Monday, March 15, 2010

காளமேக புலவர் 3 in 1 கவிதை









எனது காளமேக புலவர்  பற்றிய முந்தய பதிவுக்கு கிடைத்த அமோக !!!!!!!!!!  வரவேற்பை அடுத்து ஒரு அசட்டு துணிவுடன் மீண்டும் அவரையே பதிவுக்கு அழைக்கிறேன் .(குருவில விஜய் அடி வாங்கின பிறகும் ஒரு துணிவுடன் தானே வேட்டைக்காரன் நடிச்சி இருந்தார்  )


ஆனாலும் உனக்கு குசும்பு ஓவர் எண்டு நீங்க சொல்லுறது விளங்குது.காளமேக புலவர்ரின் கவிகளை வாசிக்கும் போ துதான்  தமிழ் அக்காலத்தில் எவ்வாறு சிறந்து விளங்கியது என புரிகிறது.


சென்ற பதிவில் அவருடைய 18 + கவிதைகள் பார்த்தோம் .இப்போது ஒருகவி மூன்று கவியாகி மாறும் கவி (புரியவில்லைதானே ,எனக்கும்தான் )

கிழே நான் தந்திருக்கும் கவி ஒரு சிலேடை வகை கவி.எப்படியெல்லாம் தமிழில் கவி வடிக்கலாம் என்று பாருங்கள் . புதுக்கவிதை எனும் பேரில்பினாத்தும் அன்பர்களே தயவு செய்து கவிதை கொண்டு  தமிழை --------  செய்ய வேண்டாம் .






சென்னி முக மாறுளதால் சேர்க்கரமுன் னாலுகையால்
இந்நிலத்திற் கோடொன் றிருக்கையால் - மன்னுகுளக்
கண்ணுறுத லானும் கணபதியும் செவ்வேளும்
எண்ணரனு நேரா வரே!!



இக்கவி 3 கடவுள்களை பத்தி ஒரு பாட்டில் எழுதியது .
தனித்தனியே  3 கடவுளுக்கும் விளக்கம் தந்திருக்கிறேன்  .(பலரின் உதவி தேவைப்பட்டது )


விநாயகர்

சென்னி முகம் மாறுளதால் -

தலையும் முகமும் உடலமைப்புக்கு மாறுபட்டுள்ளதால்



சேர்க்கரம் முன் னாலுகையால்-
கரமான துதிக்கை முன் பக்கம் உள்ளதால்



இந்நிலத்திற் கோடொன்று உருக்கையால்-
இவ்வுலகில் ஒற்றைக் கொம்பு உள்ளவராய் அமைந்தவராய்



மன்னு குளக் கண் உருதலானும் 
 நிலைபெற்ற நிவேதனமாக வெல்லம் உள்ளதாலும்



கணபதியும் செவ்வேளும் எண்ணரனு நேரா வரே!! -
கணபதியும் முருகரும் (என் தெய்வமான ) சிவபிரானும் ஒன்றாவரே!!






முருகன்

சென்னி முகம் ஆறுளதால்-

முகமும் ஆறு உள்ளதால்



சேர்க்கர முன்னாலுகையால்-
கரங்களோ (முன் நாங்கு= பன்னிரண்டு) பன்னிரண்டு உள்ளதால்

இந்நிலத்திற் கோடு ஒன் றிருக்கையில்-

இவ்வுலகில் குன்றமே பொருந்தியிருக்கும் இடமாக இருப்பதாலும்

மன்னு குளக் கண் உறுத லானும் 

நிலைபெற்ற சரவணப் பொய்கையில் (குளத்தின் கண்) அவதரித்ததாலும்

கணபதியும் செவ்வேளும் எண்ணரனு நேரா வரே!!

கணபதியும் முருகரும் (என் தெய்வமான ) சிவபிரானும் ஒன்றாவரே!!





சிவபெருமான்

சென்னி முகம் ஆறுளதால் -

சிரசினிடத்தே கங்கை ஆறு உள்ளதாலும்



சேர்க்கரமுன் னாலுகையால் -
முன்புறத்தே சேறும் கைகள் நான்கு உள்ளதாலும்



இந்நிலத்திற் கோடொன் றிருக்கையில் 
 இவ்வுலகில் மலைமுடியான கைலாச பர்வதம் என்ற மலையில் இருப்பதாலும்


மன்னுகுளக் கண்ணுறுத லானும்
 நிலைபெற்ற நெற்றிக் கண்ணைப் பெற்றிருப்பதாலும்



கணபதியும் செவ்வேளும்எண்ணரனு நேரா வரே!! 
கணபதியும் முருகரும் (என் தெய்வமான ) சிவபிரானும் ஒன்றாவரே






எப்புடி காளமேக புலவர் எங்கேயோ போய்ட்டார் 








குறிப்பு :இது எனது முந்திய வலைப்பூவில் நான் பதிந்த பதிவு அதை சில திருத்தங்களுடன் தந்திருக்கிறேன் .அப்போது அதை  எந்த திரட்டியிலும் 
இணைத்து இருக்க வில்லை .இப்போது இணைக்கிறேன் உடனே உங்கள் ஆதரவையும் தருக .