Tuesday, March 9, 2010

கோல் டைவேட்டிங் ஒரு கொலைவெறி அனுபவம்


பரபரப்பா வெளிவந்து இப்போதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் நித்தி 007 துப்பறியும் படத்துக்கு மத்தியில் (உண்மையிலே அது இப்ப துப்பறிய வேண்டிய விஷயமாகி போயிட்டுது போல )
எப்பிடி பட்ட பதிவானாலும் ஹிட்ஸ் அடிப்பது குறைவுதான் .ஆனாலும் ஒரு தைரியத்தை மனதில் கொண்டு 100% மொக்கை பதிவு ஒன்றை பதிவு  செய்கிறேன்

இந்த செல்போன் கொடுமைகள் பற்றி பதிவாளர்கள் எல்லாம் விலாவாரியாக எழுதி முடிச்சு விட்டாங்க (அவன் அவன் பட்ட கொடுமைய இங்கசொன்னங்க ).ஆயிரம் பக்கம உள்ள புத்தகமே போடலாம் இத பற்றி .

இதுவும் ஒரு செல்போன் மேட்டர் தான் .எனது நண்பண் ஒருவன் செய்த வேலை இது(உண்மையா நான் இல்ல என் நண்பன்தான் ) .அவன் வேலை செய்யும் இடத்தில எல்லோரும் செல்போன் வைத்திருப்பார்கள் பில்ட் (field )வேலைதான் பார்க்கிற .ஆகவே எல்லோரும் செல்போன் வைதிருப்பாங்கோ .வெளி இடங்களுக்கு போக வேணும் என்பதால் அவங்களின் பெரியவருக்கும் (பாஸ் )எல்லோரின் நம்பரும் தெரியும் .


அவனும் அவனோட வேலை செய்யிற எல்லோரும் ஒரு இடத்தில என்னைபோலவே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறார்கள் .
 அதில இருக்கிற ஒரு பொடியனுக்கு ஒன்சம் குசும்பு ஓவர் .அவன் செல்போன்ல நாய் குரைக்கிற மாதிரி   மாதிரி சத்தம் வந்தா பாஸ் போன் பண்ணுறார்  எண்டு சொல்லுவான் . பாஸ் மேல அப்பிடி ஒரு மரியாதை .இதே போல தான் எல்லோருக்கும் ஒவ்வொரு மாதிரி ரிங்கிங் டோன் போட்டு பக்கத்தில இருக்க்ரவங்களா தொலைச்சு எடுப்பான் .

ஒருநாள் எதோ புது ப்ராஜெக்ட் ஒண்டு செய்ய வேண்டி இருந்ததால எல்லோருக்கும் ஒரு மீட்டிங் நடந்தது .சாப்பாடும் தாரதாம் எண்டு சொல்ல அவங்க படையணியும் போயிட்டுது .அங்க காலையில ஒன்பது மணிக்கு தொடங்கிய அறுவை போய்க்கிட்டே இருந்துச்சாம் .அப்ப இந்த பசங்க எல்லாம் மாறி மாறி மிஸ் கால் அடிக்க தொடக்கி இருக்காங்க (நாங்க ஒரு மணித்தியாலம் லெக்சர் நடக்க குள்ளே அடிப்பம் இவங்க மூன்று மணி நேரமா எண்டா பொருப்பங்களா(கலியாணம் வேற கட்டுற வயசு ;நண்பனின் அம்மா கவனிக்க ) .நம்ம சகோதரம் இந்த மிஸ் கால் அடிக்கிரதில கொஞ்சம் தீவிரமா இறங்கி எல்லோருக்கும் தொடந்து அடிக்க ஆரமிப்பிச்சர் .

அவருக்கு சனி அங்க தான் வந்து இறக்கி இருக்கு .என்ட நண்பனுக்கும் தொடந்து தொல்லை குடுக்க்க ஆரம்பிச்சார் .அவர் இரண்டாவது வரிசையில் என் நண்பன் கடைசி வரிசையில (நம்ம நண்பன் தானே கடைசிலதான் இருப்பன் ,எனதான் இருதாலும் கடைசி வரில இருக்கிர ஒரு சுகம்தான் )
இவனின்  தொல்லை தாங்காம போக என் நண்பன் அவனின் போன்ல வார கால் எல்லாவற்றையும் முன்னுக்கு பேசிக்கொண்டு இருக்கும் பாஸ் நம்பருக்கு டைவேட் பண்ணி விட்டான் ,கால் அடிக்கிற பாவி பயலுக்கு இந்த மேட்டர் தெரியல்ல .அவரும் அவரின் போக்குல ஒரு ரெண்டு நிமிசத்துக்கு ஒருதரம் ரிங் பண்ணி பண்ணி இருந்தான் .எல்லா காலும் முன்னுக்கு பேசிக்கொண்டு இருந்த பாஸ் போனுக்கு போக அவரும் யார் எண்டு எடுக்க போக அது கட் ஆகி விடும் .பாவம் இவன் ஒரு கொஞ்ச நேரந்தான் ரிங் குடுப்பான் போல .திருபவும் கால் வர கடுப்பாகி போன பாஸ் போன எடுத்து யார் கால் பண்ணின எண்டு பார்க்க நம்ம கைப்புள்ளதான் அவனின் முழு பேருடன் அவரின் செல்போனில் விழுந்து இருக்கு .அவரும் எதோ தெரியாம அடிச்சு போட்டன் போல எண்டு போட்டு ஒருதரம் விட்டு விட்டார் .ஆனா அவன் கஷ்ட காலம் திரும்பவும் அவன் என் நண்பனுக்கு கால் எடுக்க அது மாறி பாஸ் போனுக்கு போக .பாஸ்
போன பார்த்து விட்டு --------------(அது அவன் பேருங்க )


அதுக்கு பிறகு  என்ன நடந்து இருக்கும் எண்டு சொல்லவா வேணும் .
மேல சொன்னது ஒரு மாதிரியான நகைச்சுவை (நான் அப்பிடிதான் நினைச்சு எழுதினண் )அடுத்த விஷயம் கொஞ்சம் மோசமான விஷயம் .

என் நண்பனின் தங்கைக்கு ஒரு பொடியன் தொடந்து கால்பண்ணி கொஞ்சம் கேவலமா பேச ட்ரை பண்ணி இருக்கார் .சில நேரம் கேவலமா எசுறதும் உண்டாம் .இவனுக்கு வைக்கும் ஆப்பு எண்டு போட்டு அவன பற்றி எல்லா விசயமும் எடுத்தபிறகு அவன் அம்மாவின் போன் நம்பரும் கிடைச்சது .
 இதுதான் சரியான வரலைஎண்டு போட்டுநண்பனின் தங்கைக்கு வார கால் எல்லாத்தையும் அவங்க அம்மா நம்பருக்கு டைவேட் பண்ணி விட்டோம் .
அதுக்கு பிறகு அவன் கால் பண்ணுறதும் இல்ல .பிறகு விசாரித்து பார்த்தா அவருக்கு இப்ப போன் கூட இல்லையாம் .பின்ன கால் எடுத்து அவங்க அம்மாவோடு கேவலமா கதைச்சா .ஆனா இது நல்ல வேலை இல்லைதான் .அவன்அவளுக்கு குடுத்ததொல்லைக்கு இது போதாதுங்க