Wednesday, March 31, 2010

விஜய டி.ராஜேந்தருடன் ஒரு சிரிப்பு நேர்காணல் .

அறிவிப்பாளர் :இன்று உங்கள் மொக்கை டி.வியில் பிரபல நடிகர்,இயக்குனர் ,இசை அமைப்பாளர்,வசனகர்த்தா என பல துறைகளில் தனது தாடியை பதித்தாலும் ஒரு துறையிலும் சிறப்பாக செயற்படாத டி .ராஜேந்தர் உங்களுடன் .
அறி :வணக்கம்

டி.ர் :வணக்கம்,நான் தமிழன் ,பச்சை தமிழன் .

அறி :சார் இப்ப நீங்க எப்ப பண்ணிகிட்டு இருக்கிரிங்க
அதாவது இப்ப என்ன படம் நடிச்சு கிட்டு இருகிரிங்க .

டி .ர் :ஒண்ணுமில்ல எண்டு சொன்னால் என் தமிழ் மக்கள் என்னை நம்ப மாட்டார்கள் .
அரசியலில் கொஞ்சம் வேலை இருப்பதால் இப்போது படம்பண்ணும ஐடியாஇல்லை
அறி :ஒரு படமும் இல்லை என்கிறத நாசுக்கா சொல்லுரிங்க

டி .ர் :ஆமா .

அறி :நீங்க இங்கிலீஷ் பேசி நடிச்ச அந்த கோட் சீன் உண்மையிலே பல ஆங்கில அறிவியல் நிபுனர்களினால் பிரபலமாக பேசப்பட்டது .இந்தியாவில் இப்படி ஆங்கிலம் பேச கூடிய ஒரு தமிழன் பற்றி டைம்ஸ் பத்திரிகை கூட முதல் பக்கத்தில் உங்கள் படத்துடன் போட்டார்கள் இதை பற்றி உங்கள் கருத்து .

டி.ர் :ஒரு சின்ன திருத்தம் டைம்ஸ் பத்திரிகை பற்றி சொன்னிர்கள் அதில் இந்தியாவில் ஆங்கிலம் பேசி நடித்த ஒரு கரடி என்று போட்டிருந்தார்கள் .உண்மையில் மிகவும் கஷ்ட பட்டு பேசி நடித்த சீன் அது சக நடிகை கௌதமி மயக்கம் போட்டு விழுந்தார்கள் என் கதையை கேட்டு ..
அறி :ஆம் தியேட்டரில் கூட பல பேர் மயக்கம் போட்டு விழுந்தார்கள் என தெரிய வந்தது .

இப்போது நேயர்களுக்கு அந்த காட்சிடி.ர் :எப்பிடி என்று பார்திகளா ஒரு தமிழன் இங்கிலீஷ் பேசி நடிக்கிறான் என்று .

அறிவிப்பாளர் :அடுத்து மிகவும் சிறப்பாக நீங்கள் சோகமான காட்சிகளில் நடிப்பிர்கள் .அதுபற்றி

டி.ர் :ஆமா அது மிகவும் அதிகமாக மக்களால் ரசிக்கபட்ட காட்சி

அடுத்து அந்த சீன்
அறி :பலர் அதிர்சியில் இறந்து போன சீன் இது .

டி.ர் :இதை விட நான் சண்டைகாட்ட்சிகளில் சிறப்பாக நடித்த காட்சி அதை போடுங்க


நீங்க பத்திரிகை கார்களுடன் சிறந்தமுறையில் பேட்டி வழங்கிய அந்த காட்சி அதையும் போடுகிறேன் .

Sunday, March 28, 2010

உலகத்தில் மிக அபாயகரமான வீதிகள்

முதலாவது பொலிவியா நாட்டில் உள்ள ஒரு வீதி .இது மரண வீதி எனவும் அழைக்க படும் .மொத்தம் 69km தூரம் உடையது .இந்த பாதையில் ஒரு வருடத்துக்கு சுமார் 200-300 வரையான மரணங்கள் சம்பவிக்கின்றன .ஒருசில குறிப்பிட்ட இடங்களில் வாகங்கள் அப்படியேகிழே விழுவதும் உண்டாம் .ஆனால் இப்போது இந்த பாதைக்கு பதில் 2006 ம் ஆண்டு முதல் வேறு வழி பாதை ஒன்று குறுக்கு வழியாக பயன்படுகிறது .இதன் காரணமாக இப்போது மரணகள் சம்பவிப்பது குறைவு .இருந்தாலும் திரில்லர் இதில் ஈடுபாடு உள்ளவர்கள் இந்த பாதையில் தங்கள் சாசகங்களை நிகழ்த்துகிறார்கள் .
ஆனாலும் நாம ஊரு டிரைவர் இந்த ரோட்ல சிம்பிளா ஓடுவாங்க .நம்ம ரோடு இத விட -------.


சரி இன்னும் சில அபாயகரமான வீதிகளை பார்க்கலாம் .

சீனாவில் உள்ள வீதி ஒன்றை பாருங்கள்


இது சிலியில் உள்ள பேய் வீதி
ரசியாவின் சைபிரியன் நெடுஞ்சாலை இது .


 இது அலாஸ்காவில் உள்ள 414 MILE தொலைவான ஒரு கிரவல் பாதைநோர்வே உள்ள ஒரு வீதி
இது இத்தாலியின் ஒரு வீதி


இறுதியாகக் நம்ம  ஊரு வீதிகள்மேலே உள்ள வீத்கள் எல்லாம் நம்ம வீதிகளில்கால் தூசிக்கு சமன் .

Thursday, March 25, 2010

விஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####

மீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள்   "குடிமக்கள்" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின் இறுதி அவதாரமே நான் என அந்த கஞ்சா சாமி !!!!!! சொல்லுகிராராம் ,என சொல்ல பட்டது .அதிலிருந்து  அப்படியே ஒரு யூ ரேன் எடுத்து இந்த மேட்டருக்கு வந்தன் .


விஷ்ணுவின் தசாவதாரங்கள் பற்றி உங்களுக்கு தெரியும் (டேய்அது யாரது கமலில் தசாவதாரம் பற்றிதான் தெரியும் என்கிறன்) ஒரு சீரியசான மேட்டர் பற்றி எழுதுவம் எண்டா விட மாட்டங்க .இந்த அவதாரங்களுக்கும் டார்வின் சொன்ன கூர்ப்பு கொள்கைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது .என்னடா இவன் மொட்டை தலைக்கும் முழம்காலுக்கும் முடிச்சு போடுகிறான் என எண்ணாதீர்கள்.கிழே செல்ல செல்ல உங்களுக்கும் விஷயம் புரிபடும் .

முதலில் விஷ்ணுவின் அவதாரங்கள் பற்றி பார்ப்போம் .


1)மச்ச அவதாரம் இது மீன் வடிவம்2)கூர்ம அவதாரம்   இது ஆமை வடிவம்
3)வராக அவதாரம் இது பன்றி வடிவினை குறிக்கும்

4)நரசிம்மஅவதாரம்  இது  விஜயகாந்த் உருவம் சீ மனிதனும் மிருகமும் இணைந்த உருவம் 5)வாமன அவதாரம் இது 

 6)பரசுராமர்-  கோபம நிறைந்த மனிதர் (சினிமா காரங்க மோசமப்பு இந்த அவதாரம் பெயரிலும் ஒரு படம் இருக்கு .ஏன் அவதாரம் என்கிற பேரிலும் படம் இருக்கு அதவிட தசாவதாரம் என்கிற பேரிலும் படம் இருக்கு ) 7)இராமர் அவதாரம்

 8)பலராமர்
 9)கிருஸ்னர்

 10)கல்கி அவதாரம்
கிழே இரண்டு படங்கள் தந்திருக்கிறேன் அடிக்க மட்டும் வராதீர்கள்இந்த கல்கி அவதாரம் இன்னும் மகாவிஷ்ணுவால் எடுக்க பட வில்லை அப்படியான காலம் வரும் போது உலகம் அழிவினை மட்டும் எதிர்நோக்கும் எனவும் இந்துக்களின் நம்பிக்கை .ஆனால் சில முட்டாள்கள் தாங்கள் தான் கல்கி அவதாரம் கூறி வருகின்றன .இது கிடக்க சரி மேல படங்களுடன்நாம் பார்த்த அந்த அவதாரங்களுக்கும் டார்வினின் கூர்ப்பு கொள்ள்கைக்கும் என்ன தொடர்பு என நீங்கள் நினைக்கிர்கள் .மிகவும் இலகுவானதே .டார்வினின் கருத்து படி முதலில் உலகில் உயிரினங்கள் தோற்றம் பெற்றது நீரில் அதே போன்று முதல் அவதாரம் மச்ச அவதாரம் மீன் உருவம் ,பின்னர் டார்வின் சொன்னார் நிலத்திலும் நீரிலும் வாழும் உயிரினங்கள் இது விஷ்ணுவின் கூர்ம அவதாரத்துடன் ஒத்து போகிறது .அதாவது ஆமை வடிவம் .

அடுத்து வராக அவதாரம் இது பன்றி வடிவம் முழுவதுமாக மிருகம் இதுவும் டாவினின் அடுத்த வளர்ச்சி படியில் உடன் பட்டுநிற்கிறது .நரசிம்மம் மனிதனும் மிருகமும் அற்றநிலை .இதுவும் உடன் பட்டுதான்போகிறது .
 அடுத்தது ஒரு குள்ள உருவம் வாமன அவதாரம் மனிதனை போலவே இருக்கும் .அடுத்து பரசுராமர்  வேட்டையாடிதிரியும் நியண்டதாஸ் கால மனிதன்போல் ஒரு அவதாரம் .

இராமர் ஒரு பூரணம் அடையாத முழு மனிதன் போன்ற தன்மை இல்லாத ஒரு அவதாரம் .அடுத்து பலராமர் இதை பற்றி எனக்கு பெரிதாக விளக்கம் கிடைக்கவில்லை .அடுத்து கிருஸ்னர்  ஒரு பரிபூரணமான மனிதன் .

இப்படியாக எமது விஷ்ணுவின் அவதாரங்களையும் டார்வினின் அவதாரங்களையும் ஒப்பிட்டு பார்க்கலாம் .ஆனால் கடவுள் பேரால் இந்த கயவர்கள் செய்யும் அட்டுழியங்களை பார்க்கும் போது கடவுள் யார் ?அவர் எங்கு உள்ளார் ?என் இப்படியானவர்களை விட்டு வைத்திருக்கிறார் ?
என சராசரி மனிதனுக்கும் தோணும இது உண்மை  


#இது எனது முந்திய வலைபூவில்(2007)இட்ட ஒரு சிறு பிரிவின் விரிவே இது #

Tuesday, March 23, 2010

கல்கிபகவான் சீ எருமை மாடு பகவான் ,மற்றொரு போதைசாமி (வீடியோ )

நேற்று சன் நிஜம் நிகழ்சியில் போன காட்சிகள்

மக்களே நீங்கள் ஏமாறும் வரை இவர்களை போன்ற கயவர்கள் இப்படிதான் ஏமாற்றி கொண்டு இருப்பார்கள்சரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்கிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்த விஷயம் நினைவுக்கு வந்தது
1890ம் ஆண்டு வியட்நாமில் தன்னுடைய பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாகபிறந்த இவர். அப்பா, அம்மா வைத்த பெயர் சிங்சுங். ஜப்பான், பிரான்ஸ்போன்ற நாடுகளிடம் அடிமைப்பட்டு இருட்டிலே இருந்த நாட்டுக்கு ஒளியை கொண்டுவந்தவர் என்பதால் அந்த நாட்டு மக்கள் ‘ஒளி தந்தவர்’ என்ற அர்த்தத்தில்இவரை நேசத்துடன் ‘ஹோசிமின்' என்று போற்றினர். பிறகு இதுவே இவரின் பெயராகமாறியது.


ஹோசிமின் சிறுவனாக இருந்த போது வியட்நாம் பிரான்ஸின் ஆதிக்கத்தில்இருந்தது. சும்மா ஒப்புக்காக வியட்நாமை சேர்ந்த ஒருவரை தனது கைப்பாவையாகஆட்சி பீடத்தில் உட்கார வைத்துவிட்டு அவரின் நிழலின் நின்று பிரான்ஸ்ஆட்சி செய்து வந்தது. அப்போது இந்த டம்மி அரசாங்கத்தை எதிர்த்துப்போரிட்ட கொரில்லா படையினருக்கு தகவல்கொண்டு செல்லும் தூதராக ஹோசிமின்வாழ்க்கையை தொடங்கினார்.
உயிரை பணயமாக வைத்து இந்த பணியை செய்த சிறுவன் ஹோசிமினுக்கு அப்போதுவெறும் ஒன்பது வயது. சிறுவன் ஹோசிமின் இளைஞனாக மாறியதும் தன் நாட்டுமக்களின் அடிமை சங்கிலியை உடைத்தெறிவது என்று உறுதி பூண்டார்.


பிரான்ஸின் ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார். இதனால்பிரான்ஸின் சக்தி மிகுந்த ஆயுதங்களையும் அதிகாரத்தையும் எதிர்த்து இவரால்ஜெயிக்க முடியவில்லை. பிரான்ஸை அப்படி ஜெயிப்பது என்று கண்டறிய பிரான்ஸ்நாட்டிற்கு இவர் போனார்.
பாரீஸில் ஒரு போட்டோ ஸ்டுடியோவில் வேலை பார்த்துக் கொண்டே பிரான்ஸ்மக்கள் எப்படி உலகத்தில் முதல் புரட்சியான பிரெஞ்சுப் புரட்சியநடத்தினார்கள்; சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்ற கோஷம்அந்நாட்டு மக்களை எப்படி ஜெயிக்க வைத்தது என்று பொறுமையாக ஆராய்ந்தார்.இவர் கடைசியாக தனது பொறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் வந்தது.


1940ம் ஆண்டு வியட்நாம் நாட்டை பிரான்ஸிடம் இருந்து ஜப்பான்கைப்பற்றியது. அப்போது பிரான்ஸ் மீது எரிச்சலில் இருந்த வியட்நாம் மக்கள்ஜப்பானிய சிப்பாய்களை தங்களை மீட்க வந்த ரட்சகர்கள் என்று போற்றினார்கள்.ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். அப்போது வியட்நாம் திரும்பிய ஹோசிமின்சொன்னார்.

‘முக்கணாங் கயிறுகள் மாற்றப்படுவது மாடுகளுக்கு மகிழ்ச்சி தராது.பிரான்சாக இருந்தாலும் சரி ஜப்பானாக இருந்தாலும் சரி இவர்களில் யார்நம்மை ஆண்டாளும் நமக்குப் பெயர் அடிமைகள் தான். ஆகையால் இந்த இரண்டுபேரையுமே விரட்டியடித்தால் தான் நம்மால் சுதந்திர வியட்நாமை உருவாக்கமுடியும் என்று அவர் முழங்கினார்.


ஹோசிமின் இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்ட ஜப்பான் சும்மா இருக்குமா?ஹோசிமினைக் கைது செய்ய அந்த நாடு முழுக்க வலை விரித்தது. வியாட்நாமின்அடர்ந்த காடுகளில் பதுங்கியிருந்த ஹோசிமின் அப்போது பெரும் படையைதிரட்டிக் கொண்டு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். 1945 ஆம்ஆண்டு இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜப்பான் கலகலத்துப் போன சமயமபிரான்ஸ் நாட்டின் இராணுவத்தை முந்திக் கொண்டு ஹோசிமின் படை வியட்நாமின்ஆட்சியை கைப்பற்றியது.ஹோசிமின் சிறு வயதுக் கனவு நனவானது. வியட்நாம் சுதந்திரம்அடைந்துவிட்டதாக ஹோமிசின் உலகத்திற்கு அறிவித்தார். சூட்டோடு சூடாகதங்கள் நாட்டில் தேர்தலை நடத்தினார். இதில் ஹோசிமினின் கம்யூனிஸ்ட் கட்சிவெற்றி வாகை சூடியது. மக்கள் ஹோசிமினை தனது தலைவனாகதேர்ந்தெடுத்தார்கள்.


மின்னல் வேகத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துதாமதமாக விழித்துக் கொண்ட பிராஞ்சு படைகளை ஹோசிமின் படைகளோடு மோத முதல்வியட்நாம் யுத்தம் ஆரம்பமானது. அப்போது பிரான்ஸிடம் போர்க் கப்பல்கள்,போர் விமானங்கள், டாங்கிகள் என்று நவீன ஆயுதங்கள் அத்தனையும் இருந்தன.பிரான்ஸின் படைகளோடு ஒப்பிடும்போது ஹோசிமின் கெரில்லா படையோ மிகவுமபலவீனமானது.அப்போது ஹோசிமின் பிரான்சை பார்த்து இப்படி எச்சரித்தார். ‘உங்களின் படைவீரர்களின் ஒருவரை நாங்கள் கொன்றால் உங்களால் எங்கள் படை வீரர்களில்பத்து பேரைக் கொல்ல முடியும். ஆனால் இந்த போரின் இறுதியில் நீங்கள்நிச்சயம் தோற்றுப் போய்வீர்கள் நாங்கள் ஜெயிப்போம்’ ஹோசிமினின் இந்தவார்த்தைகளை வெறும் வாய்ச்சடவால் என்று ஒதுக்கிவிட்டு பிரான்ஸ் தனதுபடைகளை முடுக்கிவிட்டது.


வியட்நாமின் அடர்ந்த காடுகளில் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டஹோசிமினின் கெரில்லாப் படை ஐம்பத்தைந்து நாட்கள் கடுமையான போர் புரிந்தன.இறுதியில் பிரெஞ்சு இராணுவ தளத்தை அது தகர்க்க ஹோசிமின் சொல்லானதுநிஜமானது. பிரான்ஸ் இந்தப் போரில் படுதோல்வி அடைந்தது.என்றாலும் ஹோசிமினால் இந்தப் போரில் வடக்கு வியட்நாமை மட்டுமே தன் வசமவைத்துக் கொள்ள முடிந்தது. வியட்நாமின் தெற்குப் பகுதியோ பிரான்ஸின்கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருந்தது. ஹோசிமின் அசரவில்லை. தனது நாட்டைவடக்கு - தெற்கு என்று பிரிக்கும் எல்லைக் கோட்டை அழித்து ஒருமித்தவியட்நாமை உருவாக்கியே தீருவேன் என்று சபதம் செய்தார்.


வடக்கு வியட்நாமிலிருந்து ஆதிக்க சக்தியான பிரான்ஸை ஹோசிமினின்கெரில்லாப் படைகள் விரட்டி அடித்து விட்டு வெற்றிக் களிப்பில் இருந்தசமயம்... தெற்கு வியட்நாமின் பதுங்கியிருந்த பிரான்ஸ் ஒரு சதித் திட்டம்தீட்டியது.
ஹோசிமின் ஒரு கம்யூனிஸ்ட். சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் நெருக்கமானவர்.அவரை வளர விடுவது கைகட்டி வாய்மூடி கம்யூனிஸ்ட்களின் ஆட்சி பரவுவதைஏற்றுக் கொள்வதற்குச் சமம் என்று பிரசாரம் செய்தது. இதையடுத்துகம்யூனிஸ்ட்டுகள் வியட்நாமில் பரவுவதை தடுக்க பிரான்ஸ¤க்கு அமெரிக்காஆயுதங்களையும் உதவிகளையும் வாரி வழங்கியது.இதையடுத்து வியட்நாம் யுத்த பூமியானது! அங்கே விண்ணிலிருந்து சதா குண்டுமழை பொழிய ஆரம்பித்தது. யார் நம் மீது குண்டு மழை பொழிகிறார்கள்? ஏன் நம்நாட்டில் யுத்தம் நடக்கிறது என்று கூடத் தெரியாமல் அந்த ஜனங்கள் செத்துவீழ்ந்தனர். இன்னொருபுறம் ஹோசிமினின் கெரில்லா படைகள் எதிரிகளுக்குமூச்சு திணறும்படி தண்ணிகாட்டியது. இந்தப் போர் பல ஆண்டுகள் நடந்தது.அமெரிக்காவின் ஜனாதிபதி ஒருவர் மாறி ஒருவர் என மூன்று ஜனாதிபதிகள்மாறினர். வடக்கு வியட்நாமில் ஹோசிமினின் தலைமையில் ‘வெற்றியே குறிக்கோள்’என்று அவரது படை ஒருமுகமான சிந்தனையோடு பிரான்ஸின் படைகளை எதிர்த்த மூர்க்கத்துடன் போராடியது.வடக்கு வியட்நாமையும் தெற்கு வியட்நாமையும் ஒன்று சேர்ந்து தனிநாட்டைஉருவாக்கும் வரை இந்தப் போர் ஓயாது என்று ஹோசிமின் சவால்விட... அமெரிக்காஅடிபட்ட புலி போல கர்ஜித்தது. அந்த சமயம் ஹோசிமினிற்கு எதிர்பாராததிசையில் இருந்து மாபெரும் உதவி ஒன்று வந்தது.


போரை ஆரம்பிப்பது சுலபம், முடிப்பதுதான் கஷ்டம் இந்த சத்திய வாக்கியம்வியட்நாமிலும் உண்மையானது. கம்யூனிஸ்ட்டுக்களின் கைகளுக்குள் வியட்நாம்போய்விடக் கூடாது என்பதுதான் அமெரிக்காவின் ஒரே குறிக்கோள் இந்தக்குறிக்கோள்களுக்காக தான் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தள்ளியிருந்துவியட்நாமில் தனது மூக்கை நுழைத்தது அமெரிக்கா.தெற்கு வியட்நாமில் அமெரிக்கா ஒப்புக்காக கட்சியில் அமர்த்திய கைப்பாவஅரசு கம்யுனிஸ்ட்டுகளை நசுக்குகின்றேன் என்று பெண்கள், குழந்தைகள்,முதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் பொதுமக்களை வீதியில் ஓடவிட்டுவிரட்டி விரட்டிச் சுட்டது.
கம்யூனிஸ்ட்டுக்கள் என்று சொல்லப்பட்டவர்கள் விசாரணையே இல்லாமல்கொல்லப்பட்டனர். இதற்கு நாட்டில் எதிர்ப்பு கிளம்ப... அமைதியே உருவானபுத்த பிட்சுகள் கூட போராட்டத்தில் குதித்தனர். குழந்தைகளிடமே இரக்கம்காட்டாதவர்கள் புத்த பிட்சுகளிடமா இரக்கம் காட்டுவார்கள்? இவர்களின்போராட்டமும் மிருக பலத்தோடு நசுக்கப்பட்டது. அதனால் புத்தபிட்சுகள்‘தீக்குளிப்பு’ என்ற சத்தியாக்கிரக ஆயுதத்தை கையில் எடுத்தனர்.


கடைசியில் 1965 ஆம் ஆண்டு வேறு வழியின்றி அமெரிக்கா, வியட்நாம் போரில்நேரடியாக குதித்து. தாங்கள் போரிடுவது ஒரு இராணுவத்தை எதிர்த்து அல்லஅதிரடிப் போரில் தீவிரப் பயிற்சி பெற்ற கெரில்லாப் படையினரை எதிர்த்துஎன்பதால் அமெரிக்கா இரக்கமே இல்லாமல் வடக்கு வியட்நாமில் அமைதியாக இருந்தகிராமங்களின் மீதும் கூட விமானத்திலிருந்து குண்டுகளை வீசியது.அமெரிக்காவின் நவீன ஆயுதங்களையும் விமானங்களையும் பார்த்து மிரளாதஹோசிமினின் கெரில்லாப் படை, அமெரிக்காவின் இராணுவத் தளங்களுக்கு குண்டுவைத்தது. போரில் அமெரிக்கா நுழைந்த முதல்வருடமே தாங்கள் குறைவானவீரர்களைப் பலி கொடுத்து அதிகமான கெரில்லா படையினரை அழித்திருக்கிறோம்என்பதை பெருமையாக சொல்லிக் கொண்டது.எண்ணிக்கை அடிப்படையில் வேண்டுமானால், அமெரிக்கா அப்போது ஹோசிமினின்படைகளைவிட போரில் முன்னிலையில் இருந்தது என்று சொல்லலாம். ஆனால்அடுத்தடுத்து அது சந்தித்த சோதனைகள், அமெரிக்க வீரர்களின் மனவுறுதியைகுலைத்தது. வியட்நாமின் அடர்ந்த காடுகளிலும் குளிரிலும் தாக்குப் பிடிக்கமுடியாத பல அமெரிக்க வீரர்கள், போர்களத்திலிருந்து சொல்லாமல் கொள்ளாமல்தப்பி ஓடினர்.அதனால் ஆனானப்பட்ட அமெரிக்காவே கடைசியில் ஹோசிமினைப் பார்த் சமாதானமாகப் போய் விடலாமே’ என்று தூதுவிட்டது.


நட்டநடுவீதியில் ஆடாமல் அசையாமல் சுழறாமல் உட்கார்ந்த இடத்தில் அவர்கள் தங்களைத் தாங்களே எரித்து கொண்டார்கள். இதைப் பார்த்து கலவரமடைந்தஅமெரிக்காவின் கைபாவை அரசு. புத்தபிட்சுகள் மீது வன்முறையைக்கட்டவிழ்த்துவிட அமெரிக்கா மீது அமெரிக்கர்களுக்கே வெறுப்பு உண்டானது.


1968 ஜனவரி மாதம் வியட்நாம் போரில் ஒரு திருப்புமுனை. தெற்கு வியட்நாமில்முகாமிட்டு இருந்த அமெரிக்க படைகள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்தசமயம் சாதாரண பொதுமக்கள் போல உடைஉடுத்தி நாடு முழுவதும் ஊடுவியிருந்தஹோசிமினின் கெரில்லா படையினர் துல்லியமாக தீட்டப்பட்ட திட்டத்தின்படிதிடீர்என்று ஒன்று சேர்ந்து அமெரிக்கப் படைகளையும் அதன் கைப்பாவைஅரசையும் எதிர்த்து கொலை வெறியோடு தாக்குதல் நடத்தினர்.


இதை சற்றும் எதிர்பாராத அமெரிக்க படைகள் நிலை தடுமாறின. மின்னல்வேகத்தில் நடந்த இந்த தாக்குதலில் அமெரிக்க தூதரக அலுவலகத்தைகூடகம்யூனிஸ்ட்டுகள் கைப்பற்றினர். அமெரிக்காவால் இந்த அவமானத்தை தாங்கமுடியவில்லை. தனது கோபத்தை தணித்துக் கொள்ள அது தனது கட்டுப்பாட்டில்இருந்த எல்லா கிராமங்களிலும் மீண்டும் தனது வெறியாட்டத்தை ஆரம்பித்தது.இதில் குழந்தைகள் உட்பட பல பொதுமக்கள் பரிதாபமாக இறந்தனர்.இவர்களிடமிருந்து தப்பிக்க பிள்ளைகுட்டிகளோடு காட்டாற்றில் விழ்ந்தவர்கள்ஜலசமாதி ஆயினர். இந்த எல்லா அவலங்களையும் டி.வி.யில் பார்த்த அமெரிக்கமக்கள் ‘ஐயோ’ என்று தலையில் அடித்துக் கொண்டனர். அதனால் ஜனாதிபதிதேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட இருந்த ஜோன்சன் போட்டியில்இருந்து விலகிக் கொண்டார்.


ஜோன்சனை அடுத்து அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட்டநிக்ஸன். வியட்நாமில் மேற்கொண்டு எந்த அவமானமும் அடையாமல் தனது படைவீரர்களை நாட்டுக்கு கொண்டு வந்து விடுகிறேன்’ என்று பிரசாரம் செய்துதான்ஜெயித்தார்.என்றாலும் அவராலும் வியட்நாமிலிருந்து துருப்புகளை விலக்கிக் கொள்ளமுடியவில்லை. அதனால் நிக்ஸன் ஒரு தந்திரம் செய்தார். ஒரு பக்கம்வியட்நாமில் இருந்த பெரும்பாலான தன் துருப்புக்களை திருப்பி அழைத்துககொண்டார். மறுபுறம் கம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்க வடக்கு வியட்நாம் மீது தனது
விமானங்களை ஏவினார். இதையடுத்து இடைவிடாது இருபத்தி நான்கு மணி நேரமும்வியட்நாம் மீது குண்டு மழை பொழிய ஆரம்பித்தது.


இரண்டாம் உலகப் போரில் தான் பயன்படுத்திய குண்டுகளுக்கு இணையாக குட்டிநாடான வியட்நாம் மீது அமெரிக்கா குண்டுகளை தூவியது. இதில்லட்சக்கணக்கானோர் பரிதாபமாகத் துடிதுடித்து இறந்தனர். இந்த அட்டகாசங்கள்அனைத்தையும் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க மக்கள் ஒருகாட்சி உறைய வைத்தது.

1972 மார்ச் மாதம் அமெரிக்க விமானம் போட்ட நேபாம் குண்டு ஒன்றில் ஒருகிராமமே தீப்பற்றி எரிய சொந்தப்பந்தங்கள் என்று எல்லோரையும் கரும விட்டுவிட்டு தப்பி ஓடி வரும் நிர்வாணச் சிறுமியின் அழுகை அத்தனை பேர் மனதையும்பிசைத்து எடுத்தது. இந்தச் சிறுமி எப்படியோ கனடா சென்று விட்டார்.வளர்ந்து பெரியவளானதும் தனது 20 வயதில் கடந்த 1997 ஆம் ஆண்டுதொலைக்காட்சி பேட்டி மூலம் தன்னை இனம் காட்டிக் கொண்டார்.இந்தக் கொடுமைகள் அனைத்தும் அமெரிக்காவில் கடும் யுத்த எதிர்ப்புமனப்பான்மையை தோற்றுவித்து விடவே, வேறு வழியில்லாமல் அமெரிக்க ஜனாதிபதிநிக்ஸன் தனது துருப்புக்களை வேகவேகமாக திருப்பி அழைத்துக் கொள்ளஆரம்பித்தார்.


வியட்நாமின் அமெரிக்க தூதரகத்தின் கட்டத்தின் மாடியிலே வந்து ஹெலிகொப்டர்இறங்க.. போரை நடத்தியவர்கள் சந்தடியில்லாமல் மூட்டை முடிச்சுகளகட்டினர். வியட்நாம் போர் ஒரு வழியாக முடிவடைந்தது. அமெரிக்கப் படைகளஅகலவும் வட வியட்நாம் தென் வியட்நாமைக் கைப்பற்றியது.

இந்தப் போரில் சுமார் ஐம்பதாயிரம் வீரர்களை பலிகொடுத்துவிட்டு அமெரிக்கஇராணுவம் வெறுங்கையோடு திரும்ப வடக்கு வியட்நாமும் தெற்கு வியட்நாமும்ஒரு நாடாக செங்கொடியின் கீழே இணைந்தது. இந்த அபூர்வ காட்சியைப்பார்ப்பதற்காக தனது வாழ்நாளை செலவிட்ட ஹோசிமின் இந்த இணைப்பு நிகழ்வதற்குசுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார் என்றாலும் அந்நாட்டு மக்கள் அவரை மறக்கவில்லை. ஒன்றாக இணைந்த தங்கள் தேசத்தின் தலைநகர்சைகோனுக்கு இவர்கள் ‘ஹோசிமின் சிட்டி’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.Monday, March 22, 2010

ஈபில் டவரையே (eiffil tower ) விலைக்கு விற்ற மனிதன்

எதோ ஒரு படத்தில வடிவேல் அரசாங்க பஸ்ச இது உங்கள் சொத்து அப்பிடி எண்டு சொல்லி விப்பாரே .அத விட இன்னும் பயகரமான மோசடி பற்றிதுதான் இது .அந்த பெரிய பாரிஸ் உள்ள ரவரையே விலைக்கு வித்த முக்கியமா அத வாங்கின அந்த புத்திசாலி பற்றி தெரியனுமா ?தொடந்து படிங்க

வசீகரிக்கும் பேச்சு ஆற்றல கொண்ட ஒருவன்(ர்)இந்த கைங்கரியத்தை !!இலகுவாக செய்து முடித்தான் .1890 ம் ஆண்டு செகொச்லாவாகியா வில் பிறந்த இந்த விக்டர் லுஸ்டிக் (victer lustig ) பல மொழிகளில் மிகவும் சரளமாக பேசக்கூடிய ஆற்றல கொண்டவன் ,கூடவே எப்படி ஒரு மனிதனை பேச்சின் முலமாக வசிய படுத்த முடியும் எனும் திறனையும் கொண்டவனாம் .நியூ ஜோக் மற்றும் பாரிஸ் நகரங்களில் மக்கள் கூடும இடங்களில் தனது வாய் திறமை முலம பல சட்டவிரோதமான வியாபார விசயங்களை செய்து வந்தவன் .
இவனே கள்ளமாக காசு அச்சடிக்கும் இயந்திரம் பற்றி முதல் முதலில் அக்கறையுடன் செயட்பட்ட்வன் !!!.இவன் இப்படியான இயந்திரகளை மிகவும் தந்திரமாக விற்று இத முலம பெரும் காசு பார்த்தவன் .தன்னிடம் இந்த இயந்திரம் வாங்க வருபவர்களை அழைத்து சென்று அவர்கள் முன்பே
பணம் அச்சடித்து காட்டுவான் .அதுவும் ஆறு மணி நேரத்துக்குள் 100 மில்லியன் டாலர்களை அடிக்கும் என் கதை விட்டு பின் அதை அவர்குக்கு 30,0000 டொலர்களுக்கு விற்று விடுவான் .அவர்களும் இதை வாங்கி கொண்டு போய் விடுவார்கள் ஆனால் அது வெறும் 10 மில்லியன் டொலர்களை மட்டுமே அடிக்கும் .வாங்கியவர்களுக்கு தாங்கள் ஏமாற்ற பட்டு இருக்கிறோம் என்று தெரிய வரமுதல் வேறு ஒரு நாட்டில் இருப்பன் இவன் .

சரி சரி நாம் இப்ப ஈபில் ரவர் விசயத்துக்கு வருவம் .1925ம் ஆண்டு எப்பிடி யாரையாவது கவிழ்ப்பது என எண்ணிக்கொண்டே பத்திரிகை ஒன்றை படித்து கொண்டு இருந்த விக்டேருக்கு திடிரென ஒரு பொறி தட்டியது .ஈபில் டவேர் பராமரிப்பு சம்பந்தமாக அந்த இடத்து நகரசபையில் அலசப்பட்ட விடயமே அந்த பத்திரிகை செய்தி .அதை வைத்து கொண்டே தனது தந்திர புத்திக்கு வேலை கொடுக்க ஆரம்பித்தான் .
 உடனே பழைய இரும்பு சேகரிக்கும் முகவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினான் .ஈபில் டவர் பராமரிப்பில்கஸ்ரம் நிலவுகிறது .அத்துடன் அதன் உறுதியும் குலைந்து வருகிறது .எனவே அதனைபோதிய விலைக்கு விற்க முடிவு எடுத்து இருப்பதாகவும் கடிதம் பறந்தது .அதனை கடிதமும் அக்மார்க் அரச முத்திரையுடன் ,

அதை நம்பி ஆறு முகவர்கள் வந்தார்கள் அவர்களை பாரிஸில் பழைய ஹோட்டல்களில் ஒன்றான hotel de crillon அதில் வைத்து தான் தபால் தொலை தொடர்பு இணை இயக்குனர் என பீலா விட்டு மிகவும் சிறந்த ஒரு வியாபார டில் முடித்தான் .(இந்த ஈபில் டவர் பிரான்சில் தபால் மற்றும் தொலைதொடர்பு அமைச்சின் தேவைக்கு என உருவாக்கபட்டது என்பது கொசுறு தகவல் .

அதில் அன்று போயசியன் (andre poisson) நபர இந்த டிலை ஒத்து கொண்டு வாங்க சரி என் பட்டார்.அவனிடமும் இதை விற்க தரகு பணம் கூட வாங்கினான் இந்த விக்டர் என்றால் பார்த்து கொள்ளுங்கள் அவன் எப்படி பட்ட எம கண்டன் என்று .
அவன் வாங்கிய லஞ்ச பணம் ஈபில் டவரின் விலையின் 30 % .எப்படி வியாபாரம் .பணத்தை பெற்றதும்தான் தாமதம் அவனும் அவன் செயலாளரும் !உடனே பை நிறைய பணத்துடன் வியனாவுக்கு ஓடி விட்டனர் .ஏமாற்ற பட்ட நபர அவமானம் காரணமாக போலிசுக்கு கூட அவனை பற்றி சொல்ல வில்லை .அவனின் அதிஷ்டம் தப்பி விட்டான் .

ருசி கண்ட பூனை திரும்பவும் வியன்னாவில் பணம் எல்லாம் முடிந்த பின் அடுத்த ஆறு பேருக்கு கடிதம் அனுப்பினான் .திரும்பவும் பாரிஸ் வந்து .ஆனால் அதுவே அவனுக்கு ஆப்பாய் போனது சந்தேகப்பட்ட ஒரு டீலர் ரகசியமாய் போலிசுக்கு போட்டு விட போலீஸ் அள்ளிக்கொண்டு போய்விட்டது .1935 may 10 அன்று கைது செய்யபட்ட அவன் போலீஸ் காவலில இருந்து தப்ப முற்பட்டது வேறு கதை .1949 ம் ஆண்டு அவன் இறந்து போனான் .

Saturday, March 20, 2010

இறங்குங்கோ! மன்னம்பிட்டி செக் பாயிண்ட் வந்திட்டு ....

நான் கொழும்புக்கு வந்து படிச்சனோ இல்லையோ நல்ல பிரயாணம் பண்ணி இருக்கன்.மட்டக்களப்பு இருந்து கொழும்பு ,கொழும்பு இருந்து மட்டக்களப்பு என மாறி மாறி போறதும் வாரதுமா கிட்டதட்ட ஒரு ஆறு மாதம் அதுக்கே போய் இருக்கும் .பஸ்ல ,ரெயின்ல என எது அமையுதோ அதில போற வார .முதல் பிரச்சனை நேரத்தில களுவாஞ்சிகுடி ல இருந்து பஸ் ல வார எண்டா அது போல ஒரு மோசமான அனுபவம் நீங்க பட்டு இருக்க மாட்டிங்க .

மொத்தம் பதினைஞ்சு செக் பாயிண்ட் .ஒவ்வொரு செக் பாயிண்ட் செக்கிங் வேற வேற மாதிரி .அத பற்றி நான் பிறகு சொல்லுறன் .ஒரு தியாலம் எடுக்கிற பயணம் இது (தியாலம் எண்டா அரை நாள் ,,,,,அவர் பெரிய சுஜாதா அதுதான் விளக்கம் குடுக்கார் எண்டு தப்ப நினைக்காதிங்கோ )இரவு ஆறு மணிக்கு அங்க இருந்து வெளிக்கிட்டா இங்க கொழும்புக்கு வந்து சேர காலையில ஆறு மணி ஆகும் .


ஆனா ரயின்ல இந்த பிரச்சனை இல்லை ஏறி இருந்தா கொழும்புக்கு வந்து சேரும் வரை ஒரு செக் பாயிண்ட் இல்ல .ஆனா அதுல சீட் கிடைக்கிறது  கஷ்டம்.(பஸ்ல தான் அவங்க அது கொண்டு போற ரயின்ல கொண்டு போக மாட்டங்க .அது ,அவங்க எண்டா என்ன எண்டு புரியும் தானே )அப்பிடிதான் எங்க போலீஸ் மாமா எல்லாம் செக் பண்ணுவாங்க .

ஒருநாள் நான் ஊருல இருந்து கொழும்பு வர இருந்த நான் அப்போது ரெயின் எதோ பிரச்சனையாம் இண்டைக்கு போகாதாம் எண்டு கேள்வி பட சரி கனகாலம் ஆச்சு பஸ் ல போய் இண்டைக்கு போவம் எண்டு போட்டு .ஊருல பஸ் சீட் புக் பண்ணி போட்டன் .பஸ் நம்ம ஊர் பஸ் என்கிறதால டிரைவர் ,கண்டக்க்ட்டர் எல்லாம் நல்ல பழக்கம் ,ஒரு மாதிரி பஸ் வர அதில நானும் ஏறி இருந்து விட்டன்.டாட்டா பாய் சொல்ல எல்லாம் நமக்கு ஆக்கள் வரமாட்டாங்க அப்பிடி எண்டா நான்தான் காக்கா புரியாணி வேண்டி குடுத்து ஆள் வர வைக்க வேணும் .

முதலில் பஸ் ஏறினா எல்லோரும் பாக்கிற யாரும் தெரிந்த முகம் இருக்கா அப்பிடி எண்டு (பொம்பிள பிள்ளைகள் இருக்கா எண்டு பஸ்ல ஏற முதல் பார்த்து விடுவம் ).பெரிசா ஒருவரும் தெரிந்த மாதிரி இல்லை (அண்டைக்கு கண்ணாடி போடல அதான் போல ஒருவரையும் தெரியல்ல ).அப்பா நிம்மதி எண்டு இருந்தா எனக்கு பக்கத்தில எல்லாம் ஒரே பொடியன் செட் .அவனுகள் நம்மலபோல ஒவ்வ்ருத்னும் 5 பேருக்கு சமன் .நான் நக்கல் நையாண்டில சொன்னான் .உருவத்தில இல்ல ,அவங்க எல்லாம் கொழும்புக்கு படிக்க வார பொடியனுகள் .நானும் அவங்க கூடவே சேர்த்து அத பஸ்ஸில் ஒரு படமே எடுத்து நடிச்சு வந்தம் .

கொஞ்ச நேரம் போக (ஒரு அரை மணித்தியாலம் )முதல் செக் பாயிண்ட் அதில இறங்கி எல்லாத்தையும் காட்டி ஒருமாதிரி திரும்ப பஸ்ல ஏறி  பயணம் த்டந்து கொண்டு போகுது ,திரும்பவும் ஒரு செக் பாயிண்ட் இப்படி ஒரு ஆறு எழு இடத்தில இறங்கி நடந்து இருப்பம் .எங்களால தாங்க முடியல்ல .நிங்களே சொல்லுங்க .இரவு நேரம் பனி பெய்யுது .உடுப்பு பை ,அது இது என எல்லாத்தையும் போட்டு செக் பண்ணி ,அத வேற வெளியில எடுத்து போட்டு குழப்பி எவ்வளவு எரிச்சல் வரும் .

இன்னும் பஸ் போய்க்கிட்டு இருக்கு கண்டக்க்ட்டர் சொன்னான் மன்னம்பிட்டி செக் பாயிண்ட் வருகுது எல்லாம் ரெடி ஆகுங்க என்டு. இந்தாங்க ரொம்ம்ப மோசமான ஒரு செக் பாயிண்ட் நாயெல்லாம் வந்து  நம்மால் மணந்து பார்த்து செக் பண்ணும் .அது வேற எந்த இடத்தில மணந்து பார்க்கும் எண்டு தெரியுமா ,விட்டா  அப்பிடியோ கொத்தா கடிச்சு எடுத்திரும் போல இருக்கும் .

கண்டக்டர் அப்பிடி சொன்னதுதான் தாமதம் எல்லோரும் சேர்த்து ஒரு பிளான் பண்ணினம் .(சரி நான் இல்ல அவங்கதான் பண்ணினாங்க ன் நான் சும்மா கம்பனி குடுத்தன் ).அந்த செக் பாயிண்ட் ல பென் போலீஸ் தான் நிக்கிற .
அப்ப செக் பாயிண்ட் வந்து விட்டது எல்லரும் இறங்கி வந்து கொண்டு இருந்தாங்க நாங்களும் வந்து  வரிசையில நிக்கிரம் .அப்ப எங்க முறையும் வந்தது (எதோ டாக்டர சந்தித்து பேச போற மாதிரி லைன்    கொடுமை )

ஒரு போலீஸ் பொட்டை ஹொய் தன்ன எண்டு சிங்களத்தில கேட்டால் நாங்கள் சிங்களம் தெரியாது எண்டு சொல்லி ஆரம்பிச்சம் .சரி அவளுக்க தெரிந்த தமிழ்ல எங்கே போரிங்கோ அப்பிடி எண்டு கேட்டால் பக்கத்தில இருந்தவன் உடனே கொழும்பு பல்கலைக்கழகதில் கல்வி நடவடிக்கை மேற்கோள்ள செல்கிறோம் என சுத்தமான தமிழ் எடுத்தது விட்டான் .அவள் அத விளங்கி கொப்பி ஒன்டுல எழுதணும் .முடியாம நீங்க எல்லாம் போங்க எண்டு சொல்லி அனுப்பி விட்டால் .மற்ற பக்கம் இன்னுமொரு போலீஸ் அக்க ."மல்லி செக் கரண்ட ஓன" எண்டு சொல்லி வர சொன்னா.சரி எண்டு போட்டு எல்லரும் எங்க உடுப்பு பைய திறந்து காட்டினால் அவள் அதுக்குள கை வச்சி செக் பண்ணாமல் சரி போங்க எண்டு ஒரு மாதிரியா பார்த்த படி அனுப்பி போட்டால்.என் அப்பிடி என்ன இருந்தது எண்டு தானே கேக்கேல் 
நாங்க எல்லாரும் பிளான் பண்ணி எல்லோரும் எங்க உள்ளாடைய அதாங்க ஜட்டி அத மேல எடுத்தி வடிவா வைச்சி இருந்த அவ கை போட்டு தேடுவாள.உள்ள குண்டு இருக்கு எண்டு .அதுவும் தோய்க்காத ஜட்டி எண்டா எப்பிடி இருக்கும் .

Friday, March 19, 2010

இப்பிடி பண்ணினா வேலையில்லா திண்டாட்டம் வரும்தான்

இப்போதெல்லாம் மனிதன் தொழிற்சாலைகளில் வேலை செய்வது  குறைந்து கொண்டு செல்வது தெரியும் .அநேகமான வேலைகள் முழுவதும் இயந்திரங்களால் செய்ய படுகின்றன .ஆனால் இப்போதைய சில வாகனக் தயாரிப்பு தொழிற்சாலைகள் முழுவதுமாக ரோபோக்கள் மட்டும் பயன் படுத்தி தங்களது உற்பத்திகளை மேற்கொள்ளுகின்றன .

இது பற்றி யு டியுப் இடம் தேடி பார்க்க பலசுவாரசிய வீடியோ முலம இதை சொல்லியது .

அவை உங்களுக்காக


இது கொண்டா நிறுவன வேலைத்தளம்
இது ஒரு செயற்கையாக முறை முலம பலகை தயாரிக்கும் நிறுவனம்Thursday, March 18, 2010

என் தோட்டமும் நம் காதலும்.

என் தோட்டத்துக்கு
ஒரு தடவை வந்து செல்
அந்த ரோஜா
நினைத்து கொண்டு
இருக்கிறது ,உலகில் தான்தான்
அழகானது என்று .


என்ன அதிசயம்
என் தோட்ட
பூக்கள் எல்லாம்
வாடமலே இருக்கின்றன .
நீ வந்து சூடி
கொள்ளும் வரை
அப்பிடியே இருக்க போகின்றதாம்

மாலை நேரங்களில்
நீ ஒரு தடவை எல்லா
பூ செடிகளையும்
பார்த்தால் போதுமாம்
தண்ணீர் தேவையில்லையாம்
அவற்றுக்கு,
நான் கூட
உன்னை பார்த்துதான்
எனக்குள் உற்சாகம்
ஏற்றி கொள்கிறேன்.


ஆனாலும் ஒற்றை பூவை
மட்டும் பறித்து சூடி
கொண்டு போய்
விடாதே.
கண்ணர் விட்டு அழும்
மற்றவை எல்லாம் .
எதோ உன் கூந்தல் முடி
ஏறுவதுதான்
தங்கள்
பிறப்பின்
நோக்கமாம் .

இந்த பூக்களிடம்
தேன் குடிக்க
பறந்து வரும்
சிட்டு குருவி போல்
உன்னிடம் காதல் குடிக்க போகிறேன்
நான் .

Monday, March 15, 2010

காளமேக புலவர் 3 in 1 கவிதை

எனது காளமேக புலவர்  பற்றிய முந்தய பதிவுக்கு கிடைத்த அமோக !!!!!!!!!!  வரவேற்பை அடுத்து ஒரு அசட்டு துணிவுடன் மீண்டும் அவரையே பதிவுக்கு அழைக்கிறேன் .(குருவில விஜய் அடி வாங்கின பிறகும் ஒரு துணிவுடன் தானே வேட்டைக்காரன் நடிச்சி இருந்தார்  )


ஆனாலும் உனக்கு குசும்பு ஓவர் எண்டு நீங்க சொல்லுறது விளங்குது.காளமேக புலவர்ரின் கவிகளை வாசிக்கும் போ துதான்  தமிழ் அக்காலத்தில் எவ்வாறு சிறந்து விளங்கியது என புரிகிறது.


சென்ற பதிவில் அவருடைய 18 + கவிதைகள் பார்த்தோம் .இப்போது ஒருகவி மூன்று கவியாகி மாறும் கவி (புரியவில்லைதானே ,எனக்கும்தான் )

கிழே நான் தந்திருக்கும் கவி ஒரு சிலேடை வகை கவி.எப்படியெல்லாம் தமிழில் கவி வடிக்கலாம் என்று பாருங்கள் . புதுக்கவிதை எனும் பேரில்பினாத்தும் அன்பர்களே தயவு செய்து கவிதை கொண்டு  தமிழை --------  செய்ய வேண்டாம் .


சென்னி முக மாறுளதால் சேர்க்கரமுன் னாலுகையால்
இந்நிலத்திற் கோடொன் றிருக்கையால் - மன்னுகுளக்
கண்ணுறுத லானும் கணபதியும் செவ்வேளும்
எண்ணரனு நேரா வரே!!இக்கவி 3 கடவுள்களை பத்தி ஒரு பாட்டில் எழுதியது .
தனித்தனியே  3 கடவுளுக்கும் விளக்கம் தந்திருக்கிறேன்  .(பலரின் உதவி தேவைப்பட்டது )


விநாயகர்

சென்னி முகம் மாறுளதால் -

தலையும் முகமும் உடலமைப்புக்கு மாறுபட்டுள்ளதால்சேர்க்கரம் முன் னாலுகையால்-
கரமான துதிக்கை முன் பக்கம் உள்ளதால்இந்நிலத்திற் கோடொன்று உருக்கையால்-
இவ்வுலகில் ஒற்றைக் கொம்பு உள்ளவராய் அமைந்தவராய்மன்னு குளக் கண் உருதலானும் 
 நிலைபெற்ற நிவேதனமாக வெல்லம் உள்ளதாலும்கணபதியும் செவ்வேளும் எண்ணரனு நேரா வரே!! -
கணபதியும் முருகரும் (என் தெய்வமான ) சிவபிரானும் ஒன்றாவரே!!


முருகன்

சென்னி முகம் ஆறுளதால்-

முகமும் ஆறு உள்ளதால்சேர்க்கர முன்னாலுகையால்-
கரங்களோ (முன் நாங்கு= பன்னிரண்டு) பன்னிரண்டு உள்ளதால்

இந்நிலத்திற் கோடு ஒன் றிருக்கையில்-

இவ்வுலகில் குன்றமே பொருந்தியிருக்கும் இடமாக இருப்பதாலும்

மன்னு குளக் கண் உறுத லானும் 

நிலைபெற்ற சரவணப் பொய்கையில் (குளத்தின் கண்) அவதரித்ததாலும்

கணபதியும் செவ்வேளும் எண்ணரனு நேரா வரே!!

கணபதியும் முருகரும் (என் தெய்வமான ) சிவபிரானும் ஒன்றாவரே!!

சிவபெருமான்

சென்னி முகம் ஆறுளதால் -

சிரசினிடத்தே கங்கை ஆறு உள்ளதாலும்சேர்க்கரமுன் னாலுகையால் -
முன்புறத்தே சேறும் கைகள் நான்கு உள்ளதாலும்இந்நிலத்திற் கோடொன் றிருக்கையில் 
 இவ்வுலகில் மலைமுடியான கைலாச பர்வதம் என்ற மலையில் இருப்பதாலும்


மன்னுகுளக் கண்ணுறுத லானும்
 நிலைபெற்ற நெற்றிக் கண்ணைப் பெற்றிருப்பதாலும்கணபதியும் செவ்வேளும்எண்ணரனு நேரா வரே!! 
கணபதியும் முருகரும் (என் தெய்வமான ) சிவபிரானும் ஒன்றாவரே


எப்புடி காளமேக புலவர் எங்கேயோ போய்ட்டார் 
குறிப்பு :இது எனது முந்திய வலைப்பூவில் நான் பதிந்த பதிவு அதை சில திருத்தங்களுடன் தந்திருக்கிறேன் .அப்போது அதை  எந்த திரட்டியிலும் 
இணைத்து இருக்க வில்லை .இப்போது இணைக்கிறேன் உடனே உங்கள் ஆதரவையும் தருக .

Sunday, March 14, 2010

காளமேக புலவர் 18+ ----கவிதைகள்

எங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும்

கட்டி தளுவுவதால் கால் சேர ஏறுவதால்
எட்டி பன்னாடை இழுத்ததால் -முட்ட போய்
ஆசைவாய் கள்ளை அருந்துதலால்  அப்பனையும்
வேசையென விரைந்து

உண்மையிலேபுலவர் வசைகவி,சிலேடை கவிபடைப்பதில் வல்லவர்
ஆனால் இந்த மாதிரி சிலேடை கவி இவர் ஒருவருக்கு இலகுவாக வரும் போல
எப்பிடி தமிழை லாவகமாக கையாளுகிறார் .

கட்டி பிடித்து மரத்தில் ஏறுவதாலும் அதேபோல் கால்களை பிணைத்து ஏறுவதாலும் ,மேலே சென்று மரத்தில் இருக்கும் பன்னாடைகளை இழுத்தாலும் .பின் அங்கெ இருக்கும் கள்ளை ஆசையுடன் அருந்துதல் .

மேலே மரத்தை பற்றி சொன்னேன் .இப்போ விலைமாது

கலவியின் போது எப்படி நடந்து கொள்ளுவதோ  அதை மரத்தில் மேல் ஏறுவதட்ட்கு ஒப்பிட்டு இருக்கிறார் .அவள் அணிந்து இருக்கும் ஆடைகளை அகற்றி ,ஆசையாய் வாயில் உள்ள உதட்டில் முத்தமிட்டு என அழகாய் அதையும் இதையும் ஒப்பிடுகிறார் .

இதே போன்று இன்னுமொரு பாடல்

பார தலைவிரிக்கும் பன்னாடை மேல் சுற்றும்
சோர இளநீர் சுமந்திருக்கும் -நேரேமேல்
ஏறி இறங்கவே இன்பமாம் தென்னை மரம்
கூறும் கணிகை ஒன்றேகாள் ..

அனேகம் பேருக்கு விளங்கி இருக்கும் என நினைக்கிறேன் .இல்லாவிடின் மீண்டும் ஒரு பதிவில் இன்னும் பல காளமேக புலவர் பாடல்களுடன் சிந்திப்போம் /சந்திப்போம்


நன்றி ---காளமேக புலவர் பாடல்கள்  .(அந்த புத்தகத்தில் மட்டை இல்லை எனவே எந்த பதிப்பகம் என்று தெரியவில்லை )

Saturday, March 13, 2010

விபரீத விஞ்ஞானியும் விபரீத முடிவும்

விஞ்ஞானி ஒருவர் இருந்தாராம் (முன்னுக்கு ஒருஊருல  எண்டு போட்டுகொள்ளுங்கோ அப்பிடிதான் எல்லோரும் கதை சொல்ல வரும் போது தொடங்குவாங்க).அவர் ஒரு ஆராய்ச்சிபிரியர் எதையாவது எப்பிடியாவது

ஆராய்ந்து கொண்டு இருப்பார் .எதையாவது கொண்டு வந்து வெட்டுவது ,கொத்துவது என்ன இருக்குது எண்டு பார்க்கிற அப்பிடி என அவர் தனது ஆராய்ச்சி பணியை சிறப்பாக கொண்டு செல்வார் .

ஒரு நாள் ஒரு தவளை ஒன்றை பிடித்து வந்து அது பற்றி ஆராய்ச்சி செய்ய முயற்சித்தார் .ஒருபடியாக தவளைக்கு jump என்றால் தவளை முன்னால் பாயும் அளவுக்கு அந்த தவளைக்குபயிற்சி கொடுத்தார் .பின்னர் அந்த தவளையின்பாயும் திறன்  பற்றி பரிசோதனை ஒன்று செய்தார் .
முதலில்அந்த தவளையை jumpஎன்று கூற அது பாயும் தூரம் எவ்வளவு என்பதை குறித்து கொண்டார் .சரியாக நாலு அடி தூரம் சென்று இருந்தது .
 பின்னர் அந்த தவளையின் ஒருகாலை வெட்டி விட்டு jump என்றார் .இப்போது தவளை மூன்று அடி தூரம் பாய்ந்து இருந்தது .இந்த காலில் எதோ விஷயம் இருக்கிறது என்று சந்தோசப்பட்டஅவர் .அடுத்த காலையும் வெட்டி விட்டார் .இப்போது ஒற்றை  காலுடன் தவளை இரண்டு அடி தூரம் பாய்ந்தது .ஆகா எனக்கு நல்ல முடிவு கிடைக்க போகிறது என எண்ணி இறுதி காலையும் வெட்டி விட்டு jump என்றார் .தவளை பாயாமல் அப்பிடியோ நின்றது .சற்று பெரிய சத்தமிட்டு jump என்றார் .ம்ம்ம்ம் தவளை அப்பிடியோ கல்லு மாதிரி இருந்தது .தன்னால் ஆனா மட்டும் பெரிய அளவில் உரத்து jump என்றார் .தவளை மசிய வில்லை .அப்பிடியே நின்றது ,
மிகவும் சந்தோஷ பட்ட அவர் தனது குறிப்பு டயரியை எடுத்து .
11-11-11
இன்று நான் எனது தவளை பற்றிய பரிசோதனையில் ஒரு சிறப்பான கண்டு பிடிப்பை நிகழ்த்தினேன் .தவளையின் கால்கள் வெட்டப்படும் போது தவளைக்கு காது கேக்கும் சக்தி குறைந்து கொண்டு போகின்றது .அத்துடன் எல்லா கால்களும் வெட்ட பட்ட பின் முழுவதுமாக அதன் காது கேக்கும் சக்தி
இல்லாமல் போகிறது .

.mr. mokkai
---------------------

Friday, March 12, 2010

"போல் " காதல் கவிகள்
----------------------------------------------
 மழைக்கால
தவளைகள் போல்
உன் பெயரையே
எப்போதும்
உச்சரித்து கொண்டிருக்கிறது
என் இதயம்
-------------------------------------------
வயதான கிழவனின்
 கிழவனின் கைத்தடி
போல்
உன் நினைவுகளே
எனக்கு வழி
 தடமாய்
இருக்க
போகின்றன .
----------------------------------------
வகுப்பில்
அம்மா பேர்
என்ன என்று
கேட்டிருக்கிறார்கள்
உன் பேரை
சொல்லி விட்டு
வந்திருக்கிறது
என் காதல் .
-----------------------------------------

 -
ஓசோவின் புத்தகம்
போல்
புரியாமலே இருக்கிறாய்
நீ .
புரிவதற்கு
முயற்சித்து கொண்டே
இருக்கிறேன்
நான்

----------------------------------------------

தோட்டத்தில் தொங்கும்
திராச்சை பழத்தை
எட்டி எட்டி பறிக்க முயலும் நரி
போல் நானும் முயற்சிக்கிறேன்
உன் இதயத்தின்
இடம் பிடிக்க
 உன்  இதயம் 
இனிப்பானது  என்று
நம்பிக்கையுடன் ...

Thursday, March 11, 2010

எண்ணெய் மசாஜ் செய்யும் நித்தியானந்தர் புதிய வீடியோ

என்ன கொடுமை இது ,இதே எல்லாமா படம் எடுப்பாங்க

சீ இந்த சாமி பொல்லாத சாமி போல


Wednesday, March 10, 2010

இலங்கை காப்புறுதி ............ஹா ஹா ஹா

எப்பிடி விரைவா இன்சூரன்ஸ் காசு எடுக்கலாம் போல அதான் ஆபீசுக்குலே கொண்டு கார் அடிச்சி இருக்கார் ............

எனக்கு பிடித்த டி.வி நிகழ்சி(லொள்ளுசபா ) -தொடர் பதிவு

அன்பு சகோதரர்களே ,அருமை நண்பர்களே இத்தால் நான் உங்களுக்கு தெரிவிப்பது யாது எனில் நானும் ஒரு தொடர் பதிவுக்கு !!!!! அழைக்க பட்டு இருக்கிறேன் .(நம்மளையும் நம்பி கூப்பிட்டு இருக்கங்கோ )நண்பர் சீமான்கனி என்னை இந்த பதிவுக்கு அழைத்து இருந்தார் .இதற்கு முந்திய பதிவாக வந்திருக்க வேண்டியது எதோ என்  வேலைபளு காரணமாக அப்பிடி என்று பொய் சொல்ல விரும்பல்ல சும்மாதான் வெட்டியா இருக்கன் .எப்பிடியோ எழுத வில்லை .ஆனால் இப்ப நீங்க மாட்டி விட்டிங்கோ கட்டாயம் இத வாசித்து பார்க்கத்தான் வேண்டும் .சீமான்கனிக்கு என்ட நிலைமை பற்றி ஒழுங்கா தெரியல்ல போல .இல்ல விடின் எனக்கு பிடித்த டி.வி நிகழ்சி அப்பிடி என்ட தலைப்புல தொடர் பதிவுக்கு அழைக்க மாட்டார் .நாங்க எல்லாம் ஒரு நாடோடி இல்லிங்க நகரமோடி .உயர்தரத்துக்கு மட்டக்களப்பு ,இப்ப கொழும்பு எப்பவாவது இருந்து போட்டு வீடுக்கு போவது உண்டு (அம்மா இத வாசிக்க மாட்டாங்க எண்டு தெரியும் அதான் இப்பிடி ஒரு பொய் ).எப்ப லீவு வருகுதோ அப்ப போவன் .அதுக்குள்ளே எப்பிடி டி .வி பாக்கிற அதிலையும் புடிச்ச நிகழ்சி கொஞ்சம் கஷ்டமான விசயம்தான் ..இருந்தாலும் இந்த dailog காரனுக்கு காசு குடுத்து ஒரு அகலப்பட்டை எடுத்த பிறகுதான் டி.வி நிகழ்சி எல்லாம் ஒரு மாதிரி டவுன்லோட் பண்ணி பார்க்கிறது .அப்பா ஒருமாதிரி முன்னுரை முடிஞ்சி மேட்டருக்கு வாரன் போல

இங்க லங்காவில டி.வி அப்பிடி எண்டா தமிழ் சனல் குறைவுதான் அதிலும் இந்திய சனல்தான் ஓடிக்கிட்டு இருக்கும் .ஒரு தமிழ் சானலில் சிங்கப்பூர் நிகழ்சி எல்லாம் போடுவாங்கோ (லோசன் அண்ணா உங்க டி.வி பற்றி சொல்ல வில்லை ).அதில தான் நிகழ்சி பார்க்கிறது .
வழக்கமா நான் கொஞ்சம் லொள்ளு பர்ர்டிதான் (அத நான் சொல்ல கூடாது தான் இருதாலும் இப்ப சொல்ல வேண்டி இருக்கு அதான் சொல்லிட்டன தப்ப எடுத்துக்காதிங்க ).நக்கல் அடிக்கிறது என்கிறது எனக்கு பிடிக்கிற ஒரு விஷயம் (பொண்ணுங்களுக்கு அப்பிடி பண்ணவே மாட்டம் ;நாங்கெல்லாம் ரொம்ம்ப !!!!!!!!!! நல்லவங்க ).இப்ப எனக்குபிடிச்சநிகழ்சி விஜய் டி.வி இல போன (இப்ப போகுதோ தெரியாது )
லொள்ளுசபா .என்னமாதிரி ஜோசிக்கிரான்களோ தெரியல்ல சும்மா சட்டப்படி ஜோசித்து ஒரு செக்கனுக்கு ஒருதரம் ஜோக் மழை .சந்தானம் ,ஜீவா,சுவாமிநாதன் ,ஈஸ்வர் ,முக்கியமா மண்டை மனோகர் (இப்ப சன் போல அவங்க யார்தான் விட்டாங்க ).என்ட ஈ டிரைவ்ல ஒரு பெரிய சைஸ் பிடிச்சி இருக்கு அநேகமா எல்லா லொள்ளுசபாநிகழசியும் இருக்கும்


அதிலயும் தலைவிதி அப்பிடி எண்டு பேரு வச்சி தளபதி படத்த எடுத்து இருப்பாங்க சூப்பரு .இன்னும் பல படங்கள் அந்த குருப் போட்டு தாக்கி இருப்பாங்க .ஒரு நிகழ்சியில் மண்டை மனோகர் இங்கிலீஷ் கதைச்சு நடிப்பார்

சரி அத நீங்களும்பாருங்கோ
எனக்கு பிடித்த சில வீடியோக்கள்
இப்பிடி பல நக்கல் நையாண்டி நிறைந்த இந்த நிகழ்சி எனக்கு ரொம்ம பிடிக்கும் .ஆனா இப்ப இருக்கோ இல்லையா எண்டு யாரவது எனக்கு சொல்லுங்கோ


நான் இத வேறு நபர்களுக்கு தொடர் பதிவுக்கு அழைக்கக் விடும் இருந்தாலும்இந்த விளையாடுக்கு நான் வரவில்லை ..விருப்பம் எனில் எல்லோரும் தொடரலாம் (அதுக்காக நான் கேபிள் சங்கரையும் பரிசல் காரனையும் மா அழைக்க முடியும் பொதுவா போட்டு இருக்கான் வர விருப்பன் எண்டா தொடருங்கோ )

Monday, March 8, 2010

என் வீடும் நம் காதலும்
என் வீட்டு
நிலைக்கண்ணாடி
கற்பிணியாக
மாறி சந்தோஷ படுகிறது
உன் ஸ்டிக்கர் பொட்டை
சுமந்து கொண்டு இருக்கிறது
அதுதான் போலும்அதனிடம் கொஞ்சம் பார்த்து நடந்துகொள்
 வழமைக்கு மாறி
உன் அழகை
தெறிக்க விடாமல்
உறிஞ்சி விடும் .

என் வீட்டு ரோஜாக்கள்
உன்னை வர வேண்டாமாம் என்கின்றன
பொறாமை பிடித்தவை போலும் அவை
உன் அழகில் அவற்றின் மவுசு
மங்கி போகுமாம்

சீ இந்த நாய் குட்டியை 
பார் உன்னை கண்டதும் ஓடி வந்து
உன் காலை நக்குவதை .
என் இதயமே அப்பிடிதான் உன்னை
கண்டதும்
ஓடி வந்து உன் காலடியில்
கிடந்தது பாவம்
இந்த நாய் குட்டி
என்ன செய்யும் .

விளக்கை
சுற்றி வந்து
அதில் விழுந்து
இறந்து போகும் விட்டில் பூச்சி
போல் உன் அழகில் நானும்
விழுந்து கிடக்கிறேன் .

Saturday, March 6, 2010

பேஸ்புக் சில சுவாரசிய தகவல்கள்
இந்த மாத தகவல்படி


 • 400 மில்லியனுக்கும் அதிகமாக பயனர்கள் உள்ளனர் (இவ்வளவு பேர் வேல வெட்டி இல்லாம இருக்காங்க பாருங்க )
 • 35 மில்லியன் பயனர்கள் ஒவ்வொரு நாளும் தங்களது ஸ்டேட்ஸ் அப்டேட் பண்ணுகிறார்கள் (என்னத்த சொல்லுறது )
 • 60 மில்லியன் பயனர்கள் ஏதாவது அவர்களில் சுவரில் கிறுக்குகிறார்கள் (அப்பிடித்தானே தமிழ்ல வரும் )
 • ஒவ்வொரு மாதமும் 3 மில்லியனுக்கும் அதிகமான போட்டோ க்கள் அப்லோட் பண்ண படுகிறதாம் (அந்த கேவலமான போட்டோ எலாம பார்க்க வேண்டி இருக்கு )
 • 5 மில்லியன் அளவில் ஒவ்வொரு கிழமையும் ஏதாவது லிங்க் ,போட்டோ அல்பம் ,நோட் என்பன பகிரப்படுகிரதாம் .(நானும் என்ட ப்லோக்ஸ் போஸ்ட் எல்லாம் பண்ணுவன் அதுவும் சேர்த்துதான் )
 • 3.5 மில்லியன் நிகழ்வுகள் ஒவ்வொரு மாதமும்  உருவாக்க படுகிறதாம் (நேற்று எனக்குநாளை மப்பு பார்ட்டி இருக்கு வாரியா எண்டு கேட்டு ஒரு எவென்ட் வந்தது அதுவும் சேரும் தானே )
 •  3 மில்லியன் அதிகமான அளவில் இயங்கு நிலை பக்கங்கள் உள்ளனவாம் .
 • அதிலும் 20 மில்லினுக்கும் அதிகமானோர் அந்த பக்கங்களுக்கு விசிறியாக ஒவ்வொரு நாளும் சேருகிறார்கள்.
இனி சராசரி அளவில் தகவல்கள்

 • சராசரியாக ஒவொரு பயனருக்கும் 130 நபர்கள் உள்ளனர் .
 • ஒரு மாதத்துக்கு 8 பேருக்கு நண்பராக இணைய அழைப்பு விடுப்பராம் ஒரு பயனர் .
 • ஒரு பயனர் ஒரு நாளில் 55 நிமிடங்களை பேஸ்புக்கில் உலா வருவதன் முலமாக செலவழிக்கிறார் (கேட்டுகொள்ளுகோ பொது மக்களே என்ன கொடுமை எண்டு )
 • ஒவ்வொரு மாதத்துக்கும் சராசரியாக 9 தடவை லைக் என்னும் பொத்தானை ஒரு பயனர் அழுத்துகிறார்.(நான் இதை விரும்ப வில்லை )
 • ஒரு பயனர் ஒரு மாதத்துக்கு சராசரியாக 25  கமெண்ட்ஸ் பண்ணுகிறார் (யோவ் அவனுகள இந்த ப்லோக்ஸ் பக்கம் வர சொல்லுங்க ஒரு பய கூட பக்கம் பக்கமா எழுதினாலும் கமெண்ட்ஸ் பண்ணுறாங்க இல்ல )
 • சராசரியாக ஒரு மாதத்துக்கு ஏதாவது நான்கு பக்கங்களுக்கு விசிறியாக ஒரு பயனர் மாறுகிறார் .
 • ஒரு பயனர் ஒரு மாதத்துக்கு சராசரியாக முன்று நிகழ்வுகளுக்கு அழைக்க படுகிறார் .
 • ஒரு பயனர் சராசரியாக 13 குருப்புக்கு மெம்பர் ஆகிறார் .


 இன்னும் சில


 • இந்த பேஸ் புக் 70 மொழிகளில் கிடைகிறது .
 • 500 000 applications  இயங்கு நிலையில் உள்ளதாம் 

ஆதாரம் :இதுதான்