Friday, January 22, 2010

கடவுள் ஒரு சந்தேகப்பொருளா ?



கோவில் கருவறையில் நடந்த அசிங்கங்கள் !!!!!!!!!! கடவுள் மீதான என் சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது .அதுக்காக கடவுள் A.K 47 கொண்டு அந்த புசாரியினை சுட வேண்டும் என்று நான் சொல்ல வர வில்லை .
அப்பிடியான ஒரு மன நிலையை ஒரு புனிதமான கடவுளுக்கு !!!! தொண்டு செய்யும் ஒருவனுக்கு உருவாகியது கடவுள் தானே என்பதுதான் என் சந்தேகம்

பிச்சைகாரனையே விட்டுக்குள் எடுக்க மறுக்கும் சமுகம் இப்படியான போலி ஆசாமிகளிடம் சிக்குவது எப்படி என்றுதான் புரியவில்லை .இங்குதான் தந்தை பெரியாரின் சிந்தனைகள் வலுப்பெற்று நிற்கின்றன .

தனக்கு நைவேத்யம் படைக்கும் ஒருவனுக்கு இப்படியா மனநிலை வர காரணம் என்ன என்பது அந்த கடவுளுக்கு தெரயுமோ தெரியாதோ எனக்கு தெரியாது
ஆனால் அவர் இருப்பது ஒரு உண்மை எனில் இப்படி ஒரு மனநிலையுடன் அவன் இருக்கிறான் என்றால் அந்த மனநிலையினை மாற்ற முயன்று இருக்க வேண்டும் .

இப்படி அவனின் மனநிலையினை மாற்ற முடியாத கடவுளும் மதமும் பல்வேறு பிரச்சனைகளுடன் தங்களை நாடி வரும் பக்தர்களின் மனதை எப்படி மாற்றி அவர்களை நல்வழி படுத்துவார்கள் என்பதே என் கவலை
இருப்பினும் இதை விட தெரிந்தும் சிலர் மனிதர்களை சாமி என நம்புவது
என்னால் ஜீரணிக்க முடியவில்லை .அண்மையில் ஓஷோவின் ஒரு புத்தகம் வாசிக்க கிடைத்தது அவருடைய சில கதைகள் அதாவது ஜென் கதைகள் எனக்கு மிகவும் பிடித்து போயிட்டு .கடவுளை நம்புவதை விட உன்னை நம்புவது மிக சிறந்த து என அவர் கூறுகிறார். ஆனாலும் சில கருத்துக்களை என்னால் ஏற்க்க முடியவில்லை .

சரி நம்முடைய பூசாரி விடயத்துக்கு வருவம் இப்படியான விடயங்கள் இந்து மதத்தில் மட்டும் நடக்கும் சங்கதி இல்லை .எல்லா மதத்திலும் பரவிக்கிடக்கும் கதைதான் இது .ஆனாலும் தற்போது சூடாக விவாதிக்க படும் பொருள் என்பதால் நானும் இது பத்தி எழுத வேண்டியிருக்கிறது .

ஆனால் காமம் என்பதை நான் ஒரு போதும் விமர்சிக்க வில்லை .அது அவர் அவர் இஷ்டம் . எனக்கு ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது
கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்கு ஒரு கொடுமை தலையை விரித்து போட்டு நின்று ஆடுதாம் இந்த நிலைமைதான் மக்களுக்கு
வீட்டில் மாமியார் பிரச்சனை என்று கோவிலுக்கு போனால் அங்க சாமியார் பிரச்சனை .
திரிஷாவின் குளியலரை விடியோவுக்கு பின் ரூம்களில் கமரா தேடிய நாம் இப்போது கோவில்களுக்கும் கமர தேட வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகி இருப்பதுதான் பொறுக்க வில்லை .ஆனாலும் இப்படியான மனிதன்களை கடவுள்தான்!!!!!!!!!!!! காப்பாற்ற வேண்டும்..............................................................