Wednesday, February 24, 2010

சாதனை படைக்க பிறந்த சச்சின்



ஒருநாள் கிரிகெட் வரலாறின் சரித்திரம் இன்றுமாற்றி எழுதபடுகிறது .இன்னும் ஒருவராலும் அடிய முடியாமல் இருந்த இரட்டை சதம் என்கிற கனவு இலக்கு நோக்கி பயணித்த சச்சின் இன்று அந்த இலக்கை அடைந்திருக்கிறார் .

ஜெய்பூர் இந்த பெருமை பெற்ற இடமாக மாறி போயிருக்கிறது .பல சாதனைகள்நிகழ போகும் போட்டியாக இது மாரும் என்பதில் ஐயமில்லை .இப்போது தான் இந்தியா தந்து இனின்ஸ் முடித்து இருக்கிறது .மொத்தமாக 401 ஓட்டங்களை 3 விக்கடுகளை மட்டும் இழந்து பெற்றுள்ளது .

தென் ஆப்பிரிக்க அணியுடனான  இரண்டாவது போட்டியின் போது மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் இந்த மைல் கல்லை எட்டி பிடித்திருக்கிறார் .பல காலமாக சயிட் அன்வர் வைத்திருந்த சாதனையை அண்மையில் சிம்பாவவே நாட்டு வீர ஒருவர் முறியடித்து இருந்தார் .அந்த சாதனையை  முறியடித்து தற்பொது  முதல் முதலில் ஒரு நாள் போட்டி ஒன்றில் இரட்டை சதம் அடித்த பெருமையையும் தன் வசமாக்கி இருக்கிறார் 37 வயது நிரம்பிய சச்சின்

கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை தன் வசம வைத்திருக்கும் சச்சின் இந்த சாதனையையும் தன் வாச படுத்தி இருக்கிறார் .பலவிமர்சங்ககளை அண்மைய காலங்களில் எதிர்  நோக்கி வந்த சச்சின் தனது துடுப்பின் மூலமாகவே அவர்களுக்கு பதில் சொல்லி இருக்கிறர் .

3 ஆறு ஓட்டங்கள் 25 நான்கு ஓட்டங்கள் உட்பட 147 பந்துகளில் இந்த சாதனையை புரிந்து இருக்கிறார் அவர் .
சேவாக் 9
கார்த்திக்  79
பதான்  39
தோனி 68

எனினும் அடுத்த இனின்ஸ் இன்னும் தென் ஆபிரிக்கவினால் ஆரம்பிக்கபட வில்லை .அவர்கள்ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 432  ஓட்டங்களை எப்படி திரத்தி அடித்த அடி யாரும் மறக்க மாட்டர்கள்


பாப்போம் என்ன நடக்க போகிறது என்று