Wednesday, March 10, 2010

எனக்கு பிடித்த டி.வி நிகழ்சி(லொள்ளுசபா ) -தொடர் பதிவு

அன்பு சகோதரர்களே ,அருமை நண்பர்களே இத்தால் நான் உங்களுக்கு தெரிவிப்பது யாது எனில் நானும் ஒரு தொடர் பதிவுக்கு !!!!! அழைக்க பட்டு இருக்கிறேன் .(நம்மளையும் நம்பி கூப்பிட்டு இருக்கங்கோ )நண்பர் சீமான்கனி என்னை இந்த பதிவுக்கு அழைத்து இருந்தார் .இதற்கு முந்திய பதிவாக வந்திருக்க வேண்டியது எதோ என்  வேலைபளு காரணமாக அப்பிடி என்று பொய் சொல்ல விரும்பல்ல சும்மாதான் வெட்டியா இருக்கன் .எப்பிடியோ எழுத வில்லை .ஆனால் இப்ப நீங்க மாட்டி விட்டிங்கோ கட்டாயம் இத வாசித்து பார்க்கத்தான் வேண்டும் .



சீமான்கனிக்கு என்ட நிலைமை பற்றி ஒழுங்கா தெரியல்ல போல .இல்ல விடின் எனக்கு பிடித்த டி.வி நிகழ்சி அப்பிடி என்ட தலைப்புல தொடர் பதிவுக்கு அழைக்க மாட்டார் .நாங்க எல்லாம் ஒரு நாடோடி இல்லிங்க நகரமோடி .உயர்தரத்துக்கு மட்டக்களப்பு ,இப்ப கொழும்பு எப்பவாவது இருந்து போட்டு வீடுக்கு போவது உண்டு (அம்மா இத வாசிக்க மாட்டாங்க எண்டு தெரியும் அதான் இப்பிடி ஒரு பொய் ).எப்ப லீவு வருகுதோ அப்ப போவன் .அதுக்குள்ளே எப்பிடி டி .வி பாக்கிற அதிலையும் புடிச்ச நிகழ்சி கொஞ்சம் கஷ்டமான விசயம்தான் ..இருந்தாலும் இந்த dailog காரனுக்கு காசு குடுத்து ஒரு அகலப்பட்டை எடுத்த பிறகுதான் டி.வி நிகழ்சி எல்லாம் ஒரு மாதிரி டவுன்லோட் பண்ணி பார்க்கிறது .அப்பா ஒருமாதிரி முன்னுரை முடிஞ்சி மேட்டருக்கு வாரன் போல

இங்க லங்காவில டி.வி அப்பிடி எண்டா தமிழ் சனல் குறைவுதான் அதிலும் இந்திய சனல்தான் ஓடிக்கிட்டு இருக்கும் .ஒரு தமிழ் சானலில் சிங்கப்பூர் நிகழ்சி எல்லாம் போடுவாங்கோ (லோசன் அண்ணா உங்க டி.வி பற்றி சொல்ல வில்லை ).அதில தான் நிகழ்சி பார்க்கிறது .
வழக்கமா நான் கொஞ்சம் லொள்ளு பர்ர்டிதான் (அத நான் சொல்ல கூடாது தான் இருதாலும் இப்ப சொல்ல வேண்டி இருக்கு அதான் சொல்லிட்டன தப்ப எடுத்துக்காதிங்க ).நக்கல் அடிக்கிறது என்கிறது எனக்கு பிடிக்கிற ஒரு விஷயம் (பொண்ணுங்களுக்கு அப்பிடி பண்ணவே மாட்டம் ;நாங்கெல்லாம் ரொம்ம்ப !!!!!!!!!! நல்லவங்க ).



இப்ப எனக்குபிடிச்சநிகழ்சி விஜய் டி.வி இல போன (இப்ப போகுதோ தெரியாது )
லொள்ளுசபா .என்னமாதிரி ஜோசிக்கிரான்களோ தெரியல்ல சும்மா சட்டப்படி ஜோசித்து ஒரு செக்கனுக்கு ஒருதரம் ஜோக் மழை .சந்தானம் ,ஜீவா,சுவாமிநாதன் ,ஈஸ்வர் ,முக்கியமா மண்டை மனோகர் (இப்ப சன் போல அவங்க யார்தான் விட்டாங்க ).என்ட ஈ டிரைவ்ல ஒரு பெரிய சைஸ் பிடிச்சி இருக்கு அநேகமா எல்லா லொள்ளுசபாநிகழசியும் இருக்கும்


அதிலயும் தலைவிதி அப்பிடி எண்டு பேரு வச்சி தளபதி படத்த எடுத்து இருப்பாங்க சூப்பரு .இன்னும் பல படங்கள் அந்த குருப் போட்டு தாக்கி இருப்பாங்க .ஒரு நிகழ்சியில் மண்டை மனோகர் இங்கிலீஷ் கதைச்சு நடிப்பார்

சரி அத நீங்களும்பாருங்கோ
எனக்கு பிடித்த சில வீடியோக்கள்












இப்பிடி பல நக்கல் நையாண்டி நிறைந்த இந்த நிகழ்சி எனக்கு ரொம்ம பிடிக்கும் .ஆனா இப்ப இருக்கோ இல்லையா எண்டு யாரவது எனக்கு சொல்லுங்கோ


நான் இத வேறு நபர்களுக்கு தொடர் பதிவுக்கு அழைக்கக் விடும் இருந்தாலும்இந்த விளையாடுக்கு நான் வரவில்லை ..விருப்பம் எனில் எல்லோரும் தொடரலாம் (அதுக்காக நான் கேபிள் சங்கரையும் பரிசல் காரனையும் மா அழைக்க முடியும் பொதுவா போட்டு இருக்கான் வர விருப்பன் எண்டா தொடருங்கோ )