Monday, July 26, 2010

இறுதி செக்கனில் விபத்தில் இருந்து தப்பிய புத்திசாலி பைலட்-கனடா ஜெட் விபத்து

கடந்த வெள்ளிகிழமை கனடா  Lethbridge County Airport   அதில் விமான சாகச பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது cf-18 ரக சாகச விமானம் விபத்துக்கு உள்ளானது.ஆனாலும் அதில் இருந்த ஒட்டி மிக சாதுரியமாக இறுதி நேரத்தில் பாராசூட் உதவியுடன் வெளியில் குதித்து தப்பியிருக்கிறார் .
இது பற்றிய விடியோக்கள் கிழே
Friday, July 23, 2010

மர மண்டைங்க!!!! பாருங்க

எங்க ஊருல கோவில் குளம் அப்பிடி எண்டா கொஞ்சம் சந்தோசம் எல்லோருக்கும் இப்பிடித்தான் ஒருமுறை என் ஏரியாவில் இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து கொண்டு இருந்துச்சு .சரி நாமளும் போவமே ..அப்பிடி எண்டு போட்டு வெளிக்கிட்டாச்சு .அங்க பூசை தொடங்க வில்லை நாங்க எங்க செட் கூட இருந்து கும்மி அடிச்சு கிட்டு இருந்தம் ..திடிரென ஒரு இடத்தில நிறைய ஆக்கள் கூடி ஆ ஊ அப்பிடி எண்டு பெரிய பரபரப்பு .விடுவம்மா நாங்க உடனே அட்டேன்ஷன் போட்டு விட்டம் .சார்  ஐ அம் பிரசன்ட் உடனே எலோரும் அங்க நிக்க ஒரு மருத மரம .அந்த கோவிலுக்கே மருதை மாரியம்மன் கோவில் எண்டுதான் பேர் .அதுல ஒரு நிலத்தில இருந்து ரெண்டு அடி உயரத்தில ஒரு மொக்கு ஒண்டு இருந்துச்சு (மொக்கு எண்டா என்ன்ன என்று கேப்பவர்கள் தனியாக என்னிடம் டியுசன் வரவும் .கட்டணங்கள் கழிவுடன் அறவிடப்படும் ) .அந்த மொக்குல ஒரு முகம் மாதிரி தெரியுதாம் எண்டு போட்டு அது மாரி அம்மன் அப்பிடி எண்டு பெரிசா அதுக்கு சேலை ஒன்னு சுத்தினாங்க .(சேலை அதுக்கு சுத்தினான்களோ நல்ல காதில பூ சுத்தினாங்க )
எங்க ஊரு குருக்கள் ஒருவர் நல்ல படம் போடுவார் .அவருதான் அந்த மொக்கு க்கு முகம் மாதிரி செட் போட்டு பூ வச்சு போட்டு வச்சு ஒரு மாதிரி சாமி ஆக்கி கும்பிட தொடன்கினாங்க .சரி அதெல்லாம் இருக்கட்டும் நீ என்ன சொல்ல வார அப்பிடி எண்டு கேக்குரிங்க கொஞ்சம் பொறுங்க பாஸ் ...இது ஒருசிலருக்கு சாமி .ஆனா எங்க போல ஆக்களுக்கு -------------  .


இதேபோல இந்த இணையத்தை ஒரு தரம் கிளறி பார்த்தன் .நிறைய சிக்கிச்சுங்க பாருங்க ..இந்த படாத பாருங்க இது ஒரு கமுகு மரம இது பாளை எடுத்து தான் கோவில பாவிக்கிறது ,அந்த மரதிலையே இப்பிடி எண்டா ..இது நம்ம ஊர் அப்பிடி எண்டா கேக்கவா வேணும் ..


.

Thursday, July 22, 2010

Thursday, July 15, 2010

மட்டு .களுவாஞ்சிக்குடியில் பட்டபகலில் 50 லட்சம் துணிகர கொள்ளை .......

பகல்12 மணி இந்நேரம் சிறிது ஆள் நடமாட்டம் குறைந்தே இருக்கும் இந்நேரத்தில் தேசிய சேமிப்பு வங்கியில் பணம் குறைவடைய அவர்கள் இலங்கை வங்கி இல இருந்து பணம் பெற்று கொள்ள வந்து அங்கிருந்து பணத்தை எடுத்து 500 m தொலைவிலே இருக்கும் தங்களது வங்கிக்கு புறப்பட இருந்த வேளையில் தனது கை வரிசையை காட்டி இருக்கிறான் .கொள்ளைக்காரன் .
ஒவ்வொரு சானுக்கும் போலீஸ் என மிகவும் அதிகம் சிவில் நிர்வாகம் கொண்ட இடம் இந்த வங்கிகள் அமைந்திருக்கும் பிரதேசம் .தனி ஒரு மனிசனாக வந்து இந்த துணி கர கொள்ளை நடத்தி இருக்கிறான் கொள்ளைக்காரன் .மொத்தம் எவ்வளுவு பணம் என்பது இன்னும் முறையா தெரியாத போதும் அறிந்த வரையில் நாற்பது இருந்து ஐம்பது லட்சம் வரை என்கிறது வட்டாரம்

Sunday, July 4, 2010

என்ன நடக்குது எங்க ஊருல !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இது ஒரு மதம் சம்பநதபட்ட விடயமா ?இல்லை நம்பிக்கை சம்பந்தபட்ட விடயமா என்று கூட எனக்கு புரியவில்லை (மதம் கூட நம்பிக்கை சம்பந்த பட்டது என்கிற பகுத்தறிவாளர்களே கொஞ்சம் பொறுங்க ).உண்மையில் நான் ஒரு மதவாதியோ இல்லை பகுதறிவாதியோ இல்லை ஒரு ரெண்டும்கெட்டான் ரேஞ்சில் இருக்கன் .

.பொதுவா எல்லா இடத்திலும் அதிலும் மட்டக்களப்பு மாவட்டதில தொடர்சியா பல அதிசயங்கள் ,ஆச்சரியங்கள் நம்பமுடியாத விடயங்கள் ஏன் வதந்திகள் கட்டுக்கதைகள் என்று கூட சொல்லலாம் .அப்பிடி பல சம்பவங்கள் நடந்தேறிக்கொண்டு இருக்கு அதில ஒரு பகுதிதான் எங்க ஊருலயும் நடந்தேறிக்கொண்டு இருக்கு .

எங்க  ஊர் ஒரு கிராமம் அப்பிடி என்றும் சொல்ல முடியாமல் ஒரு கிராம சாயலில் உள்ள ஒரு நகரம் என்று சொல்ல கூடிய இடம் .இங்க முக்கியமான அதிலும் ஒரு பக்தியான விஷயம் எங்க அம்மன் கோவில் மட்டும்தான் .அம்மன்  அப்பிடி என்றாலே எல்லோருக்கும் ஒரு பயம் .பக்தி இது இப்பிடி இருக்க .


நான் சொல்ல போற சம்பவம்  நடக்கும் இடம் ஒரு வீடு  .அந்த வீடு நானும் எனது நண்பர்களும் அதிக அளவில் புழங்கும் இடத்தில உள்ள வீடு .(ஒன்னும் தப்பா நினைக்கதிங்கோ அது எங்க கல்வி நிலையம் இருக்கிற இடம் இத பத்தி நான் பிறகு ஒரு நாளைக்கு விலாவரியா சொல்லுறன் இப்ப இந்த மேட்டர கவனிப்பம ).இந்த வீடில் ஒரு அண்ணன் அவரின் மனைவி இருவர் மட்டும் தான் அவர்களுக்கும் இன்னும் குழந்தை கூட பிறக்கவில்லை .அவர்கள் கடவுள் மீது ரொம்ம்ப பத்தி உடையவர்கள் .

சரியாக நாள் தெரியவில்லை கடந்த சனி  கிழமை என்று நினைக்கிறன் .அவர்களுடைய  வீட்டு துளசி மாடம் அருகில் இருந்து பூமியில் வெடிப்பு உருவாகி அதிலிருந்து ஒரு சிலை தோன்னறியிருப்பதாகவும் அதை ஒரு பூசாரி ஒருவரின் உதவியுடன் அவர்கள்  எடுக்க இருப்பதாகவும் பெரிய அளவில் கதை அடிபட்டது .(இதெல்லாம் ஒரு கதை இத நாங்க நம்பனும் போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்க எண்டு நீங்க சொல்லுறது விளங்குது இருந்தாலும் கொஞ்சம் கேளுங்கவன் ) .நான் இந்த கதைய நம்பினனா இல்லையா என்கிறத விட அதுக்கு பிறகு வார விஷயம் கொஞ்சம் சுவாரசியமானது சிலருக்கு சிரிப்பும் வரும் அவங்களுக்கு பேரு பக்குதறிவாளர்கள் . அதே போல அன்று இரவே எங்க அயலூர் இருந்து (எருவில்) ஒரு பெண் பூசாரி வந்து (பூசாரி என்கிறது மந்திரவாதிய ஒரு மரியாதைக்க் கு பூசாரி எண்டு போட்டு இருக்கன்) எல்லா மந்திரம் சொல்லி அந்த விட்டு அக்கா அவவும் சாமி வந்து ஆடி ரெண்டு பேருமா சேர்ந்து அந்த துளசி மாடதத்துக்கு பக்கத்தில் இருந்த சிலையை எடுத்து விட்டார்கள் .அத்த்துடன் அந்த அக்கா இப்போது கர்ப்பிணியா இருப்பதனால் அச்சிலை கடும் சத்தி உடையதாலும் அதை தான் வைத்திருந்து நீங்கள் கேக்கும் போது தருகிறேன் என்று சொல்லி அங்கு வந்த பூசாரி அதை தந்து ஊருக்கு கொண்டு சென்று அதை வைத்து பல பேருக்கு கட்டு சொல்லி ,வாக்கு சொல்லி (இதெல்லாம் என்ன என்னறு தயவு பண்ணி கேக்காதிங்க எனக்கும் தெரியாது ).ரெண்டு நாள் ஒட்டி இருக்கிறார் .


படம் முடியக்குள்ள போலீஸ் வருமே அது மாதிரி அப்பத்தான் வந்து இறங்கி இருக்கு ஊரு பெரிய ஆக்கள் (யாருடா அது எண்டு  கேக்காதிங்கோ plzzzzzzzzzzzzzzzzzzzzzz)அவங்க அங்க எருவிலுக்கு போய் எங்க ஊருல வந்த சிலைய எப்பிடி நீ வச்சு இருப்ப அப்பி இப்பிடி எண்டு கேட்டு சிலைய ஒருமாதிரி இங்க கொண்டு வந்து திரும்பவும் வைத்து விட்டார்கள் .பிறகு அந்த வீடு ஆக்கள் தங்களுக்கு தெரிந்த ஒரு பூசாரிய கொண்டு வந்து பல சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் செய்து  அந்த அக்காவ தெய்வம் ஆட வைத்து வாக்கு கேக்கும் பொது சிலை வெளி வந்த இடத்திலிருந்து இன்னும் சில பொருட்கள் இந்த வெள்ளிகிழமை வெளிவரலாம் அப்பிடி எண்டும் சொல்லி போட்டார் .

அதுக்கு இடையில இன்னும் ஒரு புதினம் அங்க எருவில் பூசாரி சிலைய அவட்ட இருந்து பறிச்சிட்டு போன கோபத்தில தனக்கு தெரிந்த எல்லாம் மந்திர தந்திரங்களையும் பயம் படுத்தி இந்த அக்காவ ஒன்னும் பண்ண முடியாம அக்கி விட்டார் .அதோட அவைக்கு இருந்த சாமியின் அருளை கூட தடுத்து நிறுத்தி விடதாக்வும் பேச்சு .(ஆகா கேக்கிறவன் கேனையானா இருந்தா எருமை மாடு கூட ஏரோப்பிளேன் ஓட்டும் என்கிறது சரியாதான் மாப்ளை இருக்கு )


அடுத்த வெள்ளி கிழமை இன்னும் பல பொருட்கள் வெளி வர போகுதாம் எண்டு போட்டு ஊருல இருக்கிற கிழடு கட்டையில இருந்து குஞ்சு கூரான் வரைக்கும் அந்த வீட்ட டோரா போட்டு கிடந்தது .அடுத்த ஊருல இருக்கிற மாதிரி எங்க ஊருலயும்  ஒரு பூசாரி பொம்பிள இருக்கா அவவும் இந்த விசயத்த கேள்வி பட்டு  சீ அவவுக்கு கனவுல தோத்திரமாகி அம்மாள் சொன்ன .(இப்பிடி எல்லாம் சொன்ன பிறகு எங்க ஊர நகர சாயலில் உள்ள கிராமம் எண்டு சொல்ல விரும்பல்ல )அவவும் வந்து ஏற்கனவே அங்க இருந்த ஒரு பூசாரி எல்லாம் சேர்த்து நேற்று அதாங்க வெள்ளிக்கிழமை ரொம்ம ரணகள படுத்தி போட்டாங்க ஆனாலும் கடைசி வரைக்கும் அந்த பொருட்கள் வேலை வராமலே போய்ட்டுங்க .ஏன் அப்பிடி எண்டு நான் அந்த பூசாரி அவரிடம் கேக்க அங்க அடுத்த ஊருல இருந்து மற்ற பூசாரி செய்கிற வேலைகளால் இது எடுக்க முடியவில்லையாம் அதாவது அங்க இருந்து இங்கு நடக்கும் விடயங்களை அவர்கள் கட்டு படுத்தி கொண்டு இருகிரார்களாம் .அந்த பாசையில் சொல்ல போன அங்க இருந்து இவங்க சாமிய அவங்க கட்டி விட்டர்கள் அத்துடன் அதை இவர்கள் அவுத்து மீண்டும் சாமிக்கு உரு கொடுத்து அப்பிடி இப்பிடி எண்டு போனது கதை .

ஆனாலும் என்னை பொறுத்த வரை இப்போது மொத்தம் மூன்று பூசாரிகள் இடையே யார் பெரிய மந்திர தந்திரம் நிறைந்தவர்கள் அப்பிடி என்கிற போட்டி நிகழுதே தவிர அதாவது மண்ணில் இருந து வந்த அந்த சிலை யாருக்கு என்கிற போட்டி இப்ப பலமா நடந்து கொண்டு இருக்கு ..


இது பாதி இன்னும் பல சுவாரசிய சம்பவங்கள் இருக்கு அது பகுதி ரெண்டுல .....(எப்பிடி part 2 போடுற அளவுக்கு மேட்டர் கொஞ்சம் பெரிசு பாஸ் )இத்துட தொடர்சி நாளைக்கு இருக்கு சோ --------நித்திரை

Friday, July 2, 2010

பிரேசிலின் உலக கிண்ண கனவு தகர்ந்து போனது

எல்லோரும் எதிர்பார்த்த பிரேசில் இறுதியில் நேர்தர்லாந்திடம் அதிர்சி ,அவமான தோல்வி அடைந்து போனது இரண்டு கோல் நேர்தர்லாந்து ,ஒரு கோல் பிரேசில்

இது ரெட் கார்டு காட்டிய சீன்ஸ் இதுThursday, July 1, 2010

ரொம்ப நாளாச்சுங்க ஒரு பதிவு போட்டு ...

முந்தி எல்லாம் யாரும் எனக்கு நேரமே இல்லப்பா அங்க வேலை இங்க வேலை அப்பிடி இப்பிடி எண்டு சொல்லும்போது நமக்கு கொஞ்சம் சிரிப்பு வரும் ஆஹா ரொம்ம்ப ஓவரா பிலிம் காட்டுறான் .இவன் அப்பிடி என்ன வேலை செய்கிறான் என்று பார்த்து விட வேனுமுடா மாப்பிள்ள அப்பிடி எல்லாம் எண்ணம வரும் .இப்ப அந்த மாதிரி நான் சொல்ல வேண்டி வந்திடுச்சு எண்டு நினைக்ககுள்ள எனக்கே என் மேல சிப்பு வந்திடுச்சு சிப்பு .

ய்யோவ் யாருயா அது கல்லெடுத்து என் மேல அடிக்க வாறது .விடுங்க பாஸ் எனக்கும் ஒரு வேலை கிடைச்சுட்டுது எண்டு சொல்லுறதுக்கு இவாளவு சுத்தி வளைக்க வேண்டி கிடக்குது .ஆகவே அன்பு மெய்யடியார்களுக்கு இத்தால் அறிய தருவது யாதெனில் சங்கருக்கு ஒரு வேலை கிடைத்த காரணத்தினால் (அதுல சங்கர் என்கிறது நான்தான் அப்பு )இந்த பதிவு எழுதும் அலுவல்கள் கொஞ்சம் குறைந்து போய்விட்டது .சுருங்க சொன்னால் நிறைய ஆணி புடுங்க வேண்டி இருக்குது ஆவலவுதான் )


 இப்பிடித்தான் நான் ஆணி புடுங்கிறது

சரி  நிறைய நாளைக்கு பிறகு ஒரு பதிவு போடுராம் ரத பத்தி போடுறது (நீ எத்த போடாலும்ஹிட்ஸ் வாறது குறைவுதான் அதுக்குள்ளே என்ன சீனு அப்பிடி ஏன்னு என் உல் மனசு சொல்லிச்சு ஆனாலும் விடுவமா நாங்க அப்பிடியே ஒரு ரூம்ஸ் போட்டு யோசிச்ச்மில்ல ....(அதுல அப்பிடியே தூங்கி போன கதை வேணாமே )

அட இதுக்கு இடையில ஒன்னு சொல்ல மறந்திட்டேங்க நம்ம ரசிகர்கள் வேற தொல்லையப்ப்பா !!!!!!!! என்ன பாஸ் ஒன்னும் போடல்ல (அட நான் பதிவ சொல்லுறன்  யட்டிய இல்லை ).உங்க ப்லோக்ஸ் சும்மா கிடக்குது அப்பிடி எண்டு வேற உசுப்பு எத்தி விட்டங்களா சரி எதாச்சும் ஒன்னு சிக்கும் அத பத்தி போடுவம் அப்பிடி எண்டு வந்து உக்காந்தா .(மேல் உள்ள பந்தியில் உள்ள தற்பெருமை கூ ரும் வாசகங்கள் யார் மனசையும் புண் படுத்தி இருந்தால் நான் பொறுப்பு இல்லை ,அத்துடன் அவை கதையல்ல நிஜம்  என்றும் தெரிவித்து கொள்கிறேன் )

சரி சரி மேட்டருக்கு வா வா ...(அது சரி மேட்டர் இருந்தா நாங்களே டிரக்க்டா அங்கே வந்து குத்துகால் போட்டு உக்காந்துகுவமில்ல ..)இது எப்பிட் இருக்கு தெரியுமா விஜய் டிவில போடுதுக்கு சரக்கு இல்லாட்டி பெஸ்ட் ஒப் -------------- அப்பிடி எண்டு போட்டு ஒரு நாலா ஓட்டுவான்களே அது மாதிரி தாங்க .என்ன ஒரு மாதிரி விஜய் டிவி பக்கம் நகர்திகிட்டு வந்திட்டன் எண்டு பார்கிரிங்களா .அங்கேயும் இதே சீன போகுதுங்க .சுப்பர் சிங்கர் ஜூனியர் அப்பிடி எண்டு ஒரு நல்லா நிகழ்சி போச்சுதுங்க இப்ப அது முடின்ச்சு அதுல நடந்து டகால்டி வேலை எல்லா தொகுத்து இப்ப நம்ம சிவா போட்டு கிட்டு இருக்காரு . அது மாதிரி நானும் எதாசும் பண்ணலாம எண்டு கூ ட யோசிக்க வேண்டி இருக்கு . இன்னும் ஒரு வசனம் இதுக்கு மேல எழுதினா உன் ப்லோக்ஸ் அட்டராஸ் முனாடி வந்து பெற்றோல்ஊத்தி கொளுத்தி செத்த்விடுவன் அப்பிடி எண்டு இங்க மிரட்ட ஒருவரும் இல்லை ஏன் எனா பெற்றோல் விலை ரொம்ம்ப கூ டி போயட்டுன்கா . சரி நான்இப்ப போய்ட்டு நாளைக்கு கண்டிப்பா ஒரு புது மேட்டரோட கட்டயாம் வருவன் .இது ஏன் மாமியார் நாகம்மா மேலை சத்தியம் இப்படிக்கு சிநேக்க் சங்கர் (ஒழுங்கா சத்தியம் பண்ண கூ ட தெரியல்ல )