனக்கு தெரிந்த எல்லாம் மந்திர தந்திரங்களையும் பயம் படுத்தி இந்த அக்காவ ஒன்னும் பண்ண முடியாம அக்கி விட்டார் .அதோட அவைக்கு இருந்த சாமியின் அருளை கூட தடுத்து நிறுத்தி விடதாக்வும் பேச்சு .(ஆகா கேக்கிறவன் கேனையானா இருந்தா எருமை மாடு கூட ஏரோப்பிளேன் ஓட்டும் என்கிறது சரியாதான் மாப்ளை இருக்கு )


அடுத்த வெள்ளி கிழமை இன்னும் பல பொருட்கள் வெளி வர போகுதாம் எண்டு போட்டு ஊருல இருக்கிற கிழடு கட்டையில இருந்து குஞ்சு கூரான் வரைக்கும் அந்த வீட்ட டோரா போட்டு கிடந்தது .அடுத்த ஊருல இருக்கிற மாதிரி எங்க ஊருலயும்  ஒரு பூசாரி பொம்பிள இருக்கா அவவும் இந்த விசயத்த கேள்வி பட்டு  சீ அவவுக்கு கனவுல தோத்திரமாகி அம்மாள் சொன்ன .(இப்பிடி எல்லாம் சொன்ன பிறகு எங்க ஊர நகர சாயலில் உள்ள கிராமம் எண்டு சொல்ல விரும்பல்ல )அவவும் வந்து ஏற்கனவே அங்க இருந்த ஒரு பூசாரி எல்லாம் சேர்த்து நேற்று அதாங்க வெள்ளிக்கிழமை ரொம்ம ரணகள படுத்தி போட்டாங்க ஆனாலும் கடைசி வரைக்கும் அந்த பொருட்கள் வேலை வராமலே போய்ட்டுங்க .ஏன் அப்பிடி எண்டு நான் அந்த பூசாரி அவரிடம் கேக்க அங்க அடுத்த ஊருல இருந்து மற்ற பூசாரி செய்கிற வேலைகளால் இது எடுக்க முடியவில்லையாம் அதாவது அங்க இருந்து இங்கு நடக்கும் விடயங்களை அவர்கள் கட்டு படுத்தி கொண்டு இருகிரார்களாம் .அந்த பாசையில் சொல்ல போன அங்க இருந்து இவங்க சாமிய அவங்க கட்டி விட்டர்கள் அத்துடன் அதை இவர்கள் அவுத்து மீண்டும் சாமிக்கு உரு கொடுத்து அப்பிடி இப்பிடி எண்டு போனது கதை .

ஆனாலும் என்னை பொறுத்த வரை இப்போது மொத்தம் மூன்று பூசாரிகள் இடையே யார் பெரிய மந்திர தந்திரம் நிறைந்தவர்கள் அப்பிடி என்கிற போட்டி நிகழுதே தவிர அதாவது மண்ணில் இருந து வந்த அந்த சிலை யாருக்கு என்கிற போட்டி இப்ப பலமா நடந்து கொண்டு இருக்கு ..


இது பாதி இன்னும் பல சுவாரசிய சம்பவங்கள் இருக்கு அது பகுதி ரெண்டுல .....(எப்பிடி part 2 போடுற அளவுக்கு மேட்டர் கொஞ்சம் பெரிசு பாஸ் )இத்துட தொடர்சி நாளைக்கு இருக்கு சோ --------நித்திரை