Tuesday, February 23, 2010

உதவி ,ஒரு நல்ல பெயர் தேவை

எல்லாம் சரி ஒரு மாதிரி எனக்கு என்ன தோணுதோ அத எல்லாம் எப்பிடியோ எழுதி வாரன் (அத எல்லாம் நீங்க படிக்கணும் என்கிறது விதி ).இந்த தமிழிஷ் பார்த்து பிறகு பதிபவர்களின் கும்மியடிக்கும் பின்னுட்டங்கள் படித்து இத போல நீயும் செய் அப்பு என்று என்ட மனசுக்குள்ள இருக்கிற அந்த சிங்கம் கர்ஜித்தது (சீ இதெல்லாம் கொஞ்சம் ஓவரா போய்ட்டோ ) .அதுக்கு ஏத்தமாதிரி ஒரு அகலப்பட்டை (அதான் broad band கனெக்சன் ஒண்டும எடுத்து, படிக்க எண்டு சொல்லித்தான் எடுத்த )இந்த பதிவு எழுதிற வேலைய இந்த வருசம்தான் மங்கலமா ஆரம்பிச்சன் .
                                                   ஆரம்பத்தில எல்லா டெக்னிகல் ப்லோக்ஸ் எல்லாம் போய் என்ன என்ன செய்யணும் என்று எல்லாம் செய்து  போட்டன் (பெரிய படிமுறை எக்ஸ்ப்லைன் பண்ணுறார் )ஆனாலும் என்ன பெயர் வைக்கலாம் என்கிறதில் தான் எனக்கு பிரச்னையே ஆரம்பித்தது .
                                                                                                                சரி இதையே வைப்பம் அப்பிடி எண்டு போட்டு அதிரடி எண்டு பேர வைச்சன் .கொஞ்ச நாள் போன பிறகுதான் எனக்கு விளங்கிட்டு .நம்ம எழுதிற இந்த மொக்கை தனமான
பதிவுகல இப்பிடி ஒரு தலைப்பின் பின் எழுதிறதா எண்டு .நீங்களே சொல்லுங்க அதிரடி இது ஒரு அரசியல் பதிவு எழுதிற தலைப்பு போல இல்ல

அதோட சேர்த்து எனது அபிமான ரசிகர்களின் (ஓடாதிங்கஎன்ட அறையில் இருக்கும் நண்பன்தான் சொன்னன் .அவன் கூடவாசிக்கிறது சந்தேகம்தான் )
இது என்ன பெயர் இப்பிடி மாத்துடா அப்பிடி எண்டு .அவன் அப்பிடி ஒரு பிட்ட போட்டுற்று போயிட்டன் நான் இப்ப படும் பாடு .
                                                                                                  கொடுமைங்க பிறந்த பிள்ளைக்கு கூட பேர் வைச்சிறலாம் போல இதுக்கு நான் படும் பாடு .
ஏதோதோ எப்பிடியோ எல்லாம் ஜோசிச்சன் .பதிவுலகம் பார்த்து காசு தந்தா லண்டனுக்கு போய் ரூம் போட்டு ஜோசிக்கவும் நான் தயார் (யாரது அடிக்க வாறது ).சினிமா காரங்க எங்கயோ எல்லாம் போய் ரூம் போட்டு உக்காந்து ஜோசிப்பங்க நாங்க போக கூடாதோ .சரி விடுங்க அறியா பிள்ளை தெரியாம கேட்டுவிட்டன்.
                                 வடிவேல் படத்தில பாவிக்க எல்லா பேரையும் பதிவுலகத்தில வைசிட்டாங்க .கைப்புள்ள எண்டு தொடங்கி தென்னம்புள்ள வரைக்கும் பேர் இருக்குது .இத விட கருமம் ,கண்றாவி  இன்னும்  கொஞ்சம் விட்ட பேமானி எடு கூட வைச்சு விடுவாங்க (அட பேமானி இது கூட நல்லா இருக்கோ ).

இத விடபைபர் சங்கர் (கேபிள் சங்கர் எண்டுஇருக்க குள்ள இத விட டெக்னிகல் இன்னும் கூடி ),நீர்முழ்கி காரன் (பரிசல் காரன் எண்டு இருந்தா போவிங்க இத விட இன்னும் பெரிசா நீர் முழ்கி ),இன்னும் எத்தனையோ எப்பிடியெல்லாம் ஜோசித்து பார்த்துட்டன் .சரி நம்ம ஆள் லோசன் அண்ணாபோல சங்கரின் களம் எண்டு வைப்பமோ நம்ம எழுதிற திறதுக்குள்ள சங்கரின் சாக்கடை அப்பிடி என்டா சரி வரும் .
                                                       இன்னும் எனக்கு ஒரு பெயரும் வரல்ல சங்கரின் சிந்தனைகள் .சிதறல்கள் ,எண்ணங்கள்  மன்னாங்கட்டிகள்  எண்டு  எல்லாம் ஓவரா போட என்ற மனசு கேக்கில்லிங்கோ என்ராது வாம்ப போயிட்டுது (அட இது வேற ஊரு பாசைங்க )
                                                   இல்ல கொத்து ரோட்டி போல நுடுல்ஸ் ,குழம்பு என் பழம்சோறு ,சொதி,பால் கறி எண்டு எல்லாம் ஜோசினை வருகுது .இல்ல என்ட பேரையே வைப்பம் எண்டு பார்த்தா இந்த ப்லோக்ஸ்ல சங்கர் என்கிற பேர்தான் எல்லோருக்கும் இருக்குதோ  அப்பிடி என்கிற மாதிரி பார்க்கிற இடத்தில எல்லாம் சங்கர் தான் ,(எனக்கு மட்டும் சங்கர் எண்டு பேர் இல்லாம பில் கேட்ஸ் என்கிற மாதிரி இருந்தா ஒருவேளை ஏன்டா பேரையே போட்டிருக்கலாம் )

அப்பிடி ,இப்பிடி ,பிரண்டு பிரண்டு ,உருண்டு உருண்டு .ஏன் கிணத்துக்குள இறங்கி கூட (ஆழமா )ஜோசித்து பார்த்தும் இன்னும் ஒரு பெரும் சிக்கல அதான் ஒரு வழிய ஜோசித்து பேரு வைக்க தெரியல்ல எண்டு கொஞ்ச நாளைக்கு இந்த பேரோட அலைய போறன் ,

நீங்களா பார்த்து ஒரு நல்லா பேரை தானம் செய்யும் வரைக்கும் இப்பிடியான கொலைவெறி யான பேருடன் அலைவேன் என்று இங்கு உறுதிபட கூறி  எனது உரையை முடிக்கிறேன் (சீ எப்பிடியெல்லாம் போயிட்டன் பாருங்க அரசியல் வாதி ரேஞ்சுக்கு கொண்டு போய்ட்டு இந்த பேர் மேட்டர் )

நல்ல பேர்கையிருப்பில்உள்ளவர்கள் தயவு செய்து இந்தமெயில் முகவரிக்கு (பின்னுட்டங்களில் தெரிவிக்க வேண்டாம் ) உங்கள் பெயர்கைளை அனுப்பவும் இல்லா விடின்எனது வங்கிகணக்கிலகதுக்கு பணம் அனுப்பவும் (ஐயோ லண்டனுக்கு போய்ரூம் போட்டு ஜோசிக்கபோறனுங்கோ )

மெயில் :sangarfree@gmail.com
வங்கி கணக்கு இல :௧௨௩௪௫௬௭௮௯௦௯ (தமிழ் எழுத்துகளில் இருக்கிறது
                                                                                         மொழி மாற்றம்  செய்து படிக்கவும் ,பாதுகாப்பு பிரச்சனை அப்பா அதான் என்கிரிப் பண்ணி இருக்கு )