Thursday, February 18, 2010

நள்ளிரவு ஓட்டம் ................பேய்க்கு பயந்து

எங்களுக்கு ஊருல சாவு விழுந்தா கொஞ்சம் துக்கம் ,அதிகம் சந்தோசம் என்னா அப்பத்தான் இரவில சா வீட்ட போற அப்பிடி எண்டு அம்மாவிட்ட சொல்லி போட்டு எங்க எண்டாலும் போகலாம் .சா வீட்ட போய் கார்ட்ஸ் விளையாடி (ரம்மிதான் எனக்கு வரும் 304 பெரிசா வராது போடுகாய்க்கு இருந்து விளையாடி ) விட்டு இரவு 12  மணிய போலதான் வீடுக்கு வருவம் .இது வழமை இப்பவும் அப்பிடிதாங்கோ ஊருக்கு போனா இதான் பொழப்பே .ஆனா அங்க தார சாப்பாடுக்கு போற எண்டு மட்ட்டும் நினைக்காதிங்கோ .

ஊருல இரவில ஒரு சிலர்தான் நடமாடுவாங்க கட்டாயம் ஆர்மி இல்லாட்டி போலிஸ் இல்லாட்டி எஸ்.ரி.எப்  இதுல கடைசியா சொன்னவங்களுக்குதான் கொஞ்சம் பயம் எங்களுக்கு என் என்டா  அவனுகளு கொஞ்சம் நல்லா படிச்சவனுங்க  .மத்தபடி நாங்க திரிவம் ,சிலநேரம் வேற குருப் ஆக்களும் திரிவாங்க .


ஒரு முறை ஊருல தொடர்ந்து முன்று சா வீடு .எதோ அம்மாவாசையில முதலாவது டிக்கெட் எடுத்தால துணைக்கு இன்னும் ரெண்டு முன்று  பேர கொண்டு போகுமாம் இதுக்கு விளக்கம் வேற .ஆனா நம்ம பாடுதான் சிக்கலாகி விட்டது .எங்க போற எதுக்கு போற போக இல்லாட்டி கோவிப்பங்க(தின்ன போறது நக்கல் சோறு அதுக்கு இவ்வளவு பில்டப் தேவையா )அப்பிடி எண்டு போட்டு ஒரு டைம் டேபிள் போட்டு (எப்பிடி பிளான் பண்ணியிருக்கம் ) இண்டைக்கு ஒரு வீடு எண்டா நாளைக்கு மறு வீடு அப்பிடி எண்டு போறதா எங்க சங்கம் ஏக மனதா முடிவு எடுத்துது (வெறும் நாலே நாலு பேருங்க )

எல்லோருக்கும் பேய் ,பிசாசி அப்பிடி எண்டா தனிதனிய போன பயம் ஆனா  கும்பலா போன பேய் அப்பிடி எண்டா என்னஅப்பிடி எண்டு கேக்கிற கைப்புள்ள குருப்ப்தான் நாங்க .
மூன்று சா வீடு ஒரே நேரத்தில என்கிறதால ஊருல கிளப்பி விட்டங்க ஒரு பீதிய .
அந்த சந்தில அது நிக்குதாம் இந்த சந்தில இது நிக்குதாம் அப்பிடியெல்லாம் எண்டு .விடுவாமா நாங்க சரி வாறது வரட்டும் நிக்கிறது நிக்கட்டும் .நாங்க வெளிக்கிட்டு சா வீட்டுக்கு வந்திட்டம் ஆனா நானும் இன்னுமொரு பொடியனும் ரெண்டு பேரும் மட்டுந்தான் .நல்லா இடியப்பமும் இறால் குழம்பும்(அதுக்குத்தானே போன எண்டு நினைக்கதிங்கோ ) சாப்பிட்டிட்டு கார்ட்ச்சும் விளையாடிற்று பன்னிரண்டு மணி ஆகிற்று (இரவில்தான் )நித்திரை கொள்ள போவம் அப்பிடி எண்டு போட்டு வெளிக்கிட்டாச்சு .என்னோட வந்தவருக்கு கொஞ்சம் குசும்பு கூட என்ன பண்ணினார் என்டா போட்டிருந்த ரவுசர கழட்டி கொண்டு வந்த சாரனுக்கு மாறிட்டார் (இரவுதானே ரோட்ல ஒருவரும் இல்ல .சரி ரெண்டு பெரும் கதைச்சி கதைச்சி நடந்து போயிற்று இருக்கம் .
ஒருவெள்ளை கலர் பசு மாடு தனிய ரோட்ட்ல நிக்குது .அங்க சா வீட்ட இப்படி அப்பிடி எல்லாம் பேய் நிக்கும் எண்டு சொல்லும்போது இந்த மாதிரி மாட்டையும் சேர்த்துதான் சொன்னாங்க (நாங்க பெரிய ரவுடி தானே !!! அத பத்தி எல்லாம் கவலை படல்ல).சரி மாட்டுகாரன் மாட்ட கட்ட மறந்திட்டன் போல எண்டு நினைச்சு நடந்து வந்துக்கிடு இருக்கம் .


அப்பதான் இது பேயோ எண்டு போட்டு சிரிச்சு அதுவும் இரவில பெரிய சத்தமா சிரிச்சி நடந்தம் .அப்ப யாரோ கட கட எண்டு ஓடி வார மாதிரி சத்தம் திரும்பி பார்த்தா அந்த மாடு ,அட அதே தனி வெள்ள மாடுதான் .நல்ல காலம் நான் ரவுசர்தான் போட்டிருந்த அதில ஓடின ஓட்டம் எங்க உசைன் போல்ட் எங்க கிட்ட தண்ணி குடிக்கணும் .ஓட்டமேண்டா அப்பிடி ஒரு ஓட்டம் எந்த ரோட்டால ஓடுரம் எப்பிடி ஓடுரம் எண்டு கூட தெரியா கண்ண மூடி ஓட்டமா ஓட்டம் .மாடு வருகுதா இல்லையா எண்டு கூட திரும்பி பார்க்கல ஒரு கிலோ மீட்டார் ஓடி இருப்பம் (காலையில போய் எவ்வளவு துரம் எண்டு டேப் வச்சு அளந்து பார்த்தம் )எனக்கு பக்கத்தில ஓடி வந்தவனை கானல பிறகு கொஞ்ச நேரத்தால வேற ரோட்ல உடுத்திருந்த உடுப்ப கானல ஒரே ஒரு ஆடையுடன் (சொல்லவா வேணும் ) சிரிச்சு கொண்டு வந்தான் .ரெண்டு பெரும் அந்த இடத்திலே இருந்து சிரிச்சி  போட்டு போய் நித்திரை கொண்டம் அப்ப நேரம் மூன்று மணி ....