Sunday, February 28, 2010

breaking news --ஜப்பானில் முதல் சுனாமி அலை,சிலி பூமியதிர்வு விளைவு (வீடியோ)

சிலியில்சனிக்கிழமை இடம்பெற்ற பெரிய நில நடுக்கங்களில் ஒன்றான 8.8 ரிச்டர் அளவு உடைய நில நடுக்கம் இடம் பெற்றது ஊடகங்களில் வழியில் நாம் அறிந்ததே .இருதாலும் அதான் விளைவாக சுனாமி எச்சரிக்கை உலகில் பாதி அளவான நாடுகளுக்கு விடுக்க பட்டது .இன்று அதிகாலை ஹவாய் தீவை தாக்கும் என எதிர் பார்க்க பட்ட சுனாமி அலை .தற்பொது ஜப்பானை தாக்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

சுனாமியின் முதல் அலை தற்போது தாக்கி இருப்பதாக சொல்ல படுகிறது .இன்னும் இது பற்றிய மேலதிக தகவல்கள் வெளிவர வில்லை .எனினும்
முதல் அலை 10 cm அளவு உயரம உடையதாகவும் அது எந்த வித சேதத்தினை ஏற்படுத்த வில்லை எனவும் இருப்பினும் இன்னும் சில நேரங்களில் 3 m அதாவது 9 அடி உயரமான அலை எதிபாக படுகிரதாக ஜப்பானில் இயங்கும் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது .

முந்திய தகவல் படி இது 6m உயரம உடையதாக இருக்கும் என கணிக்க பட்டாலும் தற்பொது இது இன்னும் அதிக உயரம  உடையதாக கணிக்க பட்டிருக்கிறது .இந்த அலைகள் 100mile/hour எனும் வேகத்தில் பயணிப்பதாக சொல்ல படுகிறது .பாப்போம் எத்தனை கோரமான நிகழ்வு நடக்க போகிறது  என்று .கிழே 2004 சுனாமியின் வடுக்கள் சில பார்வைக்கு

2004 நடந்த சுனாமியின் சில கொடூர வீடியோ கிழே

Friday, February 26, 2010

பவர் கட்

இவன் எங்கட  போனான் என்று சித்தார்த்தை கேட்டன் கோபி .பொறு மச்சான் வார எண்டு தானே சொன்னவன் எங்க போக போறான் என்று கேட்டு சொல்லிக்கொண்டே கையில் இருந்த டீ கப்பை காலி செய்து முடித்தான் .மச்சான் இவன் இப்பிடி தாண்ட ஒரு நாளும் சரியா நேரத்துக்கு வந்ததே இல்லை .இண்டைக்கு  வாடா எண்டு சொன்ன தானே   .ஓம் மச்சான் வருவான் வருவான் பாப்பம்.அவனுக்கு கொஞ்சம் வேலை கூட   எண்டு அவனுக்கு ஜால்ரா அடித்தான் சித்தார்த் .

அதற்குள் கோபியின் மகள் வந்து அங்கிள் எங்க சோபனா என்று கேட்டாள் கிளாசுக்கு போட்டாள் .இன்னும் ரெண்டு மணித்தியாலத்துக்கு பிறகுதான் வருவாள் என்றான் .சரி அங்கிள் நான் டியுசன் போகணும் பிறகு வாரன் என்று சிட்டை பறந்தால் சோபனா .
                                                           எப்பிடி மச்சான் வேற என்ன புதினம் என்று கேக்க தங்களது பழைய நினைவுகளில் கரைந்து போனார்கள் .கண்ட கதை பழைய கதை எல்லாம் கதைத்து கொண்டிருக்க அவனும் வந்து சேர்த்தான் எங்கடா போனாய் என்று கேடார்கள் இருவரும் கோரஸாக, இப்பதான் சிந்து வ ஸ்கூல் கொண்டு விட்டுட்டு வாரன் என்றான் .சிந்து அவனின் ஒரே செல்ல மகள்.மீண்டும்தங்களது பழைமையில் சென்று ஒளித்து க்மொண்டார்கள் .மெல்ல மெல்ல அசை போட்டு கொண்டிருந்தார்கள் தங்களது பழமைகளை
முதல் காதல் ,முதல் மப்பு ,முதல் சினிமா எல்லாம் வந்து போனது .

திடிரென கோபியின் கம்ப்யூட்டர் மொனிட்டர் பல்லு காட்டியது .சீ என்ன அரசாங்கம் இது எப்பவாது இருந்து போட்டு  வெளி நாடுள இருக்கிற கூட்டாளி மாரோட கதைப்பம் எண்டு பார்த்தா இந்த பாழாய் போன கரெண்ட் லைன் கட் பண்ணி விடுவாங்க .இனி எப்ப எல்லாம் சேர்த்து அரட்டை அடிக்கிற என்ற ஜோசனையுடன் கம்ப்யூட்டர் பவர் கேபிள் சுவிட்ச் அணைத்தான் கோபி .

Thursday, February 25, 2010

திமிங்கிலத்தின் தாக்குதல் நேற்று அமெரிக்காவில் சம்பவம் (வீடியோ )

அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒர்லாண்டோ எனும் நகரில் நடக்கும் திமின்கிலங்களில் சாசகங்கள் பார்க்கும் போது எம்மை வியப்பில் ஆழ்த்தும் .

ஆனால் நேற்று அதை பார்வை இட சென்றவர்கள் இன்னும் கடுமையாக வியப்பில் இல்லை பயத்தில் உறைந்து போயினர் .இந்த திமிங்கிலங்கலை பயிற்று விக்கும் துறையில் பல வருட அனுபவம் கொண்ட நாற்பது வயதே நிரம்பிய டவன் பிரஞ்சய (dawn brancheau) என்பவர்  பரிதாபமாக தனது உயிரை இழந்தார் .டிக்கும்எனும் பெயர் கொண்ட திமிங்கில தாக்குதலில் தான் அவர் இறக்க வேண்டி ஏற்பட்டுள்ளது .

இந்த மாதிரி இந்த திமிங்கிலம் இதுவரை  மூன்று உயிரை எடுத்து இருக்கிறதாம் 91,99 போன்ற வருடங்களிலே இந்த மாதிரி தாக்குதல் நிகழ்த்தி இருக்கிறது இந்த ரிக்கும் எனும் திமிங்கிலம்.

நேற்று புதன் கிழமை நடந்த இந்த சம்பவம் இன்று பல ஊடகங்களில் செய்தியாக போவது உண்மை .ஆனால் இந்த திமிங்கிலம் பற்றி விக்கிபிடியா சொல்லுகிறது 22 அடி கொண்டதும் 12.300 பவுண்ட் நிறை உடையதாகவும்

Wednesday, February 24, 2010

சாதனை படைக்க பிறந்த சச்சின்ஒருநாள் கிரிகெட் வரலாறின் சரித்திரம் இன்றுமாற்றி எழுதபடுகிறது .இன்னும் ஒருவராலும் அடிய முடியாமல் இருந்த இரட்டை சதம் என்கிற கனவு இலக்கு நோக்கி பயணித்த சச்சின் இன்று அந்த இலக்கை அடைந்திருக்கிறார் .

ஜெய்பூர் இந்த பெருமை பெற்ற இடமாக மாறி போயிருக்கிறது .பல சாதனைகள்நிகழ போகும் போட்டியாக இது மாரும் என்பதில் ஐயமில்லை .இப்போது தான் இந்தியா தந்து இனின்ஸ் முடித்து இருக்கிறது .மொத்தமாக 401 ஓட்டங்களை 3 விக்கடுகளை மட்டும் இழந்து பெற்றுள்ளது .

தென் ஆப்பிரிக்க அணியுடனான  இரண்டாவது போட்டியின் போது மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் இந்த மைல் கல்லை எட்டி பிடித்திருக்கிறார் .பல காலமாக சயிட் அன்வர் வைத்திருந்த சாதனையை அண்மையில் சிம்பாவவே நாட்டு வீர ஒருவர் முறியடித்து இருந்தார் .அந்த சாதனையை  முறியடித்து தற்பொது  முதல் முதலில் ஒரு நாள் போட்டி ஒன்றில் இரட்டை சதம் அடித்த பெருமையையும் தன் வசமாக்கி இருக்கிறார் 37 வயது நிரம்பிய சச்சின்

கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை தன் வசம வைத்திருக்கும் சச்சின் இந்த சாதனையையும் தன் வாச படுத்தி இருக்கிறார் .பலவிமர்சங்ககளை அண்மைய காலங்களில் எதிர்  நோக்கி வந்த சச்சின் தனது துடுப்பின் மூலமாகவே அவர்களுக்கு பதில் சொல்லி இருக்கிறர் .

3 ஆறு ஓட்டங்கள் 25 நான்கு ஓட்டங்கள் உட்பட 147 பந்துகளில் இந்த சாதனையை புரிந்து இருக்கிறார் அவர் .
சேவாக் 9
கார்த்திக்  79
பதான்  39
தோனி 68

எனினும் அடுத்த இனின்ஸ் இன்னும் தென் ஆபிரிக்கவினால் ஆரம்பிக்கபட வில்லை .அவர்கள்ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 432  ஓட்டங்களை எப்படி திரத்தி அடித்த அடி யாரும் மறக்க மாட்டர்கள்


பாப்போம் என்ன நடக்க போகிறது என்று 

Tuesday, February 23, 2010

உதவி ,ஒரு நல்ல பெயர் தேவை

எல்லாம் சரி ஒரு மாதிரி எனக்கு என்ன தோணுதோ அத எல்லாம் எப்பிடியோ எழுதி வாரன் (அத எல்லாம் நீங்க படிக்கணும் என்கிறது விதி ).இந்த தமிழிஷ் பார்த்து பிறகு பதிபவர்களின் கும்மியடிக்கும் பின்னுட்டங்கள் படித்து இத போல நீயும் செய் அப்பு என்று என்ட மனசுக்குள்ள இருக்கிற அந்த சிங்கம் கர்ஜித்தது (சீ இதெல்லாம் கொஞ்சம் ஓவரா போய்ட்டோ ) .அதுக்கு ஏத்தமாதிரி ஒரு அகலப்பட்டை (அதான் broad band கனெக்சன் ஒண்டும எடுத்து, படிக்க எண்டு சொல்லித்தான் எடுத்த )இந்த பதிவு எழுதிற வேலைய இந்த வருசம்தான் மங்கலமா ஆரம்பிச்சன் .
                                                   ஆரம்பத்தில எல்லா டெக்னிகல் ப்லோக்ஸ் எல்லாம் போய் என்ன என்ன செய்யணும் என்று எல்லாம் செய்து  போட்டன் (பெரிய படிமுறை எக்ஸ்ப்லைன் பண்ணுறார் )ஆனாலும் என்ன பெயர் வைக்கலாம் என்கிறதில் தான் எனக்கு பிரச்னையே ஆரம்பித்தது .
                                                                                                                சரி இதையே வைப்பம் அப்பிடி எண்டு போட்டு அதிரடி எண்டு பேர வைச்சன் .கொஞ்ச நாள் போன பிறகுதான் எனக்கு விளங்கிட்டு .நம்ம எழுதிற இந்த மொக்கை தனமான
பதிவுகல இப்பிடி ஒரு தலைப்பின் பின் எழுதிறதா எண்டு .நீங்களே சொல்லுங்க அதிரடி இது ஒரு அரசியல் பதிவு எழுதிற தலைப்பு போல இல்ல

அதோட சேர்த்து எனது அபிமான ரசிகர்களின் (ஓடாதிங்கஎன்ட அறையில் இருக்கும் நண்பன்தான் சொன்னன் .அவன் கூடவாசிக்கிறது சந்தேகம்தான் )
இது என்ன பெயர் இப்பிடி மாத்துடா அப்பிடி எண்டு .அவன் அப்பிடி ஒரு பிட்ட போட்டுற்று போயிட்டன் நான் இப்ப படும் பாடு .
                                                                                                  கொடுமைங்க பிறந்த பிள்ளைக்கு கூட பேர் வைச்சிறலாம் போல இதுக்கு நான் படும் பாடு .
ஏதோதோ எப்பிடியோ எல்லாம் ஜோசிச்சன் .பதிவுலகம் பார்த்து காசு தந்தா லண்டனுக்கு போய் ரூம் போட்டு ஜோசிக்கவும் நான் தயார் (யாரது அடிக்க வாறது ).சினிமா காரங்க எங்கயோ எல்லாம் போய் ரூம் போட்டு உக்காந்து ஜோசிப்பங்க நாங்க போக கூடாதோ .சரி விடுங்க அறியா பிள்ளை தெரியாம கேட்டுவிட்டன்.
                                 வடிவேல் படத்தில பாவிக்க எல்லா பேரையும் பதிவுலகத்தில வைசிட்டாங்க .கைப்புள்ள எண்டு தொடங்கி தென்னம்புள்ள வரைக்கும் பேர் இருக்குது .இத விட கருமம் ,கண்றாவி  இன்னும்  கொஞ்சம் விட்ட பேமானி எடு கூட வைச்சு விடுவாங்க (அட பேமானி இது கூட நல்லா இருக்கோ ).

இத விடபைபர் சங்கர் (கேபிள் சங்கர் எண்டுஇருக்க குள்ள இத விட டெக்னிகல் இன்னும் கூடி ),நீர்முழ்கி காரன் (பரிசல் காரன் எண்டு இருந்தா போவிங்க இத விட இன்னும் பெரிசா நீர் முழ்கி ),இன்னும் எத்தனையோ எப்பிடியெல்லாம் ஜோசித்து பார்த்துட்டன் .சரி நம்ம ஆள் லோசன் அண்ணாபோல சங்கரின் களம் எண்டு வைப்பமோ நம்ம எழுதிற திறதுக்குள்ள சங்கரின் சாக்கடை அப்பிடி என்டா சரி வரும் .
                                                       இன்னும் எனக்கு ஒரு பெயரும் வரல்ல சங்கரின் சிந்தனைகள் .சிதறல்கள் ,எண்ணங்கள்  மன்னாங்கட்டிகள்  எண்டு  எல்லாம் ஓவரா போட என்ற மனசு கேக்கில்லிங்கோ என்ராது வாம்ப போயிட்டுது (அட இது வேற ஊரு பாசைங்க )
                                                   இல்ல கொத்து ரோட்டி போல நுடுல்ஸ் ,குழம்பு என் பழம்சோறு ,சொதி,பால் கறி எண்டு எல்லாம் ஜோசினை வருகுது .இல்ல என்ட பேரையே வைப்பம் எண்டு பார்த்தா இந்த ப்லோக்ஸ்ல சங்கர் என்கிற பேர்தான் எல்லோருக்கும் இருக்குதோ  அப்பிடி என்கிற மாதிரி பார்க்கிற இடத்தில எல்லாம் சங்கர் தான் ,(எனக்கு மட்டும் சங்கர் எண்டு பேர் இல்லாம பில் கேட்ஸ் என்கிற மாதிரி இருந்தா ஒருவேளை ஏன்டா பேரையே போட்டிருக்கலாம் )

அப்பிடி ,இப்பிடி ,பிரண்டு பிரண்டு ,உருண்டு உருண்டு .ஏன் கிணத்துக்குள இறங்கி கூட (ஆழமா )ஜோசித்து பார்த்தும் இன்னும் ஒரு பெரும் சிக்கல அதான் ஒரு வழிய ஜோசித்து பேரு வைக்க தெரியல்ல எண்டு கொஞ்ச நாளைக்கு இந்த பேரோட அலைய போறன் ,

நீங்களா பார்த்து ஒரு நல்லா பேரை தானம் செய்யும் வரைக்கும் இப்பிடியான கொலைவெறி யான பேருடன் அலைவேன் என்று இங்கு உறுதிபட கூறி  எனது உரையை முடிக்கிறேன் (சீ எப்பிடியெல்லாம் போயிட்டன் பாருங்க அரசியல் வாதி ரேஞ்சுக்கு கொண்டு போய்ட்டு இந்த பேர் மேட்டர் )

நல்ல பேர்கையிருப்பில்உள்ளவர்கள் தயவு செய்து இந்தமெயில் முகவரிக்கு (பின்னுட்டங்களில் தெரிவிக்க வேண்டாம் ) உங்கள் பெயர்கைளை அனுப்பவும் இல்லா விடின்எனது வங்கிகணக்கிலகதுக்கு பணம் அனுப்பவும் (ஐயோ லண்டனுக்கு போய்ரூம் போட்டு ஜோசிக்கபோறனுங்கோ )

மெயில் :sangarfree@gmail.com
வங்கி கணக்கு இல :௧௨௩௪௫௬௭௮௯௦௯ (தமிழ் எழுத்துகளில் இருக்கிறது
                                                                                         மொழி மாற்றம்  செய்து படிக்கவும் ,பாதுகாப்பு பிரச்சனை அப்பா அதான் என்கிரிப் பண்ணி இருக்கு )
                                                                                     

Monday, February 22, 2010

என் கவிதைகளையாவது காதலித்து விடு

இப்போதெல்லாம் உன்னை
பற்றி கவிதை எழுத தோணவில்லை .
நீ வார்த்தைகளுக்கு அப்பால்
பட்டவள் என்பதை
இப்போதுதான் தெரிந்து கொண்டேன் .

உன் கூந்தல் காட்டுக்குள் சிக்கி கொண்டு
வார்த்தைகள் வரமுடியாமல் தவிக்கின்றன .
என்னைபோலவே .

உன் பெயரை கடதாசியில் எழுதி
துண்டு சிட்டுகளாய் வானில் வீசி
எறிந்தேன் .
என்ன ஆச்சரியம் பட்டம் பூச்சிகளாய்
மாறி பறந்து போயின அவை .

 மாய சூனியக்காரியே
என் உயிரை உன் இதய கூட்டுக்குள்
அடைக்க என்ன மந்திரம் பாவித்தாய்
நீசிலந்தியின் வலையில்
சிக்கிய பூச்சி போல்
உன் காதல் வலையில் விழுந்து
கிடக்கிறேன் .
விட்டு விடு என்னை ,உன்னுடன் காதல் செய்ய வேண்டும்
நான் .பார்க்கும் போது சீதையை போல் இருக்கிறாய் 
ஆனால் என்னை சூர்ப்பனகையாய் கொல்கிறாய் 
என்ன கொடுமை இது எனக்காக இல்லாவிடினும் 
என் கவிதைகளுக்காகவாவது காதலித்து விடு 
சாப்பிடும் போது காலை சுற்றும் 
பூனை போல உன்னையே சுற்றி வருகின்றன  அவை 

.

Sunday, February 21, 2010

அவசரம்

இன்னும் ரெண்டு  கிலோ மீட்டர் தூரம்தான் இருக்கு என்று அந்த கடைகாரர் சொன்னதுதான் அவனுக்கு உயிரே திரும்பி வந்தது போன்று இருந்தது .கடிகாரத்தை திரும்ப திரும்ப பார்த்து கொண்டே வேகமாக நடையை கட்டினான் கடிகார வேகத்தை அவனால் கட்டு படுத்த முடியவில்லை .தான் மட்டுதான் வீதியில் தனியே நடக்கிறான் என்பதுதான் அவனுடைய ஒரே ஒரு பயம் .சின்ன வயதிலே ஒரு முறை நண்பர்களுடன் சினிமா பார்க்க போய் பஸ் இல்லாமல் தனியாக நடந்து வந்திருக்கிறான் ஆனால் இப்போது இந்த இரவில் நடப்பது அவனுக்கு புதிதாய் இருக்கிறது .
                                                                    அவனுடைய செல்பேசி வேறு ஒரு பரிமாணத்தில் இன்று அவனுக்கு உதவிக்கொண்டு இருக்கிறது அது மட்டுதான் வெளிச்சம் .ஆந்தையின் அலறல் சத்தம் மட்டும் நன்றாக கேட்டு கொண்டிருந்தது .கால்கள் இன்னும் விரைவு எடுத்து கொண்டது .கடிகாரத்தை கொஞ்ச நேரம் நிறுத்தி வைப்போமா என்று கூட எண்ணி கொண்டான் .பயத்தினை  போக்க செல் பேசியில் பாட்டு போடுவாம் என்றாலும் பாழாய்போன  செல்லுக்கு இந்நேரம் பார்த்து பேட்டரி திர்த்து போக போகிறது .அதுவும் போய் விட்டால் போகும் பாதைக்கு வெளிச்சம் கூட இல்லை .கடிகாரத்தினை இன்னும் ஒருதரம் பார்த்து கொண்டான் பதினோரு மணிக்கு பத்து நிமிடம் தேவை என  விளம்பரம் செய்து கொண்டிருந்தது .சீ என்ன கொடுமையிடா இது இப்பிடி வந்து மாட்டிகிட்டம் என்று நினைத்தாலும் இந்த அனுபவம் அவனுக்கு புதிதாய் இருந்தது கூடவே பிடித்தும் இருந்தது .கடவுளை துணைக்கு அளிக்கவும் அவனுக்கு விருப்பம் இல்லை என்பதை விட கடவுளோடு அவனுக்கு விருப்பம் இல்லை என்றே சொல்லலாம் .
   
கால்கள் அவனுடன் சண்டை போடதொடங்கியது .வேலைநிறுத்தம் செய்ய போவதாய் கூட எச்சரிக்க பார்க்கிறது . எரிச்சல் எரிசலாய் வந்தது அவனுக்கு
மருந்துக்கு கூட ஒருவரையும் வீதியில் காணவில்லை .எங்கேடா போய் விட்டார்கள் இந்த மனிதசாதி என்றெல்லாம் தன் வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் திட்டிக்கொண்டே இன்னும் கொஞ்சம் காலை வேகமாய் செல்லும் படி கேட்டு கொண்டான் .
                                             தூரத்தில் ஒரு சின்ன வெளிச்சம் தெரிந்தது அப்பா ஒரு மாதிரி வந்து சேர்த்து விட்டோம் என்று சந்தோசபட்டு கொண்டே இன்னும் விரைவு எடுத்தான் .ஆனாலும் அவனின் சந்தோசம் நீடிக்க வில்லை .அது அவன் போக வேண்டிய இடம் இல்லை .அது ஒரு சின்ன பிள்ளையார் கோவில் தனியே பாதையில் செல்வோருக்கு அருள் வழங்குபவர் .அவ்விடத்தில் கொஞ்ச நேரம் இருந்து போவோம் என்றாலும் கடிகாரம் அவனை போக சொல்லி வற்புறுத்தியது .ஓட்டை வாளியில் தண்ணீர் அள்ளி குடித்து விட்டு திரும்பவும் நடக்க தொடங்கினான் .நடந்த களைப்புக்கு தண்ணீர் நன்றாகத்தான் இருந்தது .
                                                         ரெண்டு கிலோமீட்டர் தூரம் வந்திருக்கும் தானே என மனசு கணக்கு பண்ண தொடங்கியது .கூடவே அந்த கடைக்காரருக்கும் சில வசைமொழிகளை அள்ளி விச தொடங்கியது .அந்த கடைக்காரரின் குடும்பத்தினை கூடவிட்டு வைக்க வில்லை அவன் .பாவம் அந்த மனிதர்.கொஞ்ச தூரத்தில் மீண்டும் ஒரு வெளிச்சம் கண்ணுக்கு புலப்பட்டது .இருந்தாலும் மனதில் ஒரு சிறு சந்தேகம் இந்த பிள்ளையார் கிழவன் அங்கேயும் இருப்பானோ என்று. கடிகாரம் இன்னும் முப்பது நிமிஷங்களை சாப்பிட்டு ஏப்பம் விட்டிருந்து .

அவனின் நடை வீண் போக வில்லை ஒரு மாதிரி வந்து சேர்த்து விட்டான் .ஆனாலும் ஒருவரையும் காணவில்லை .அண்ணன் அண்ணன் என ரெண்டு மூன்று முறை கத்தி பார்த்தான் .எங்கேயாவது சுருண்டு படுப்பார்கள் என்று அவனுக்கு தெரியும் மீண்டும் தன் பலம் கொண்ட வரைக்கும் அண்ணன் என கொஞ்சம் பெரிதாக கத்தினான் .ஒருவழியாய் சாரணை மடித்து கட்டிக்கொண்டு ஒரு உருவம் வந்தது .என்ன தம்பி என்ன  வேணும் என்று கேக்க மலையில நான் வந்த கார் நிக்குது பெற்றோல் முடிஞ்சு போய்ட்டு நான் அவசரத்தில பார்க்க மறந்திட்டன் நாலு லிட்டர் பெற்றோல் தாங்க என கலனை கொடுத்தான் ,திரும்ப எப்பிடி நடந்து கார் இருக்கும் இடத்துக்கு போவது என்ற சிந்தனையுடன் ...................................

Thursday, February 18, 2010

நள்ளிரவு ஓட்டம் ................பேய்க்கு பயந்து

எங்களுக்கு ஊருல சாவு விழுந்தா கொஞ்சம் துக்கம் ,அதிகம் சந்தோசம் என்னா அப்பத்தான் இரவில சா வீட்ட போற அப்பிடி எண்டு அம்மாவிட்ட சொல்லி போட்டு எங்க எண்டாலும் போகலாம் .சா வீட்ட போய் கார்ட்ஸ் விளையாடி (ரம்மிதான் எனக்கு வரும் 304 பெரிசா வராது போடுகாய்க்கு இருந்து விளையாடி ) விட்டு இரவு 12  மணிய போலதான் வீடுக்கு வருவம் .இது வழமை இப்பவும் அப்பிடிதாங்கோ ஊருக்கு போனா இதான் பொழப்பே .ஆனா அங்க தார சாப்பாடுக்கு போற எண்டு மட்ட்டும் நினைக்காதிங்கோ .

ஊருல இரவில ஒரு சிலர்தான் நடமாடுவாங்க கட்டாயம் ஆர்மி இல்லாட்டி போலிஸ் இல்லாட்டி எஸ்.ரி.எப்  இதுல கடைசியா சொன்னவங்களுக்குதான் கொஞ்சம் பயம் எங்களுக்கு என் என்டா  அவனுகளு கொஞ்சம் நல்லா படிச்சவனுங்க  .மத்தபடி நாங்க திரிவம் ,சிலநேரம் வேற குருப் ஆக்களும் திரிவாங்க .


ஒரு முறை ஊருல தொடர்ந்து முன்று சா வீடு .எதோ அம்மாவாசையில முதலாவது டிக்கெட் எடுத்தால துணைக்கு இன்னும் ரெண்டு முன்று  பேர கொண்டு போகுமாம் இதுக்கு விளக்கம் வேற .ஆனா நம்ம பாடுதான் சிக்கலாகி விட்டது .எங்க போற எதுக்கு போற போக இல்லாட்டி கோவிப்பங்க(தின்ன போறது நக்கல் சோறு அதுக்கு இவ்வளவு பில்டப் தேவையா )அப்பிடி எண்டு போட்டு ஒரு டைம் டேபிள் போட்டு (எப்பிடி பிளான் பண்ணியிருக்கம் ) இண்டைக்கு ஒரு வீடு எண்டா நாளைக்கு மறு வீடு அப்பிடி எண்டு போறதா எங்க சங்கம் ஏக மனதா முடிவு எடுத்துது (வெறும் நாலே நாலு பேருங்க )

எல்லோருக்கும் பேய் ,பிசாசி அப்பிடி எண்டா தனிதனிய போன பயம் ஆனா  கும்பலா போன பேய் அப்பிடி எண்டா என்னஅப்பிடி எண்டு கேக்கிற கைப்புள்ள குருப்ப்தான் நாங்க .
மூன்று சா வீடு ஒரே நேரத்தில என்கிறதால ஊருல கிளப்பி விட்டங்க ஒரு பீதிய .
அந்த சந்தில அது நிக்குதாம் இந்த சந்தில இது நிக்குதாம் அப்பிடியெல்லாம் எண்டு .விடுவாமா நாங்க சரி வாறது வரட்டும் நிக்கிறது நிக்கட்டும் .நாங்க வெளிக்கிட்டு சா வீட்டுக்கு வந்திட்டம் ஆனா நானும் இன்னுமொரு பொடியனும் ரெண்டு பேரும் மட்டுந்தான் .நல்லா இடியப்பமும் இறால் குழம்பும்(அதுக்குத்தானே போன எண்டு நினைக்கதிங்கோ ) சாப்பிட்டிட்டு கார்ட்ச்சும் விளையாடிற்று பன்னிரண்டு மணி ஆகிற்று (இரவில்தான் )நித்திரை கொள்ள போவம் அப்பிடி எண்டு போட்டு வெளிக்கிட்டாச்சு .என்னோட வந்தவருக்கு கொஞ்சம் குசும்பு கூட என்ன பண்ணினார் என்டா போட்டிருந்த ரவுசர கழட்டி கொண்டு வந்த சாரனுக்கு மாறிட்டார் (இரவுதானே ரோட்ல ஒருவரும் இல்ல .சரி ரெண்டு பெரும் கதைச்சி கதைச்சி நடந்து போயிற்று இருக்கம் .
ஒருவெள்ளை கலர் பசு மாடு தனிய ரோட்ட்ல நிக்குது .அங்க சா வீட்ட இப்படி அப்பிடி எல்லாம் பேய் நிக்கும் எண்டு சொல்லும்போது இந்த மாதிரி மாட்டையும் சேர்த்துதான் சொன்னாங்க (நாங்க பெரிய ரவுடி தானே !!! அத பத்தி எல்லாம் கவலை படல்ல).சரி மாட்டுகாரன் மாட்ட கட்ட மறந்திட்டன் போல எண்டு நினைச்சு நடந்து வந்துக்கிடு இருக்கம் .


அப்பதான் இது பேயோ எண்டு போட்டு சிரிச்சு அதுவும் இரவில பெரிய சத்தமா சிரிச்சி நடந்தம் .அப்ப யாரோ கட கட எண்டு ஓடி வார மாதிரி சத்தம் திரும்பி பார்த்தா அந்த மாடு ,அட அதே தனி வெள்ள மாடுதான் .நல்ல காலம் நான் ரவுசர்தான் போட்டிருந்த அதில ஓடின ஓட்டம் எங்க உசைன் போல்ட் எங்க கிட்ட தண்ணி குடிக்கணும் .ஓட்டமேண்டா அப்பிடி ஒரு ஓட்டம் எந்த ரோட்டால ஓடுரம் எப்பிடி ஓடுரம் எண்டு கூட தெரியா கண்ண மூடி ஓட்டமா ஓட்டம் .மாடு வருகுதா இல்லையா எண்டு கூட திரும்பி பார்க்கல ஒரு கிலோ மீட்டார் ஓடி இருப்பம் (காலையில போய் எவ்வளவு துரம் எண்டு டேப் வச்சு அளந்து பார்த்தம் )எனக்கு பக்கத்தில ஓடி வந்தவனை கானல பிறகு கொஞ்ச நேரத்தால வேற ரோட்ல உடுத்திருந்த உடுப்ப கானல ஒரே ஒரு ஆடையுடன் (சொல்லவா வேணும் ) சிரிச்சு கொண்டு வந்தான் .ரெண்டு பெரும் அந்த இடத்திலே இருந்து சிரிச்சி  போட்டு போய் நித்திரை கொண்டம் அப்ப நேரம் மூன்று மணி ....

Wednesday, February 17, 2010

என் வில்லன் முருங்கைக்காய்

எனக்கு வேணுமுங்க ஊருல நல்லா படிச்சிக்கிட்டு (நீ படிச்சதே பொய் அதுல நல்லா வேற படிச்சி எண்டுதானே நினைக்கிறிங்க )இருந்த என்ன அம்மா ,அண்ணா எல்லாம் சேர்த்து பெட்டி கட்டி டவுனுக்கு போய் படி எஞ்சினியர் ஆகுவா (ஆகினதா இல்லையா எண்டு தொடர்து படிங்க தெரியும் நம்ம பொழப்பு )அப்பிடி எண்டு என் பிஞ்சி மனசில நஞ்ச விதைச்சி (உண்மையா எனக்கு இப்பவும் பிஞ்சு மனசுதாங்க )அனுப்பி வச்சாங்க .நானும் ஏதோ சரி நம்ம நன்மைக்குத்தான் சொல்லுறாங்க அப்பிடி எண்டு போய் சேர்த்து படிச்சன் (நம்புங்க ).
                      .
வடிவேலு கிரி படத்தில சொல்லுவார அதே மாதிரி ஒரு முட்டு சந்து அதுக்குள்ளே தாங்க நானும் இருந்தன் .இரண்டு கட்டு கொப்பி ,ஒரு பெட்டி உடுப்பு ,ஒரு லுமாலா சைக்கிள் என்கிட்ட இருந்த அசையும் அசையா சொத்துக்கள் இவைதாங்க .அறைக்கு வாடகை 3000 ரூபா .சாப்பாடும் சேர்த்து (இங்கதாங்க நான் பிழைய விட்டன் )
                                                      காலையில பள்ளிக்குப் போய் பிறகு டியுசன் போய் ஒரு மாதிரி போய்க்கிட்டு இருந்துச்சு  ,வீட்டுல முதல் நாளே கோழி இறைச்சி சாப்பாடு வச்சி இருந்தாங்க ஆகா டவுண் என்டா இப்பிடித்தான் எந்த நாளும் இறைச்சி கரி சாப்பாடு போல நமக்கு வாச்சி போய்ட்டு ஒவ்வொரு நாளும் புள் கட்டு கட்டலாம் எண்டு நினைச்சு கொண்டே ஒரு மாதிரி சாப்பிட தொடங்கியாச்சு .நம்ம ஊருல ஏதோ சித்திரை வருஷம் .தைப்பொங்கல்  இல்லா விட்டில யாருக்கும் பிறந்தநாள்,ஞாயிற்றுக்கிழமை கிழமை  என்டா இறைச்சி வரும் .இது ஒரு திங்கள் கிழமையே இறைச்சி கறி வந்தா எப்பிடி இருக்கும் .சரி சாப்பிடும் எண்டுஎடுத்து சாப்பிடும் ஆச்சு .சாப்பாடும் பரவால்ல நல்லாத்தான்இருந்தது .(நான் குடுத்த வாட காசில்தான் இந்த இறைச்சி கறி சோறு என்கிறது அப்பஇந்த மர மண்டைக்கு புரியல்ல .)

 .அடுத்த நாள் செவ்வாய் கிழமை வீட்டு அன்ரி (கிழவி  இருந்தாலும் அன்ரி  )வந்து இண்டைக்கு மரக்கறி சாப்பாடுதான் செவ்வாய்கிழமை அப்பிடி எண்டு ஒரு  பூசணிக்காய்ய தூக்கி என் வயிற்றில போட்ட .சரி  வெள்ளி கிழமையில சாப்பிடுரதானே கொஞ்சம் ட்ரை பண்ணி பன்னுவமே அப்பிடி எண்டு போட்டு நானும் பள்ளிக்கு போயிட்டன்எனக்கு மரக்கறி என்டாலே கொஞ்சம் அலர்ஜி இருந்தாலும் அம்மா ரொம்ம்ப கட்டாய படுத்தி சாப்பிடவைப்பா .ஆனாலும் இப்பவும் பாவக்காய் ஆஆஆ கண்ணிலையும் காட்ட கூடாது.அதுக்கு முதல்ல காலை சாப்பாடு பாண் சம்பலோட சேர்த்து .ஊருல வயல் வேலை செய்யக்க மட்டும் ஒரு இடையில் சாப்பிடும் சாப்பாடுதான் பாண் சரி சாப்பிட எனக்கும் விருப்பம்தான் அதையும் அள்ளி வாய்க்கு போட்டுற்று பள்ளிக்கு போயிட்டன் .அங்க புது பள்ளி (அதுல நான் பட்ட பாடு அது பிறகு சொல்லுறன் அதாவது வேற பதிவுல உங்களை விடமாட்டன் )

ரெண்டு மணிக்கு பள்ளி விட்டு நானும் இண்டைக்கு எப்பிடி மரக்கறி சாப்பிடுற எண்டு நினைச்சு போய்  இருந்தா சாப்பாடு தட்டு வந்தது .முருங்ககாய் கறி ,மற்றும் இன்னும் ரெண்டு கறி ஒருமாதிரி மூக்கு நாக்கு எல்லாம் இருக்கிற மறந்திட்டு சாப்பிட்டு முடிச்சிட்டன் .பிறகு டியுசன் எல்லாம் போய்ட்டு வந்து வீட்ட ஒரு சுத்து சுத்தி பாப்பமே எண்டு போட்டு போனன் .

 அந்த இடது பக்க மூலையில் தான் என் எஞ்சினியர் கனவுக்கே பெரிய ஆப்பு வைச்ச வில்ல்லன் நின்று கொண்டு இருந்தான் (ஏதோ நீங்க நினைக்கிற மாதிரி நாய் .பூனை சரி யாரும் மனிதன் இல்லவே இல்லிங்க ) ஒரு அளவான முருங்கை மரம் அது .அப்பவும் நான் நினைக்கல இதுதான் உனக்கு வில்லன் ,உன் சோத்துக்கு வில்லன் எண்டு .அன்று இரவுதான் திரும்பவும் அந்த வில்லன் தலை காட்டினான் முருங்கைக்காய் வேறு வடிவில் இருந்தது .சரி நாளைக்கு பாப்பம் எண்டு பார்த்தா அடுத்த நாளும் தனது இனொரு முகம் காட்டி சிரித்தது முருங்ககைகாய் இப்பிடி மூன்று கிழமை தொடர்து முருங்ககைகாய் கறி ,காலையில பண்ணும சம்பலும் .அதோட அந்த அறையை விட்டு ஓடினவந்தான் நான்...


.இப்பிடி சோறுக்காக அறையை ஓடி பிறகு வேற அறை தேடி அங்கிருந்து படிச்சு இப்ப கொழும்பில வந்து இன்னுமொரு அறை எடுத்து இப்பிடி பதிவு எழுதி போகுது நம்ம வாழ்க்கை .

தங்கைக்கு தோழியானவளே!!!!!!!!!!

தங்கைக்கு தோழி
அம்மா உனக்கு அன்டி
அப்பா உனக்கு அங்கிள்
நான் மட்டும் யார் என்று புரியவில்லை எனக்கு .

இப்போதெல்லாம் மாலை நேரங்களில் கூடவீட்டில்
இருக்க கற்றுக்கொண்டேன் .
அப்போதுதானே நீ வகுப்புக்கு செல்ல தங்கையை தேடி வருவாய் .

அந்த மஞ்சள்நிற சுடிதார்
நெஞ்சனைத்த புத்தகம்
சின்னதாய் ஒரு சிரிப்பு
சிரிப்பா அது எனக்கு வைத்த ஆப்பு
போதும் உன் அழகு
இனியும் தாங்காது என் மனது

உன் இதயத்திடம் சொல்லி வை
கவனமாய் இருக்க சொல்லி
என் காதல் ரொம்ப  கொடூரமானது .

பொறாமையாய் இருக்கும்
உன் பாதணிகளை பார்க்கும் போது
என்ன புண்ணியம் செய்ததோ
போன பிறவியின் போது
தோனுகிறது மனதில் அடுத்த பிறவியிலாவது
அந்த பாதணியை பிறக்க .

நீ என்ன அமுத சுரபியா
எப்பிடிஉனக்கு மட்டும் அழகு
இப்பிடி வற்றாமல் இருக்கிறது .


என் கவிதைகளிடம் சொல்லி அனுப்பு
நீ எனக்கு யார் என்கிற பதிலை

Tuesday, February 16, 2010

Sunday, February 14, 2010

சீனாவில் சிறப்பான புது வருடம் ஆரம்பம் இன்று

எல்லோரும் இன்று காதலர் தினம் என்று கவிதை பாட்டு பதிவுலகமே களை கட்டி இருக்கும் போது நமக்கு ஒரு மேட்டரும் சிக்காதோ அப்பிடி (பாழா போன காதலை விட )
தேட ஆமா இன்னிக்கு சீனாவில் புது வருசமாமே சரி  அத பற்றி போடுவமே எண்டு சின்ன ட்ரை பண்ணினன்.


அவர்களின் பழங்கால விழாக்களில் முக்கிய விழாவான புது வருடம் இன்று
சீனர்கள் மிருகங்களின் குறியீடுகளை எல்லா இடங்களிலும் பயன் படுத்துவதுண்டு அதேபோல் இந்த வருடம் புலி வருடம் அவர்களுக்கு .அவர்களின் லுனர் காலண்டர் அடிப்படையில் புது வருடம் கணிக்க படுகிறது சென்ற வருடம் jan 26 வந்த புது வருஷம் இந்த வருஷம் இன்று அடுத்த வருடம் feb 3 .

இந்த வருஷம் காதலர் தினத்துடன் இந்த புது வருஷ கொண்டாட்டங்கள் வருவதால் மக்கள் இரட்டை சந்தோசத்துடன் இருக்கிறார்கள் .இந்த வருசத்துக்கு பெயர் geng yin என்பதாகும் .


நம்ம தமிழ் சித்திரை வருஷ பிறப்பு போல அவங்களும் ஒரு விஷயம் வச்சிருக்காங்க நம்ம கை விசேசம் அப்பிடி என்கிற மேட்டர் அங்க ANG POW என்கிற பேர்ல உலாவுது .சிவப்புநிறம் கொண்ட என்பலப் (RED ENVELOPES ) மக்கள் எல்லோரிடையும் பரிமாற்ற படும் .அதாவது திருமணம் ஆனா பெரியார்கள் இளைஞர் மற்றும் சிறுவர்களுக்கு என அந்த அன்க் பௌ பரிமாற்ற படும் .அந்த பக்கெட்டில் காசு வைத்து தான் கொடுக்கப்படும்
ஆனாலும் அதில் உள்ள காசு இரட்டை படை எண்ணில் கட்டாயம் வர வேண்டும் .
அதோடு எட்டின் மடங்கில் வருவதும் அவர்களுக்கு அதிஷ்டம் ஆகும் .எட்டு என்பது சீனாவில் அதிர்ஷ்டமான எண் ஆகும் .

மற்றபடி எமது புத்தாண்டு சம்பிரதாயங்கள் அனைத்தும் அங்கும் இருக்கிறது .உணவு பரிமாற்றம் ,அயலவர் வீடு செல்லல் ,உறவினர்கள் வருகை என் பலவித சந்தோசங்கள் அவர்களுக்கு .


சில கொண்டாட்ட படங்கள்


Saturday, February 13, 2010

குளிர் கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர் மரணம் (வீடியோ,படம் இணைப்பு )

குளிர் கால ஒலிம்பிக் போட்டி இதில் பங்கேற்ற வீரர் போட்டியின் போது மரணம்


 வெறும் இருபத்தோரு வயதேயான இவர் 90 mile/hour  என்கிற வேகத்தில் வந்து மோதுண்டார்

Friday, February 12, 2010

கோவில் திருவிழாவும் என் காதலும்

ஊரே கொண்டாட்டத்தில் இருக்கிறது
கூடவே என் காதலும்கொண்டாட்டத்தில்

சாமியை தரிசிக்கக் கூட்டம்
உன்னை தரிசிக்க நானும்
காத்து இருக்கிறேன்

10 நாள் திருவிழா
என் காதலுக்கு ஒவ்வொரு நிமிடமும்
திருவிழா.
பார் ஏதோ சொக்லேட்எதிர் பாக்கும்
சின்ன பிள்ளை போல்
 உன் புன்னகைக்கு தவம்
இருக்கும் என் காதலை

இன்றுதான் புடவையுடன் உன்னை
பார்க்க போகிறது என் மனது
ஏதோஇப்போதுதான் பூப்படைந்த
பெண் பிள்ளை போல் வெக்க படுகிறது
என் காதல் .

அள்ளி முடிந்த கூந்தல்
சூடிக்கொண்ட பூக்கள்
ஏதோ பண்ணுகிறது என்னை .
வைரமுத்து சொன்னது போல்
செத்து விட தோணுதடி எனக்கு .

 ஆ நீ வருகிறாய் .
என் காதல் பக்தியில்
தலை விரித்து ஆடுகிறது .
என் கவிதைகள்
அங்கபிரத்ட்சனம் பண்ணுகின்றன
பாவம் விட்டு விடு
என்இதயத்தையாவது
ஏனெனில் அது உனக்கானது .

உன் கொலுசில்ஓசைக்கு
என் இதயம் குத்தாட்டம்
போடுகிறது .


உன் கூந்தல் கருப்பில் என் மன
வானம் மழையாய் பொழிகிறது .
ஆனாலும் தேகம் மட்டும் சுடுகிறது .
 
ஒன்று கூடித்தான் தேர் இழுப்பார்கள்
ஆனால் நீ தனியே வருகிறாய்
என்னை பொறுத்த வரை
தேரும் நீயே சுவாமியும் நீயே

வடிவேலு vs கிளாஸ் ரூம்

 எப்போதோ எங்கோ பார்த்தது இப்ப ரிப்பிட்டு


வகுப்பறை  : மல்லாக்க படுத்து விட்டத்த பார்க்கிறது என்னா சுகம்டா


வகுப்பு பரிட்சை  :சொல்லவே இல்ல---

படித்தல்  : முடியல்ல

லெக்சரர் : உக்காந்து யோசிப்பாங்களோ??

பரீட்சை : நல்லா கிளப்புராங்கையா பீதிய

ரிபீட் /அரியர்ஸ் : ரிஸ்க் எடுக்கிறதேல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி

ரிசல்ட்  : இப்பவே கண்ண கட்டுதே -


பிட்  : எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்

HOD : வெளியில போங்கட அயோக்கிய ராஸ்கல்ஸ்கலா!!

Thursday, February 11, 2010

பெண்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம்

என்னடா தலைப்பு ரொம்ம்ப விஷமமா இருக்கே அப்பிடிஎண்டு நினைக்கிறிங்களா ஆமாங்க இந்த பொண்களுக்குஅச்சம் ,மடம் ,நாணம்,பயிர்ப்பு
(சரிதானே )இருக்கிறது உண்மைதான் .ஆனா இந்த பயம் புருசன் கிட்ட இருக்கா என்பதுதான் மேட்டர் ,ஆனால் கரப்பான்பூச்சி பூச்சிக்கு பயம் இருக்கிறது உண்மைதான் ;இந்த பொண்ணுகளுக்கு வில்லன் கரப்பன் பூச்சி
பற்றிய ஒரு அலசல் தான் இது .


இத பற்றி நம்ம கூகுள் அண்ணனிடம் கொஞ்சம் விசாரித்த போது எக்கசக்க விசயங்கை கொண்டு கண் முன் கொட்டினார் இங்கிலீஸில் தாங்க என்ன பண்றது அத நமக்கு இருக்கிற ஆங்கில அறிவை !!!!!!!! கொண்டு (ஒரு பெரிய லிப்கோ டிக்சனரி கிளின்சு போய்ட்டு ) மொழி பெயர்த்து பார்த்தன் .

உலகில இருக்கிற பத்து மில்லியனுக்கும் அதிகமான உயிரினகளில் அதிகமா நமக்கு வெறுப்பை ஏற்படுத்தும் உயிரினம் கரப்பான்பூச்சி தாங்க .

அந்த புலிகேசி மீசை ,அகன்ற நீளமான கால்கள் ,அவற்றின் வசிப்பிடங்கள் என்பன நமக்கு அதில் மேல் ஒரு வெறுப்பை உண்டாக்குகின்றன .ஆனாலும் தனது பொன்சாதிக்கு அதுக்கு பயம் எண்டா கரப்பான்பூச்சிய விரும்புற ஆணும இருக்கு .

இவைகள் நம்ம அரசியவாதிகளை விட மோசமானவை அதாவது என்ன சொல்ல வாரன் என்டா ஒரு நொடிக்கு 25 திசைகளில் மாறி மாறி செல்ல கூடியவையாம் இவை .


இதில் பல வகைகள் உண்டுஎனிலும் பெரும்பாலும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் திரியும் வகைகள் நான்கு (படத்தினை பார்க்க )

படத்தில் முதலாவதாக இருப்பது ஜெர்மன் கரப்பான்பூச்சி,இரண்டாவது அமெரிக்கன் வகை ,மூன்றாவது ப்ரௌன் பேன்ட்(தமிழில் பழுப்பு நிற வளைந்த காலுடைய ,அப்பிடிதாங்க வருகுது )நாலாவது நம்மூரு வகை அதாவது கீழைத்தேய வகை .

மேல இருக்கும் நான்கு வகைகளும் தான் இப்போது பெரும் பாலும்இருக்கும் வகைகள்

இந்த இரண்டு இஞ்ச அல்லது மூன்று இஞ்ச பிராணியில் ஆண்கள் இறக்கையுடன் இருக்கும் அத்துடன் பெண்களுக்கும் இறக்கை உண்டு அனால் பறக்க முடியாது .மேல படத்தில் உள்ளது போல் மூன்று பகுதிகள் கொண்டது தல (அஜித் இல்ல),மார்பு பகுதி ,அடிவயிறு  பகுதி என்பன .கண் அதன் உணர் கொம்பு போன்ற மீசை எல்லாம் தலை பகுதில் சேரும்
இதன் வயிற்று பகுதியில் தான் நரம்பு மண்டலம் இருக்கிறது .இதன் காரணமாக  தலை இல்லாத கரப்பான்பூச்சி கூட ஒரு கிழமைக்கு மேல் உயிர் வாழும் திறந கொண்டவை .முச்சு விட கூடமூக்கு வாய் அப்பிடி ஒரு அம்சம் கூட கரப்பாணுக்கு இல்லை ஒரு கூம்பு போன்ற துளைகள் உடல் முழுவதும் இருக்கின்றன அவற்றை கொண்டு சுவாசம்நடத்துகின்றது .
மூக்கு செய்யும் வேலை அனைத்தையும் அந்த புலிகேசி மீசை செய்யும் மணம் .சுவை என்பன .

இதற்ற்க்கு மூன்று ஜோடி கால்கள் உள்ளன ஒன்று தலை பகுதியுடன் இணைந்து இருக்கும் இது ஒரு ப்ரேக் போல் தொழில்படும் .அடுத்த ஜோடி வயிற்று பகுதியில் பின் முன் அசைவுக்கும் மெதுவான அசைவுக்கும் பொறுப்பு .மற்ற ஜோடி முன்னோக்கிய அசைவுக்கு பொறுப்பு ஒரு செக்கனில் தன்னுடைய உடம்பின் நீளதினை போல் 50 மடங்கு தூரம் செல்ல கூடியது .மனிதனுக்கு இருபது போன்ற குருதி சுற்றோட்டம் இதற்க்கு இல்லை அத்துடன் கிமொபோளின் அதான் குருதியில் இல்லைஆகவே சிவப்பு நிறமாக இல்லை .

இதன் இனப்பெருக்கம் ஒரு வித்தியாசமானது ,பெண் கரப்பான் முட்டைகள் நிறைந்த ஒரு பெட்டி போன்ற அமைப்பை வெளிவிடும் (படத்தினை பார்க்க )

இதனுள் 50 க்கும் அதிகமான முட்டைகள் உள்ளன இவை பின்னர் வெளி வந்து தங்களது வேலைய காட்ட தொடங்கும் .சாதரணமாக ஒரு கரப்பான் 200 லிருந்து 300நாட்கள் வரை உயிர் வாளுமாம் ..

அப்பா எனது மேசையில் இப்போது ஒரு கரப்பான் வந்து விட்டது .நான் அதை அடிக்க போறன் ஆகவே பின்பு பார்ப்போம் .

சில சுவாரசியமான பழ மொழிகள்

வெந்தால் தெரியும் வெங்காய மணப்பு


வெட்கம் படும் வேசியும் வெட்கம் கெட்ட சமுதாரியும் உதவாதவர்கள் .

வீட்டை கட்டி குரங்கை குடி வைத்தார் போல்


வீட்டு பொஞ்சாதி வேம்பும் காட்டு பொஞ்சாதி கரும்பும்

விடியா மூன்சிக்கு வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படாது .

வடக்கு பார்க்கிற மச்சு வீட்ட விட தெற்கு பார்க்கிற தெற்கு பார்க்கிற தெரு திண்ணை நல்லது .

மகன் செத்தாலும் சாகட்டும் மருமகள் கொட்டம் அடங்கினால் போதும்

பொக்க வாச்சி மெச்சினாலாம் பொரிமாவை .

பேச்சுக்கு இராவணன் பின்பு கும்பகர்ணன்

பின்ன வரும் பிலாக்காயை விட முன்னால் வரும் களாக்காய் நலம்

பாம்பு தின்கிற ஊருக்கு போனால் நடு முறி நமக்கு என இருத்தல் வேண்டும்

பல்லக்கு ஏற யோகம உண்டு உண்ணி ஏற சீவன் இல்லை .

தொழுவம் புகுந்த ஆடு புழுக்கை இடாமல் போகுமோ

Wednesday, February 10, 2010

சில சுவாரசியமான கேள்விகள்

1) நீங்க SLAS (இலங்கைய நிருவாக சேவை )பரிட்சை ஒன்றில் சித்தி அடைந்து
ஒரு பிரதேச செயலார் ஆகி விட்டிர்கள் ஆகவே உங்கள் படத்தினை உங்கள்
அலுவலக அறையில் தொங்கவிட உள்ளிர்கள் இதற்க்கு நீங்கள் பயன் படுத்தும் வழி

1)சுவரில் ஆணி அடித்து
2)ஒரு வகை பசை பூசி
3)வேறு வழிமுறை
4)ஈஸ்டிக்கர் முறை

(காரணமும் வேண்டும் விடையுடன் )

2)M T W ---- ----- ------ ------ (இடைவெளிகளில் வருபவை எவை )


3)நீங்கள் ஒரு பஸ் ஒன்றினுள் பயணம் செய்கிரிர்கள் மொத்தம் 12 இருக்கைகள் கொண்ட வண்டி அது ,அதில் கந்தன்,காந்தன் ,கீர்த்தன் ,குமார் ,கூமகன் ,கெசண் ,கேசவன் ,கைலாசபதி ,கொம்பன் ,கோவின்தன் ,கௌரி ஆகவே மற்ற பயணியின் பெயர் என்ன ?

4)ஒரு சின்ன ரப்பர் குழாய் அதை 3 வெட்டில் 8 துண்டுகளா வெட்ட முடியுமா ?ஆம் எனில் எப்பிடி?


5)10 ஆப்பிள் கொண்ட கூடை அது 10 பேர் ஆளுக்கொரு ஆப்பிள் எடுத்த பின்னும் கூடையில் ஒரு பழம் எஞ்சியது எப்பிடி ?
விடைய நாளைக்கு சொல்லுறனே?
நீங்க பின்னுட்டத்தில சொல்லுங்க பாப்பம் ?

Tuesday, February 9, 2010

வகுப்பறை காதல்


உன் பக்கத்தில் அமர்வதை விட
எதிரில் அமர்வதையே
அதிகம் விரும்புவேன் நான்.
வார்த்தைகளை விட
உன் பார்வையாலே அதிகம் பேச முடியும்
என்பதால் .

ஏதோ புத்தகத்துக்குள் மயிலிறகு போல
என் காதலும் அடங்கி கிடக்கிறது,

பொருத்தமாய் தான் இருக்கிறது .
வெள்ளை ஆடை உனக்கு
தேவதைகள் வெள்ளை உடை அணிந்துதான்
வருவார்களாம் .

உன் பார்வை எத்தனை பாடங்களை
எனக்கு புரிய
வைத்தது .
புவி ஈர்ப்பு விசை
கதிர் வீச்சு
சூரியன் ,
காந்தம்

அப்பப்பா மொத்தத்தில்நீ
ஒரு பேராசிரியை

உனக்கு அந்த வகுப்பறை நினைவு இருக்கிறதோ
தெரியாது .ஆனால்
என் நினைவுகளோ அங்கேதான் இருக்கின்றது.

உனக்கும் எனக்கும் தான் பரிட்டையில் போட்டியாக
இருக்கும் .பெரும்பாலும் நான்தான் வெல்வதுண்டு.
அதற்கெல்லாம் சேர்த்து காதல் பரிச்சையில்
வட்டியுடன் என்னை எப்போதும் தோற்கடித்து
விடுவாய்..

Monday, February 8, 2010

வெளிநாடு போய் திரும்பி வந்தவன்


என் மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்கிற மாதிரி
இன்று வந்த இந்த மொக்கை ஐடியாவே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் எண்டு கேக்க தோணுது .ஆரம்பமே பெரியயயயாய பில்டப்பா இருக்கு அப்பிடி எண்டு பார்கிறிங்களா !! மேட்டர் இதாங்க இண்டைக்கு நம்மட மொக்கையோடு இணைந்து
இருப்பவர்கள் வெளிநாடு போய் ஊர் திரும்பி வந்தவங்க அதோட அவங்க பண்ணுற லொள்ளும் ..

எவளவோ இருக்குங்க இத பற்றி சொல்ல யானை வரும் பின்னே மணியோசை கேட்டு வரும் முன்பே அப்பிடி என்கிற மாதிரி ஒரு கேடு கேட்ட ஒரு பெர்பியும் ஒண்டு அடிச்சு விடுவாங்க வெற்றி கொடி கட்டு படத்தில பார்த்திபன் சொல்லுற மாதிரி இதவ் பார்த்து ரெண்டு மாடு செத்து போயிருக்கு என்பது போல இந்த மணத்த மணந்து குறைஞ்சது பத்து பேருக்கு எண்டான தும்மல் உத்தரவாதம்
வாறது கட்டாயம் .அதோட அந்த மணத்த வச்சு அந்த ஆள் எங்க இருந்து வந்திருக்கான் எண்டு கண்டு பிடிக்கலாம் ..மத்திய கிழக்கு இல்லாட்டி வேற பணக்கார நாடு !!!! அதாங்க பிரித்தானியா பிரான்சு போல இடங்கள் ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு மணம்(அப்பிடி கண்டு பிடிக்க கூடிய அனுபவம் எண்டா பாருங்க எத்த்தினை பேருட்ட சிக்கி சின்ன பின்னமாகி இருக்கம் எண்டு ...)


ஊருல கறுத்த கலர் புள்ளி புள்ளி செருப்பு போட்டு நடந்தவர் வந்த உடனே சூ ஒண்டு போட்டு திரிவார் ..முக்கியமா சொக்க்ஸ் போடா மாட்டார் .என் எண்டு கேட்டா (தப்பி தவறி கேக்காதிங்க கேட்டா அன்னிக்கு why blood !! same blood தான் )
ஆனால் சிலரு ஷோக்சும் போடுவாங்க ..அந்த மணமும் அவங்கட பெர்பியும்
மணமும் சேர்த்து நமக்கு வாந்திதான் வரும் .

நமக்கு தெரிஞ்ச ஒரு பொடியன் வந்தவன் எப்பிடி மச்சான் என்ன மாதிரி எண்டு கேட்டன் இந்த கைல இருக்கிற சிக்கரெட் பீடியா மாற முதல் நாட்ட விட்டு போகணும் எண்டு சொன்னான் .அப்பிடிதாங்க அநேகம் பேரு
வந்த முதல் கிழமை போய் ஒரு பல்சர் ஒண்டு எடுப்பாங்க ஒரு கைய சிக்கரெட் மற்ற கைல பைக் .காதுல போன் இப்பிடி ஒரு கிழமை திரிவாங்க அடுத்த கிழமை கால் சூ இராது பழைய படி செருப்பு ஒட்டிக்கும் ஆனாலும் அந்த பில்டப்ப விடாம கால்ல எதையோ மிரிச்ச மாதிரி நடந்து போவான் .


ஒண்ட மறதிட்டங்க முக்கியமான விஷயம் அவங்க சேட் போடுவாங்க ஆனா பட்டன் எல்லாம் போட மாட்டங்க: போங்க உங்களுக்கு விளங்காது பட்டன திறந்து போட்டாதானே உள்ள போட்டிருக்கிற மாலை தெரியும் அதான் ஏதோ ஐயர் போடுற பூநூல் மாதிரி பெரிய கட்டியா நல்ல நீளமா இருக்கும் (இப்ப ஐயர் மாரும் இப்பிடித்தான் தங்க மாலை போடுறாங்க என்கிறது வேற விஷயம் )
அப்பிடி ஒவ்வொரு முறையும் பேங்க் பக்கத்தால போகும் போது பேங்க் இவற பார்த்து சிரிக்கும் என்கிட்ட வர போற மாலைதான் எண்டு ...

இன்னும் ரெண்டு மூண்டு கிழமை போன அந்த மணம் இருக்காது .பழைய படி
சைக்கள எடுத்து இருப்பார் பெற்றோல் அடிக்க கட்டுதில்ல எண்டு சொல்லிட்டு திரிவார் ..அவரோட இருந்த ரெண்டு மூண்டு பெரும் இல்லாம தனிய தான் ரோட்ல திரிவார் (காசு முடிஞ்சா அவனுகள் எங்க இவன் கிட்ட இருக்க )அந்த நேரத்தில்தான் நம்மட பசங்க மாட்டுற ஆ எப்பிடி எப்ப வந்த இதோட நிப்பாட்டினா காணும் உடனே எப்ப போற எண்டு கேட்டுருவானுகள் இதனாலே அவன் முடிவு பன்னிருவான் நம்ம போயிடனும் அப்பிடி எண்டு .அவன் முடிவே பண்ணிடுவான் சிகரெட் வேற பீடி ரேஞ்சில மாற போகுது அதுக்கு இடையில போகணும் எண்டு

அவன் அப்பிடி ஏன்டா இங்க இருக்கிற நம்ம பசங்க கேக்கிற கேள்வி இருக்கே
கம்பனி எப்பிடி ,சம்பளம் எவ்வளவு ஏற்கனவே மணம் நொந்து போயிருக்கிற அவனிட்ட இந்த கேள்விய எல்லோரும் கேட்டு அவன படுத்தி மக்கள கண்டா வெறுப்பு வார அளவுக்கு ஆக்கி விடுவாங்க அது மட்டுமில்ல நம்மவரு எல்லாம் தெரிஞ்ச மாதிரி அது இப்பிடி இது அப்பிடி எண்டு அவனிட்ட கதை உடுவார் அவரும் சளைக்கமே அங்க இப்பிடி இன்ச இப்படி எண்டு சொல்லுவார் (கேட்டவர் ஊர தாண்டி பக்கத்து ஊருக்கு போயிருப்பார என்கிறது சந்தேகந்தான் )

அப்படி இப்பிடி எண்டு ஒரு மாதம் முடிய மாலைய பேங்க் ல வச்சிட்டு பைக்கையும் மச்சானுக்கு குடுத்திட்டு (அதாங்க இங்க வந்து ஒரு பொண்ணு பார்திடுவார் )திரும்பவும் பரந்திடுவார் அவர் ...........................


குறிப்பு :இது ஒரு சிலரை பற்றியதே எல்லோரும் இப்பிடி இல்லை என்பதே உண்மை

குறிப்பு 2:மேல இருக்கிற படம் ஒரு வெள்ளையனின் படம் நம்ம பசங்க படம் கிடைக்கல்ல ஆனாலும் பார்த்து எத்துகுங்க ...

Sunday, February 7, 2010

எங்க ஊரு கோழி கள்ளன்


தலைப்ப பார்த்த உடனே ஏதோ ராமராஜன் பட ரைட்டிலோ எண்டு நினைக்கதிங்கோ .
இது ஒரு களவாணி பயலின் கதை .சீ அவன் களவெடுத்த கதை
அவனுக்கு சோக கதை .நமக்கு சிரிப்பு கதை
இரவில நண்பர்களோட கோழி களவு எடுக்கிறது .ஒரு பெரிய விஷயம் இல்ல!!!!!!!!!
இருந்தாலும் அதுல மாட்டாம எடுக்கிற விஷயம் இருக்கே இதுலதான் இருக்கு விஷயம் .நம்ம ஊருல ஒரு நாலு ஐந்து குருப் இருக்கு கோழி களவு எடுக்க
சத்தியமா நான் அந்த குரூப் ல எல்லாம் மெம்பர் எல்லாம் இல்ல.இருந்தாலும் எங்க குறுப் களவு எடுக்க போன மாட்ட போறம் எண்டு தெரிஞ்சா மற்ற குருப்ப் பெற சொல்லி ஓடு ஓடு எண்டு சொல்லி ஓடி அவனுகள் பேருக்கு ஒருமாதிரி போட்டு விடுவம் .

இருந்தாலும் நான் சொல்ல வந்த விஷயம் இன்னும் கொஞ்சம் சுவாரசியமானது .
இது ஒரு புது குரூப் விடலை பருவம் அதாங்க டீன் எச் பருவம் .இப்ப உயர்தரம் படிக்கும் பொடியனுகள்< ஊருல நிறைய கோழி தொடந்து களவு போறதா எங்களுக்கும் செய்தி வந்தது .ஆனா அவனுகள் மாட்டின விதம் தான் சுப்பர் . இப்பவும் படிக்கிற காலத்தில இரவில திரியிற எண்டா ஒரு கொப்பி கைல வச்சு இருப்பம் ,ஆர்மிக்காரனையோ இல்லா போலீசையோ கண்டா :சார் நாங்க படிக்க போறம் அப்பிடி எண்டு தப்புறத்துக்கு ,ஆனா அந்த கொப்பிதான் இந்த பொடி பசங்களுக்கு வில்லனா வந்து பட்டது .

இரவில கோழி களவேடுக்க பாதுகாப்புக்கு !!! கொப்பி கொண்டு வந்த பயலுக மதிலால விட்டுக்குள்ள பாயும் போது மதில்ல கொப்பிய வச்சிட்டு பாய்ஞ்சு போய்ட்டாங்க .பிறகு அவங்க வேலைய முடிச்சிடு மற்ற மதிலால பாய்ஞ்சு அவங்க கோழியை ருசி பாக்க போய்ட்டாங்க .அதோட அந்த கொப்பயையும் மறந்து போய்ட்டாங்க அவ்வளவு படிப்பு .
காலையில களவு எடுத்த வீட்டு காரன் ஊர்க்கே மைக் வச்சு சொன்ன மாதிறி களவு போன விஷயம் எல்லா இடத்தும் போய்ட்டு .நம்ம பசங்க எல்லாம்
அங்க துக்கம் விசாரிக்க போனாங்களாம் !!! .அப்பவும் இந்த கொப்பி மதில்ல பிள்ளையார் மாதிரி இருந்திருக்கு .


அங்கதான் என்ரியாயிருக்கு நம்ம குருப்ப் சுத்து வட்டாரத்த பார்த்த நம்ம பசங்க
அந்த துருப்புச்சிட்ட கைப்பற்றியது .ஏனுங்க ஏதோ திகில் கதை மாதிரி போகுதுன்னு பாக்கிரிங்களா இல்லிங்க இனிதான் ஜோக் அந்த கொப்பிய கைப்பற்றின குறுப் அத பார்த்து மயக்கம் போட்டு விழாத குறையா சிரிச்சு இருக்கு என் என்ன கொப்பில பேரு ,அட்ட்ரசு எல்லாம் பக்கவா எழுதி இருந்திச்சு ,அட பாவமே கள்ளன் ஒரு அளவுக்கு பிடி பட்டான் எண்டு இருக்க கொள்ள
ஏதோ கொண்டு எதிலையோ விழுந்த மாதிரி அவனுகளே அந்த கொப்பிய தேடி வர தேவல்லையா ?இரண்டு சொட் போட்டு விசாரிக்கிற மாதிரி விசாரிக்க பாவம்
நாங்கதான் எடுத்த என்ன விடுங்க நான் மற்ற எல்லாரையும் சொல்லிதாரன் (தமிழனின் உயரிய பண்பை )எண்டு சொல்லி எல்லோரையும் போட்டு கொடுத்து
பிறகு போலிசுக்கு போய் அப்பிடி எப்பிடி எண்டு பெரிய கதை .


கதை நீதி :நீங்களே சொல்லுங்க ,ஏதோ எல்லோரும் ஒரு கதைய எழுதி போட்டு
கதை நீதி அப்பிடி எண்டு எழுதுவாங்க நானும் அதான் போட்டன்
ஆனா ஒன்றுமே தொனுதில்ல............

Saturday, February 6, 2010

இரவு நேர காதல்


உன்னை காணாமல்
விட்டிருக்கலாம் போலும்
நிலவை முழுமையாக ரசிக்க
முடியவில்லை .

நிலவையும் நட்ட்சதிரங்களையும்
ஒன்றாய் பார்க்கும் போது
உன் வகுப்பரைதான்
நினைவுக்கு வருகிறது .

சீ இனி உன்னை நிலவுக்கு
ஒப்பிட நான் தயார் இல்லை .
பாழாகி போன நிலவு தேய்ந்து
கொண்டு போகிறது .

நீல வானத்துக்கும் ஒப்பிட போவதில்லை
அதுவும் கருத்து போகிறது .

என் கனவுகளை
தின்றவளே .
என் நினைவுகளையாவது
விட்டு விடு பாவம் அவை .

என் தலையணை பாவம்
உன்னை கட்டி பிடிப்பதாய்
நினைத்து அதை
இறுக்கி இறுக்கி கட்டி பிடிக்கிறேன் .


என் அறை சுவருக்கு
என்னை விட
உன் மேல் காதல்
அதிகம் போலும்
உன் பெயரையே அதன்
உடம்பு முழுவதும்
பச்சை குற்றி இருக்கிறது .

என் கட்டிலுக்கும் உன்னை
காதலிக்க பழக்க போகிறேன் .
பின்னொரு காலத்தில்
உன்னை சுமக்க வேண்டுமல்லவா ?

கனவுக்கும்
என்
நினைவுக்கும்
எப்போதும் போட்டிதான்
ஆனால் கனவுதான்
வென்று விடும்
நினைவில் உன்னை நினைக்கலாம்
கனவில் உன்னுடன்
காதல் பண்ணலாம்Friday, February 5, 2010

கடற்கரை காதல்
இன்று வழமையை விட அலைகள் அதிகமாய் இருக்கிறன .இருக்காதா
பின்ன வந்திருப்பது நீ அல்லவா.
பார் உன் கால் நனைக்காத அலைகள் கண்ணீர் விட்டு கொண்டே
கடலில் குதித்து தற்கொலை செய்வதை .

தென்னை மரம் கூட மற்ற பக்கம் வளைந்து
உன்னை பார்க்க முயலுகிறது .

காற்று கூட இன்னும் ஒட்சிசனை ஏற்றி கொண்டு
அதிகமாய் வீசுகிறது .

உன் கால் செருப்புடன் கடல் மண் சண்டை இட்டு கொள்ளுகிறது .
தயவு செய்து செருப்பை கழட்டி விடு மண் பாவ விமோசனம்
பெறட்டும் .

தயவு செய்து பலூன் பையனின் பலுன்களை பார்க்காதே
உன் பார்வையில் நானே உடைத்து போய் கிடக்கிறேன்.
பாவம் பலூன்கள் வெடித்து விட போகின்றன .

ஒரு முறை கடலில் உன் காலை கழுவி விட்டு வா.
இல்லா விடின் மீண்டும் சுனாமியாய்
கடல் நீர் உன்னை தேடி வரும் .

முத்து ஒன்று சிப்பி பொறுக்குவதை
இன்றுதான் நான் பார்கிறேன் .

போதும் போதும் வா வீட்டுக்கு போய் விடுவோம்
கடல் கன்னி ஒன்று வந்திருப்பதாய்
யாரோ சொல்ல உன்னை பார்க்க கூட்டம்
கூட போகிறது

Thursday, February 4, 2010

மாலை நேரம் நீயும் நானும்

ஒரு நாள் நீ 
சூரியன் மறைவதை 
பார்க்க வேண்டும் 
என்றாய் .நான் முடியாது 
என்றால் .என் என்று நீ
கேட்டாய் உன் கண்ணை 
மூடிக்கொள் நான் சூரியன் மறைவதை 
பார்கிறேன் என்றேன் .
அப்போது நீ பட்ட 
வெட்கத்தில் வானமே சிவந்து போய்ட்டு 

பறவைகள் கூடு திரும்புவதை 
நீ ரசித்து கொண்டு இருந்தாய் .
நானோ உன் இதய கூட்டுக்குள் 
இருந்து கொண்டு வெளியில் வர முடியாமல் தவிக்கிறேன்.

காட்டுக்குள் மேச்சலுக்கு சென்ற மாடுகள் வீடு
திரும்புவதையும் ரசிக்கிறாய் நீ 
உன் கூந்தளுக்குள் சிக்கி கிடக்கும் 
என்னை வெளியில் எடுத்து விடாமல் .

கவனமாய் வைத்துக்கொள் உன் கூந்தல் முடிகளை 
தென்றல் காற்று என்னிடம் கேட்ட்காமல் 
உன் முடிகளோடு தந்தி அடித்து இசை மீட்டி போகிறது

வா வீட்டுக்கு போய் விடுவோம் நிலவு உன்னை கண்டு 
வெட்கத்தில் வராமல் போய் விட போகிறது .
.

Wednesday, February 3, 2010

வெள்ளி கிழமையும் என் காதலும்

தலையணை கூட எனக்கு இன்று
வெள்ளிகிழமை என அலாரம் அடிக்கும் .
உன்னை விட அதனுடன் தான் அதிகம் பேசியிருப்பேன்
உன்னை பற்றி .

உன்னை பற்றி பாடும் பாடல்களினால்
எனது குளியலறை சுவருக்கு
காது முளைத்து இருக்கிறது.

எனது உடுப்புகள் இரண்டு சண்டை போட்டுக்கொண்டு
இருக்கின்றது .உனை பார்க்க போகும் போது
தன்னையே போட்டு செல்லுமாறு .


நீ கோவிலுக்கு வரும் வீதியினை சூரியன் தனது வெயிலால்
 வெள்ளிக்கம்பலம் விரித்துகாத்து கிடக்குறது.
உன் தாவணியுடன் சண்டை இட்டு ஓய்ந்து போகிறது
காற்று.

எனக்கு மட்டும் கூடு விட்டு கூடு பாயும்
வலிமை இருந்தால் உன் வீட்டு பூனையாய்
எப்போ மாறியிருப்பேன் .உன் காலை சுற்றி கொண்டே
உன்னை காதல் செய்திருப்பேன் .


இன்று உன்னுடன் உன்அண்ணாவின் மகன் துணைக்கு
ஏதோ தெருவோர நாய்க்கு போடும் பாண் துண்டினை போல்
உன் புன்னகைக்காய் ஏங்கி நிக்கிறேன் வீதியில்

கோவிலுக்குள் நீ வந்து விட்டாய்
வழியில் கிடந்த என் இதயத்தை பாராமல்

நீ கால் கழுவகிணற்றடிக்கு வந்தாய்
என் இதயத்தில் இருந்து காதல் நீர்
உனக்கு உற்றுகிறேன் .
தேங்க்ஸ் ஆங்கிலம் உன் நாவில்
கூடவே ஒரு புன்னகை
அப்படியே அந்த கிணற்றுக்குள்
குதித்து செத்து விட தோணியது
எனக்கு .

நீ கடவுளை சுற்றுகிறாய்
நான் உன்னை சுற்றுகிறேன் .
உனக்கும் எனக்கும் இங்குஒரு ஓற்றுமை
நீ கடவுளை அடைய வழி தேடுகிறாய்  .நான்
உன்னை அடைய வழி தேடுகிறேன்

உன் அண்ணாவின் மகனுக்கு
விபூதி பூசிவிட்டு கண்ணை முடி ஒரு தரம்
ஊதி விட்டாய் .அதில் பல
அடி துரம் சென்று விளுதேன் நான்

தலையில் சூட நீ எடுத்த மல்லிகை பூவை
பார்த்து மற்ற பூக்கள் பொறாமை பட்டது
உனக்கேங்கு தெரிய போகிறது.

நீ வீசி உடைத்த தேங்காயின்  சில்லுகளை பொருக்கி எடுக்கிறதுஒருகூட்டம்
சிரிப்புதான் வருகிறது எனக்கு உன்னால் உடைத்து நொறுங்கி கிடக்கும் என் மனதை நினைத்தால் .

எனவே வெள்ளிக்கிழமையே நீ வாழக பல்லாண்டு................................என்னவளுக்காக

பார்க்க முடியாமல் இருக்கும் தமிழ் படம்

பதிவுலகத்தின் விமர்சன கணைகளுக்கு மத்தியில் தள்ளாடும் தமிழ்படம்,கோவா  இரண்டையும் எனக்கு பார்க்க இன்னும் சர்தர்ப்பம் கிடைக்கவில்லை (அட நானும் ஒரு பதிவு போடலாம் இல்ல கண்ணு ).

ஒரு சில பிக்கல் பிடுங்கல் ,சிக்கல் ---------(வார்த்தை வருகுதில்லை எதாவது ஒண்ட போட்டு வாசியுங்கோ ) மத்தியில் வாழ்ந்து வருவதினால் இப்பிடி படம் பாக்காமல் இருக்கிறது .சும்மா நாங்களும் ரௌடிதான் மாதிரி நாங்களும் விஸிதான் .மொத்ததில நேரம் இல்ல பாருங்க .

மட்டகுளியாவில் இருந்து மருதானைக்கோ  இல்ல தெகிவளைக்கோ போய் படம் பாக்கணும் என்ன போக வர எண்டு மூன்று மணித்தியாலம் போய்விடும் .ஏன் மட்டகுளியாவில் தியேட்டர் இல்லையா என்று கேக்கும் உங்க ஆதங்கம் புரியுது .அதுல என் அத்தை,அவள் ஒரு மாதிரி அப்பிடியான படங்கள் ஓடும தியேட்டர் தான் இருக்கு .இப்ப வார படங்களுக்கு இந்த மாதிரியான படங்கள் தேவல .(சத்தியமா நான் ஒரு தரம் அந்த தியேட்டல படம் பாக்க போனன் ஆனா அங்க மூட்ட கடிதாங்க முடியல்ல அதால இன்டவேலுக்கு முதலிலே இலும்பி வந்துட்டன் .


வரும் மாத என்ட எதிர்காலத்த தீர்மானிக்கும் இறுதி பரிட்சை இருக்கும் போது இப்படி படம் பார்க்க போலாமா எண்டு(என்ன படிக்கிற எண்டு யாரும் கேக்காதிங்க ) ஒரு பக்கம் ஜோசினை ஆனாலும் அதையெல்லாம் தாண்டி தமிழ் படத்தை மட்டும் எண்டான பார்த்து விடுவம்
எண்டாலும் அனந்த காசுதான் பிரச்சனை ..நம்ம செலவு செய்யிற சீத்துவம் தெரிஞ்சு வீட்ட இருந்து கிழமைக்கு கிழமைக்கு என்று இப்ப காசு போடா தொடங்கியாச்சு .அதுல படத்துக்கு 500 தண்டம் கட்டுறது முடியாத காரியம் .ஏன் அவ்வளவு என்று கேக்கிறது புரியுது.படத்துக்கு 300 போக வர 100 இனி நம்மட வயிறு சும்மா இருக்குமா அதுக்கு 100 .இது நான் மட்டும் தனிய போனால் கூடவே ஒரு அல்லக்கையும் வந்தா படம் பார்த்தா மாதிரிதான் இருக்கும் .சத்தியமா பொண்ணு இல்ல (நம்மட ராசிக்கு எங்க பொண்ணு வந்து போய் ,புலப்ப பாருங்க அப்பு ) இனி வெள்ளவத்தையில சாப்பாடு ஏன்டா (சிக்கன் புரியாணி க்கு பெப்சி இல்லாம சரி வருமா )இன்னும் ஒரு 400 குடுத்துட்டு தலையில துண்டு போட்டுட்டு அப்பிடியோ ரயில் ஏறி ஊருக்கு போறதுதான் நல்ல விஷயம் .

இந்த பதிவுலகத்தில இருக்கிற விமர்சனம் எல்லாம் வாசிக்கிற நேரத்தில மனசு ஏதோ குதிச்சிர்ரா கைப்புள்ள ரேஞ்சுல பார்திர்டா சங்கர் அப்பிடி எண்டுறது .நான் அடிப்படையில லொள்ளுசபா ரசிகன் .விஜய் டிவி ல வந்த எல்லா லொள்ளு சபா நிகழ்சியும் நம்ம வன்தட்டில் இடம் பெறுகின்றன .இப்பிடி இருக்கும் போது 100 வீதம் லொள்ளுசபா 150 வீதம் லொள்ளுசபா எண்டு விமர்சனம் பார்த்தா விட்டுடுவமா நாங்க .

சரி போனா போகுது களவு vcd ல (அதாங்க திருட்டு vcd ) நீங்க நினைக்கிரமாதிரி இல்ல என்ட நண்பர்கள் வாங்கி வைத்திருக்கும் dvd ய ஆட்டைய போட்ட dvd அதான் களவு dvd .அதுல பாக்கணும் போல இருக்கு .பதிவுலக நண்பர்களே இன்னும் படத்த பத்தி நல்ல மாதிரி எழுதினா நான் திருட்டு விசிடில பார்துடுவான் .(அதுல பார்க்கிறதுக்கு உங்களை சாட்ட வேண்டி இருக்குது )

இதெல்லாம் பார்த்தா சரி நமக்கு திருட்டு vcd தான் சரி எண்டு நினைக்க தோணுது .இருந்தாலும் நம்ம மனசு கேக்குதுள்ள .தியேட்டர் சுகம் போல எப்பிடித்தான் இருந்தாலும் வராது தானே .70 ரூபா குடுத்தா five in one அதாங்க ஐந்து படம் ஒரு dvdல  .தமிழ் படம் மட்டுமில்ல .கோவா.ஓடிப்போகலாமா .மாட்டது இன்னுமொரு தெரியாத படம் .அதோட ஒரு தமிழ் டப் படம்.800 ரூவா குடுத்து ஒரு படம் பாக்கிறது சரியா ?இல்ல 70 ரூவா குடுத்து 5 படம் பாக்கிறது சரியா ?  நீங்களே சொல்லுங்க இப்பிடி இருக்கிற நம்ம பொருளாதார நிலைமையில எது சரி ...................................

Tuesday, February 2, 2010

காத்து இருக்கிறேன் உனக்காய் !!!!!!!!!!!! என்னவளுக்கு ஒரு கடிதம்

இரவு நேர இரயில் பயணங்கள் தான்
உன் தேவையை எனக்கு உணர்த்துகின்றன .

சில் எனும் குளிர் காற்று உன்
உள்ளங்கை சூட்டை எனக்கு எடுத்து இயம்பும் .


வெளிச்சத்துக்கு வந்த விட்டில் பூச்சி
உன் சிரிப்பில் விழுந்த என்னை எனக்கு யாபகப்படுத்துகின்றன

இரயிலின் சத்தம் கூட உன் கொலுசில் இனிமையை உணர்துவதாய்
காதல் என் காதில் சொல்லி சென்றது .

கண்ணயரும் நேரங்களில் உன் மடியினை தேடி செல்லும் என் மனது .
ஆனாலும் உன் நினைவுகளை சுமந்து கொண்டு எதிரில் வரும் மரங்களிடம்
சொல்லி வை .வேகமாக செல்ல வேண்டாம் .நினைவுகள் பறந்து விட போகின்றன என்று .

உனக்காக என்னால் வரையப்பட்ட கவிதைகளை கொண்டு
தீ மூட்டி அதில் குளிர் காய்ந்து கொள்ள போகிறேன் .
இரயில குளிருக்காக .

நடுக்காட்டில் இரயில நிக்கும் போது .உன் கூந்தல் காட்டை நினைத்து பார்க்க தோன்றுகின்றது .

ஆனாலும் நீ இல்லாத குறையினை என் எதிரில் இருக்கும் இன்னுமொரு பெண் தீர்த்து வைக்கிறாள் .சீ கோவித்துக் கொள்ளாதே .எதிர்ல் ஓடிக்கொண்டு இருக்கும் நிலவுதான் அவள் .சீ வெட்டக படாதே .பூக்கள் எல்லாம் பொறாமை பட போகின்றன .