Saturday, March 13, 2010

விபரீத விஞ்ஞானியும் விபரீத முடிவும்

விஞ்ஞானி ஒருவர் இருந்தாராம் (முன்னுக்கு ஒருஊருல  எண்டு போட்டுகொள்ளுங்கோ அப்பிடிதான் எல்லோரும் கதை சொல்ல வரும் போது தொடங்குவாங்க).அவர் ஒரு ஆராய்ச்சிபிரியர் எதையாவது எப்பிடியாவது

ஆராய்ந்து கொண்டு இருப்பார் .எதையாவது கொண்டு வந்து வெட்டுவது ,கொத்துவது என்ன இருக்குது எண்டு பார்க்கிற அப்பிடி என அவர் தனது ஆராய்ச்சி பணியை சிறப்பாக கொண்டு செல்வார் .

ஒரு நாள் ஒரு தவளை ஒன்றை பிடித்து வந்து அது பற்றி ஆராய்ச்சி செய்ய முயற்சித்தார் .ஒருபடியாக தவளைக்கு jump என்றால் தவளை முன்னால் பாயும் அளவுக்கு அந்த தவளைக்குபயிற்சி கொடுத்தார் .



பின்னர் அந்த தவளையின்பாயும் திறன்  பற்றி பரிசோதனை ஒன்று செய்தார் .
முதலில்அந்த தவளையை jumpஎன்று கூற அது பாயும் தூரம் எவ்வளவு என்பதை குறித்து கொண்டார் .சரியாக நாலு அடி தூரம் சென்று இருந்தது .
 பின்னர் அந்த தவளையின் ஒருகாலை வெட்டி விட்டு jump என்றார் .இப்போது தவளை மூன்று அடி தூரம் பாய்ந்து இருந்தது .இந்த காலில் எதோ விஷயம் இருக்கிறது என்று சந்தோசப்பட்டஅவர் .அடுத்த காலையும் வெட்டி விட்டார் .இப்போது ஒற்றை  காலுடன் தவளை இரண்டு அடி தூரம் பாய்ந்தது .ஆகா எனக்கு நல்ல முடிவு கிடைக்க போகிறது என எண்ணி இறுதி காலையும் வெட்டி விட்டு jump என்றார் .தவளை பாயாமல் அப்பிடியோ நின்றது .சற்று பெரிய சத்தமிட்டு jump என்றார் .ம்ம்ம்ம் தவளை அப்பிடியோ கல்லு மாதிரி இருந்தது .தன்னால் ஆனா மட்டும் பெரிய அளவில் உரத்து jump என்றார் .தவளை மசிய வில்லை .அப்பிடியே நின்றது ,




மிகவும் சந்தோஷ பட்ட அவர் தனது குறிப்பு டயரியை எடுத்து .
11-11-11
இன்று நான் எனது தவளை பற்றிய பரிசோதனையில் ஒரு சிறப்பான கண்டு பிடிப்பை நிகழ்த்தினேன் .தவளையின் கால்கள் வெட்டப்படும் போது தவளைக்கு காது கேக்கும் சக்தி குறைந்து கொண்டு போகின்றது .அத்துடன் எல்லா கால்களும் வெட்ட பட்ட பின் முழுவதுமாக அதன் காது கேக்கும் சக்தி
இல்லாமல் போகிறது .

.mr. mokkai
---------------------