Wednesday, February 3, 2010

பார்க்க முடியாமல் இருக்கும் தமிழ் படம்

பதிவுலகத்தின் விமர்சன கணைகளுக்கு மத்தியில் தள்ளாடும் தமிழ்படம்,கோவா  இரண்டையும் எனக்கு பார்க்க இன்னும் சர்தர்ப்பம் கிடைக்கவில்லை (அட நானும் ஒரு பதிவு போடலாம் இல்ல கண்ணு ).

ஒரு சில பிக்கல் பிடுங்கல் ,சிக்கல் ---------(வார்த்தை வருகுதில்லை எதாவது ஒண்ட போட்டு வாசியுங்கோ ) மத்தியில் வாழ்ந்து வருவதினால் இப்பிடி படம் பாக்காமல் இருக்கிறது .சும்மா நாங்களும் ரௌடிதான் மாதிரி நாங்களும் விஸிதான் .மொத்ததில நேரம் இல்ல பாருங்க .

மட்டகுளியாவில் இருந்து மருதானைக்கோ  இல்ல தெகிவளைக்கோ போய் படம் பாக்கணும் என்ன போக வர எண்டு மூன்று மணித்தியாலம் போய்விடும் .ஏன் மட்டகுளியாவில் தியேட்டர் இல்லையா என்று கேக்கும் உங்க ஆதங்கம் புரியுது .அதுல என் அத்தை,அவள் ஒரு மாதிரி அப்பிடியான படங்கள் ஓடும தியேட்டர் தான் இருக்கு .இப்ப வார படங்களுக்கு இந்த மாதிரியான படங்கள் தேவல .(சத்தியமா நான் ஒரு தரம் அந்த தியேட்டல படம் பாக்க போனன் ஆனா அங்க மூட்ட கடிதாங்க முடியல்ல அதால இன்டவேலுக்கு முதலிலே இலும்பி வந்துட்டன் .


வரும் மாத என்ட எதிர்காலத்த தீர்மானிக்கும் இறுதி பரிட்சை இருக்கும் போது இப்படி படம் பார்க்க போலாமா எண்டு(என்ன படிக்கிற எண்டு யாரும் கேக்காதிங்க ) ஒரு பக்கம் ஜோசினை ஆனாலும் அதையெல்லாம் தாண்டி தமிழ் படத்தை மட்டும் எண்டான பார்த்து விடுவம்
எண்டாலும் அனந்த காசுதான் பிரச்சனை ..நம்ம செலவு செய்யிற சீத்துவம் தெரிஞ்சு வீட்ட இருந்து கிழமைக்கு கிழமைக்கு என்று இப்ப காசு போடா தொடங்கியாச்சு .அதுல படத்துக்கு 500 தண்டம் கட்டுறது முடியாத காரியம் .ஏன் அவ்வளவு என்று கேக்கிறது புரியுது.படத்துக்கு 300 போக வர 100 இனி நம்மட வயிறு சும்மா இருக்குமா அதுக்கு 100 .இது நான் மட்டும் தனிய போனால் கூடவே ஒரு அல்லக்கையும் வந்தா படம் பார்த்தா மாதிரிதான் இருக்கும் .சத்தியமா பொண்ணு இல்ல (நம்மட ராசிக்கு எங்க பொண்ணு வந்து போய் ,புலப்ப பாருங்க அப்பு ) இனி வெள்ளவத்தையில சாப்பாடு ஏன்டா (சிக்கன் புரியாணி க்கு பெப்சி இல்லாம சரி வருமா )இன்னும் ஒரு 400 குடுத்துட்டு தலையில துண்டு போட்டுட்டு அப்பிடியோ ரயில் ஏறி ஊருக்கு போறதுதான் நல்ல விஷயம் .

இந்த பதிவுலகத்தில இருக்கிற விமர்சனம் எல்லாம் வாசிக்கிற நேரத்தில மனசு ஏதோ குதிச்சிர்ரா கைப்புள்ள ரேஞ்சுல பார்திர்டா சங்கர் அப்பிடி எண்டுறது .நான் அடிப்படையில லொள்ளுசபா ரசிகன் .விஜய் டிவி ல வந்த எல்லா லொள்ளு சபா நிகழ்சியும் நம்ம வன்தட்டில் இடம் பெறுகின்றன .இப்பிடி இருக்கும் போது 100 வீதம் லொள்ளுசபா 150 வீதம் லொள்ளுசபா எண்டு விமர்சனம் பார்த்தா விட்டுடுவமா நாங்க .

சரி போனா போகுது களவு vcd ல (அதாங்க திருட்டு vcd ) நீங்க நினைக்கிரமாதிரி இல்ல என்ட நண்பர்கள் வாங்கி வைத்திருக்கும் dvd ய ஆட்டைய போட்ட dvd அதான் களவு dvd .அதுல பாக்கணும் போல இருக்கு .பதிவுலக நண்பர்களே இன்னும் படத்த பத்தி நல்ல மாதிரி எழுதினா நான் திருட்டு விசிடில பார்துடுவான் .(அதுல பார்க்கிறதுக்கு உங்களை சாட்ட வேண்டி இருக்குது )

இதெல்லாம் பார்த்தா சரி நமக்கு திருட்டு vcd தான் சரி எண்டு நினைக்க தோணுது .இருந்தாலும் நம்ம மனசு கேக்குதுள்ள .தியேட்டர் சுகம் போல எப்பிடித்தான் இருந்தாலும் வராது தானே .70 ரூபா குடுத்தா five in one அதாங்க ஐந்து படம் ஒரு dvdல  .தமிழ் படம் மட்டுமில்ல .கோவா.ஓடிப்போகலாமா .மாட்டது இன்னுமொரு தெரியாத படம் .அதோட ஒரு தமிழ் டப் படம்.800 ரூவா குடுத்து ஒரு படம் பாக்கிறது சரியா ?இல்ல 70 ரூவா குடுத்து 5 படம் பாக்கிறது சரியா ?  நீங்களே சொல்லுங்க இப்பிடி இருக்கிற நம்ம பொருளாதார நிலைமையில எது சரி ...................................