Thursday, March 25, 2010

விஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####

மீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள்   "குடிமக்கள்" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின் இறுதி அவதாரமே நான் என அந்த கஞ்சா சாமி !!!!!! சொல்லுகிராராம் ,என சொல்ல பட்டது .அதிலிருந்து  அப்படியே ஒரு யூ ரேன் எடுத்து இந்த மேட்டருக்கு வந்தன் .


விஷ்ணுவின் தசாவதாரங்கள் பற்றி உங்களுக்கு தெரியும் (டேய்அது யாரது கமலில் தசாவதாரம் பற்றிதான் தெரியும் என்கிறன்) ஒரு சீரியசான மேட்டர் பற்றி எழுதுவம் எண்டா விட மாட்டங்க .இந்த அவதாரங்களுக்கும் டார்வின் சொன்ன கூர்ப்பு கொள்கைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது .என்னடா இவன் மொட்டை தலைக்கும் முழம்காலுக்கும் முடிச்சு போடுகிறான் என எண்ணாதீர்கள்.கிழே செல்ல செல்ல உங்களுக்கும் விஷயம் புரிபடும் .

முதலில் விஷ்ணுவின் அவதாரங்கள் பற்றி பார்ப்போம் .


1)மச்ச அவதாரம் இது மீன் வடிவம்



2)கூர்ம அவதாரம்   இது ஆமை வடிவம்
3)வராக அவதாரம் இது பன்றி வடிவினை குறிக்கும்

4)நரசிம்மஅவதாரம்  இது  விஜயகாந்த் உருவம் சீ மனிதனும் மிருகமும் இணைந்த உருவம் 



5)வாமன அவதாரம் இது 

 6)பரசுராமர்-  கோபம நிறைந்த மனிதர் (சினிமா காரங்க மோசமப்பு இந்த அவதாரம் பெயரிலும் ஒரு படம் இருக்கு .ஏன் அவதாரம் என்கிற பேரிலும் படம் இருக்கு அதவிட தசாவதாரம் என்கிற பேரிலும் படம் இருக்கு )



 7)இராமர் அவதாரம்

 8)பலராமர்








 9)கிருஸ்னர்

 10)கல்கி அவதாரம்
கிழே இரண்டு படங்கள் தந்திருக்கிறேன் அடிக்க மட்டும் வராதீர்கள்



இந்த கல்கி அவதாரம் இன்னும் மகாவிஷ்ணுவால் எடுக்க பட வில்லை அப்படியான காலம் வரும் போது உலகம் அழிவினை மட்டும் எதிர்நோக்கும் எனவும் இந்துக்களின் நம்பிக்கை .ஆனால் சில முட்டாள்கள் தாங்கள் தான் கல்கி அவதாரம் கூறி வருகின்றன .



இது கிடக்க சரி மேல படங்களுடன்நாம் பார்த்த அந்த அவதாரங்களுக்கும் டார்வினின் கூர்ப்பு கொள்ள்கைக்கும் என்ன தொடர்பு என நீங்கள் நினைக்கிர்கள் .மிகவும் இலகுவானதே .டார்வினின் கருத்து படி முதலில் உலகில் உயிரினங்கள் தோற்றம் பெற்றது நீரில் அதே போன்று முதல் அவதாரம் மச்ச அவதாரம் மீன் உருவம் ,பின்னர் டார்வின் சொன்னார் நிலத்திலும் நீரிலும் வாழும் உயிரினங்கள் இது விஷ்ணுவின் கூர்ம அவதாரத்துடன் ஒத்து போகிறது .அதாவது ஆமை வடிவம் .

அடுத்து வராக அவதாரம் இது பன்றி வடிவம் முழுவதுமாக மிருகம் இதுவும் டாவினின் அடுத்த வளர்ச்சி படியில் உடன் பட்டுநிற்கிறது .நரசிம்மம் மனிதனும் மிருகமும் அற்றநிலை .இதுவும் உடன் பட்டுதான்போகிறது .
 அடுத்தது ஒரு குள்ள உருவம் வாமன அவதாரம் மனிதனை போலவே இருக்கும் .அடுத்து பரசுராமர்  வேட்டையாடிதிரியும் நியண்டதாஸ் கால மனிதன்போல் ஒரு அவதாரம் .

இராமர் ஒரு பூரணம் அடையாத முழு மனிதன் போன்ற தன்மை இல்லாத ஒரு அவதாரம் .அடுத்து பலராமர் இதை பற்றி எனக்கு பெரிதாக விளக்கம் கிடைக்கவில்லை .அடுத்து கிருஸ்னர்  ஒரு பரிபூரணமான மனிதன் .

இப்படியாக எமது விஷ்ணுவின் அவதாரங்களையும் டார்வினின் அவதாரங்களையும் ஒப்பிட்டு பார்க்கலாம் .ஆனால் கடவுள் பேரால் இந்த கயவர்கள் செய்யும் அட்டுழியங்களை பார்க்கும் போது கடவுள் யார் ?அவர் எங்கு உள்ளார் ?என் இப்படியானவர்களை விட்டு வைத்திருக்கிறார் ?
என சராசரி மனிதனுக்கும் தோணும இது உண்மை  






#இது எனது முந்திய வலைபூவில்(2007)இட்ட ஒரு சிறு பிரிவின் விரிவே இது #