Wednesday, February 17, 2010

என் வில்லன் முருங்கைக்காய்

எனக்கு வேணுமுங்க ஊருல நல்லா படிச்சிக்கிட்டு (நீ படிச்சதே பொய் அதுல நல்லா வேற படிச்சி எண்டுதானே நினைக்கிறிங்க )இருந்த என்ன அம்மா ,அண்ணா எல்லாம் சேர்த்து பெட்டி கட்டி டவுனுக்கு போய் படி எஞ்சினியர் ஆகுவா (ஆகினதா இல்லையா எண்டு தொடர்து படிங்க தெரியும் நம்ம பொழப்பு )அப்பிடி எண்டு என் பிஞ்சி மனசில நஞ்ச விதைச்சி (உண்மையா எனக்கு இப்பவும் பிஞ்சு மனசுதாங்க )அனுப்பி வச்சாங்க .நானும் ஏதோ சரி நம்ம நன்மைக்குத்தான் சொல்லுறாங்க அப்பிடி எண்டு போய் சேர்த்து படிச்சன் (நம்புங்க ).
                      .
வடிவேலு கிரி படத்தில சொல்லுவார அதே மாதிரி ஒரு முட்டு சந்து அதுக்குள்ளே தாங்க நானும் இருந்தன் .இரண்டு கட்டு கொப்பி ,ஒரு பெட்டி உடுப்பு ,ஒரு லுமாலா சைக்கிள் என்கிட்ட இருந்த அசையும் அசையா சொத்துக்கள் இவைதாங்க .அறைக்கு வாடகை 3000 ரூபா .சாப்பாடும் சேர்த்து (இங்கதாங்க நான் பிழைய விட்டன் )
                                                      காலையில பள்ளிக்குப் போய் பிறகு டியுசன் போய் ஒரு மாதிரி போய்க்கிட்டு இருந்துச்சு  ,வீட்டுல முதல் நாளே கோழி இறைச்சி சாப்பாடு வச்சி இருந்தாங்க ஆகா டவுண் என்டா இப்பிடித்தான் எந்த நாளும் இறைச்சி கரி சாப்பாடு போல நமக்கு வாச்சி போய்ட்டு ஒவ்வொரு நாளும் புள் கட்டு கட்டலாம் எண்டு நினைச்சு கொண்டே ஒரு மாதிரி சாப்பிட தொடங்கியாச்சு .நம்ம ஊருல ஏதோ சித்திரை வருஷம் .தைப்பொங்கல்  இல்லா விட்டில யாருக்கும் பிறந்தநாள்,ஞாயிற்றுக்கிழமை கிழமை  என்டா இறைச்சி வரும் .இது ஒரு திங்கள் கிழமையே இறைச்சி கறி வந்தா எப்பிடி இருக்கும் .சரி சாப்பிடும் எண்டுஎடுத்து சாப்பிடும் ஆச்சு .சாப்பாடும் பரவால்ல நல்லாத்தான்இருந்தது .(நான் குடுத்த வாட காசில்தான் இந்த இறைச்சி கறி சோறு என்கிறது அப்பஇந்த மர மண்டைக்கு புரியல்ல .)

 .அடுத்த நாள் செவ்வாய் கிழமை வீட்டு அன்ரி (கிழவி  இருந்தாலும் அன்ரி  )வந்து இண்டைக்கு மரக்கறி சாப்பாடுதான் செவ்வாய்கிழமை அப்பிடி எண்டு ஒரு  பூசணிக்காய்ய தூக்கி என் வயிற்றில போட்ட .சரி  வெள்ளி கிழமையில சாப்பிடுரதானே கொஞ்சம் ட்ரை பண்ணி பன்னுவமே அப்பிடி எண்டு போட்டு நானும் பள்ளிக்கு போயிட்டன்எனக்கு மரக்கறி என்டாலே கொஞ்சம் அலர்ஜி இருந்தாலும் அம்மா ரொம்ம்ப கட்டாய படுத்தி சாப்பிடவைப்பா .ஆனாலும் இப்பவும் பாவக்காய் ஆஆஆ கண்ணிலையும் காட்ட கூடாது.அதுக்கு முதல்ல காலை சாப்பாடு பாண் சம்பலோட சேர்த்து .ஊருல வயல் வேலை செய்யக்க மட்டும் ஒரு இடையில் சாப்பிடும் சாப்பாடுதான் பாண் சரி சாப்பிட எனக்கும் விருப்பம்தான் அதையும் அள்ளி வாய்க்கு போட்டுற்று பள்ளிக்கு போயிட்டன் .அங்க புது பள்ளி (அதுல நான் பட்ட பாடு அது பிறகு சொல்லுறன் அதாவது வேற பதிவுல உங்களை விடமாட்டன் )

ரெண்டு மணிக்கு பள்ளி விட்டு நானும் இண்டைக்கு எப்பிடி மரக்கறி சாப்பிடுற எண்டு நினைச்சு போய்  இருந்தா சாப்பாடு தட்டு வந்தது .முருங்ககாய் கறி ,மற்றும் இன்னும் ரெண்டு கறி ஒருமாதிரி மூக்கு நாக்கு எல்லாம் இருக்கிற மறந்திட்டு சாப்பிட்டு முடிச்சிட்டன் .பிறகு டியுசன் எல்லாம் போய்ட்டு வந்து வீட்ட ஒரு சுத்து சுத்தி பாப்பமே எண்டு போட்டு போனன் .

 அந்த இடது பக்க மூலையில் தான் என் எஞ்சினியர் கனவுக்கே பெரிய ஆப்பு வைச்ச வில்ல்லன் நின்று கொண்டு இருந்தான் (ஏதோ நீங்க நினைக்கிற மாதிரி நாய் .பூனை சரி யாரும் மனிதன் இல்லவே இல்லிங்க ) ஒரு அளவான முருங்கை மரம் அது .அப்பவும் நான் நினைக்கல இதுதான் உனக்கு வில்லன் ,உன் சோத்துக்கு வில்லன் எண்டு .அன்று இரவுதான் திரும்பவும் அந்த வில்லன் தலை காட்டினான் முருங்கைக்காய் வேறு வடிவில் இருந்தது .சரி நாளைக்கு பாப்பம் எண்டு பார்த்தா அடுத்த நாளும் தனது இனொரு முகம் காட்டி சிரித்தது முருங்ககைகாய் இப்பிடி மூன்று கிழமை தொடர்து முருங்ககைகாய் கறி ,காலையில பண்ணும சம்பலும் .அதோட அந்த அறையை விட்டு ஓடினவந்தான் நான்...


.இப்பிடி சோறுக்காக அறையை ஓடி பிறகு வேற அறை தேடி அங்கிருந்து படிச்சு இப்ப கொழும்பில வந்து இன்னுமொரு அறை எடுத்து இப்பிடி பதிவு எழுதி போகுது நம்ம வாழ்க்கை .