Sunday, February 21, 2010

அவசரம்

இன்னும் ரெண்டு  கிலோ மீட்டர் தூரம்தான் இருக்கு என்று அந்த கடைகாரர் சொன்னதுதான் அவனுக்கு உயிரே திரும்பி வந்தது போன்று இருந்தது .கடிகாரத்தை திரும்ப திரும்ப பார்த்து கொண்டே வேகமாக நடையை கட்டினான் கடிகார வேகத்தை அவனால் கட்டு படுத்த முடியவில்லை .தான் மட்டுதான் வீதியில் தனியே நடக்கிறான் என்பதுதான் அவனுடைய ஒரே ஒரு பயம் .சின்ன வயதிலே ஒரு முறை நண்பர்களுடன் சினிமா பார்க்க போய் பஸ் இல்லாமல் தனியாக நடந்து வந்திருக்கிறான் ஆனால் இப்போது இந்த இரவில் நடப்பது அவனுக்கு புதிதாய் இருக்கிறது .
                                                                    அவனுடைய செல்பேசி வேறு ஒரு பரிமாணத்தில் இன்று அவனுக்கு உதவிக்கொண்டு இருக்கிறது அது மட்டுதான் வெளிச்சம் .ஆந்தையின் அலறல் சத்தம் மட்டும் நன்றாக கேட்டு கொண்டிருந்தது .கால்கள் இன்னும் விரைவு எடுத்து கொண்டது .கடிகாரத்தை கொஞ்ச நேரம் நிறுத்தி வைப்போமா என்று கூட எண்ணி கொண்டான் .பயத்தினை  போக்க செல் பேசியில் பாட்டு போடுவாம் என்றாலும் பாழாய்போன  செல்லுக்கு இந்நேரம் பார்த்து பேட்டரி திர்த்து போக போகிறது .அதுவும் போய் விட்டால் போகும் பாதைக்கு வெளிச்சம் கூட இல்லை .கடிகாரத்தினை இன்னும் ஒருதரம் பார்த்து கொண்டான் பதினோரு மணிக்கு பத்து நிமிடம் தேவை என  விளம்பரம் செய்து கொண்டிருந்தது .சீ என்ன கொடுமையிடா இது இப்பிடி வந்து மாட்டிகிட்டம் என்று நினைத்தாலும் இந்த அனுபவம் அவனுக்கு புதிதாய் இருந்தது கூடவே பிடித்தும் இருந்தது .கடவுளை துணைக்கு அளிக்கவும் அவனுக்கு விருப்பம் இல்லை என்பதை விட கடவுளோடு அவனுக்கு விருப்பம் இல்லை என்றே சொல்லலாம் .
   
கால்கள் அவனுடன் சண்டை போடதொடங்கியது .வேலைநிறுத்தம் செய்ய போவதாய் கூட எச்சரிக்க பார்க்கிறது . எரிச்சல் எரிசலாய் வந்தது அவனுக்கு
மருந்துக்கு கூட ஒருவரையும் வீதியில் காணவில்லை .எங்கேடா போய் விட்டார்கள் இந்த மனிதசாதி என்றெல்லாம் தன் வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் திட்டிக்கொண்டே இன்னும் கொஞ்சம் காலை வேகமாய் செல்லும் படி கேட்டு கொண்டான் .
                                             தூரத்தில் ஒரு சின்ன வெளிச்சம் தெரிந்தது அப்பா ஒரு மாதிரி வந்து சேர்த்து விட்டோம் என்று சந்தோசபட்டு கொண்டே இன்னும் விரைவு எடுத்தான் .ஆனாலும் அவனின் சந்தோசம் நீடிக்க வில்லை .அது அவன் போக வேண்டிய இடம் இல்லை .அது ஒரு சின்ன பிள்ளையார் கோவில் தனியே பாதையில் செல்வோருக்கு அருள் வழங்குபவர் .அவ்விடத்தில் கொஞ்ச நேரம் இருந்து போவோம் என்றாலும் கடிகாரம் அவனை போக சொல்லி வற்புறுத்தியது .ஓட்டை வாளியில் தண்ணீர் அள்ளி குடித்து விட்டு திரும்பவும் நடக்க தொடங்கினான் .நடந்த களைப்புக்கு தண்ணீர் நன்றாகத்தான் இருந்தது .
                                                         ரெண்டு கிலோமீட்டர் தூரம் வந்திருக்கும் தானே என மனசு கணக்கு பண்ண தொடங்கியது .கூடவே அந்த கடைக்காரருக்கும் சில வசைமொழிகளை அள்ளி விச தொடங்கியது .அந்த கடைக்காரரின் குடும்பத்தினை கூடவிட்டு வைக்க வில்லை அவன் .பாவம் அந்த மனிதர்.கொஞ்ச தூரத்தில் மீண்டும் ஒரு வெளிச்சம் கண்ணுக்கு புலப்பட்டது .இருந்தாலும் மனதில் ஒரு சிறு சந்தேகம் இந்த பிள்ளையார் கிழவன் அங்கேயும் இருப்பானோ என்று. கடிகாரம் இன்னும் முப்பது நிமிஷங்களை சாப்பிட்டு ஏப்பம் விட்டிருந்து .

அவனின் நடை வீண் போக வில்லை ஒரு மாதிரி வந்து சேர்த்து விட்டான் .ஆனாலும் ஒருவரையும் காணவில்லை .அண்ணன் அண்ணன் என ரெண்டு மூன்று முறை கத்தி பார்த்தான் .எங்கேயாவது சுருண்டு படுப்பார்கள் என்று அவனுக்கு தெரியும் மீண்டும் தன் பலம் கொண்ட வரைக்கும் அண்ணன் என கொஞ்சம் பெரிதாக கத்தினான் .ஒருவழியாய் சாரணை மடித்து கட்டிக்கொண்டு ஒரு உருவம் வந்தது .என்ன தம்பி என்ன  வேணும் என்று கேக்க மலையில நான் வந்த கார் நிக்குது பெற்றோல் முடிஞ்சு போய்ட்டு நான் அவசரத்தில பார்க்க மறந்திட்டன் நாலு லிட்டர் பெற்றோல் தாங்க என கலனை கொடுத்தான் ,திரும்ப எப்பிடி நடந்து கார் இருக்கும் இடத்துக்கு போவது என்ற சிந்தனையுடன் ...................................