Wednesday, March 3, 2010

10,9,8,7,6,5 தொடரும்

இது பல ஆண்டுகாலமாக நாம் எதிர்பார்த்திருந்த தருணம் .இந்த முயற்சியில் நாம் வெற்றி பெற்றால் விண்வெளி  துறையில் ஒரு புதிய பரிமாணம் நிகழ்த்தலாம் .இன்னும் சில நிமிடங்களில் இந்த சாதனை முயற்சியின் ஒரு படிக்கல்லாக நாம் இந்த வின் ஓடத்தினை வானுக்கு ஏவ  இருக்கிறோம் ..தலைமை இயக்குனர் இந்த நிகழ்வு பற்றி ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளித்து கொண்டு இருந்தார் .



அங்கே கவுன்ட்டவுன்  டைமர் 15:00:00 என காட்டி சிரித்தது .அத்தனை பேர் முகத்திலும் ஒரு வித பதட்டம் .நாட்டின் ஜனாதிபதி கூட அது ஏவப்படும் தளத்தில் பார்வையாளராக அமர்த்து கொண்டிருக்கிறார் .

இது1000 மில்லியன் டாலர் செலவில் எங்களால் உருவாக்க பட்ட திட்டம் .இப்போதும் நிர்வாகி அதனை பற்றி அதிகமாக விளக்கம் அளித்து கொண்டிருக்கிறார் .உலகின் அனைத்து தொலைகாட்சி சானல்களிலும் இவரே கதைத்து கொண்டு இருந்தார் .
டைமர் 10:00:05 குறைந்து போனது .சக விஞ்ஜானி ஒருவர் பேசிக்கொண்டு இருந்தவரின் காதில் ஏதோ சொல்லிவிட்டு போனார் .நண்பர்களே வெற்றி செய்தியுடன் சந்திக்கிறேன் என்று சொல்லி விட்டு அகன்றார் அவ்விடத்தில் இருந்து .அண்ணனும் ஒரு விதமான டென்சன் அதிகரித்து இருந்தது .அவர் முகத்தில் .


என்ன .என்ன நடந்தது எல்லாம் சரியாகத்தானே இருந்தது .இன்னமும் பத்து நிமிடம்  கூட இல்லை .

தெரியல்ல சார் .திடிரென எரிபொருள் உள்ள பகுதியில் அமுக்கம் அதிகரித்து விட்டது .மேலே கிளம்ப தொடங்கினால் வெடிக்கும் சாத்தியம் இருக்குது சார் .

அனைவரின் முகத்திலும் டென்சன் பட்டென்று ஒட்டி கொண்டது .டைமர் இன்னும் இரண்டு நிமிடங்களை இறக்கி விட்டிருந்தது .என்ன எப்படி சரி செய்வது கையை பிசைந்து கொண்டு இருந்தனர் எல்லோரும்
டைமரை நிறுத்தவும் மனசு இடம் கொடுக்க வில்லை .நாடுக்கே அவமானம்  மற்ற நாடு கைகொட்டி சிரிக்கும் .அரசியல் தலைகள் உயிர் எடுத்து விடுவார்கள் ,ஜனாதிபதி கூட  பார்க்க வந்திருக்கிறார் ..வெடித்தால் எல்லாம் போய்விடும் ,மூன்று வருட உழைப்பு ,பணம் எல்லாம் போய்விடும் என்ன பண்ணுவதுஎல்லோரும் கையை பிசைந்து கொண்டு இருந்தார்கள் .

டைமர் இன்னும் கொஞ்சம் வேகமாக ஓடுவது போல் திடிரென்று   02:00:12 க்கு வந்து விட்டது  .எதொஏதோ எல்லாம் செய்து பார்க்கின்றார்கள் எல்லோர் முகத்திலும் டென்சன் ..ஜனாதிபதிக்கும் செய்தி சொல்ல பட்டு விட்டது .

தலமை விஞ்ஜானி திடிரென்று ஒரு ஜோசனை தோன்ற மற்ற தளத்துக்கு ஓடி சென்று தனது அமுக்கம் பரிசோதிக்கும் கருவிக்கு அருகில் சென்றார் .டைமர்
00:00;18 என குறைந்து போனது அதுக்கு என்ன தெரியும் இங்கு நடக்கும் சம்பவம் .
00:00:10 குறைந்தது டைமர் .

தொடரும் .....

சீ இந்த t.v காரன்களே இப்பிடித்தான் முக்கியமான நேரங்களில் தொடரும் போட்டு விடுவானுகள் என்று திட்டி கொண்டே கையிலிருந்த ரிமோட்டினால் அடுத்த சானலுக்கு தாவினான் கோபி அங்கே நீ நல்லாவே இருக்க மாட்டா என ஒரு மாமியார் மருமகளை திட்டி கொண்டு இருந்தார் .



.