Saturday, March 20, 2010

இறங்குங்கோ! மன்னம்பிட்டி செக் பாயிண்ட் வந்திட்டு ....

நான் கொழும்புக்கு வந்து படிச்சனோ இல்லையோ நல்ல பிரயாணம் பண்ணி இருக்கன்.மட்டக்களப்பு இருந்து கொழும்பு ,கொழும்பு இருந்து மட்டக்களப்பு என மாறி மாறி போறதும் வாரதுமா கிட்டதட்ட ஒரு ஆறு மாதம் அதுக்கே போய் இருக்கும் .பஸ்ல ,ரெயின்ல என எது அமையுதோ அதில போற வார .முதல் பிரச்சனை நேரத்தில களுவாஞ்சிகுடி ல இருந்து பஸ் ல வார எண்டா அது போல ஒரு மோசமான அனுபவம் நீங்க பட்டு இருக்க மாட்டிங்க .

மொத்தம் பதினைஞ்சு செக் பாயிண்ட் .ஒவ்வொரு செக் பாயிண்ட் செக்கிங் வேற வேற மாதிரி .அத பற்றி நான் பிறகு சொல்லுறன் .ஒரு தியாலம் எடுக்கிற பயணம் இது (தியாலம் எண்டா அரை நாள் ,,,,,அவர் பெரிய சுஜாதா அதுதான் விளக்கம் குடுக்கார் எண்டு தப்ப நினைக்காதிங்கோ )இரவு ஆறு மணிக்கு அங்க இருந்து வெளிக்கிட்டா இங்க கொழும்புக்கு வந்து சேர காலையில ஆறு மணி ஆகும் .


ஆனா ரயின்ல இந்த பிரச்சனை இல்லை ஏறி இருந்தா கொழும்புக்கு வந்து சேரும் வரை ஒரு செக் பாயிண்ட் இல்ல .ஆனா அதுல சீட் கிடைக்கிறது  கஷ்டம்.(பஸ்ல தான் அவங்க அது கொண்டு போற ரயின்ல கொண்டு போக மாட்டங்க .அது ,அவங்க எண்டா என்ன எண்டு புரியும் தானே )அப்பிடிதான் எங்க போலீஸ் மாமா எல்லாம் செக் பண்ணுவாங்க .

ஒருநாள் நான் ஊருல இருந்து கொழும்பு வர இருந்த நான் அப்போது ரெயின் எதோ பிரச்சனையாம் இண்டைக்கு போகாதாம் எண்டு கேள்வி பட சரி கனகாலம் ஆச்சு பஸ் ல போய் இண்டைக்கு போவம் எண்டு போட்டு .ஊருல பஸ் சீட் புக் பண்ணி போட்டன் .பஸ் நம்ம ஊர் பஸ் என்கிறதால டிரைவர் ,கண்டக்க்ட்டர் எல்லாம் நல்ல பழக்கம் ,ஒரு மாதிரி பஸ் வர அதில நானும் ஏறி இருந்து விட்டன்.டாட்டா பாய் சொல்ல எல்லாம் நமக்கு ஆக்கள் வரமாட்டாங்க அப்பிடி எண்டா நான்தான் காக்கா புரியாணி வேண்டி குடுத்து ஆள் வர வைக்க வேணும் .

முதலில் பஸ் ஏறினா எல்லோரும் பாக்கிற யாரும் தெரிந்த முகம் இருக்கா அப்பிடி எண்டு (பொம்பிள பிள்ளைகள் இருக்கா எண்டு பஸ்ல ஏற முதல் பார்த்து விடுவம் ).பெரிசா ஒருவரும் தெரிந்த மாதிரி இல்லை (அண்டைக்கு கண்ணாடி போடல அதான் போல ஒருவரையும் தெரியல்ல ).அப்பா நிம்மதி எண்டு இருந்தா எனக்கு பக்கத்தில எல்லாம் ஒரே பொடியன் செட் .அவனுகள் நம்மலபோல ஒவ்வ்ருத்னும் 5 பேருக்கு சமன் .நான் நக்கல் நையாண்டில சொன்னான் .உருவத்தில இல்ல ,அவங்க எல்லாம் கொழும்புக்கு படிக்க வார பொடியனுகள் .நானும் அவங்க கூடவே சேர்த்து அத பஸ்ஸில் ஒரு படமே எடுத்து நடிச்சு வந்தம் .

கொஞ்ச நேரம் போக (ஒரு அரை மணித்தியாலம் )முதல் செக் பாயிண்ட் அதில இறங்கி எல்லாத்தையும் காட்டி ஒருமாதிரி திரும்ப பஸ்ல ஏறி  பயணம் த்டந்து கொண்டு போகுது ,திரும்பவும் ஒரு செக் பாயிண்ட் இப்படி ஒரு ஆறு எழு இடத்தில இறங்கி நடந்து இருப்பம் .எங்களால தாங்க முடியல்ல .நிங்களே சொல்லுங்க .இரவு நேரம் பனி பெய்யுது .உடுப்பு பை ,அது இது என எல்லாத்தையும் போட்டு செக் பண்ணி ,அத வேற வெளியில எடுத்து போட்டு குழப்பி எவ்வளவு எரிச்சல் வரும் .

இன்னும் பஸ் போய்க்கிட்டு இருக்கு கண்டக்க்ட்டர் சொன்னான் மன்னம்பிட்டி செக் பாயிண்ட் வருகுது எல்லாம் ரெடி ஆகுங்க என்டு. இந்தாங்க ரொம்ம்ப மோசமான ஒரு செக் பாயிண்ட் நாயெல்லாம் வந்து  நம்மால் மணந்து பார்த்து செக் பண்ணும் .அது வேற எந்த இடத்தில மணந்து பார்க்கும் எண்டு தெரியுமா ,விட்டா  அப்பிடியோ கொத்தா கடிச்சு எடுத்திரும் போல இருக்கும் .

கண்டக்டர் அப்பிடி சொன்னதுதான் தாமதம் எல்லோரும் சேர்த்து ஒரு பிளான் பண்ணினம் .(சரி நான் இல்ல அவங்கதான் பண்ணினாங்க ன் நான் சும்மா கம்பனி குடுத்தன் ).அந்த செக் பாயிண்ட் ல பென் போலீஸ் தான் நிக்கிற .
அப்ப செக் பாயிண்ட் வந்து விட்டது எல்லரும் இறங்கி வந்து கொண்டு இருந்தாங்க நாங்களும் வந்து  வரிசையில நிக்கிரம் .அப்ப எங்க முறையும் வந்தது (எதோ டாக்டர சந்தித்து பேச போற மாதிரி லைன்    கொடுமை )

ஒரு போலீஸ் பொட்டை ஹொய் தன்ன எண்டு சிங்களத்தில கேட்டால் நாங்கள் சிங்களம் தெரியாது எண்டு சொல்லி ஆரம்பிச்சம் .சரி அவளுக்க தெரிந்த தமிழ்ல எங்கே போரிங்கோ அப்பிடி எண்டு கேட்டால் பக்கத்தில இருந்தவன் உடனே கொழும்பு பல்கலைக்கழகதில் கல்வி நடவடிக்கை மேற்கோள்ள செல்கிறோம் என சுத்தமான தமிழ் எடுத்தது விட்டான் .அவள் அத விளங்கி கொப்பி ஒன்டுல எழுதணும் .முடியாம நீங்க எல்லாம் போங்க எண்டு சொல்லி அனுப்பி விட்டால் .மற்ற பக்கம் இன்னுமொரு போலீஸ் அக்க ."மல்லி செக் கரண்ட ஓன" எண்டு சொல்லி வர சொன்னா.சரி எண்டு போட்டு எல்லரும் எங்க உடுப்பு பைய திறந்து காட்டினால் அவள் அதுக்குள கை வச்சி செக் பண்ணாமல் சரி போங்க எண்டு ஒரு மாதிரியா பார்த்த படி அனுப்பி போட்டால்.என் அப்பிடி என்ன இருந்தது எண்டு தானே கேக்கேல் 
நாங்க எல்லாரும் பிளான் பண்ணி எல்லோரும் எங்க உள்ளாடைய அதாங்க ஜட்டி அத மேல எடுத்தி வடிவா வைச்சி இருந்த அவ கை போட்டு தேடுவாள.உள்ள குண்டு இருக்கு எண்டு .அதுவும் தோய்க்காத ஜட்டி எண்டா எப்பிடி இருக்கும் .