Monday, February 8, 2010

வெளிநாடு போய் திரும்பி வந்தவன்


என் மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்கிற மாதிரி
இன்று வந்த இந்த மொக்கை ஐடியாவே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் எண்டு கேக்க தோணுது .ஆரம்பமே பெரியயயயாய பில்டப்பா இருக்கு அப்பிடி எண்டு பார்கிறிங்களா !! மேட்டர் இதாங்க இண்டைக்கு நம்மட மொக்கையோடு இணைந்து
இருப்பவர்கள் வெளிநாடு போய் ஊர் திரும்பி வந்தவங்க அதோட அவங்க பண்ணுற லொள்ளும் ..

எவளவோ இருக்குங்க இத பற்றி சொல்ல யானை வரும் பின்னே மணியோசை கேட்டு வரும் முன்பே அப்பிடி என்கிற மாதிரி ஒரு கேடு கேட்ட ஒரு பெர்பியும் ஒண்டு அடிச்சு விடுவாங்க வெற்றி கொடி கட்டு படத்தில பார்த்திபன் சொல்லுற மாதிரி இதவ் பார்த்து ரெண்டு மாடு செத்து போயிருக்கு என்பது போல இந்த மணத்த மணந்து குறைஞ்சது பத்து பேருக்கு எண்டான தும்மல் உத்தரவாதம்
வாறது கட்டாயம் .அதோட அந்த மணத்த வச்சு அந்த ஆள் எங்க இருந்து வந்திருக்கான் எண்டு கண்டு பிடிக்கலாம் ..மத்திய கிழக்கு இல்லாட்டி வேற பணக்கார நாடு !!!! அதாங்க பிரித்தானியா பிரான்சு போல இடங்கள் ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு மணம்(அப்பிடி கண்டு பிடிக்க கூடிய அனுபவம் எண்டா பாருங்க எத்த்தினை பேருட்ட சிக்கி சின்ன பின்னமாகி இருக்கம் எண்டு ...)


ஊருல கறுத்த கலர் புள்ளி புள்ளி செருப்பு போட்டு நடந்தவர் வந்த உடனே சூ ஒண்டு போட்டு திரிவார் ..முக்கியமா சொக்க்ஸ் போடா மாட்டார் .என் எண்டு கேட்டா (தப்பி தவறி கேக்காதிங்க கேட்டா அன்னிக்கு why blood !! same blood தான் )
ஆனால் சிலரு ஷோக்சும் போடுவாங்க ..அந்த மணமும் அவங்கட பெர்பியும்
மணமும் சேர்த்து நமக்கு வாந்திதான் வரும் .

நமக்கு தெரிஞ்ச ஒரு பொடியன் வந்தவன் எப்பிடி மச்சான் என்ன மாதிரி எண்டு கேட்டன் இந்த கைல இருக்கிற சிக்கரெட் பீடியா மாற முதல் நாட்ட விட்டு போகணும் எண்டு சொன்னான் .அப்பிடிதாங்க அநேகம் பேரு
வந்த முதல் கிழமை போய் ஒரு பல்சர் ஒண்டு எடுப்பாங்க ஒரு கைய சிக்கரெட் மற்ற கைல பைக் .காதுல போன் இப்பிடி ஒரு கிழமை திரிவாங்க அடுத்த கிழமை கால் சூ இராது பழைய படி செருப்பு ஒட்டிக்கும் ஆனாலும் அந்த பில்டப்ப விடாம கால்ல எதையோ மிரிச்ச மாதிரி நடந்து போவான் .


ஒண்ட மறதிட்டங்க முக்கியமான விஷயம் அவங்க சேட் போடுவாங்க ஆனா பட்டன் எல்லாம் போட மாட்டங்க: போங்க உங்களுக்கு விளங்காது பட்டன திறந்து போட்டாதானே உள்ள போட்டிருக்கிற மாலை தெரியும் அதான் ஏதோ ஐயர் போடுற பூநூல் மாதிரி பெரிய கட்டியா நல்ல நீளமா இருக்கும் (இப்ப ஐயர் மாரும் இப்பிடித்தான் தங்க மாலை போடுறாங்க என்கிறது வேற விஷயம் )
அப்பிடி ஒவ்வொரு முறையும் பேங்க் பக்கத்தால போகும் போது பேங்க் இவற பார்த்து சிரிக்கும் என்கிட்ட வர போற மாலைதான் எண்டு ...

இன்னும் ரெண்டு மூண்டு கிழமை போன அந்த மணம் இருக்காது .பழைய படி
சைக்கள எடுத்து இருப்பார் பெற்றோல் அடிக்க கட்டுதில்ல எண்டு சொல்லிட்டு திரிவார் ..அவரோட இருந்த ரெண்டு மூண்டு பெரும் இல்லாம தனிய தான் ரோட்ல திரிவார் (காசு முடிஞ்சா அவனுகள் எங்க இவன் கிட்ட இருக்க )அந்த நேரத்தில்தான் நம்மட பசங்க மாட்டுற ஆ எப்பிடி எப்ப வந்த இதோட நிப்பாட்டினா காணும் உடனே எப்ப போற எண்டு கேட்டுருவானுகள் இதனாலே அவன் முடிவு பன்னிருவான் நம்ம போயிடனும் அப்பிடி எண்டு .அவன் முடிவே பண்ணிடுவான் சிகரெட் வேற பீடி ரேஞ்சில மாற போகுது அதுக்கு இடையில போகணும் எண்டு

அவன் அப்பிடி ஏன்டா இங்க இருக்கிற நம்ம பசங்க கேக்கிற கேள்வி இருக்கே
கம்பனி எப்பிடி ,சம்பளம் எவ்வளவு ஏற்கனவே மணம் நொந்து போயிருக்கிற அவனிட்ட இந்த கேள்விய எல்லோரும் கேட்டு அவன படுத்தி மக்கள கண்டா வெறுப்பு வார அளவுக்கு ஆக்கி விடுவாங்க அது மட்டுமில்ல நம்மவரு எல்லாம் தெரிஞ்ச மாதிரி அது இப்பிடி இது அப்பிடி எண்டு அவனிட்ட கதை உடுவார் அவரும் சளைக்கமே அங்க இப்பிடி இன்ச இப்படி எண்டு சொல்லுவார் (கேட்டவர் ஊர தாண்டி பக்கத்து ஊருக்கு போயிருப்பார என்கிறது சந்தேகந்தான் )

அப்படி இப்பிடி எண்டு ஒரு மாதம் முடிய மாலைய பேங்க் ல வச்சிட்டு பைக்கையும் மச்சானுக்கு குடுத்திட்டு (அதாங்க இங்க வந்து ஒரு பொண்ணு பார்திடுவார் )திரும்பவும் பரந்திடுவார் அவர் ...........................


குறிப்பு :இது ஒரு சிலரை பற்றியதே எல்லோரும் இப்பிடி இல்லை என்பதே உண்மை

குறிப்பு 2:மேல இருக்கிற படம் ஒரு வெள்ளையனின் படம் நம்ம பசங்க படம் கிடைக்கல்ல ஆனாலும் பார்த்து எத்துகுங்க ...