Thursday, February 11, 2010

பெண்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம்

என்னடா தலைப்பு ரொம்ம்ப விஷமமா இருக்கே அப்பிடிஎண்டு நினைக்கிறிங்களா ஆமாங்க இந்த பொண்களுக்குஅச்சம் ,மடம் ,நாணம்,பயிர்ப்பு
(சரிதானே )இருக்கிறது உண்மைதான் .ஆனா இந்த பயம் புருசன் கிட்ட இருக்கா என்பதுதான் மேட்டர் ,ஆனால் கரப்பான்பூச்சி பூச்சிக்கு பயம் இருக்கிறது உண்மைதான் ;இந்த பொண்ணுகளுக்கு வில்லன் கரப்பன் பூச்சி
பற்றிய ஒரு அலசல் தான் இது .


இத பற்றி நம்ம கூகுள் அண்ணனிடம் கொஞ்சம் விசாரித்த போது எக்கசக்க விசயங்கை கொண்டு கண் முன் கொட்டினார் இங்கிலீஸில் தாங்க என்ன பண்றது அத நமக்கு இருக்கிற ஆங்கில அறிவை !!!!!!!! கொண்டு (ஒரு பெரிய லிப்கோ டிக்சனரி கிளின்சு போய்ட்டு ) மொழி பெயர்த்து பார்த்தன் .

உலகில இருக்கிற பத்து மில்லியனுக்கும் அதிகமான உயிரினகளில் அதிகமா நமக்கு வெறுப்பை ஏற்படுத்தும் உயிரினம் கரப்பான்பூச்சி தாங்க .

அந்த புலிகேசி மீசை ,அகன்ற நீளமான கால்கள் ,அவற்றின் வசிப்பிடங்கள் என்பன நமக்கு அதில் மேல் ஒரு வெறுப்பை உண்டாக்குகின்றன .ஆனாலும் தனது பொன்சாதிக்கு அதுக்கு பயம் எண்டா கரப்பான்பூச்சிய விரும்புற ஆணும இருக்கு .

இவைகள் நம்ம அரசியவாதிகளை விட மோசமானவை அதாவது என்ன சொல்ல வாரன் என்டா ஒரு நொடிக்கு 25 திசைகளில் மாறி மாறி செல்ல கூடியவையாம் இவை .


இதில் பல வகைகள் உண்டுஎனிலும் பெரும்பாலும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் திரியும் வகைகள் நான்கு (படத்தினை பார்க்க )

படத்தில் முதலாவதாக இருப்பது ஜெர்மன் கரப்பான்பூச்சி,இரண்டாவது அமெரிக்கன் வகை ,மூன்றாவது ப்ரௌன் பேன்ட்(தமிழில் பழுப்பு நிற வளைந்த காலுடைய ,அப்பிடிதாங்க வருகுது )நாலாவது நம்மூரு வகை அதாவது கீழைத்தேய வகை .

மேல இருக்கும் நான்கு வகைகளும் தான் இப்போது பெரும் பாலும்இருக்கும் வகைகள்

இந்த இரண்டு இஞ்ச அல்லது மூன்று இஞ்ச பிராணியில் ஆண்கள் இறக்கையுடன் இருக்கும் அத்துடன் பெண்களுக்கும் இறக்கை உண்டு அனால் பறக்க முடியாது .மேல படத்தில் உள்ளது போல் மூன்று பகுதிகள் கொண்டது தல (அஜித் இல்ல),மார்பு பகுதி ,அடிவயிறு  பகுதி என்பன .கண் அதன் உணர் கொம்பு போன்ற மீசை எல்லாம் தலை பகுதில் சேரும்
இதன் வயிற்று பகுதியில் தான் நரம்பு மண்டலம் இருக்கிறது .இதன் காரணமாக  தலை இல்லாத கரப்பான்பூச்சி கூட ஒரு கிழமைக்கு மேல் உயிர் வாழும் திறந கொண்டவை .முச்சு விட கூடமூக்கு வாய் அப்பிடி ஒரு அம்சம் கூட கரப்பாணுக்கு இல்லை ஒரு கூம்பு போன்ற துளைகள் உடல் முழுவதும் இருக்கின்றன அவற்றை கொண்டு சுவாசம்நடத்துகின்றது .
மூக்கு செய்யும் வேலை அனைத்தையும் அந்த புலிகேசி மீசை செய்யும் மணம் .சுவை என்பன .

இதற்ற்க்கு மூன்று ஜோடி கால்கள் உள்ளன ஒன்று தலை பகுதியுடன் இணைந்து இருக்கும் இது ஒரு ப்ரேக் போல் தொழில்படும் .அடுத்த ஜோடி வயிற்று பகுதியில் பின் முன் அசைவுக்கும் மெதுவான அசைவுக்கும் பொறுப்பு .மற்ற ஜோடி முன்னோக்கிய அசைவுக்கு பொறுப்பு ஒரு செக்கனில் தன்னுடைய உடம்பின் நீளதினை போல் 50 மடங்கு தூரம் செல்ல கூடியது .மனிதனுக்கு இருபது போன்ற குருதி சுற்றோட்டம் இதற்க்கு இல்லை அத்துடன் கிமொபோளின் அதான் குருதியில் இல்லைஆகவே சிவப்பு நிறமாக இல்லை .

இதன் இனப்பெருக்கம் ஒரு வித்தியாசமானது ,பெண் கரப்பான் முட்டைகள் நிறைந்த ஒரு பெட்டி போன்ற அமைப்பை வெளிவிடும் (படத்தினை பார்க்க )

இதனுள் 50 க்கும் அதிகமான முட்டைகள் உள்ளன இவை பின்னர் வெளி வந்து தங்களது வேலைய காட்ட தொடங்கும் .சாதரணமாக ஒரு கரப்பான் 200 லிருந்து 300நாட்கள் வரை உயிர் வாளுமாம் ..

அப்பா எனது மேசையில் இப்போது ஒரு கரப்பான் வந்து விட்டது .நான் அதை அடிக்க போறன் ஆகவே பின்பு பார்ப்போம் .